Showing posts with label தேர்தல். Show all posts
Showing posts with label தேர்தல். Show all posts

Saturday, March 26, 2011

2016 - தேர்தல் அறிக்கை இதோ... (பதிவர்களுக்கு பரிசு மழை !)

நமக்கு எவ்வளவோ உதவிகள் செய்திருக்கும் நம்ம அரசியல் கட்சிகளுக்கு, நாம ஏதாவது செஞ்சிருக்கோமா ?! ன்னு யோசிச்சு பார்த்தப்ப தான், சரி இந்த தேர்தலை விட்டுடுவோம். வரப்போற 2016 சட்டமன்ற தேர்தலுக்கு , நானே ஒரு அறிக்கை தயார் பண்ணி குடுக்கலாம்னு ! நம்மாலான சிறு உதவி !

( முழுவதும் நகைச்சுவைக்காகவே ! யார் மனதையும் புண்படுத்த அல்ல ! )


# ஆறாம் வகுப்பு முதல், கல்லூரி வரையிலான மாணவர்களுக்கு, ஒரு பாடத்திற்கு  60 இலவச மதிப்பெண்கள் வழங்கப்படும்.

# ஒரு ஓட்டுனர், ஒரே வழித்தடத்தில் 10 வருடங்களுக்கு மேல் ஒரு பேருந்தை ஓட்டியிருந்தால், அந்த பேருந்தை அவரே வைத்துக் கொள்ளலாம். ( உபயம் - உடன் பணி புரியும் நண்பர் )

# ஒரு குடும்பம் 5 வருடங்களுக்கு மேல் ஒரே வீட்டில் வாடகைக்கு இருந்தால், அந்த வீடு அவர்களுக்கே வழங்கப் படும் (நாமளும் எவ்ளோ நாள்தான் வாடகை வீட்லயே இருக்கிறது ?!). வீட்டு ஓனர் விருப்பப்பட்டால்  , 15 லட்ச ரூபாய்  (வாடகை தாரருக்கு ! ) செலுத்தி அந்த வீட்டைத் திரும்பப் பெறலாம்.

# ஒரு பதிவர் நூறு பதிவுகளுக்கு மேல் எழுதி, ஒன்றுமே பரவலாக பேசப் படவில்லை என்றால், ரூபாய் . 50 மட்டும் செலுத்தினால்  போதும் - தெருவுக்குத் தெரு அவரின் பதிவுகள் போஸ்டர் அடித்து ஒட்டப் படும். போஸ்டர் செலவை அரசே ஏற்கும். 100 ரூபாய் செலுத்தினால், தொலைக் காட்சிகளிலும் , திரை அரங்கங்களிலும் காண்பிக்கப் படும்.

# தெருவிற்கு ஒரு 'அரசு ATM மெசின்' நிறுவப் படும். பொது மக்கள் தங்கள் ரேசன் கார்டுகளை SWIPE செய்து, மாதம் ருபாய் 10000 பெற்றுக் கொள்ளலாம்.

 நன்றி - புகைப்பட உதவி : http://www.travel247.tv/india/tourist-guide/indian-money

# பொது மக்களின் பொழுது போக்கிற்காக, அனைத்து மாவட்டத் தலை நகரங்களிலும் ஒரு கடற்கரை ஏற்படுத்தப் படும்.அவை , திங்கள் - முதல் வெள்ளி வரை காலை 4 மணிமுதல் இரவு 2 மணி வரை யும், ஞாயிற்றுக்க் கிழமைகளில், 24 மணிநேரமும் திறந்திருக்கும்.

# ஒருவர், ரயில் பயணத்தை  முடித்து விட்டு , அவருடைய பயணசீட்டை காட்டினால், பயணக் கட்டணத்தின் இரண்டு மடங்கு பணம் இலவசமாக வழங்கப் படும்.

# டெல்லியில் இருந்து நமக்கு வரவேடிய அதிகாரங்களை , நடுவில் இருக்கிற மாநிலங்கள் பிரித்துக் கொள்வதால், தமிழகத்தை டெல்லிக்குப் பக்கத்தில் மாற்றுவதற்கோ , அல்லது டெல்லியை தமிழகத்திற்கு பக்கத்தில் மாற்றுவதற்கோ முயற்சி மேற்கொள்ளப் படும் ( உபயம் - வடிவேலு காமெடி ).

# எல்லாவற்றிற்கும் மேலாக, வாக்காள நண்பர்களே , நீங்கள் ஒவ்வொருவரும், தலா இரண்டு ஓட்டுக்கள் அளிக்க ஏற்பாடு செய்யப் படும்.


                        நன்றி - புகைப்பட உதவி :http://www.secwhistleblowerprogram.org

# இவை அனைத்திற்கும் முத்தாய்ப்பாக, (உதாரணத்திற்கு) உங்கள்  வீட்டில் இரண்டு குழந்தைகள் 10 , மற்றும் 8 வயதுகளில் இருப்பார்களே யானால், அவர்கள் இருவரையும் ஒருங்கிணைத்து ஒரு ஓட்டாக கணக்கில் கொள்ளப் படும்.


(இந்த தேர்தல் அறிக்கைக்கு  காப்புரிமை பெறலாமென்று இருக்கிறேன் ! 2016  இல்  நல்ல விலை போக வாய்ப்பிருக்கிறது !)



Saturday, March 19, 2011

எலெக்சன்னா உங்களுக்கு என்ன அவ்வளவு காமெடியா போச்சா ?!

நம்ம தேர்தல் அறிக்கைதான் நாம தோக்கறதுக்கு காரணமா இருக்கப் போகுது !
ஏன் அப்புடி சொல்ற ?!
பின்ன என்ன, தலைவர் - 'நாங்க ஆட்சிக்கு வந்தா, வீட்டுக்கு ஒரு சின்ன வீடு தருவோம்' னு தேர்தல் அறிக்கை வெளியிடறார் !

#####################################################################################

'அன்பான வாக்காளர் பெருமக்களே , மாற்றுக் கட்சி வேட்பாளர் மொத்தம் ஆறு கொலைகள் செய்திருக்கிறார் ! ஆனால், எங்கள் கட்சியின் வேட்பாளர் வெறும் இரண்டு கொலைகள் மட்டுமே செய்திருக்கிறார்! ஆகவே நீங்களே சிந்தித்துப் பாருங்கள் , இருவரில் யார் நல்லவர் என்று !'


நன்றி - புகைப்பட உதவி : http://www.intell.rtaf.mi.th/newsdetail.asp?id=51010


#####################################################################################
 
தலைவர்க்கு இருந்தாலும் இவ்வளவு அவசரம் கூடாது!
ஏன் என்ன ஆச்சு ?!
தமிழ்நாட்டு சட்டசபைக்கு மொத்தம் 330 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை  அறிவிச்சுட்டார் !

Saturday, January 8, 2011

அதிமுக + தேமுதிக ?! கச்சேரி ஆரம்பம் ?!

ஒச்சரிக்கை, ச்சீ... எச்சரிக்கை   : தீவிர அரசியல் பார்வையாளர்கள் , அப்படியே அடுத்த வலைப்பதிவிற்கு போவது நல்லது ! ஏதோ எனக்குத் தெரிந்த அரசியல் இதுதான்,இவ்வளவுதான்  ! இடுகையைப் படித்து விட்டு கடுப்பானால், அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல !

வந்தாச்சு தேர்தல் ஆண்டு ! வாக்காளர்களுக்கு கொண்டாட்டம்தான் ! ஆடுகள் தான் பாவம் ! தேர்தலில் வெற்றிபெற வேண்டிய 'முஸ்தீபுகள்' குறித்து தலைவர்கள் திட்டம் தீட்ட ஆரம்பித்திருப்பார்கள் !

"எல்லாம் சரி , கேப்டன் எங்க போவார் ?! " - பெரும்பாலான வாக்காளர்களின் மனதில் இப்போது இருக்கும் கேள்வி இதுதான் ! கட்சி ஆரம்பித்து கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் ஆகப்போகிறது. நிறைய தேர்தல்களை சந்தித்து விட்டார் கேப்டன். வர இருக்கிற தேர்தல், யாருக்கு திருப்பு முனையாக இருக்கிறதோ இல்லையோ , அவரது அரசியல் வாழ்க்கையில் முக்கியமான தேர்தல் தான் ! எனவே தனது கட்சிக்கு இன்னும் கொஞ்சம் அதிகமான MLA க்கள் தேவை என்பதை உணர்ந்திருப்பார். மேடை தோறும் "திமுக மீண்டும் ஆட்சிக்கு வர விட மாட்டேன் " என்று கூறி வருகிறார் !

                                         நன்றி - புகைப்பட உதவி - www.indiasummary.com

அப்படியென்றால் ?! ஆம், அதேதான் ! அதிமுக + தேமுதிக !
நாளை சேலத்தில் தேமுதிக வின் 'மக்கள் உரிமை மீட்பு மாநாடு' நடைபெற இருக்கிறது.அநேகமாக இந்த மாநாட்டிலேயே தனது "மக்கள் கூட்டணி" யை உறுதி செய்து விடுவார் என்று நினைக்கிறேன் ! கொஞ்ச நாட்களாக நடக்கும் நிகழ்ச்சிகளும் அதைத்தான் உணர்த்துகின்றன !

'திடீரென்று' கேப்டன் டிவி பேட்டிகளில் ,
சுப்பிரமணியம் சுவாமி வருகிறார்,
சோ வருகிறார் ,
நாஞ்சில் சம்பத் வருகிறார்,
தா பாண்டியன் வருகிறார்,
ராம கிருஷ்ணன் வருகிறார் !

ஆம், கிட்டத் தட்ட 'ஜெ'வைத் தவிர்த்து அனைத்து "தோழமை"க் கட்சி பிரதிநிதிகளும் வருகின்றார்கள் !

                                       நன்றி - புகைப்பட உதவி - www.transcurrents.com

இன்று மாலை கூட, "மாலை மலரில் தேமுதிக சார்பில், அதிமுக தலைமையை விமர்சித்து வந்த விளம்பரத்திற்கும் , தேமுதிக விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை " என்று அவசர அறிக்கை வருகிறது , கேப்டனிடமிருந்து !

ஆக, கேப்டன் போயஸ் தோட்டம் பக்கம் வருகிறார் என்றுதான் தோன்றுகிறது! இந்த தேர்தல் சற்று 'இன்டரஸ்டிங்' காகவே இருக்கும் என்று நம்புகிறேன்.ஒருவேளை , நம்ம கணிப்பு சரியாக இருந்து, தேர்தலில் இந்த கூட்டணி வெற்றி பெற்றால், துணை முதல்வராக கேப்டன் வருவாரோ என்னவோ ?! பார்ப்போம் !

Thursday, October 21, 2010

2011 - தமிழ்நாடு - தேர்தல் - தலைவர் - எந்திரன்

டிஸ்கி : எந்திரன், எந்திரன், எந்திரன் ! எங்க பாத்தாலும் ஒரே எந்திரன் மயம்தான் கொஞ்ச நாட்களாகவே ! சரி, இந்த சமயத்த "யூஸ்"  பண்ணி கல்லா காட்டினா என்ன ?! ன்னு தோணிச்சு ! 


எந்திரன் இந்த வருஷம் ரிலீஸ் ஆகாம , அடுத்த வருஷம் எலெக்சன் சமயத்துல ரிலீஸ் ஆனா எப்பிடி இருக்கும்னு ஒரு நகைச்சுவை கலந்த காமெடி ( எது ?! நகைச்சுவை கலந்த காமெடி யா ?! ) கற்பனை ! இந்த இடுகை முழுதும் நகைச்சுவைக்காகவே எழுதப் பட்டது. யார் மனதையும் புண் படுத்த அல்ல !

***************************************************
"தலைவர்  ஏன் கோவமா இருக்கார் ?!"
" '2016  வரை கூட்டணியில் இருந்தாதான் 4 எந்திரன் டிக்கெட் கொடுப்பேன்'  ன்னு கூட்டணி தலைவர் சொல்லிட்டாராம் !"

***************************************************
அன்பான வாக்காளர் பெருமக்களே...
எங்களது ஆட்சியில் தான் "எந்திரன்" திரைப்படம் வெளிவந்தது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் !

 ***************************************************
 "இந்த தடவை அந்த கட்சி தான் தேர்தல்ல ஜெயிக்கும்னு எப்படி உறுதியா சொல்லுற ?!"
"அந்த கட்சியில்தான் ஒரு ஓட்டுக்கு ரெண்டு 'எந்திரன்' டிக்கெட் கொடுக்கறதா முடிவு பண்ணியிருக்காங்க "

 ***************************************************
"நம்ம தலைவர் ஏன் ரொம்ப சந்தோசமா இருக்கார் ?!"
"இன்னைக்கு நடக்குற பொதுக் கூட்டத்துல , தலைவருக்கு 'எந்திரன்' ன்னு பட்டம் கொடுக்கப் போறாங்களாம் ! "



 ***************************************************
"தலைவர் ஏன் 'நான் 40 ,  50  டிக்கெட்டுக்காக கட்சி நடத்தலை' ன்னு அறிக்கை விடுறார் ?!'"
" 'எங்க கூட்டணியில சேர்ந்தா 50 எந்திரன் டிக்கெட் கொடுக்கறேன் ',  கூட்டணி தலைவர் சொன்னாராம் !"

 ***************************************************


தலைவரே, சொன்னா கேளுங்க. நாங்க ஜெயிச்சா வீட்டுக்கு ஒரு ரோபோ இலவசமாக தருவோம்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க ! 

 ***************************************************

நன்றி - புகைப்பட உதவி :  www.indiaglitz.com , www.hindu.com

Sunday, March 21, 2010

TPL - தமிழ்நாடு போலிங் லீக் - TAMIL NADU POLLING LEAUGE ...

இப்போது இந்தியாவையே ஆட்டிப் படைக்கும் IPL நடந்து கொண்டிருக்கிறது.இதே போல் தமிழ் நாட்டையே ஆட்டிப் படைக்கும் பென்னாகரம் இடைத் தேர்தலுக்கான 'பணிகள்' நடந்து கொண்டிருக்கிறது. இதைப் போன்ற தேர்தல்களை , TPL - TAMILNADU POLLING LEAGUE என்று அழைத்தால் என்ன என்று எனக்கு தோன்றியதின் விளைவு தான் இந்த பதிவு...



IPL க்கும் TPL க்கும் என்னென்ன வித்தியாசங்கள் இருக்கும் ?

1 .IPL - வருடத்திற்கு ஒரு முறை தான் நடக்கும்...
TPL - ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் ( சில சமயம் அப்பப்ப கூட ! ).

2 . IPL  - ஸ்பான்சர் - DLF (இப்போதைக்கு )
TPL - ஸ்பான்சர் - தேர்தல் ஆணையம்  ( எப்பவுமே .. !)


3 . IPL - கூட்டணி கிடையாது.
TPL - கூட்டணி உண்டு ( கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது !!! )

4 .IPL  - விளையாடுபவர்கள் ஏலம் எடுக்கப் படுவார்கள் .
TPL - பார்வையாளர்கள் (வாக்காளர்கள் (!)) ஏலம் எடுக்கப் படுவார்கள் .



5 . IPL - ஏலத்தொகை கோடிகளில் இருக்கும் .
TPL - ஏலத்தொகை ஆயிரங்களில் இருக்கும் .

6 .IPL - ஒரு  வீரரை ஒரு அணிதான் ஏலம் எடுப்பார்கள்.
TPL - ஒரு வாக்காளரை  பலர் ஏலம் எடுப்பார்கள் . ஏலத்தொகை எதிரணியினரை பொறுத்து அதிகரிக்கும்.

7 .IPL -  நடுவர் சொல்வதை வீரர்கள் கேட்பாளர்கள்.
TPL - கட்சியினர் சொல்வதை நடுவர்கள் கேட்க வேண்டும் !

8 . IPL - 20 ஓவர்கள் .
TPL  - 234 தொகுதிகள் .

9 . IPL - மொத்தம் 8  அணிகள்.
TPL - ரெண்டே ரெண்டு முக்கிய அணிகள். எப்போதாவது மூன்றாவது அணி வரும் ! போகும் !!







10 . IPL - ஒவ்வொரு அணிக்கும் ஒரு கேப்டன்.
TPL - மொத்தத்துக்கும் ஒரே கேப்டன் !!



11 .IPL -  இறுதியில் ஏதாவது ஒரு அணி ஜெயிக்கும் .
TPL - இறுதியில் மக்கள் அணி மட்டுமே தோற்கும் !!!

 


 நான் ஏதாவது வித்தியாசங்களை தவறி விட்டிருந்தால் , பின்னூட்டத்தில் சொல்லவும்.
சரியான வித்தியாசங்களை சொல்வோருக்கு , பெண்ணாகரத்தில் ஒரு மாதம் தங்குவதற்கு வீடு வாடகைக்கு எடுத்துத்தரப்படும் !!

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...