Saturday, May 22, 2010

தலைப்பில்லாப் பதிவுகள்... 22 .05 .2010

ஒரு கேள்வி...


வரும் கல்வி ஆண்டு முதல் , பொறியியல் படிப்புகளை தமிழில் படிப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது தமிழக அரசு. ஏற்கனவே , தமிழ் வழியில் பள்ளிப் படிப்பை படித்து விட்டு, பிறகு பொறியியல் பட்டப் படிப்பை ஆங்கிலத்தில் தொடர்வதற்கு கிராமப் புற மாணவர்கள் படும் பாடு , பெரும்பாடு. அப்படி தட்டுத் தடுமாறி B .E முடித்து விட்டாலும் கூட, பிறகு வேலைதேடும் போது, போதிய ஆங்கில அறிவு (COMMUNICATION SKILLS) இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை சில பல லட்சங்களைத் தொடும் ! இப்போது, B .E கூட தமிழில் என்றால் , பின்பு வேலைக்கு என்ன செய்வது ?! ஏற்கனவே , ஆங்கில வழி கல்வி ஆனாலும் , முழு  நேரமாக பட்டப் படிப்பு படித்திருந்தால் மட்டுமே வேலைக்கான நேர்முகத் தேர்விற்கு அழைக்கின்றன பல நிறுவனங்கள். "நான் B .E தமிழ் மீடியம் " என்று சொன்னால், வேலை யார் தருவார்கள் ? ஒருவேளை, அவ்வாறு தமிழ் வழியில் பொறியியல் படிப்பவர்களுக்கு வேலை பெற்றுத் தருவதில் , தமிழக அரசு உதவி புரியும் என்று சொன்னால் யாராவது சேருவார்கள்.இல்லையேல் , இவ்வாறான படிப்புகளில் சேர்வதற்கு எந்த மாணவனும் முன்வர மாட்டான் !  உண்மையிலேயே தமிழை வளர்க்க வேண்டுமென்று விருப்பப்பட்டால், தமிழை ஒரு பாடமாக  வேண்டுமானால்,அறிமுகம் செய்யலாம் ! மாறாக, தமிழை யாரும் வளர்க்க வேண்டியதில்லை! தானாக வளரும் !அதை விடுத்து .....!  இன்றளவும், நான் தமிழ் வழியில் பள்ளிக் கல்வியை முடித்தேன் என்று சொல்லிக் கொள்வதில் நான் மிகுந்த பெருமை கொள்கிறேன் !

ஒரு கவிதை (யாமாம் !)......



உன் அக்கா கல்யாண ஆல்பத்தை பார்த்துக் கொண்டிருந்தோம்..
என் அப்பாவைக் காட்டி 'அப்பா' என்றேன்...
நீ 'மாமா' என்றாய்....
ஏன் அம்மாவைக் காட்டி 'அம்மா' என்றேன்...
நீ 'அத்தை' என்றேன்...
என்னைக் காட்டி 'நான்' என்றேன்...
நீயும் 'நான்' என்றாய் !

ஒரு ஜோக்...

"ச்சே... இந்த முறையும் போரில் தோற்று விட்டோமே மந்திரி..."
"பரவாயில்லை விடுங்கள் மன்னா , 2011  ல பாத்துக்கலாம் "


 ( "சரி, ஜோக் சொல்றேன்னு சொன்னியே ?! எங்க" ன்னு கேக்கப் படாது ! இந்த ஜோக்குக்கு சிரிக்காமல் செல்பவர்களின் பதிவுகளில் , இதையே பின்னூட்டமாக போடப் படும் !)



பின் குறிப்பு : மேலே உள்ள படத்திற்கும் ஜோக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை !

ஒரு உறுத்தல்....



நடந்து முடிந்த IPL 3 இல், பஞ்சாபிற்கு எதிரான போட்டியில் , அதிரடியாக விளையாடி , சென்னை அணியை அரை இறுதிக்கு அழைத்து சென்றார் தோனி . அந்த ஆட்டம் முடிந்த பிறகு அளித்த பேட்டியில் , " ஒவ்வொரு அணி முதலாளியும் , தங்கள் அணிகளை நம்பி பெரும் பணத்தை முதலீடு செய்கிறார்கள் . அதற்காகவாவது, நாங்கள் அரையிறுதி வரியிலாவது முன்னேற வேண்டும் " என்று சொன்னார். ஆனால், நடந்து முடிந்த மூன்றாவது 20 - 20  உலகக்கோப்பையில் , என்ன செய்தீர்கள் தோனி  ?! அணியில் ஒற்றுமை இல்லாத வரை எந்த ஒரு அணியும் வெற்றியை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது !

6 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. பழமை விரும்பி!

    வணக்க்மும் வாழ்த்துகளும்!!

    ReplyDelete
  3. //பின் குறிப்பு : மேலே உள்ள படத்திற்கும் ஜோக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை !
    //

    இதுக்கு தான் சிரித்தேன்.

    ReplyDelete
  4. சரி, ஜோக் சொல்றேன்னு சொன்னீங்களே ?! எங்க?

    (ஹாஹா..எனக்கு தான் ப்ளாக்கே இல்லயே.. இப்போ என்ன பண்ணுவீங்க...இப்போ என்ன பண்ணுவீங்க...)

    ReplyDelete
  5. @பழமைபேசி...
    வாங்க பழமைபேசி...
    உங்க வாழ்த்துக்கள் மட்டும் எனக்கு போதும்....
    என் வணக்கங்களை நீங்கள் பிடியுங்கள்...
    வந்தமைக்கும் தந்தமைக்கும் நன்றி...(அட இது கூட நல்லா இருக்கே ? அப்படியே பிக் அப் பண்ணு டா தேசாந்திரி... !)
    மீண்டும் வருக...

    @மஞ்சூர் ராசா ...
    வந்தமைக்கும் தந்தமைக்கும் நன்றி...
    மீண்டும் வருக...

    @அனு...
    //எனக்கு தான் ப்ளாக்கே இல்லயே.. இப்போ என்ன பண்ணுவீங்க////
    இன்னைக்கு இல்லைனாலும் என்னைக்காவது ஒரு நாள் நீங்க ப்ளாக் ஆரம்பிப்பீங்க...
    அப்ப பாத்துக்குறேன்... ! :)
    வந்தமைக்கும் தந்தமைக்கும் நன்றி...
    மீண்டும் வருக...

    ReplyDelete

போற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... !

தமிழில் பின்னூட்டமிட CLICKகுங்க....

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...