எனக்கு "உண்மையான ஹீரோக்கள் " என்ற தலைப்பில் ,ஆங்கிலத்தில் வந்த மின்னஞ்சல் இது . ஏதோ என்னால் முடிந்த அளவு தமிழில் மொழி மாற்றம் செய்து பதிவிடுகிறேன்.
2008 இல் Sichuan இல் (சீன எல்லைக்கு உட்பட்டது என்று நினைக்கிறேன் ) ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது எடுக்கப் பட்ட புகைப்படங்கள் இவை.பார்த்த மாத்திரத்தில் , நம்மை பாதிக்கக் கூடியவை.
****************************************************************************************************
300 அணுகுண்டுகளை ஒரே நேரத்தில் வெடிக்கசெய்தால் எவ்வளவு சேதம் உண்டாகுமோ , அதை ஒத்தது இந்த நிலநடுக்கம். கிட்டத்தட்ட 30 ,000 உயிர்களை பலிகொண்டது இந்த பூகம்பம்.
எல்லா பெரு நகரங்களும் தரை மட்டமாகின.மலைகள் மடுக்களாகின.
லட்சக் கணக்கான மக்கள் தங்கள் அன்பிற்குரியவர்களையும், வீடுகளையும்,மற்றுமனைத்தையும் இழந்தனர்.ஆனால், அரசாங்கத்தின் மீதோ , அதிகாரிகள் மீதோ குற்றம் சொல்வதை விடுத்து மக்களுக்கு மக்களே உதவி செய்ய ஆரம்பித்தனர்.
பூகம்பம் நிகழ்ந்துசில மணிநேரங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக இரத்ததானம் செய்ய வரிசை காட்டி நின்றனர்.இந்தவரிசை பல கிலோ மீட்டர் தூரம் நீண்டது.DUJIANYANG என்ற நகர், போக்குவரத்து நெரிசலால் சிக்கித் தவித்தது.காரணம் , பூகம்பமல்ல.விரும்பி சேவை செய்ய வந்த VOLUNTEER -களால்தான்.1000 க்கும் மேற்பட்ட டாக்சி டிரைவர்கள் தலைமையில் கூட்டம் நகரை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தது.
மருத்துவப் பணியாளர்கள் அசாதாராணமான சூழ்நிலையிலும் மிகச்சிறந்த சேவை அளித்தனர்.PARKING ஏரியாவில் பல கர்ப்பிணிகள் குழந்தைகளை பெற்றெடுத்தனர்.
WAN JIABAO , 66 வயதான சீனப் பிரதம மந்திரி, சம்பவம் நடந்த 30 நிமிடங்களில் அந்த இடத்திற்கு வந்தார்.மீட்புக் குழுவிற்கு தலைமையேற்று முன் நின்று மீட்புப் பணிகளை மேற்கொண்டார்.
1000 க்கும் மேற்பட்ட , ராணுவத்தை சேர்ந்த பாராசூட் வீரர்கள் , கனத்த மழை , பலத்த காற்று , அடர்ந்த மேகம் இவை எவற்றையும் பொருட்படுத்தாமல், சுமார் 20,000 அடி உயரத்தில் இருந்து குதித்தனர் , நாம் குதிக்கப் போகும் இடத்தில் யாரவது இருப்பார்களா என்றெல்லாம் யோசிக்கவில்லை ! முதலில் குதித்த சீனியர் COLONEL, LIZHENBO விற்கு வயது 51 .
இராணுவத்தினரும் , மீட்புக் குழுவினரும் விடாது மீட்புப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். மீட்பு வாகனங்கள் செல்ல முடியாத இடங்களுக்கு , டன் கணக்கில் எடை இருக்கும் சாதனங்களை தங்கள் கைகளாலேயே சுமந்து சென்றனர்.
நிவாரண தொகை கொடுக்க, மக்கள் கூட்டம் கூட்டமாய் காத்திருந்தனர் . செல்வந்தர்கள் கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்தனர். ஆனால் , கீழுள்ள படத்தில் வலதுபுறம் இருக்கும் XU CHAO என்ற 60 வயது காரர் கொடுத்த தொகை மிகவும் பெரியது.
பரம ஏழையான XU CHAO வீடில்லாதவர்.இந்த பூகம்பத்திற்கு முன்பிருந்தே ! காலையில் 5 YUAN களை கொடுத்த இவர் , மதியத்திற்குள் மீண்டும் 100 YUAN களை கொடுத்தார். பூகம்பத்தில் சிக்கிய மக்கள் தன்னை விட மிகவும் பரிதாபத்திற்குரியவர்கள் என்றார் XU CHAO .
SONG XINYING என்கிற 3 வயது குழந்தை , இடிபாடுகளில் இருந்து 2 நாட்களுக்கு பிறகு மீட்கப் பட்டது.தன் கால்களை ஒன்றை இழந்து விட்டிருந்தாள் SONG XINYING . இந்த விஷயம் அவளின் பெற்றோர்களுக்கு தெரியாது ! பூகம்பத்தின் போது , தங்களின் கைகளை இவளுக்கு மேலாக கூடாரம் போல் வைத்து இவளை பாதுகாத்தனர். ஆனால் அவர்கள் சடலமாகதான் மீட்கப் பட்டனர் !
ஒரு 5 வயது சிறுவன் 24 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப் படுகிறான்.அவனது இடது கை உடைந்திருக்கிறது.மீட்கப்பட்டவுடன் , மீட்புக் குழுவினர்களை பார்த்து நன்றியுடன் புன்னகைக்கிறான் ! அனைவரையும் அழ வைத்த சிரிப்பு அது !! நாம் மற்றவர்கள் அழுவதை பார்த்து சிரித்திருக்கிறோம் இல்லையா ?! இவன் சிரிப்பதை அழுகையோடு பார்க்கிறார்கள் இராணுவத்தினர் !!
ZHANG JIWANG என்ற 11 வயது சிறுவன் , தனது 3 வயது தங்கையான ZHANG HAN ஐ தூக்கிக் கொண்டு , 12 மணி நேரம் நடந்து பாதுகாப்பான இடத்திற்கு (??) சென்று சேர்த்தான்.
YUVAN WENTIN என்கிற 26 வயது பள்ளி ஆசிரியை , தானிருந்த 3 வது மாடியிலிருந்து , தரை தளத்திற்கு செல்ல தன் மாணவர்களுக்கு உதவிக்கொண்டிருந்தார்.பெரும்பாலான மாணவர்கள் இவ்வாறு மீட்கப் பட்டனர். மீதமிருந்த கொஞ்ச மாணவர்களுக்கு உதவும் போது, பள்ளிக் கட்டிடம் அவள் மீது சரிந்தது ! தன் வாழ்வின் இறுதி நிமிடங்கள் அதுதான் என்று தெரிந்ததும், தன் உடலையே, ஒரு கேடயமாக பயன்படுத்தி , சில மாணவர்களின் மீது கான்க்ரீட் விழாமலிருக்க முயற்சித்திருக்கிறார் !
கீழுள்ள படத்தில் புன்னகைக்கும் இந்த சிறுமி , ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவி. தன்னை கட்டிடக் குப்பைகளில் இருந்து மீட்டெடுத்த மீட்புக் குழுவினரிடம் , புன்னகையுடன் கூறுகிறாள் - "
தைரியமாக இருங்கள் " !!
ஒரு பச்சிளம் குழந்தை, 24 மணி நேரம் கழித்து எந்த ஒரு சிரைப்புமில்லாமல் மீட்கப் பட்டது.பிறந்து , 3 முதல் 4 மாதங்கள் மட்டுமே ஆகியிருக்கக் கூடும் ! இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியிருந்த போதும், முட்டியிட்டு , தன் தலை குனித்து இந்த குழந்தைக்கு பாலூட்டியிருக்கிறார் இதன் தாய் ! மீட்புக் குழுவை சேர்ந்த ஒருவர், இந்த குழந்தையிடம் இருந்து ஒரு செல் போனை எடுத்திருக்கிறார் . அதன் முகப்பில் ஒரு TEXT மெசேஜ் இருந்தது -
"DEAR CHILD , IF YOU SURVIVE - PLEASE REMEMBER - MOM LOVES YOU FOREVER " !!
****************************************************************************************************
நீங்களே சொல்லுங்கள்.இவர்கள் ஹீரோக்கள் தானே ?!
இதை மெயிலில் அனுப்பிய நண்பருக்கு நன்றி.
இந்த பூகம்பம் பற்றிய தகவல்களுக்கு இங்கே CLICK கவும்.