Showing posts with label தமிழ்நாடு. Show all posts
Showing posts with label தமிழ்நாடு. Show all posts

Saturday, January 8, 2011

அதிமுக + தேமுதிக ?! கச்சேரி ஆரம்பம் ?!

ஒச்சரிக்கை, ச்சீ... எச்சரிக்கை   : தீவிர அரசியல் பார்வையாளர்கள் , அப்படியே அடுத்த வலைப்பதிவிற்கு போவது நல்லது ! ஏதோ எனக்குத் தெரிந்த அரசியல் இதுதான்,இவ்வளவுதான்  ! இடுகையைப் படித்து விட்டு கடுப்பானால், அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல !

வந்தாச்சு தேர்தல் ஆண்டு ! வாக்காளர்களுக்கு கொண்டாட்டம்தான் ! ஆடுகள் தான் பாவம் ! தேர்தலில் வெற்றிபெற வேண்டிய 'முஸ்தீபுகள்' குறித்து தலைவர்கள் திட்டம் தீட்ட ஆரம்பித்திருப்பார்கள் !

"எல்லாம் சரி , கேப்டன் எங்க போவார் ?! " - பெரும்பாலான வாக்காளர்களின் மனதில் இப்போது இருக்கும் கேள்வி இதுதான் ! கட்சி ஆரம்பித்து கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் ஆகப்போகிறது. நிறைய தேர்தல்களை சந்தித்து விட்டார் கேப்டன். வர இருக்கிற தேர்தல், யாருக்கு திருப்பு முனையாக இருக்கிறதோ இல்லையோ , அவரது அரசியல் வாழ்க்கையில் முக்கியமான தேர்தல் தான் ! எனவே தனது கட்சிக்கு இன்னும் கொஞ்சம் அதிகமான MLA க்கள் தேவை என்பதை உணர்ந்திருப்பார். மேடை தோறும் "திமுக மீண்டும் ஆட்சிக்கு வர விட மாட்டேன் " என்று கூறி வருகிறார் !

                                         நன்றி - புகைப்பட உதவி - www.indiasummary.com

அப்படியென்றால் ?! ஆம், அதேதான் ! அதிமுக + தேமுதிக !
நாளை சேலத்தில் தேமுதிக வின் 'மக்கள் உரிமை மீட்பு மாநாடு' நடைபெற இருக்கிறது.அநேகமாக இந்த மாநாட்டிலேயே தனது "மக்கள் கூட்டணி" யை உறுதி செய்து விடுவார் என்று நினைக்கிறேன் ! கொஞ்ச நாட்களாக நடக்கும் நிகழ்ச்சிகளும் அதைத்தான் உணர்த்துகின்றன !

'திடீரென்று' கேப்டன் டிவி பேட்டிகளில் ,
சுப்பிரமணியம் சுவாமி வருகிறார்,
சோ வருகிறார் ,
நாஞ்சில் சம்பத் வருகிறார்,
தா பாண்டியன் வருகிறார்,
ராம கிருஷ்ணன் வருகிறார் !

ஆம், கிட்டத் தட்ட 'ஜெ'வைத் தவிர்த்து அனைத்து "தோழமை"க் கட்சி பிரதிநிதிகளும் வருகின்றார்கள் !

                                       நன்றி - புகைப்பட உதவி - www.transcurrents.com

இன்று மாலை கூட, "மாலை மலரில் தேமுதிக சார்பில், அதிமுக தலைமையை விமர்சித்து வந்த விளம்பரத்திற்கும் , தேமுதிக விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை " என்று அவசர அறிக்கை வருகிறது , கேப்டனிடமிருந்து !

ஆக, கேப்டன் போயஸ் தோட்டம் பக்கம் வருகிறார் என்றுதான் தோன்றுகிறது! இந்த தேர்தல் சற்று 'இன்டரஸ்டிங்' காகவே இருக்கும் என்று நம்புகிறேன்.ஒருவேளை , நம்ம கணிப்பு சரியாக இருந்து, தேர்தலில் இந்த கூட்டணி வெற்றி பெற்றால், துணை முதல்வராக கேப்டன் வருவாரோ என்னவோ ?! பார்ப்போம் !

Thursday, October 21, 2010

2011 - தமிழ்நாடு - தேர்தல் - தலைவர் - எந்திரன்

டிஸ்கி : எந்திரன், எந்திரன், எந்திரன் ! எங்க பாத்தாலும் ஒரே எந்திரன் மயம்தான் கொஞ்ச நாட்களாகவே ! சரி, இந்த சமயத்த "யூஸ்"  பண்ணி கல்லா காட்டினா என்ன ?! ன்னு தோணிச்சு ! 


எந்திரன் இந்த வருஷம் ரிலீஸ் ஆகாம , அடுத்த வருஷம் எலெக்சன் சமயத்துல ரிலீஸ் ஆனா எப்பிடி இருக்கும்னு ஒரு நகைச்சுவை கலந்த காமெடி ( எது ?! நகைச்சுவை கலந்த காமெடி யா ?! ) கற்பனை ! இந்த இடுகை முழுதும் நகைச்சுவைக்காகவே எழுதப் பட்டது. யார் மனதையும் புண் படுத்த அல்ல !

***************************************************
"தலைவர்  ஏன் கோவமா இருக்கார் ?!"
" '2016  வரை கூட்டணியில் இருந்தாதான் 4 எந்திரன் டிக்கெட் கொடுப்பேன்'  ன்னு கூட்டணி தலைவர் சொல்லிட்டாராம் !"

***************************************************
அன்பான வாக்காளர் பெருமக்களே...
எங்களது ஆட்சியில் தான் "எந்திரன்" திரைப்படம் வெளிவந்தது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் !

 ***************************************************
 "இந்த தடவை அந்த கட்சி தான் தேர்தல்ல ஜெயிக்கும்னு எப்படி உறுதியா சொல்லுற ?!"
"அந்த கட்சியில்தான் ஒரு ஓட்டுக்கு ரெண்டு 'எந்திரன்' டிக்கெட் கொடுக்கறதா முடிவு பண்ணியிருக்காங்க "

 ***************************************************
"நம்ம தலைவர் ஏன் ரொம்ப சந்தோசமா இருக்கார் ?!"
"இன்னைக்கு நடக்குற பொதுக் கூட்டத்துல , தலைவருக்கு 'எந்திரன்' ன்னு பட்டம் கொடுக்கப் போறாங்களாம் ! "



 ***************************************************
"தலைவர் ஏன் 'நான் 40 ,  50  டிக்கெட்டுக்காக கட்சி நடத்தலை' ன்னு அறிக்கை விடுறார் ?!'"
" 'எங்க கூட்டணியில சேர்ந்தா 50 எந்திரன் டிக்கெட் கொடுக்கறேன் ',  கூட்டணி தலைவர் சொன்னாராம் !"

 ***************************************************


தலைவரே, சொன்னா கேளுங்க. நாங்க ஜெயிச்சா வீட்டுக்கு ஒரு ரோபோ இலவசமாக தருவோம்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க ! 

 ***************************************************

நன்றி - புகைப்பட உதவி :  www.indiaglitz.com , www.hindu.com

Saturday, December 26, 2009

சுனாமி நினைவு நாள்...




இன்றுடன் , சுனாமி தாக்கி, ஐந்து வருடங்கள் நிறைவு பெறுகின்றன. கடந்த இரண்டாயிரத்தி நான்காம் ஆண்டு , இதே நாளில் , பல நாடுகளைத் தாக்கிய சுனாமி , கிட்டத்தட்ட ஒரு லட்சம் உயிர்களை பலி கொண்டது. எனக்கு விவரம் தெரிந்து , குஜராத் நிலநடுக்கத்திற்குப் பிறகு, நான் கேள்விப் பட்ட மிகப் பெரிய இயற்கை சீற்றம் இதுதான். அப்பொழுது நான் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன்.

நாங்கள் இருந்த வீட்டில் , பொங்கலை முன்னிட்டு , வெள்ளை அடிக்கும் பனி இருந்து கொண்டிருந்தது. நானும் கல்லூரி விடுமுறை என்பதால், வீட்டிற்கு வந்திருந்தேன். முதன் முதலில்,காலை எட்டு மணிக்கு சன் டி.வி யில் தான் ' பிளாஷ் ' நியூஸ் போட்டார்கள். " சென்னையில் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது . நூற்றுக் கணக்கான மக்களை காண வில்லை " என்று. பிறகு ஆழிப் பேரலை என்று அறிவித்தார்கள். ஒரு நாள் கழித்துதான் , தொலைக் காட்சிகளில் ' சுனாமி ' என்கிற வார்த்தையை உபயோகப் படுத்தினார்கள். சுமத்ரா தீவில், ஏற்பட்ட நில நடுக்கம் தான் சுனாமிக்கு காரணம் என்றும் அறிவித்தனர்.

இந்தோனேசியா , இலங்கைக்கு பிறகு , சுனாமியால் அதிகம் பாதிக்கபட்ட நாடு, இந்தியாதான். தமிழகத்தைத் தவிர வேறு எந்த மாநிலமும், சுனாமியால் இந்த அளவு பாதிக்கப் பட்டதாகத் தெரியவில்லை. தமிழ் நாட்டில் மொத்த உயிரிழப்பு ஐந்து ஆயரதிற்கும் குறைவுதான் என்று சட்டப் பூர்வமாக அறிவித்தாலும், மொத்த உயரிழப்பு , பத்தாயிரத்தைத் தொடும் என்று கூறப் படுகிறது.

உயிரிழப்புகளைத் தாண்டி உலகம் சந்தித்த பாதிப்புகள், ஏராளம். உடல் ஊனமுற்றவர்கள், மனதளவில் பாதிக்கப்பட்டவர்கள், தொழிலுக்கான ஆதாரங்களை இழந்தவர்கள் என்று அந்த பட்டியல் நீள்கிறது. ஆனால் , அப்போதும் , இறந்தவர்களின் உடம்பிலிருந்து , நகைகளைத் திருடிய சம்பவங்களும் நடந்தன . இந்த ஐந்தாம் ஆண்டு நினைவு நாளிலும், சுனாமியால் பாதிப்படைந்தவர்கள் தங்களுக்கான நிவாரண உதவிகளை உடனே வழங்க வேண்டுமென்று போராட்டம் நடத்துவதைக் காண முடிகிறது !

நான் கல்லூரி படிக்கும் போது, எங்கள் கல்லூரி சார்பில் வெளியிடப் பட்ட ஒரு புத்தகத்தில், நான் எழுதிய ஒரு கவிதையை ( ! ) பிரசுரம் செய்தார்கள்.

-------------------------------------------------------------------------
காடு மேடு வாங்கியவர்களிடம் காசு வாங்கினால் - பினாமி ,
காற்று வாங்க வந்தவர்களை காவு வாங்கினால் - சுனாமி .
-------------------------------------------------------------------------

இதைப் படித்த எனது நண்பர்கள், இது வேறு யாரோ எழுதியதைப் போல் உள்ளதாகவும், ஏற்கனவே எங்கோ படித்த ஞாபகம் இருப்பதாகவும் கூறினார்கள். உங்களுக்கு எப்படி ? எதற்கும் இந்த பக்கத்தின் மேலே உள்ள , ' டிஸ்க்ளைமர் ' ஐ, ஒருமுறை படித்து விடவும்.


மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...