Showing posts with label ஹீரோ. Show all posts
Showing posts with label ஹீரோ. Show all posts

Saturday, April 3, 2010

இந்த நூற்றாண்டின் முதல் மற்றும் கடைசி "திகில்" சம்பவம்.....

இன்று ஒரு அழகிய விடுமுறை ஞாயிறு. இருப்பினும், திருவல்லிக்கேணியின் குறுகிய சந்துக்களில் அதிகாலையிலேயே தொடங்கி விடும் இரைச்சல்கள், என்னை ஒரு நாள் கூட 6 மணிக்கு மேல் தூங்க விட்டதில்லை. இருந்தாலும், எனக்கு திருவல்லிக்கேணியில் தங்கி இருப்பது எனக்கு வெறுப்பைத் தந்ததில்லை ! (ஒரே) காரணம்? இங்கு கிடைக்காத புத்தகங்களே இல்லை ! ஷேக்ஸ்பியர்பி(ரி)யரில் இருந்து மஞ்சள் பத்திரிக்கைகள் வரை எந்த தலைப்பிலும் புத்தகங்கள் வாங்கலாம் ! ஆனால் என் மனைவி முதலில் திருவல்லிக்கேணி வருவதற்கே யோசிப்பாள்.ஆனால், இப்போது அப்படியில்லை ! நன்றாக பழகி விட்டாள்!



நான், எனது வழக்கமான ஞாயிறு காலை சிற்றுண்டியான - MAGGI நூடுல்சை முழுங்கி விட்டு, வழக்கம்போல ஒரு மஞ்சள் பையை எடுத்துக் கொண்டு மதிய சாப்பாட்டுக்கு காய்கறி வாங்க கிளம்பினேன்.இது மாதிரியான சமயங்களை , புத்தகங்கள் வாங்குவதற்கும் நான் பயன் படுத்திக் கொள்வது வழக்கம்.ஆனால் என் பொண்டாட்டிக்கு புத்தகங்கள் அறவே பிடிக்காமல் போனதற்கு காரணங்கள் உண்டு ! புத்தகங்கள் ,இடம் அடைப்பவை, தூசி உண்டாகக் கூடியவை என்பாள் ! அதனால் கிளம்பிக் கொண்டிருக்கும் போதே, "இன்னைக்கு வெறும் காய் கறி மட்டும் வாங்கிட்டு வாங்க , ஏற்கனவே மதனோட புக்ஸ் வைக்கறதுக்கே இடமில்ல , மதன் விளையாடக் கூட இடம் பத்த மாட்டேன்குது " என்று கத்தினாள் ! மதன், என் ஆறு வயது மகன் . "சீக்கிரம் வரப் பாருங்க - நீங்க வந்தப்புறம் தான் சமையல் செஞ்சு சாப்டனும். மதன் இன்னும் எழுந்திரிக்கல . எழும்போதே பசியோடதான் எழுந்திருப்பான்" - இது, வீட்ட விட்டு கிளம்பும் போது !



நான் வழக்கமாக செல்லும் , பழைய புத்தகக் கடைக்கே சென்றேன். புன்முறுவலுடன் என்னை வரவேற்று , புதிதாக வந்த பழைய புத்தகங்களை காட்டினார்.நான் போன வாரம் இதே கடையில் வாங்கின "Basics of Cryptology" என்ற புத்தகம் சற்று நன்றாக இருந்தது. எனவே, அது சம்பந்தமான வேறு புத்தகம் ஏதும் இருக்கிறதா என்று கேட்டு முடிக்கும் முன்பாக, நான்கு புத்தகங்களை நீட்டினார். அவற்றுள் இரண்டை எடுத்துக் கொண்டு, 50 ரூபாயை கொடுத்து விட்டு நகர்ந்தேன்.



நான் வாங்கிய புத்தகங்களை எடுத்துக் கொண்டு .கண்ணகி சிலையருகே ஒரு ஓரமான இடம் தேடி ,ஒரு முறை வாசித்துப் பார்க்கலாம் என்று நினைத்து, ஒரு பாக்கெட் காரப் பொரியுடன் அமர்ந்தேன்.அந்த புத்தகத்திலிருந்து ஒரு PRINTOUT நழுவி கீழே விழ்ந்தது.எடுத்து பார்த்தால்- யாரோ - யாருக்கோ அனுப்பிய E Mail அது. வழக்கமான நலம் விசாரிப்புகள் ஏதுமின்றி, இரண்டே வரிகளில் இருந்தது .


18 DUCKS WILL SAIL AND REACH YOU IN A WEEK. 4 FOR W/O SHAHJAHAN ON THE EAST COAST. 5 FOR PEACOCK TEMPLE. 9 FOR LORD NEAR THE NARROW LANES ON BEACH. ROSES KEPT UNDER FLYING TRAIN. LET'S REPEAT WEST COAST.
REGARDS,
INDIAN FRIEND


பார்பதற்கு ஏதோ , விளையாட்டான விடுகதை போல இருந்தாலும், உள்ளே ஏதோ "உள்குத்து" இருப்பது போல தோன்றவே, மீண்டும் ஒருமுறை கூர்ந்து வாசிக்கலானேன்.



போன வாரம் படித்த "Basics of Cryptology" யும் , எனது சிறு மூளையும் கொஞ்சம் செயல் படத் தொடங்கின. என்னுடைய ஆராய்ச்சியின் வாயிலாக, அந்த E மெயில் ஐ , மொழி மாற்றம் (!) செய்த போது கிடைத்த செய்தி , எனக்கு பேதி வருவது போன்று ஒரு உணர்வை உண்டாக்கியதில் ஆச்சர்யமில்லை !


18 TERRORISTS ARE BEING SENT. 4 WILL SEIZE THE TAJ COROMANDEL HOTEL (W/O
SHAHJAHAN = TAJ; EAST COAST = COROMANDEL). 5 WILL SEIZE THE MYLAPORE TEMPLE  (PEACOCK TEMPLE). 9 WILL SEIZE THE SANTHOME CHURCH (LORD NEAR THE NARROW ROAD OF SANTHOME) .

!!!!!!!!!!!!!????????????!!!!!!!!!!!!!!!!!!!!



" பொறுத்தது போதும் - பொங்கிஎழு " என்று நானே சொல்லிக் கொண்டு , இதன் அவசரத்தை உணர்ந்தவனாய், அருகிலிருக்கும் காவல் நிலையத்தை நோக்கி, நடக்க , இல்லை, ஓட ஆரம்பித்தேன். என் மனதுக்குள், "வேட்டை ஆரம்பமாயிடுச்சி டோய் " என்று தோன்றியதை வெளியில் சொல்லாமல், அப்போதுதான் ரோந்திலிருந்து வந்திருந்த இன்ஸ்பெக்டரை அணுகினேன். நடந்த எல்லாத்தையும் கேட்டு , பின்பு ஒரு கான்ஸ்டபிளை என்னுடன் அனுப்பி, அந்த புத்தகக் கடைக் காரரிடம் விசாரிக்கச் சொன்னார். போலீசுடன் என்னைப் பார்த்த அவர், சற்றே பயந்தது போல நடித்து , அந்த புத்தகம் எங்கிருந்து வந்ததென்பதை கூறினார். அந்த இடத்திற்கு நங்கள் மூவரும் போன போது ,மணி மதியம் 12 . நங்கள் சென்று சேர்ந்த இடம் , ஒரு குடிசை ! நானும், கடைக் காரரும் கொஞ்சம் தள்ளி நிற்க, கான்ஸ்டபில் மாட்டும் குடிசையை அணுகி, கட்டப் பட்டிருந்த திரையை விலக்கி, உள்ளே எட்டிப் பார்த்தார். திரும்பியவரின் முகத்தில், ஆயிரம் அதிர்ச்சி அலைகள் !



கான்ஸ்டபில் மெதுவாக எங்கள் காதருகே வந்து பேசினார் - "சார் , பிரச்னை வேற மாதிரிப் போகுது சார் ! " .அவர் எங்கள் இருவரையும் இங்கேயே இருக்கச் சொல்லி விட்டு , அவசரமாக உயரதிகாரிகளுக்கு சொல்வதற்காக விரைந்தார். எங்களுக்கோ , பயம்.சரியாக 40 நிமிடங்கள் கழித்து , ஒரு TATA SUMO வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய ஆறு பேரில், ஒருவர் எங்களுடன் வந்த கான்ஸ்டபில் ! மற்றவர்களும் போலீஸ்தான் என்பதை புரிந்து கொள்வது எனக்கு கடினமானதாக இல்லை! அவர்கள் அந்த குடிசையை சூழ்ந்து கொண்டார்கள். அந்த கான்ஸ்டபில் என்னருகே வந்து "சார், நாம ( ! ) ஒரு பெரிய OPERATION ல இருக்கோம். எங்கயும் போயிடாதீங்க - கமிஷனர் உங்களை பார்க்கணும்னு சொல்லியிருக்கார் ! " என்று முனகி விட்டுப் போனார்.




எனக்கு ஆபரேசன் னாலே அலர்ஜி. அவர்கள் அந்த குடிசையை நோக்கி சரமாரியாக சுட்டதில், ஐந்து நிமிடங்கள் போர்க்களத்தில் இருப்பது போன்று தோன்றியது எனக்கு. (இந்து வரை போரை படத்தில் தான் பார்த்திருக்கிறேன் என்பது வேறு விஷயம் !) . கந்தலாகிப் போன குடிசைகளுக்கு இடையில் , ஏராளமான துப்பாக்கிகள் , வெடிகுண்டுகள் இருந்தன. இரண்டு வாலிபர்கள் இறந்து கிடந்தார்கள். சம்பவ இடத்திலிருந்து , காவல் துறை தலைமை அலுவலகத்திற்கு என்னையும் கமிஷனரோடு ஏற்றிக் கொண்டு சென்றார்கள், அங்கே பத்திரிக்கை நிருபர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். செய்தி சேனல் காரர்கள் , என்னுடைய பேட்டியையும் LIVE ஆக ஒளிபரப்பினார்கள் !



எல்லாம் முடிந்து ,நான் என் வீட்டிற்கு போகும் போது மணி - மதியம் 3 ! உள்ளே நுழையும் போதே, மதன் "அப்பா ! டிவி...." என்று என் காலைக் கட்டிக் கொண்டு கொஞ்சினான். "18 பேர் கொண்ட தீவிரவாதக் கும்பல் கடலூர் அருகே படகுடன் பிடிபட்டனர் . அவர்கள் திட்டமிருந்த மூன்று தாக்குதல் சதிகள் , ஒரு IT ENGINEER இன் சமயோசித நடவடிக்கையால் முறியடிப்பு !!! ". மதனை தூக்கி வைத்துக் கொண்டு , என்னுடைய பேட்டியை டிவி யில் பார்த்துக் கொண்டிருந்தபோது, உள்ளே இருந்து என் மனைவி என்னையும் டிவி யையும் மாற்றி மாற்றி முறைத்துக் கொண்டே கூறினாள் -



"நான் சொல்ற எதையுமே கேக்காதீங்க - கொண்டு போன வெறும் பையோட வந்திருக்கீங்க ?! நானும் மதனும், மதியம் BREAD தான் சாப்டோம் !!"



என் அப்பா அடிக்கடி சொல்லுவார் - " எந்த புருஷனும் பொண்டாட்டிக்கு ஹீரோ இல்லை " னு !! நீங்க என்ன சொல்றீங்க ?!?!


பின்குறிப்பு :
இது எனக்கு மெயில் - இல் நண்பன் அனுப்பியதாகும்.
என்னால் முடிந்த அளவுக்கு மொழி மாற்றம் செய்திருக்கிறேன்.வேறு யாரவது மொழி பெயர்க்க ஆசைப் பட்டால், அந்த ஆங்கிலக் கதையையும் பதிவிடுகிறேன் அல்லது மின்னஞ்சல் செய்கிறேன்.

Saturday, March 13, 2010

உண்மையான ஹீரோக்கள்...

எனக்கு "உண்மையான ஹீரோக்கள் " என்ற தலைப்பில் ,ஆங்கிலத்தில் வந்த மின்னஞ்சல் இது . ஏதோ என்னால் முடிந்த அளவு தமிழில் மொழி மாற்றம் செய்து பதிவிடுகிறேன்.



2008 இல்  Sichuan இல் (சீன எல்லைக்கு உட்பட்டது என்று நினைக்கிறேன் ) ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது எடுக்கப் பட்ட புகைப்படங்கள் இவை.பார்த்த மாத்திரத்தில் , நம்மை பாதிக்கக் கூடியவை.

****************************************************************************************************

300 அணுகுண்டுகளை ஒரே நேரத்தில் வெடிக்கசெய்தால் எவ்வளவு சேதம் உண்டாகுமோ , அதை ஒத்தது இந்த நிலநடுக்கம். கிட்டத்தட்ட 30 ,000 உயிர்களை பலிகொண்டது இந்த பூகம்பம்.


 எல்லா பெரு நகரங்களும் தரை மட்டமாகின.மலைகள் மடுக்களாகின.


 லட்சக் கணக்கான மக்கள் தங்கள் அன்பிற்குரியவர்களையும், வீடுகளையும்,மற்றுமனைத்தையும்  இழந்தனர்.ஆனால், அரசாங்கத்தின் மீதோ , அதிகாரிகள் மீதோ குற்றம் சொல்வதை விடுத்து மக்களுக்கு மக்களே உதவி செய்ய ஆரம்பித்தனர்.



 பூகம்பம் நிகழ்ந்துசில மணிநேரங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக இரத்ததானம் செய்ய வரிசை காட்டி நின்றனர்.இந்தவரிசை பல கிலோ மீட்டர் தூரம் நீண்டது.DUJIANYANG என்ற நகர், போக்குவரத்து நெரிசலால் சிக்கித் தவித்தது.காரணம் , பூகம்பமல்ல.விரும்பி சேவை செய்ய வந்த VOLUNTEER -களால்தான்.1000 க்கும் மேற்பட்ட டாக்சி டிரைவர்கள் தலைமையில் கூட்டம் நகரை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தது.



மருத்துவப் பணியாளர்கள் அசாதாராணமான சூழ்நிலையிலும் மிகச்சிறந்த சேவை அளித்தனர்.PARKING ஏரியாவில் பல கர்ப்பிணிகள் குழந்தைகளை பெற்றெடுத்தனர்.


 WAN JIABAO , 66 வயதான சீனப் பிரதம மந்திரி, சம்பவம் நடந்த 30 நிமிடங்களில் அந்த இடத்திற்கு வந்தார்.மீட்புக் குழுவிற்கு தலைமையேற்று முன் நின்று மீட்புப் பணிகளை மேற்கொண்டார்.



1000 க்கும் மேற்பட்ட ,  ராணுவத்தை சேர்ந்த பாராசூட் வீரர்கள் ,  கனத்த மழை , பலத்த காற்று , அடர்ந்த மேகம் இவை எவற்றையும் பொருட்படுத்தாமல், சுமார் 20,000 அடி உயரத்தில் இருந்து குதித்தனர் , நாம் குதிக்கப் போகும் இடத்தில் யாரவது இருப்பார்களா என்றெல்லாம் யோசிக்கவில்லை ! முதலில் குதித்த சீனியர் COLONEL, LIZHENBO விற்கு வயது 51 .




இராணுவத்தினரும் , மீட்புக் குழுவினரும் விடாது மீட்புப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். மீட்பு வாகனங்கள் செல்ல முடியாத இடங்களுக்கு , டன் கணக்கில் எடை  இருக்கும் சாதனங்களை தங்கள் கைகளாலேயே சுமந்து சென்றனர்.


நிவாரண தொகை கொடுக்க, மக்கள் கூட்டம் கூட்டமாய் காத்திருந்தனர் . செல்வந்தர்கள் கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்தனர். ஆனால் , கீழுள்ள படத்தில் வலதுபுறம் இருக்கும் XU CHAO என்ற 60 வயது காரர் கொடுத்த தொகை மிகவும் பெரியது.பரம ஏழையான XU CHAO வீடில்லாதவர்.இந்த பூகம்பத்திற்கு முன்பிருந்தே ! காலையில் 5 YUAN களை கொடுத்த இவர் , மதியத்திற்குள் மீண்டும் 100 YUAN களை கொடுத்தார். பூகம்பத்தில் சிக்கிய மக்கள் தன்னை விட மிகவும் பரிதாபத்திற்குரியவர்கள் என்றார் XU CHAO .



SONG XINYING என்கிற 3 வயது குழந்தை , இடிபாடுகளில் இருந்து 2 நாட்களுக்கு பிறகு மீட்கப் பட்டது.தன் கால்களை ஒன்றை இழந்து விட்டிருந்தாள் SONG XINYING . இந்த விஷயம் அவளின் பெற்றோர்களுக்கு தெரியாது ! பூகம்பத்தின் போது , தங்களின் கைகளை இவளுக்கு மேலாக கூடாரம் போல் வைத்து இவளை பாதுகாத்தனர். ஆனால் அவர்கள் சடலமாகதான் மீட்கப் பட்டனர் !


ஒரு 5 வயது சிறுவன் 24 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப் படுகிறான்.அவனது இடது கை உடைந்திருக்கிறது.மீட்கப்பட்டவுடன் , மீட்புக் குழுவினர்களை பார்த்து நன்றியுடன் புன்னகைக்கிறான் ! அனைவரையும் அழ வைத்த சிரிப்பு அது !! நாம் மற்றவர்கள் அழுவதை பார்த்து சிரித்திருக்கிறோம் இல்லையா ?! இவன் சிரிப்பதை அழுகையோடு பார்க்கிறார்கள் இராணுவத்தினர் !!


ZHANG JIWANG என்ற 11 வயது சிறுவன் , தனது 3 வயது தங்கையான ZHANG HAN ஐ  தூக்கிக் கொண்டு , 12 மணி நேரம் நடந்து பாதுகாப்பான இடத்திற்கு (??) சென்று சேர்த்தான்.


YUVAN WENTIN என்கிற 26 வயது பள்ளி ஆசிரியை , தானிருந்த 3 வது மாடியிலிருந்து , தரை தளத்திற்கு செல்ல தன் மாணவர்களுக்கு உதவிக்கொண்டிருந்தார்.பெரும்பாலான மாணவர்கள் இவ்வாறு மீட்கப் பட்டனர். மீதமிருந்த கொஞ்ச மாணவர்களுக்கு உதவும் போது, பள்ளிக் கட்டிடம் அவள் மீது சரிந்தது ! தன் வாழ்வின் இறுதி நிமிடங்கள் அதுதான் என்று தெரிந்ததும், தன் உடலையே, ஒரு கேடயமாக பயன்படுத்தி , சில மாணவர்களின் மீது கான்க்ரீட் விழாமலிருக்க முயற்சித்திருக்கிறார் !


கீழுள்ள படத்தில் புன்னகைக்கும் இந்த சிறுமி , ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவி. தன்னை கட்டிடக் குப்பைகளில் இருந்து மீட்டெடுத்த மீட்புக் குழுவினரிடம் , புன்னகையுடன் கூறுகிறாள் - "தைரியமாக இருங்கள் " !!



ஒரு பச்சிளம் குழந்தை, 24 மணி நேரம் கழித்து எந்த ஒரு சிரைப்புமில்லாமல் மீட்கப் பட்டது.பிறந்து , 3 முதல் 4  மாதங்கள் மட்டுமே ஆகியிருக்கக் கூடும் ! இடிபாடுகளுக்கு இடையில்  சிக்கியிருந்த போதும், முட்டியிட்டு , தன் தலை குனித்து இந்த குழந்தைக்கு பாலூட்டியிருக்கிறார்  இதன் தாய் ! மீட்புக் குழுவை சேர்ந்த ஒருவர், இந்த குழந்தையிடம் இருந்து ஒரு செல் போனை எடுத்திருக்கிறார் . அதன் முகப்பில் ஒரு TEXT மெசேஜ் இருந்தது - "DEAR CHILD , IF YOU SURVIVE - PLEASE REMEMBER - MOM LOVES YOU FOREVER " !!



****************************************************************************************************
நீங்களே சொல்லுங்கள்.இவர்கள் ஹீரோக்கள் தானே ?!

 இதை மெயிலில் அனுப்பிய நண்பருக்கு நன்றி.


இந்த பூகம்பம் பற்றிய தகவல்களுக்கு இங்கே CLICK கவும்.



மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...