Sunday, June 27, 2010

ராவணனும் பிரின்ஸ் ஆப் பெர்சியாவும்...

ஏன்...?
ஆமா...!
நெஜமாவா ?!
நீ என்ன  நம்பல ?!
எப்படி ?!
நேத்திக்குதான் !!
எத்தன பேர் ?
நான் மட்டும்தான் !
எவ்ளோ ?
45 ரூபா !
எங்க ?
தியாகராஜா !


என்னங்க எங்கேயோ கேட்ட ஞாபகமா ?!
ஆமாங்க நேற்றைக்குதான் மணி ரத்தினத்தின் 'ராவணன்' படம் பார்த்தேன். அதைதான் , அவர் 'பாணியில்' சொல்ல 'ட்ரை' பண்ணேன் ! நீங்க டென்சன் ஆகாம மேலே ( அதாவது , 'கீழே' !) படிங்க !

'ஆக்சுவலா' (!) நான் போன வாரமே 'ராவணன்' பார்க்க போனேனுங்க ! அங்க என்னடான்னா, டிக்கட் இருந்தாதான் தியேட்டர் உள்ளயே உடுவேன்னுட்டானுங்க ! "போங்கடா நீங்களும் உங்க ராவணனும்" ன்னுட்டு, அப்படியே ரோடை கிராஸ் பண்ணி , நம்ம 'ஆஸ்தான' தியேட்டரான ஜெயந்தி தியேட்டருக்கு போய் , 'பிரின்ஸ் ஆப் பெர்சியா (தமிழில்)'  பாத்துட்டு வந்துட்டேன்! ராவணன் போயிட்டு புறமுதுகிட்டு வந்ததுல , ஒரு 20 நிமிஷம் MISS பண்ணிட்டேன் ! அந்த படத்துக்கே விமர்சனம் எழுதனும்னுதான் நெனைச்சுகிட்டு இருந்தேன் ! ஆனா, படத்துல ஒருத்தர் பேரும் தெரியாததால, 'பிரின்ஸ் ஆப் பெர்சியா' தப்பிச்சது ! மொத்ததுல, படம் அமர்க்களம் !சரி , நம்ம ராவணன் பக்கம் வருவோம் ! என்னுடைய  'கொள்கைப்' படி, எந்த விமர்சனமும்  இதுவரை படிக்க வில்லை , யாரிடமும் கதையும் கேட்க வில்லை! என் விருப்பப் படி, படம் ஆரம்பிப்பதற்கு முன்னாடியே போய் உக்காந்தாச்சு !
( எனக்கெல்லாம், 'WELCOME' , 'முன் இருக்கையில் கால் வைத்து அசுத்தம் செய்யாதீர்' , 'புகை பிடிக்காதீர்', 'அரங்கை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுங்கள் ' என்று SLIDE போடுவதிலிருந்து படம் பார்த்தால்தான் ஒரு திருப்தி !  இவையும் ஒரு படத்தின் அங்கமாகத்தான் பார்க்கிறேன் நான் !)

இதற்கு முன் , நான் தியேட்டரில் பார்த்த ஒரே மணி ரத்தினம் படம் - 'ஆய்த எழுத்து '!  அந்த படத்திற்கும் நான் போன போது கூட்டம் இல்லை! கடந்த வாரம் தியேட்டருக்கு உள்ளேயே போக முடியாத படிக்கு கூட்டம் ! இந்த வாரம் , பாதி தியேட்டர் காலி! ஏன் இந்த வித்தியாசம் ?! இணையமும் , VCD இணைத்து செய்யும் மாயமிது ! படம் வெளியிட்ட இரண்டு நாட்களிலேயே, அல்லது வெளியிட்ட நாளன்றே இணையத்தில் காணக் கிடைக்கின்றன அத்துணைத் திரைப்படங்களும் ! ( சில சமயங்களில் வெளியிடுவதற்கு முன்னமே ! )

இதையெல்லாம் தாண்டி இரண்டாவது வாரமும் கூட்டம் வர வேண்டுமென்று சொன்னால் ,படத்தின் விமர்சனங்கள் இந்த இடத்தில் முக்கிய பங்காற்றுகின்றன ! எதிர்மறையான எந்த ஒரு விமர்சனமும் படத்தின் வெற்றியை பெருமளவு பாதிக்கக் கூடும் !

இரண்டு வருடங்களாக பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கிய படம்.தமிழிலும் இந்தியிலும், விக்ரமும், அபிஷேக் பச்சனும் தங்களுடைய கதாப் பாத்திரங்களை மாற்றி நடிக்கிறார்கள் என்று பேசப் பட்டிருந்தாலும், தமிழில் அபிஷேக் நடிக்கவில்லை ! இந்தியில் விக்ரம் இருக்கிறாரா என்றும் தெரிய வில்லை ! ( யாராவது RAVAN பார்த்திருந்தா சொல்லுங்க ).
அதிரடியான இசையுடன் (வீரா வீரா !) பெயர் போட ஆரம்பிக்கிறார்கள் ! 'கந்தசாமி' எதிர்பார்த்த வெற்றி அளிக்காததால், விக்ரம் இந்த படத்தினை மிகவும் எதிர்பார்த்திருப்பார் ! நாமும்தானே ?! எதிர்பார்த்ததை கொடுத்திருக்கிறார் , மணி ரத்தினம் விக்ரமிற்கும், விக்ரம் நமக்கும் !


ஐஸ்வர்யா ராயை பார்க்கும் போது, ஏதோ இந்திப் படம் பார்க்கும் 'பீலிங்'  ! அவர் பேசும் தமிழும் ஒட்டவில்லை ! இந்தியில் பார்க்கும் போது நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் ! ( எந்திரன் என்ன செய்யப் போகிறார் ?! ) பழைய மணிரத்தினம் ஹீரோக்களான , கார்த்தி , பிரபுவும் நடித்திருக்கிறார்கள் ! படம் முழுவதும் காட்டுப் பகுதியில் தான் ! அதற்கேற்றவாறு ஒளிப் பதிவில் அசத்தியிருக்கிறார்கள் சந்தோஷ் சிவன் - மணிகண்டன் ! கலை இயக்குனருக்கு சற்று சவாலான வேலைதான் ! சமாளித்திருக்கிறார் ! கொச்சியில் இருக்கும் என் நண்பனொருவன் , அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு போன போது, அந்த கோவில் செட் - ஐ பார்த்ததாகவும், மிகவும் நேர்த்தியாக இருப்பதாகவும்  சொன்னான்! நானும் படம் வெளிவருவதற்கு முன்னரே  புகைப்படங்களில் பார்த்திருக்கிறேன் !வசனங்கள் - சுஹாசினி. படத்தின் ஆரம்ப காட்சிகளில் வரும் வசனங்கள் என்னவென்று புரியவில்லை! காரணம் அவரா , அல்லது ஒலிப் பதிவா, இல்லை தியேட்டர் ஸ்பீக்கரா, இல்லை நம்ம காதா என்று புரிவதற்குள் அடுத்தடுத்த  வசனங்கள் ! ஆனால் கொஞ்ச நேரம் கழித்து புரிய ஆரம்பித்து விடுகின்றன ! நடுவே வரும் ப்ரியாமணி செக்மென்ட்டில் மட்டுமே கொஞ்சம் காடுகளில் இருந்து வெளிவந்திருக்கிறது கேமரா !

இசை - A . R ரஹ்மான் ! வேறென்ன சொல்ல ?! சூப்பரப்பு ! ( இருந்தாலும் 'செம்மொழி' பாட்டு மாதிரி இல்லையே என்று சொல்லப் படாது !) ' உசுரே போகுது ' பாட்டு முழுவதுமாக வருவதில்லை போன்ற ஒரு தோற்றம் !

திரைக்கதை & இயக்கம்  - மணி ரத்னம். இவரின் ஓரிரு படங்களைத் தவிர மற்ற அனைத்திலும் எதாவது ஒரு உண்மை  சம்பவமோ , அல்லது இதிகாசமோ தான் "BASE LINE" ஆக இருக்கும் ! இந்த வகையில் , இப்படத்தின்  கதாப் பாத்திரங்கள், யாரைக் குறிக்கின்றன என்று ராமாயணம் அறிந்த அனைவரும்  எளிதில் ஊகிக்க முடியும் ! இருப்பினும் பெயர் போடும் போது , " இப்படத்தில் வரும் கதாப் பாத்திரங்களும் சம்பவங்களும் கற்பனையே ! யாரையும் குறிப்பிடுவன அல்ல ! " என்றுதான் போடுகிறார்கள் !

எது எப்படி இருந்தாலும், 'படம் நல்லா  இருந்துச்சு ' என்று சொல்ல வைத்து விடுகிறார் மணிரத்னம் !

அப்புறம் சொல்ல மறந்துட்டேனே ?! பிருத்விராஜ் ! கதா பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்திக் கொள்கிறார் ! வாழ்த்துக்கள் பிருத்வி !

Friday, June 18, 2010

கடந்த இடுகைக்கான விடைகள்...

கடந்த இடுகையில் , கேள்விகள்  மாதிரி இரண்டு கேட்டிருந்தேன். அதற்கான விடைகள்  இந்த இடுகையின் கடைசியில். முயற்சிக்க விரும்புபவர்கள் , அங்கே கொஞ்சம் போயிட்டு வந்துடுங்க !

*********************************************************************************************
நம் வாழ்க்கையில் பல நேரங்களில் , 'பேசாம, பள்ளிக் கூட பையனாகவே இருந்திருக்கலாம்' என்று தோன்றும் இல்லையா ? அது போன்று , கடந்த வாரம் எனக்கு தோன்றியது ! 'ஏன்?' என்கிறீர்களா ?


 " உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி , தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை " என்ற செய்திதான் அதற்கு காரணம் !

இந்த மாநாடு தேவையா, இல்லையா என்கிற வாத, பிரதிவாதங்கள் ஒரு புறம் இருக்கட்டும் ! இந்த மாநாட்டுக்காக வெளியிடப்  பட்டிருக்கும் பாடல் மிகவும் நன்றாக இருக்கிறது ! பார்க்கவும் , கேட்கவும் !


********************************************************************************************

கேள்வி மாதிரி - 1 :


முதல் வாரம் - கோல்டன் வீக்,
இரண்டாம் வாரம் - சில்வர் வீக்,
மூன்றாம் வாரம் - காப்பர் வீக்,
நான்காம் (அல்லது) கடைசி வாரம் - ____________________________ ?
 கடைசி வாரம் - பாப்பர் வீக் !

கேள்வி மாதிரி - 2 :
லலித் மோடியை கதா நாயகனாக வைத்து நம்ம ராதா மோகன் திரைப்படம் இயக்கினால் படத்திற்கு என்ன பெயர் வைப்பார் ?

' SEBI' யும் நானும்  ?!


பின் குறிப்பு : இது போன்று பல நகைச்சுவைகளை (!) நான் எழுதியதுண்டு. இனி வரும் காலங்களில் எனது இடுகைகளை அவை அலங்கரிக்கும்  என்பதை , மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் 'கொல்'கிறேன் !

Friday, June 11, 2010

தலைப்பில்லா இடுகைகள்... 06.06.2010

ஒரு அட !
கொஞ்ச நாட்களுக்கு  முன்னாடி என் தந்தை ஒரு விஷயம் சொன்னார்..
ஒரு மாதத்தின் நான்கு வாரங்களை எப்படி அழைக்கலாம் ?!முதல் வாரம் - கோல்டன் வீக்,
இரண்டாம் வாரம் - சில்வர் வீக்,
மூன்றாம் வாரம் - காப்பர் வீக்,
நான்காம் (அல்லது) கடைசி வாரம் - ____________________________ ?

முடிந்தால் யூகித்துப் பாருங்களேன் ! விடை ( !) அப்புறம் .....

ஒரு ஒப்பீடு...
கடந்த மூன்றாம் தேதி, தமிழக முதல்வரின் 87 வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது ! திருவான்மியூர் வடக்கு மாட வீதியில் மாபெரும் விழா எடுத்தார்கள். கிட்டத் தட்ட ஒரு வாரத்திற்கு அந்த வழியையே அடைத்து விட்டிருந்தார்கள் !
இந்த இடத்தில் இரண்டு புகைப்படங்களை பதிவிட நினைக்கிறேன் !

முதல் புகைப்படம்...
இந்த பிறந்த நாள் விழா நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில், அடையார் இந்திரா நகர் பகுதியில் எடுத்த புகைப்படம் இது. நேரம் : இரவு  9 .30 மணி.


இரண்டாம் புகைப்படம்...
விழா முடிந்து , அரை மணி நேரம் கழித்து, திருவான்மியூர் வடக்கு மாட வீதியில் எடுத்த புகைப்படம் இது! நேரம் : 10 .00 மணி.இது எப்படி இருக்கு ?! நோ கமெண்ட்ஸ்...

ஒரு நகைச்சுவை அல்லது கேள்வி ...லலித் மோடியை கதா நாயகனாக வைத்து நம்ம ராதா மோகன் திரைப்படம் இயக்கினால் படத்திற்கு என்ன பெயர் வைப்பார் ?
(டிஸ்கி : இந்த நகைச்சுவையை (!) கடந்த 2009  ஆம் ஆண்டு எழுதியது. இப்போது, "ரீமிக்ஸ் " செய்து  வெளியிடுகிறேன்.)

ஒரு தகவல்...
என்னுடைய வலைப்பதிவின் முதல் வாசகன் ( அடிக்கடி போன் பண்ணி , " BLOG எழுதிகிட்டு இருக்கேன் படிடா, BLOG எழுதிகிட்டு இருக்கேன் படிடா" னு  டார்ச்சர் பண்ணிதான் படிக்க வெச்சேன் !) , என் நண்பன் வேலை விஷயமாக வெளி நாடு சென்றிருக்கிறான் !  "அதுக்கு என்னா இப்போ ? " ன்னு கேக்கறீங்களா ?! இனி என் தளத்திற்கு அமெரிக்காவிலிருந்து ஒரு வாசகன் இருக்கிறான் !

ஒரு பொன்மொழி(யாமாம்!)..

ஒரு  விஷயம் உன் பெற்றோருக்கு தெரியக் கூடாதென்று  நீ நினைக்கிறாய் என்றால், நீ தப்பு செய்து கொண்டிருக்கிறாய் என்று  அர்த்தம்! 


ஒரு எதிர்பார்ப்பு...சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது, தமிழக அரசியல் களம். அடிக்கடி, கண்டனக் கூட்டங்களும், பட்ஜெட் விளக்கப் பொதுக் கூட்டங்களும் நடக்கத் தொடங்கியிருக்கின்றன. எனக்கு அரசியல் விவரம் தெரிந்து  (!) , நான் சந்திக்கும் முதல் சட்டப் பேரவை தேர்தல் வருகிற 2011  தேர்தல் தான் ! அதற்குள் எப்படியாவது, வாக்காளர் அடையாள அட்டை வாங்கிவிட வேண்டும்!

 *************************************************************************************************

முதலில் எழுதிய "அட"  விற்கான விடையையும், நகைச்சுவைக்கான விடையையும் அடுத்த இடுகையில் வெளியிடலாம் என நினைக்கிறேன். தங்களின் விடைகள் வரவேற்கப் படுகின்றன ! நான் நினைத்த விடைகளை சரியாக கணிப்பவர்களுக்கு,


எந்த பரிசும் தர இயலாது ! மன்னிக்கவும்.
(சங்கமே அபராதத்துலதான் போய்கிட்டிருக்கு !!) 
;)
Blog எழுதுறவன் மனுசன்னா ...
Follow பண்றவன்
பெரியமனுசன் ...

பெரிய மனுசங்க....

நான் எனது பள்ளி நாட்களின் இறுதியிலும், கல்லூரி நாட்களிலும் எழுத வேண்டுமென்று நினைத்த நாட்குறிப்பின் வெளிப்பாடுதான் இந்த வலை தளம்.சினிமா, அரசியல், கலை, விளையாட்டு தொடர்பான விஷயங்களை பகிர்ந்து கொள்ள எனக்கான இடம் (உங்களுக்குமானது தான் !).


(இன்னும் எத்தன பேர்டா கெளம்பி இருக்கீங்க ?!)

2011 சட்டசபைத் தேர்தலில் கூட்டணி எப்படி இருக்கும் ?

வ - த - ந - மீ - வ = வந்தமைக்கும் தந்தமைக்கும் நன்றி , மீண்டும் வருக !

தேசாந்திரி , அங்க பாரு...

தேசாந்திரி ,  அங்க பாரு...

வந்தார்கள் சென்றார்கள்...


நம்ம நிலைமையை பாருங்க!

Contact Us

Name

Email *

Message *