Saturday, February 26, 2011

சச்சின் டெண்டுல்கருக்கு (மீண்டும்) ஒரு பகிரங்கக் கடிதம்...

(மீள்பதிவு)
 அன்பிற்குரிய சச்சின் அவர்களுக்கு,



        இந்தியாவிலுள்ள கோடிக்கணக்கான  உங்கள்  ரசிகர்களில் ஒருவர் எழுதிக் கொள்வது. இப்போது  நடைபெற்றுவரும் DLF IPL 3 யில், நீங்கள் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறீர்கள்.வழக்கம் போல வாழ்த்துக்கள் ! ஆனால், முன்பு  உங்களிடம் இருந்த அந்த பொறுமை, இப்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகின்றது போல் எனக்குத் தோன்றுகிறது. உங்களுக்கு அழகே, அந்த பொறுமைதானே ஐயா ? இந்த போட்டிகளை விட எத்தனையோ கடினமான, த்ரில்லிங்கான போட்டிகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் தானே ? இது என்ன சாதாரண IPL தானே ? இந்த பதிவை எழுத  ஆரம்பிக்கும் போது நீங்கள் IPL 2010 FINAL  விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். முடிவு என்னவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். ஒருவேளை, உங்கள் தலைமையிலான மும்பை அணி, தோற்றே  போனாலும் கூட, உங்களை நாங்கள் பழைய சச்சின் டெண்டுல்கராகவே பார்க்க விரும்புகிறோம்.



அப்படி மும்பை இந்தியன்ஸ் அணி தோற்றுப் போனாலும், நீங்கள் என்றைக்குமே தோற்க மாட்டீர்கள் சச்சின் ! யாரவது உங்களுடன் போட்டி போட்டால்தானே தோற்பதற்கு ?!
நான் என் நண்பர்களிடம் அடிக்கடி  சொல்லி பெருமைப் பட்டுக் கொள்வதுண்டு - இன்றைய கிரிக்கெட்டில் சச்சினைப் போல ஒரு ஜென்டில் மேன் வேறு யாருமில்லை என்று! ஆனால், நீங்கள் இவ்வளவு கோபப்  பட்டு விளையாடி நாங்கள் பார்த்ததே இல்லையே ? உண்மையில் இது போன்ற போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயம் உங்களுக்கு உண்டென்பது எங்களுக்கும் தெரியும். இது ஒரு வகையில் உங்களைப் போன்ற மூத்த வீரர்களுக்கு மானப் பிரச்சனையாகவும் பார்க்கப் படுகிறது. என்னதான் இருந்தாலும் எங்களுக்கு இந்த சச்சின் வேண்டாம். பழைய சச்சினைக் கொடுங்கள் ! சர்வதேச போட்டிகளில் இருந்து நீங்கள் ஓய்வு பெறக் கூடாதென்பதை நாங்கள் எவ்வளவு விரும்புகிறோமோ , அதே அளவுக்கு நீங்கள் IPL இல் இருந்து கூடிய சீக்கிரம் ஓய்வு பெற்று விடுங்கள் என்று வேண்டிக்கொள்கிறோம் -  உங்களை முழு இந்தியாவிற்குமானவராக ஏற்றுக் கொண்டு விட்ட பிறகு !



ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகனின் கனவு, வருகின்ற 2011  இல் உலகக் கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என்பது. ( 2011 ல நாங்க எத்தனைதான் எதிர்பார்க்கிறது ? தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார் என்பதற்கும் இதே ஆண்டுதான் , பதிலை வைத்துக் கொண்டிருக்கிறது ! ) அதிலும் உங்கள் பங்களிப்பு அதிகம் இருக்க வேண்டுமென்பது ! இந்த IPL கருமத்தைஎல்லாம் விட்டு விட்டு வெளியே வாருங்கள். உங்களின் ஒவ்வொரு சிங்கிள் ரன்னிற்கும் விசிலடிக்க கோடி இந்திய  மக்கள் காத்திருக்கிறார்கள் !



 2011 நம்ம கையிலே,  சந்திப்போண்டா  தோழா நாம WORLD CUP ல !

Saturday, February 19, 2011

நடுநிசி நாய்கள் - சிறப்பு சிறுகதை

ஒவ்வொரு இரவும் பணிமுடித்து காலத் தாமதமாக வீடு திரும்புவது என்பது எங்கள் வேலைக்கே உள்ள 'சிறப்பம்சம்'. ஆம், நான் ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன்.

சிலநாட்கள், 10 மணி,சிலநாட்கள் 12 மணி.அல்லது அடுத்தநாள் காலை 3 அல்லது 4 மணி. பெண்கள் என்றால், CAB ஏற்பாடு செய்து விடுவார்கள்.எனக்கு , சொந்தமாக ஒரு BIKE உண்டு. ஊரில் அப்பா வாங்கி வைத்திருந்தது. அதை நான் எடுத்துக் கொண்டு , அவருக்கு ஒரு புது TVS 50 வாங்கிக் கொடுத்து விட்டேன். வயசாகி விட்டதால், GEAR வண்டி ஓட்ட வேண்டாம் என்று சொல்லி வைத்திருக்கிறேன்.


இரவு தாமதமாக வந்தாலும், TRAFFIC போலீஸ் எங்களை எதுவும் கேட்க மாட்டார்கள். அதிகாலை 3 மணி ஆனாலும், சட்டையை IN பண்ணிக் கொண்டும், ID CARD ஐ, வெளியில் தெரியும் படி  மாட்டிக் கொண்டு வருவோம். அவர்களும் கணித்து விடுவார்கள். சிலசமயம் 100 - 200 கொடுப்பதுண்டு.

மெயின் ரோட்டில் வரும்போதெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்லை. உள்ளே தெருவில் நுழைந்து விட்டால், 'அவர்களின்' ஆட்டம் ஆரம்பமாகிவிடும். கூட்டமாக நின்று கொண்டு வருவோர் போவோரை மிரட்டிக்  கொண்டு  இருப்பார்கள். பெண்கள் CAB இல் சென்று விடுவதால் பிரச்சினை இல்லை.கூடவே SECURITY GAURD வேறு இருப்பார்கள்.என்னைப் போன்ற மென்பொருள் 'இளைஞர்களுக்கு' தான் கஷ்டம்.


கொஞ்சம் தைரிய சாலியாக இருந்தால் , நின்று  முறைத்துப் பார்க்கலாம். அவர்கள் திரும்பிப் போய் விடுவார்கள்.அல்லது நாம் கூட்டமாக இருக்க வேண்டும்.அப்போது அவர்கள் கொஞ்சம் பயப்படுவார்கள். ஒருத்தன் சவுண்டு கொடுத்தால் போதும், சுத்தி இருக்கிற எல்லாரும் சேர்ந்து கொள்வார்கள். இவர்களைத் தட்டிக் கேட்க ஆட்களே இல்லையா ?



இவர்களால் எத்தனை பேர் ACCIDENT ஆகியிருக்கிறார்கள் ?! எத்தனை மரணங்கள் ?! எத்தனை காயங்கள் ?! ஏன் இப்படி ?! இனியும் பொறுத்திருக்கக் கூடாது.திருப்பி அடிக்க வேண்டும்.

ஆஹா, இன்றும் லேட் ஆகிவிட்டதே ?!
பயம் என்னை ஆட்கொள்ள ஆரம்பித்தது. எவ்வளவு வேகமாக வண்டியை ஓட்டினாலும், துரத்திக் கொண்டே வருவார்களே ?! "இன்றோடு நான் பயந்து ஓடுவது கடைசியாக இருக்க வேண்டும்" , என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். HELMET போட்டுக் கொண்டு வண்டி ஓட்டினால், அவர்களின் கோபம் இன்னும் அதிகமாகி விடும்.

நாளை காலை முதல் வேலையாக இதைப் பற்றி புகார் சொல்லியாக வேண்டும். அல்லது அனைத்துப் பத்திரிக்கைகளுக்கும் செய்தியாவது அனுப்ப வேண்டும். நல்ல வேலை இன்று வெள்ளிக் கிழமை. நாளை ஆபீஸ் கிடையாது. இதுதான்  தக்க சமயம்.ACT NOW !

"என் சமூகத்திற்கு நான்" செய்யும் சிறு அல்லது பேரு உதவி இதுவாக இருக்கக் கூடும்!

சனிக்கிழமை காலை 11 மணி.
என் மொபைல் போனில் இருந்து சுழற்றினேன் - அல்லது கால் செய்தேன்.
1913 

"ஹலோ , சென்னை கார்பொரேசன் ?! நான் இங்க அடையார்ல இருந்து பேசறேன். தெரு நாய்கள் பத்தி கம்ப்ளைன்ட் பண்ணனும் ! ஒரே டார்ச்சரா இருக்கு சார் ! கொஞ்சம் CONNECT பண்றீங்களா ?!"



(நன்றி - கதைத்  தலைப்பு உதவி - கவுதம் வாசுதேவ மேனன் , புகைப்பட உதவி - www.tamilvix.com, http://www.flickr.com/photos/kxp130/229446264/)


Saturday, February 12, 2011

கொஞ்சமாச்சு சி ரிப்பு வருதான்னு சொல்லுங்களேன் ?!


தலைவர் டிவி பார்த்து ரொம்ப கேட்டுப் போயிட்டாரா ?! ஏன் ?!
ஆமா, 'ஊழல் பண்ணுறதால நல்லது நடந்தா, ஊழல் நல்லது தானே?! ' ன்னு கேக்குறார் !


####################################################################################


தலைவர் ரொம்ப அப்பாவியா இருக்கார்!
ஏன் அப்புடி சொல்ற ?!
'தேர்தல் ஆணையத்தோட கூட்டணி வெச்சா சுலபமா ஜெயிக்கலாமே' ன்னு சொல்றார் !


####################################################################################


இந்த தேர்தல்ல எந்த கட்சியுமே ஜெயிக்காதா ?! ஏன் ?!
ஆமா, பின்ன என்ன ?! எல்லாருமே 'மக்களுக்கு நல்லது பண்ற கட்சிக்கு ஒட்டு போடுங்க' ன்னு சொல்றாங்களே ?!


####################################################################################


தலைவர் ஏன் ரொம்ப கடுப்பா இருக்கார் ?!
எலெக்சன் டெபாசிட் கட்ட போகும்போது, அவுங்க வீட்டம்மா 'எதுக்குங்க இவ்ளோ பணத்த வேஸ்ட் பண்றீங்க' ன்னு கேட்டாங்களாம் !


####################################################################################

தலைவர் ரொம்ப முன்னேறிட்டார் !
எப்புடி ?!
எதிர்கட்சித் தலைவர், தேர்தல் அறிக்கையில "வீட்டுக்கு ஒரு கம்ப்யூட்டர்" னு சொன்னதும், இவர் "ஓட்டுக்கு ஒரு கம்ப்யூட்டர்" னு அறிக்கை விடறாரே !


####################################################################################



(படம் நானே வரைஞ்சதாக்கும் !)

18 வயது வந்த உடன் ஒரு ஓட்டு போட அனுமதிக்கும் தேர்தல் ஆணையமே ,நான் கேட்கிறேன் , 36 வயது வந்த உடன்  இரண்டு ஓட்டு போட அனுமதிக்காதது ஏன் ?


####################################################################################

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...