Sunday, April 29, 2012

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)



கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை.
இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்பது வழக்கம். அப்படி செய்கையில், குறைந்தது ஒரு நாளைக்கு ஒருவராவது என் தளத்திற்கு வந்து போய்க்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தது. அதெப்படி என்று STATCOUNTER தளத்தில் இருக்கும் வசதியை பயன் படுத்தி ஆராய்ந்து கொண்டிருந்தேன்.

அந்த தளத்தில், எந்த வார்த்தையை ஒரு தேடுதளத்தில் கொடுத்தால், நமது வலைத்தளம் , தேடல் முடிவுகளில் தெரிகிறது என்று பார்க்க முடியும். பின் அந்த LINK ஐ கொண்டு நமது வலைதளத்திற்கு வருவார்கள். கடந்த ஒரு வருட காலமாக, என் வலைதளத்திற்கு வாசகர்களை கொண்டுவந்து சேர்க்கும் அந்த மந்திர தேடல் சொல் என்ன தெரியுமா ?

"மின்சாரம் தயாரிப்பது எப்படி ?!" 

என்று GOOGLE இல் தேடினால் என்னுடைய

10 ரூபாயில் ரிமோட் தயாரிப்பது எப்படி... ?

என்கிற பதிவு தேடல் முடிவுகளில் தெரியும் (இப்பொழுதல்ல!).



என் தளத்திற்கு வரும் 36 சதவிகித நண்பர்கள் இந்த வார்த்தையை தேடுவதின் மூலமே வருகிறார்கள் !

"எப்பொழுது தேவை இருக்கிறதோ அப்பொழுது தான் புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும்" என்று ஒரு அறிஞர் சொல்லியிருக்கிறார். அது உண்மைதான் போலும்.


தமிழக மக்கள் இதுவரை பார்த்திராத வரலாறு காணாத மின்வெட்டால் அவதிப்பட்டு கொண்டிருக்கின்றனர். அதன் விளைவால் தான் எப்படித்தான் மின்சாரம் தயாரிக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு, அதை நாமளும் முயற்சிக்கலாம் என்று தேடுகிறார்கள். 

அப்படி யாரவது புதிய தொழில்நுட்பத்தை கண்டு பிடித்தால், அந்த சாதனையின் பெரும் பங்கு கழக அரசுகளுக்கே சொந்தம் !


உண்மையில், மின்பற்றாக்குறை பல்வேறு தொழில்களை முடக்கியிருக்கிறது என்பதுதான் உண்மை. மருத்துவம், கட்டுமானம், அச்சகம், ஆடை உற்பத்தி, இயந்திர வேலைகள், உழவு என எத்தனையோ தொழில்களை கேள்விக்குறி ஆக்கியுள்ளது இந்த மின்வெட்டு.


நாம் என்ன செய்யலாம் ?

  • தேவையற்ற மின் நுகர்வை குறைப்பதன் மூலம் மட்டுமே நம் பங்களிப்பை கொடுக்க இயலும். 
  • நீங்கள் ஒரு அறையில் இருக்கும் பொது இன்னோர் அறையில், மின்விசிறியும் மின்வளக்கும் தேவை இல்லை தானே ? 
  • கணினியில் வேலை செய்வோர், வேலை நேரம் முடிந்ததும் கணினியை 'SHUT DOWN ' (LOG OFF அல்ல !) செய்யலாம். உணவு இடைவேளை, தேனீர் இடைவேளை செல்லும் போது MONITOR ஐ அணைத்து விடலாம்.
  • குறைந்த தொலைவில் உள்ள மாடிகளுக்கு LIFT க்கு பதிலாக, படிக்கட்டுகளை உபயோகிக்கலாம். ஒரே நேரத்தில் இரண்டு மூன்று LIFT களை வரவழைக்காமல் , ஒன்றை மட்டுமே அழைக்கலாம்.
  • தேவையற்ற நேரங்களில் ஹீட்டர் மற்றும்  AC பயன்பாட்டை குறைக்கலாம்.
  • என்னைப் போன்று எப்போதாவது பதிவெழுதலாம் ! ;)
 மேலும் ஆலோசனைகள் வரவேற்கப் படுகின்றன.

Sunday, January 1, 2012

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி ... பிம்பிளிக்கி பிளாப்பி !


இருவாரங்களாக விஜய் டிவி யில் NVOK (நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி) நிகழ்ச்சியின் விளம்பரங்கள் களை கட்டிக் கொண்டிருக்கின்றன. முதல் கேள்வி கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று கேட்கப் பட்டது.
SMS மூலமாக பதில் அனுப்பலாம் என்றனர் ! சரி ஒரு ட்ரை செய்துதான் பார்ப்போமே என்று , அவர்கள் கேட்ட மிகக் கடினமான (!) கேள்விக்கு மிகச்சரியான பதிலை அனுப்பினேன். ஒரு SMS க்கு 3 ரூபாய். வாய்ப்பை தவற விடக் கூடாதென்று , எங்கள் வீட்டில் 4
 பேரும் தலா 1 SMS அனுப்பினோம் ! போனா 12 ருபாய், வந்தால் 1 கோடி ! எப்படி ஐடியா ?!

பதிலை அனுப்பி விட்டு, கோடீஸ்வரக் கனவுகளுடன் தூங்கிப்  போனேன்.   மறுநாள் காலை 8 மணிக்கு எழுந்து பார்த்தால், ரிப்ளை வந்திருந்தது. நான் முதல் கட்டத் தேர்வில் தேறி விட்டதாகவும், அடுத்த படியாக நம் பாலினம், ஊர், பின் கோடு போன்றவற்றை அனுப்பவும் என்று கேட்டிருந்தார்கள். ஆஹா ! ஆண்டவன் கண்ணைத் திறந்து விட்டான் ! என்று மேலே படித்தால், 20 நிமிடங்களுக்குள் ரிப்ளை அனுப்ப வேண்டும் என்று போட்டிருந்தார்கள் ! அதனால் என்ன ?! அனுப்பிவிடவேண்டியதுதானே என்கிறீர்களா ?! நானும் அப்படிதான் நினைத்தேன் ! ஆனால் அவர்கள் ரிப்ளை அனுப்பிய நேரம், அதிகாலை 4  மணி !
நான் அந்த SMS ஐ பார்த்த நேரம் காலை 8 மணி !
 


நன்றி - புகைப்பட உதவி - kbc6.in 

 

உங்களுக்கும் இப்படிதானே நடந்திருக்கும் ?!

என் பிரதருக்கும் இதே நேரத்தில் தான் ரிப்ளை வந்திருக்கிறது. இவர்கள் இது போன்ற நிகழ்சிகளை நடத்துவது, இது போன்று SMS களில் வரும் பணத்தைக் கொண்டுதான் என்றாலும், இது கொஞ்சம் ஓவராகத்தான் தெரிகிறது !

விஜய் டிவி மீதான நம்பகத் தன்மையை இது குறைத்திருக்கும் என்று நினைக்கிறேன்!








மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...