Friday, August 28, 2009

இருள் ...

(இந்த பதிவை ஏற்கனவே வேறு எங்கேனும் படித்த ஞாபகம் இருந்தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை.
நான் படித்த படைப்புகளின் பாதிப்புகள் ( !? ) இருக்கக்கூடும் .)

இருளானது தண்ணீரைப்போல் தனது இயல்பை மாற்றிக்கொள்ளக்கூடியது.

பால்யத்தின் மாலை நேர இருள் கூடி விளையாடவும் , மகிழ்ச்சியை தரக்கூடியதாகவும் இருந்திருக்கிறது.பதின் பருவ , மின்சாரமில்லா முன்னிரவின் இருள் பயம் மிகுந்ததாக இருந்திருக்கிறது.அது கையில் ரேகை படர்ந்திருப்பதைப் போல பயத்தை ஊரங்கும் படரவிடக் கூடியது.கல்லூரிக் கால பின்னிரவுகளின் இருள் அரட்டைகளுக்காக ஒதுக்கப் பட்டிருக்கிறது.

இருளானது சோகம், சந்தோசம், நட்பு, துரோகம், காதல், மோதல், அன்பு, ஆக்ரோஷம் அனைத்தையும் இரட்டிப்பாகக் கூடியது. இருள், உணவுகளின் சுவையை மாற்றக் கூடியது, மனிதர்களையும் கூடத்தான் இல்லையா?

மாநகர வாழ்க்கையின் எமெர்ஜென்சி விளக்குகளில் நாம் இருளை இழந்து கொண்டிருக்கிறோம். இப்போதைய மாநகர குழந்தைகள் இருளுக்கும் இயற்கைக்கும் அந்நியர்கள்.

எஸ். ராமகிருஷ்ணனின் ஒரு படைப்பில் படித்துதான் ஞாபகம் வருகிறது .
ஒரு மாநகர் வாழ் குழந்தை கழுதை - யையே நேரில் பார்த்ததில்லை என்றும் அதனை பார்ப்பதற்காக அந்த குழந்தையும் அதன் தந்தையும் வெகு தூரம் தேடி அலைவதாகவும் நீள்கிறது அந்த கதை.

ஆம், நம்மில் எத்தனை பேர் சென்னையில் கழுதைகளை (நான் சொல்வது நான்கு கால் கழுதைகளை ) பார்த்திருக்கிறோம்?


Saturday, August 15, 2009

சுதந்திர தினம்.

கிட்டத் தட்ட ஆறு ஏழு வருடங்களுக்கு பிறகு சுதந்திர தின விழா ஒன்றில் பங்கேற்கும் வாய்ப்பு இந்த சுதந்திர தினத்தன்று கிடைத்தது.கடைசியாக பத்தாம் வகுப்பு படிக்கும் போது கலந்துகொண்டது.

தமிழக முதல்வர் பங்கேற்கும் விழாவில் கலந்து கொள்வதும் இதுதான் முதல் முறை. விழாவிற்கு வந்தவர்களில் பலரது நோக்கமே கொடியற்றத் தில் இல்லாமல் வி பி க்களை பார்ப்பதில் தான் இருந்தது.(நானும் எனது நண்பனும் கூட அதற்குத்தான் போயிருந்தோம்!)

நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் காம்பியரிங் (இதற்கு தமிழில் என்ன வார்த்தை உபயோகிப்பது?) கேட்ட திருப்தி.அதிலும் ஒவ்வொரு வாக்கியத்திற்க்கும் ஆங்கில மொழிபெயர்ப்பு கொடுத்தார்கள்(என்னுடன் வந்த நண்பன் மேஜர் சுந்தர் ராஜனை ஞாபகப்படுத்தினான்.)

முதல்வர் உரையில் அவர் ஆட்சியின் சாதனைகளே அதிக நேரத்தை எடுத்துக்கொண்டன.இறுதியில் அனைவருக்கும் சங்கீதா ஹோட்டலில் இருந்து சிற்றுண்டி கொடுத்தார்கள்.எப்படியும் 30 ரூபாய்க்கு குறையாமல் இருக்கும்.

குடியரசு தினத்தன்று வந்த கூட்டத்தில் பாதி கூட இருக்காது.
வந்தவர்களில் பெரும்பாலோனோர் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வேலைக்காக வந்தவர்கள் போலும்.போன வாரம் எழுத வேண்டும் என்று நினைத்தேன்.இப்பொழுதுதான் நேரம் கிடைத்தது.(பில்ட் அப் கே வா?)


Monday, August 10, 2009

சூப்பர் சிங்கர் ஜூனியர்..

தற்போது விஜய் டிவி யில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் டூ -வை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.நல்ல நிகழ்ச்சி.

தமிழ் தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை முதல் முறையாக ஒளிபரப்பியது விஜய் டிவி தான். அதைப் பார்த்துதான் மற்ற தொலைக்காட்சிகள் பல நிகழ்ச்சிகளை செய்து கொண்டிருக்கின்றன.
(ஆனால் விஜய் டிவி மற்ற ஹிந்தி மற்றும் ஆங்கில சேனல்களை பார்த்து சில நிகழ்ச்சிகளை செய்து கொண்டிருக்கிறது !)

ஆனால் இந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் பங்கேற்று பாடிய குழந்தைகளின் ரிசல்ட் சொல்லும் முறை சற்று மாற்றியமைக்கப் பட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. பிள்ளைகளின் முகத்தில் அறைந்தது போல 'ரிஜக்டட் ' என்று சொல்வதற்கு பதில் வேறு முறைகளில் அறிவிக்கலாமே! பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம் , என்றோ ட்ரை அகைன் என்றோ.

Friday, August 7, 2009

நாடோடிகள்....

கடந்த வாரம் திருவான்மியூர் - இல் நாடோடிகள் படம் பார்த்தேன்.
வழக்கமாக நானும் என் நண்பனும் போவோம்.ஆனால் அவன் ஊருக்கு போனதால் நான் மட்டும் தனியாக போனேன்.

நாற்பது ரூபாய் டிக்கெட் .
என்னை பொறுத்த வரை சமுத்திரக்கனியை நல்ல நாடக இயக்குனராக தான் அறிந்துள்ளோம்.(அவருடைய உன்னை சரணடைந்தேன் படம் இன்னும் பார்க்க வில்லை.)

தமிழ்த் திரையுலகில் இப்போது நல்ல படங்களின் காலம் போலும்.
வாழ்த்துக்கள் சமுத்திரக்கனி.இந்த படத்தின் இசை அமைப்பாளர் சுந்தர் சி பாபு வுக்கு ஒரு நல்ல அடையாளம்.படத்தின் பல வசனங்களுக்கு அரங்குகளில் கைதட்டல் பறக்கிறது, வசனங்களின் கூர்மை திரையை கிழிக்கிறது .

யாரவது கம்பெனி க்கு கூப்பிட்டால் இன்னொரு முறை கூட பார்க்கலாம்.


Blog எழுதுறவன் மனுசன்னா ...
Follow பண்றவன்
பெரியமனுசன் ...

பெரிய மனுசங்க....

நான் எனது பள்ளி நாட்களின் இறுதியிலும், கல்லூரி நாட்களிலும் எழுத வேண்டுமென்று நினைத்த நாட்குறிப்பின் வெளிப்பாடுதான் இந்த வலை தளம்.சினிமா, அரசியல், கலை, விளையாட்டு தொடர்பான விஷயங்களை பகிர்ந்து கொள்ள எனக்கான இடம் (உங்களுக்குமானது தான் !).


(இன்னும் எத்தன பேர்டா கெளம்பி இருக்கீங்க ?!)

2011 சட்டசபைத் தேர்தலில் கூட்டணி எப்படி இருக்கும் ?

வ - த - ந - மீ - வ = வந்தமைக்கும் தந்தமைக்கும் நன்றி , மீண்டும் வருக !

தேசாந்திரி , அங்க பாரு...

தேசாந்திரி ,  அங்க பாரு...

வந்தார்கள் சென்றார்கள்...


நம்ம நிலைமையை பாருங்க!

Contact Us

Name

Email *

Message *