Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Saturday, May 15, 2010

இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்.... 50 வது இடுகை

என்னுடைய 10    மாத கால பதிவுலக வாழ்க்கையில் ( ! ) , இது 50 இடுகை. எப்படியோ GOOGLE புண்ணியத்தில், இலவச வலைத்தளம் ஆரம்பித்து விட்டு, இனி என்னத்தை எழுதப் போகிறோம் என்று முழித்துக் கொண்டு இருந்த நான், என்ன என்னத்தையோ எழுதி இருக்கிறேன். பிரபல பதிவரின் , 50  இடுகையில் பங்கு பெறும் பாக்கியம்  தேடிக் கொள்கிறது  'இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் '  ! வாழ்த்துக்கள் !



50 வது இடுகைன்னு நெனச்சி நான் போட்ட 49 இடுகை , '"நான் ஏன் பதிவரானேன்? ".... 49 வது இடுகை ....!' . இதையும் , என்னுடைய முதல் இடுகை -முதல் அஞ்சல் ...(அட போஸ்ட் தாங்க ).

இதையும் ஒரு முறை படித்து விட்டு வந்துருங்களேன் !


 கடந்த ஞாயிற்றுக் கிழமை செகண்ட் ஷோவிற்கு
அடையார் கணபதிராம் தியேட்டரில் IKMS (IRUMBU KOTTAI MURATTU SINGAM ) படம் பார்க்க போனோம்.மொத்தம் 8 பேர். நான்தான் முதலில் டிக்கட் கவுன்ட்டரில் நின்று கொண்டிருந்தேன்.போகப் போக கூட்டம் அதிகமாகிக் கொண்டே போனது. டிக்கெட் கிடைப்பதே கஷ்டம் என்றாகிப்  போனது. நான் வழக்கமாக, எந்த படத்திற்கும் அடித்துப் பிடித்து டிக்கெட் வாங்க மாட்டேன். இந்த வாரம் இல்லைனா , அடுத்த வாரம் .அவ்வளவுதான் ! ஆனால், என்னையும் நம்பி ,' நீ டிக்கெட் எடுத்து வைடா, நாங்க வந்துகிட்டே இருக்கோம் ' னு சொன்ன , நம்ப பசங்களுக்காக கொஞ்சம் ரிஸ்க் எடுக்க முடிவு செய்தேன்.

இனியும், ' காந்தி ' யா இருந்தா டிக்கெட் கிடைக்காது என்பதையறிந்து , ' சுபாஷ் சந்திர போஸ் ' ஆக மாறி ( நன்றி - வல்லரசு மகாராஜன் ) நான் நாலு டிக்கெட்டும் , நண்பன் நாலு டிக்கேட்டுமாக   வாங்கி உள்ளே சென்றமர்ந்தோம் ! எனக்கு , மன்னன் படத்தில் வரும் ரஜினி- கவுண்டமணி சீன் ஞாபகம் வந்தது! நல்ல வேளை , நாங்கள் போகும் வரை படம் ஆரம்பிக்க வில்லை ! நான் இதுவரை சிம்பு தேவனின் 'இம்சை அரசன் 23 ம் புலிகேசி ' படம் மட்டும் தான் பார்த்திருக்கிறேன். 'அறை எண் 305 இல் கடவுள் ' படம் பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லை.புலிகேசி படம் கூட ஏதோ லொள்ளு சபா பார்த்த பீலிங் தான் கொடுத்தது. ஆனால், லொள்ளு சபா  எனக்கு பிடித்தமான ஒரு நிகழ்ச்சியாக இருந்தது. அதைப் பார்ப்பதற்காகவே , கல்லூரி  விடுதியில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள உள்ள ஒரு மெஸ் க்கு கும்பலாக போவோம்.



முதலில் , கல்பாத்தி S அகோரம் அவர்களுக்கு பாராட்டுக்கள்! ஒரு புதிய (பழைய ?) முயற்சிக்கு, தாராளமாக முதலீடு செய்திருப்பதே பெரிய விஷயம் தான்! அடுத்து , 'மதராசப் பட்டிணம் ' படம் கூட அவரது தயாரிப்புதான் என நினைக்கிறேன். கல்பாத்திகளுக்கு வாழ்த்துக்கள் ! படத்தின் ஆரம்பத்திலேயே சிம்பு தேவனின் கிளிஷேக்கள் நம்மை வரவேற்கின்றன.படத்தின் ஆகப் பெரும் பலம் , கலை இயக்குனர் தான். செட் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்வதில் இருந்து, நிகழ் காலத்தின் எந்த ஒரு பாதிப்பும் எங்கும் பட்டு விடாமல் காப்பாற்றியிருக்கிறார். அடுத்து , ஒளிப்பதிவாளர் N .அழகப்பன் அவர்கள்.கலை இயக்குனர் பட்ட கஷ்டத்தை  எல்லாம் , திரையில் கொண்டுவந்து அதற்கான பலனை உண்டாக்கி விடுகிறார். அதுவும், கடைசி அரை மணி நேர காட்சிகளுக்கான காமிரா கோணங்கள் அருமை.

 சின்ன சின்ன நகைச்சுவைகளை தன் பாணியில் கோர்த்து திரைக்கதையை  'பின்னி ' எடுத்திருக்கிறார் சிம்பு தேவன்.சில காட்சிகள், திரை அரங்கமே அதிரும் அளவிற்கு கைத் தட்டல்களை உண்டாக்கி விடுகின்றன. லாரன்ஸ், பத்மப்ரியா, லக்ஷ்மிராய்,சந்தியா,மனோரமா,V .S ராகவன்,M .S பாஸ்கர், நாசர்,இளவரசு,வையாபுரி,மௌலி,சாம், என ஒரு மாபெரும் கூட்டத்தை கொண்டுவந்து , சற்றும் போரடிக்காமல் , கதை சொல்வதில் வெற்றி பெற்றிருக்கிறார் சிம்பு தேவன். கௌபாய்களுக்கே உரிய ஸ்டைல் - ஐ கொஞ்சம் கரெக்டாகவே செய்திருக்கிறார்  லாரன்ஸ். அவர் செய்யும் சில 'சாகசங்களுக்கு' நல்ல ரெஸ்பான்ஸ் ! மூன்று கதாநாயகிகளும் , 'வந்தார்கள் ,சென்றார்கள் ' ! படத்தின், முக்கிய கதா பாத்திரம் என்று சொன்னால், அது ,  செவ்விந்தியராக வரும்  MS பாஸ்கர் தாங்க ! மனுஷன் என்னமா, PERFORM பண்ணியிருக்கார் ?! உண்மையில், 'சின்ன பாப்பா , பெரிய பாப்பா ' விலிருந்து நான், MS பாஸ்கரின் ரசிகன். நிகழ் கால அரசியல் ஆங்காங்கே எட்டிப் பார்க்கிறது .



குறிப்பிட்டு சொல்லும்படி இல்லை, படத்தின் எந்த பாடல்களும். காட்சிகளை DISTURB பண்ணாமல்  ஒலித்துக் கொண்டிருக்கிறது பின்னணி இசை.அந்த ட்ரைலர் பாடல் ( ஒரு நல்லவன் , ஒரு கேட்டவன் , ஒரு வினோதன் ) சூப்பர் ! ஆனால், அந்த அளவுக்கு படத்தில் இல்லையே ?! ஏன் GV ? சரி விடுங்க, மதராசப் பட்டினத்துல பாத்துக்கலாம்.

SO , IKMS -  சிம்பு தேவன் வெச்ச குறி தப்பாது மாமு !

Sunday, March 7, 2010

விண்ணைத் தாண்டி வருவாயா...

இன்று மதியம் , திருவான்மியூர் தியாகராஜாவில் , " விண்ணைத் தாண்டி வருவாயா" திரைப்படம் பார்த்தேன். வேறு யாரும், "கம்பேனிக்கு" வரவில்லை. நான் மட்டுமே! நல்ல கூட்டம். என்னுடைய திரைப்பட வரலா....ற்றில் அதிக அளவு இளம்பெண்கள் கூட்டம் பார்த்தது, இந்த திரைப்படத்தில் தான். 45 ரூபாய் டிக்கெட். ஒருவாரம் ஆகியும், ஞாயிற்றுக் கிழமை மதிய ஷோவிற்கு இந்த அளவு கூட்டம் வருகிறதென்றால் , படம் உண்மையிலேயே HIT தான், ஏனென்றால்  இப்போதெல்லாம், 50 நாட்கள் படம் ஓடுவதே , ஒரு வரலாறுதான்.




படத்திற்கு, சிம்பு - த்ரிஷா ஜோடி , கவுதம் வாசுதேவ மேனன் இயக்கம் என்பதையெல்லாம் "தாண்டி" , A .R ரஹ்மான் இசை என்பதே பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியிருந்தது. அவரின் பெயரை திரையில் காணும் போதே , திரையரங்கில் விசில் சத்தங்களும், கைத்தட்டல்களும் "விண்ணை"ப் பிளக்கின்றன ! ரஹ்மான் ரஹ்மான் தான். சிம்புவை இவ்வளவு SMART ஆக பார்க்கும் போது , நன்றாகத்தான் இருக்கிறார். உண்மையில் , இது யாருமே எதிர்பார்க்காத COMBINATION தான்.ஆனால், நன்றாக WORKOUT ஆகியிருக்கிறது. EXPESSIONS  இல் ஆயிரம் வித்தியாசங்கள் காட்டியிருக்கிறார் சிம்பு. இந்த மாதிரி படங்கள் மேலும் பண்ணுங்க பாஸ் ! நளினி ஸ்ரீராமின் உடைகளில் த்ரிஷாவின் அழகு கூடியிருக்கிறது - வயது குறைந்திருக்கிறது.



நாம், தினசரி வாழ்வில் எதிர்கொள்ளும் இரண்டு கதாபாத்திரங்கள் தான், படத்தின் HERO - HEROINE (ஸ்பெல்லிங் கரெக்டா ?!) . ஆரம்பத்தில், ஒரு வித்தியாசமான காதல் கதை - மறுபடியும் என்று விளம்பரப் படுத்தினார்கள்.அது நிஜம்தான்.கவுதம்  வாசுதேவ மேனன் , "நாங்களும் LOVE SUBJECT படம் எடுப்போம்ல ?! " என்று சவால் விட்டு சாதித்திருக்கிறார்.வாழ்த்துக்கள் கவுதம் வாசுதேவ மேனன் ! யாருப்பா அந்த கணேஷ் ?! எல்லாருக்கும் , இதுமாதிரி ஒரு "சீனியர்" FRIEND  இருந்தால் நல்லாயிருக்குமே என்று தோன்ற வைக்கிறார் ! உண்மையிலேயே , அவரா 'காக்க காக்க ' கேமரா மேன் ?! நான் என்னவோ , R .D .ராஜ சேகர் - னு தானே நெனைசுக்கிடிருந்தேன் ?!



மனோஜ் பரமஹம்சா வின் ஒளிப்பதிவு மிகவும் அருமை.இது அவருக்கு முதல் படம் (தமிழில்  ?) என்று நினைக்கிறேன்.படம் முழுவதும், ரஹ்மானின் ஆதிக்கம் மேலோங்கியே இருக்கிறது. அதுதான் ரஹ்மான் ! 'ஏன் இதயம் ' என்று ஆரம்பிக்கும் பாடல் ஒன்றே போதும் - படம்  முடியும் வரை ரீங்காரமிட்டுக் கொண்டேயிருக்கிறது நம் செவிகளில் ! வசனங்களில் ஆங்கிலக் கலப்பு அதிகம்தான் என்றாலும் ,தவிர்க்க முடியாததாகிறது .

விண்ணைத் தாண்டி வருவாயா - நல்லாயிருக்கு சார்!!

Saturday, March 6, 2010

தீராத விளையாட்டுப் பிள்ளை

போன வாரம் ஞாயிற்றுக் கிழமை, நானும் , நண்பனும் திருவான்மியூர் ஜெயந்தியில் "தீராத விளையாட்டுப் பிள்ளை " திரைப் படம் பார்த்தோம். முதலில், " விண்ணைத் தாண்டி வருவாயா " பார்ப்பதாகத்தான் திட்டம். அங்கு, TICKET RATE மிக அதிகமாகவும் , கூட்டம் மிக மிக அதிகமாகவும் இருந்ததால், சுமூகமாகப் போய் விடலாமென்று தீ.வி.பி போனோம். நம்ம நேரம், அங்கயும் கூட்டம். இருந்தாலும் , டிக்கெட் கிடைத்தது ! ஆனால், டிக்கெட் விலை ,இனிமேல் 20  இல்லை . 25  ரூபாதான் போல !


SUN  TV   உதவியால், படத்திற்கு மிக நல்ல விளம்பரம் ஏற்படுத்தப் பட்டிருந்தது.பாடல்களும் , SURYAN FM இல் போட்டு போட்டு ஓரளவிற்கு நன்றாக இருப்பதாகத் தெரிந்தது. விஷாலுக்கு , "சத்யம் "," தோரணை " படு தோல்விகளுக்குப்  பிறகு மிகவும் அவசியமான வெற்றி இது!

ஒரு NEAT ஆன PLAY BOY கதையில், விஷால் , கதாநாயகன் பாத்திரத்தில் நன்றாகவே பொருந்திக் கொள்கிறார்.ஆனால், அவ்வப் போது விஜய் - யின் மேனரிசங்களை ஞாபகப் 'படுத்துகிறார்'.படத்தில் மூன்று கதாநாயகிகள் . அதில், நீது சந்திரா மட்டுமே நமக்கு பரிச்சயமான  முகம் (?!) . (உபயம் - யாவரும் நலம் ) மற்ற இருவரில் , ' ப்ரியா ' வாக நடித்திருப்பவர் உண்மையாகவே நன்றாக நடித்திருக்கிறார்.



விஷாலின் நண்பர்களாக வரும் சந்தானமும் , சத்யனும் பேசும் வசனங்களுக்கு , அவ்வப் போது திரை அரங்கில் சிரிப்பொலி கேட்கிறது. விஷால் மட்டுமே படத்திற்கு போதாது என்ற நிதர்சனமறிந்து , சும்மா ஒப்புக்கு ஒரு கதாபாத்திரத்தை நுழைத்து , அதில் பிரகாஷ் ராஜை நடிக்க வைத்திருக்கிறார்கள்.அவரும் , தன் கடைமையை செவ்வனே செய்திருக்கிறார்.



சென்னையை அழகாகக் காட்டியிருக்கிறார்  ஒளிப்பதிவாளர் அரவிந்த்கிருஷ்ணா.
அறிமுக இயக்குனர் திரு ,  முதல் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார் - அதில் சந்தேகமில்லை.இசைஅமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் , படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம்.


SO ,தீராத விளையாட்டுப் பிள்ளை ?
.
.
.
.
.
.
.
.
.
.  
.
.
.
.
.
.
.
.
.


அடப் போங்க , எவ்ளோ நேரம்தான் எதுகை மோனை-ல PUNCH யோசிக்கிறது ?!,

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...