அன்பிற்குரிய சச்சின் அவர்களுக்கு,
இந்தியாவிலுள்ள கோடிக்கணக்கான உங்கள் ரசிகர்களில் ஒருவர் எழுதிக் கொள்வது. இப்போது நடைபெற்றுவரும் DLF IPL 3 யில், நீங்கள் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறீர்கள்.வழக்கம் போல வாழ்த்துக்கள் ! ஆனால், முன்பு உங்களிடம் இருந்த அந்த பொறுமை, இப்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகின்றது போல் எனக்குத் தோன்றுகிறது. உங்களுக்கு அழகே, அந்த பொறுமைதானே ஐயா ? இந்த போட்டிகளை விட எத்தனையோ கடினமான, த்ரில்லிங்கான போட்டிகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் தானே ? இது என்ன சாதாரண IPL தானே ? இந்த பதிவை எழுத ஆரம்பிக்கும் போது நீங்கள் IPL 2010 FINAL விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். முடிவு என்னவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். ஒருவேளை, உங்கள் தலைமையிலான மும்பை அணி, தோற்றே போனாலும் கூட, உங்களை நாங்கள் பழைய சச்சின் டெண்டுல்கராகவே பார்க்க விரும்புகிறோம்.
அப்படி மும்பை இந்தியன்ஸ் அணி தோற்றுப் போனாலும், நீங்கள் என்றைக்குமே தோற்க மாட்டீர்கள் சச்சின் ! யாரவது உங்களுடன் போட்டி போட்டால்தானே தோற்பதற்கு ?!
நான் என் நண்பர்களிடம் அடிக்கடி சொல்லி பெருமைப் பட்டுக் கொள்வதுண்டு - இன்றைய கிரிக்கெட்டில் சச்சினைப் போல ஒரு ஜென்டில் மேன் வேறு யாருமில்லை என்று! ஆனால், நீங்கள் இவ்வளவு கோபப் பட்டு விளையாடி நாங்கள் பார்த்ததே இல்லையே ? உண்மையில் இது போன்ற போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயம் உங்களுக்கு உண்டென்பது எங்களுக்கும் தெரியும். இது ஒரு வகையில் உங்களைப் போன்ற மூத்த வீரர்களுக்கு மானப் பிரச்சனையாகவும் பார்க்கப் படுகிறது. என்னதான் இருந்தாலும் எங்களுக்கு இந்த சச்சின் வேண்டாம். பழைய சச்சினைக் கொடுங்கள் ! சர்வதேச போட்டிகளில் இருந்து நீங்கள் ஓய்வு பெறக் கூடாதென்பதை நாங்கள் எவ்வளவு விரும்புகிறோமோ , அதே அளவுக்கு நீங்கள் IPL இல் இருந்து கூடிய சீக்கிரம் ஓய்வு பெற்று விடுங்கள் என்று வேண்டிக்கொள்கிறோம் - உங்களை முழு இந்தியாவிற்குமானவராக ஏற்றுக் கொண்டு விட்ட பிறகு !
ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகனின் கனவு, வருகின்ற 2011 இல் உலகக் கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என்பது. ( 2011 ல நாங்க எத்தனைதான் எதிர்பார்க்கிறது ? தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார் என்பதற்கும் இதே ஆண்டுதான் , பதிலை வைத்துக் கொண்டிருக்கிறது ! ) அதிலும் உங்கள் பங்களிப்பு அதிகம் இருக்க வேண்டுமென்பது ! இந்த IPL கருமத்தைஎல்லாம் விட்டு விட்டு வெளியே வாருங்கள். உங்களின் ஒவ்வொரு சிங்கிள் ரன்னிற்கும் விசிலடிக்க கோடி இந்திய மக்கள் காத்திருக்கிறார்கள் !
2011 நம்ம கையிலே, சந்திப்போண்டா தோழா நாம WORLD CUP ல !
Showing posts with label சச்சின். Show all posts
Showing posts with label சச்சின். Show all posts
Monday, April 26, 2010
Friday, November 6, 2009
மும்பை வீரன்தானே... அவன 'அடிக்க' விட்டே 'வீணே ( ! )' ...

இன்று இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ஒரு நாள் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது. எழு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இது வரை நடந்த நான்கு போட்டிகளில் ரெண்டுக்கு ரெண்டு என்று ரெண்டு பேரும் சரி சமமான நிலையில் இருந்தனர்.
இருபது ஓவர் போட்டி வந்தவுடன்,இப்போதெல்லாம் ஒரு நாள் போட்டிகள் மிகவும் நீளமானதாக தோன்றுகின்றன. அவர்கள் முன்னூத்தி ஐம்பது ரன்கள் எடுத்தவுடனே , போட்டியின் முடிவை அனைவரும் கணித்திருப்பார்கள், என்னைப் போலவே. நம்ப ஆளுங்க என்னிக்கு முன்னூத்தி ஐம்பது ரன்களை சேஸ் பண்றது ? ன்னு அவனவன் வேலையை பாக்க போய்ருவாங்கன்னு பாத்தா , நம்ம அண்ணாத்த சச்சின் விட மாட்டேன்கிறாரே ?!
வயசு முப்பத்தி ஆறு ஆனாலும் அடி ஒவ்வொன்னும் சும்மா இடி மாதிரியில்ல இருந்துச்சு ? ரொம்ப நாள் கழிச்சி இப்படி ஒரு ஆட்டம் சச்சின் கிட்ட இருந்து.
ஆனாலும் நம்ம கணிப்பு படி ( ! ) 'சேசிங்க்ல சச்சின் நூறுக்கு மேல போன இந்தியா தோத்துடும்' ங்கறது சரியாதான் இருக்கும் போல !
நாம என்னதான் இங்கன உக்காந்துக்கிட்டு 'டோனி அஞ்சாவது டவுன் இறங்கியிருக்கணும்','சச்சின் ஒன்னாவது டவுன் இறங்கியிருக்கணும்','ஹர்பஜனுக்கு முன்னாடி ஜடேஜா இறங்கியிருக்கணும் ', னு சொல்லிரலாம் னாலும் ,அண்ணன் தோனிக்கு தெரியாததா நமக்கு தெரிஞ்சுடப் போகுது ?
எது எப்படியோ சச்சின் எழு ரன் எடுத்தாப் போதும்ன்னு நெனச்ச நேரத்துல, நூத்தி எழுபத்தஞ்சு அடிச்சது என்னவோ சந்தோசந்தான். ஒவ்வொரு விக்கெட்டுமே ஆட்டத்தின் திருப்பு முனைதான்.கடைசி நேரத்துல பிரவீன் குமார் கொஞ்சூண்டு நம்பிக்கை கொடுத்தார். .ஆனாலும் மேட்ச் வின் பண்ணியிருக்கலாம்.
என்னோட ஞானக் கண் பார்வையை பொறுத்த வரைக்கும், 'என்ன நடக்கும் ?' அப்படின்னா , அடுத்த மேட்ச் இந்தியா வெற்றி பெறும். கடைசி மேட்ச் தான் தொடரை யார் வெல்லப் போறாங்கன்னு முடிவு பண்ணும்.
Subscribe to:
Posts (Atom)
மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)
கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...



