Showing posts with label பிரபு. Show all posts
Showing posts with label பிரபு. Show all posts

Friday, February 12, 2010

அசல் - திரை விமர்சனம்

அசல் படம் பார்த்து ஒரு வாரம் ஆகியும் , அதைப் பற்றிய விமர்சனம் எழுத வேண்டும் என்று தோன்ற வில்லை ! காரணமும் புரிய வில்லை!! ஆனால் நான் பதிவு எழுத ஆரம்பித்த பிறகு பார்த்த அனைத்து படங்களுக்கும் விமர்சனம் எழுதுவது என்று முடிவு செய்து விட்டதால், இதனை எழுதுகிறேன். ஆனாலும், "உன்னைப் போல் ஒருவன் " க்கு இன்னும் விமர்சனம் எழுத வில்லை! இப்போது கூட தோன்ற வில்லை (அதெல்லாம், படம் பார்த்த ஓரிரு நாட்களில் எழுதி விட வேண்டும் இல்லையென்றால் , மீண்டும் எழுதுவது ரொம்பக் கஷ்டம்.இதோ , இப்போது  , அசல் க்கு விமர்சனம் எழுதுகிறேனே , இதைப் போல! )



அல்டிமேட் ஸ்டார் என்ற "பட்டம்"  போடாமல், சாதாரணமாக பெயர் போட ஆரம்பிக்கும் போதே, இது மற்ற "தல" படங்களைப் போல இருக்காது என்று நான் கணித்தது, கடைசி வரை உண்மையாகவே இருந்தது. அஜீத்குமார் ( ஆமாங்க, இனிமே எல்லாம் இப்படித்தான் !) அறிமுகக் காட்சியிலும் , ஓவர் பில்ட் அப் இல்லை. ஏற்கனவே ,தமிழ் சினிமாவில் பார்த்துப் பழக்கப் பட்ட கதை தான் என்றாலும் , படத்தின் வேகம் சீராகவே கொண்டுசெல்லப் படுவதில் , திரைக் கதை நல்ல பங்காற்றியிருக்கிறது. உபயம் - சரண் , அஜீத் குமார் மற்றும் யூகி சேது.ஆம், நடிப்பையும் தாண்டி கால்பதிக்க  அஜீத் முயன்றிருக்கிறார். வாழ்த்துக்கள்.

படம் ஆரம்பித்து 15  நிமிடங்களுக்கு , ஒரே கூச்சலாக இருந்ததால் , வசனங்கள்  சரியாகக் கேக்கவில்லை . கதையின் போக்கை வைத்து, நானே கணித்துக் கொண்டதுதான் மிச்சம்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு , சுரேஷ் நடித்திருக்கிறார் என்று நினைக்கிறேன். ஏமாற்றுக் கார போலீஸ் வேடத்தில் , தன்னை சரியாக பொருத்திக் கொள்கிறார். யூகி சேது , அப்பப்போ வந்து , எப்பவாவது சிரிக்க வைக்கிறார். வாரணம் ஆயிரத்தில் , பார்த்த சமீராவா இது ?! பாவனாவிற்கும் , சராசரியான தமிழ்த் திரைப் பட கதாநாயகி வேடம்தான். தற்போது , சிறப்புத் தோற்றங்களில் கலக்கி வரும் இளைய திலகம், இதிலும் அதை MAINTAIN  செய்கிறார்.



இசை அமைப்பாளர் பரத்வாஜ் , இன்னும் கொஞ்சமாவது , மெனக் கெட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது! பாடல்களில் எதுவுமே ஹிட் ஆனதாகத் தெரியவில்லை. "டோன்ட்ட டோயன்ங் " பாடல் மட்டும் பார்க்கும் போது நன்றாக இருந்து. முதலில், படத்திற்கு HARRIS  ஜெயராஜ் தான் இசை அமைப்பதாக இருந்தது. "ஏண்டா மாற்றினார்கள் " என்று தோன்றுகிறது. மன்னிக்கவும் பரத் வாஜ். பின்னணி இசையும் சொல்லிக் கொள்ளும் படி இல்லை. வழக்கமாக, சரண் - பரத்வாஜ் கூட்டணி என்றாலே , பாடல்கள் நன்றாக இருக்கும் என்று ஒரு எதுர்பார்ப்புடன் செல்வோம் தானே ?! வேண்டாம், ஏமாந்து விடாதீர்கள் ! அஜீத் போன்ற மாஸ் ஹீரோ கிடைத்திருக்கும் பொது , புகுந்து விளையாடி இருக்கலாமே பரத் வாஜ் ?!

கேமரா மேன் யாரோ வெளிநாட்டுக் காரவுக போல .நல்லாதான் படம் புடிச்சிருக்கிறாரு !
இது தல படம்தான் இல்லையென்றால், ( வழக்கமான )சரண்  படம் கூட இல்லை. ஆனால், இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது சரண். ஆனால், அடிக்கடி  'தல' , 'தல' என்று சொல்லி, தல வலிக்க வைக்கிறார்கள். படம் நெடுக, புகை (புடை !?) சூழ வருகிறார் அஜீத். அன்புமணி ராமதாஸ், கடிதம் எழுதியதில், தவறே இல்லை என்றுதான் நினைக்கிறேன் !

அசல் - போட்ட அசலை பிரபு (சிவாஜி பிலிம்ஸ் ) எடுத்திருவார்.




மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...