Showing posts with label சன் பிக்சர்ஸ். Show all posts
Showing posts with label சன் பிக்சர்ஸ். Show all posts

Saturday, March 6, 2010

தீராத விளையாட்டுப் பிள்ளை

போன வாரம் ஞாயிற்றுக் கிழமை, நானும் , நண்பனும் திருவான்மியூர் ஜெயந்தியில் "தீராத விளையாட்டுப் பிள்ளை " திரைப் படம் பார்த்தோம். முதலில், " விண்ணைத் தாண்டி வருவாயா " பார்ப்பதாகத்தான் திட்டம். அங்கு, TICKET RATE மிக அதிகமாகவும் , கூட்டம் மிக மிக அதிகமாகவும் இருந்ததால், சுமூகமாகப் போய் விடலாமென்று தீ.வி.பி போனோம். நம்ம நேரம், அங்கயும் கூட்டம். இருந்தாலும் , டிக்கெட் கிடைத்தது ! ஆனால், டிக்கெட் விலை ,இனிமேல் 20  இல்லை . 25  ரூபாதான் போல !


SUN  TV   உதவியால், படத்திற்கு மிக நல்ல விளம்பரம் ஏற்படுத்தப் பட்டிருந்தது.பாடல்களும் , SURYAN FM இல் போட்டு போட்டு ஓரளவிற்கு நன்றாக இருப்பதாகத் தெரிந்தது. விஷாலுக்கு , "சத்யம் "," தோரணை " படு தோல்விகளுக்குப்  பிறகு மிகவும் அவசியமான வெற்றி இது!

ஒரு NEAT ஆன PLAY BOY கதையில், விஷால் , கதாநாயகன் பாத்திரத்தில் நன்றாகவே பொருந்திக் கொள்கிறார்.ஆனால், அவ்வப் போது விஜய் - யின் மேனரிசங்களை ஞாபகப் 'படுத்துகிறார்'.படத்தில் மூன்று கதாநாயகிகள் . அதில், நீது சந்திரா மட்டுமே நமக்கு பரிச்சயமான  முகம் (?!) . (உபயம் - யாவரும் நலம் ) மற்ற இருவரில் , ' ப்ரியா ' வாக நடித்திருப்பவர் உண்மையாகவே நன்றாக நடித்திருக்கிறார்.



விஷாலின் நண்பர்களாக வரும் சந்தானமும் , சத்யனும் பேசும் வசனங்களுக்கு , அவ்வப் போது திரை அரங்கில் சிரிப்பொலி கேட்கிறது. விஷால் மட்டுமே படத்திற்கு போதாது என்ற நிதர்சனமறிந்து , சும்மா ஒப்புக்கு ஒரு கதாபாத்திரத்தை நுழைத்து , அதில் பிரகாஷ் ராஜை நடிக்க வைத்திருக்கிறார்கள்.அவரும் , தன் கடைமையை செவ்வனே செய்திருக்கிறார்.



சென்னையை அழகாகக் காட்டியிருக்கிறார்  ஒளிப்பதிவாளர் அரவிந்த்கிருஷ்ணா.
அறிமுக இயக்குனர் திரு ,  முதல் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார் - அதில் சந்தேகமில்லை.இசைஅமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் , படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம்.


SO ,தீராத விளையாட்டுப் பிள்ளை ?
.
.
.
.
.
.
.
.
.
.  
.
.
.
.
.
.
.
.
.


அடப் போங்க , எவ்ளோ நேரம்தான் எதுகை மோனை-ல PUNCH யோசிக்கிறது ?!,

Saturday, January 2, 2010

வேட்டைக் காரன்




இந்த புது வருடத்தை , ஒரு நல்ல படத்துடன் தொடங்கிய திருப்தியில் (அட , நெஜம்மாத்தாங்க !!) , ' வேட்டைக் காரன் ' விமர்சனத்தை எழுதுகிறேன் .

விஜய்யை பற்றியும் , வேட்டைக்காரன் பற்றியும் எக்கச் சக்கமாக , சர்தார்ஜி ரேஞ்சுக்கு எஸ்.எம்.எஸ் களும், மின்னஞ்சல்களும் ( நான் இப்போதெல்லாம் சர்தார்ஜி ஜோக்குகளை ரசிப்பதில்லை ) வந்தாலும், படத்தை தியேட்டரில் தான் பார்ப்பது என்று முடிவு செய்து, இரண்டு வாரங்களுக்குப் பிறகு திருவான்மியூர் தியாகராஜாவில் நேற்று இரவு ' வேட்டைக் காரன் ' பார்த்தேன்.

ஏற்கனவே ஹிட் - ஆன பாடல்கள் படத்திற்கு பெரும் பலம் ( உபயம் - சன் தொலைக்காட்சி குழுமம் மற்றும் விஜய் ஆண்டனி ) . ஏற்கனவே தொடர்த் தோல்விகளால் ( குருவி , வில்லு ) துவண்டு போயிருந்த இளைய தளபதிக்கும், அவர் ரசிகர்களுக்கும் சற்று ஆறுதல் தரக் கூடிய படம் இது. விஜயின் அரசியல் பிரவேசம் இந்த படத்தின் மூலம் தெளிவாகிவிடும் என்று நினைத்தவர்களுக்கு, படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கியவுடன் சூட்சுமம் புரிந்திருக்கும்.

தீபாவளிக்கு வரவண்டிய படமிது. தவிர்க்க முடியாத சில காரணங்களுக்காக( ! ) டிசம்பரில்தான் வெளியிட முடிந்தது.

செல்லாவாக வரும் வில்லன் , தமிழுக்கு ஒரு நல்ல அறிமுகம் . வேத நாயகமாக வருவது , அட , நம்ம சக்கரக் கவுண்டர் ! அனுஷ்காவுக்கு, பாடல்களில் மட்டும் திறமைக்கு சவால். முதல் பாதியில் காதலும், காமெடியுமாக கலக்கும் விஜய், இரண்டாம் பாதியில், ஆக்சனில் வெளுத்து வாங்குகிறார். படத்தில், ஆங்காங்கே சில தர்க்க ( லாஜிக் ) குறைபாடுகள் இருந்தாலும், வேகமான திரைக்கதை அந்த குறைகளை பூர்த்தி செய்து விடுகின்றது.

சரி , விமர்சனத்தின் இறுதியில், படத்தின் பெயரை பயன் படுத்தி ஒரு பன்ச் வைக்க வேண்டும் என்று , விதி ஒன்றும் இல்லையே ?!

---------------------------------------------------------------------------------------------
கீழே உள்ள படங்களில் வித்தியாசமான ஒன்றை தேர்ந்தெடுங்கள் . (ஆங்கிலத்தில் சொன்னால் , ' ஆட் மேன் அவுட் ! )

>> குருவி ,
>> வில்லு ,
>> வேட்டைக் காரன்.

---------------------------------------------------------------------------------------------

மேலே உள்ள கேள்விக்கு என்னுடைய பதில், " வேட்டைக் காரன் " !

Saturday, November 14, 2009

கண்டேன் காதலை - கண்டேன் ...




இன்னைக்கு மதியம் திருவான்மியூர் ஜெயந்தி தியேட்டரில் ,' கண்டேன் காதலை ' படம் பார்த்தேன். நம்ம சின்னத் தளபதியோட படத்த இப்பதான் முதல் முறை தியேட்டரில் பார்க்கிறேன்.நம்ம பசங்க கொஞ்ச பேர் ஏற்கனவே படம் பாத்துட்டு, படம் மொக்கைனு சொன்னாங்க. இருந்தாலும், நாம ஏற்கனவே முடிவு பண்ணினதால, கெளம்பி போயாச்சு.

இந்த படத்தோட ஒரிஜினல் - ' ஜாப் வீ மெட் ' படத்த, இதுவரைக்கும் பாத்ததில்ல. அதனால எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் போனேன். என்னை பொறுத்த வரைக்கும் ஒரு படம் பார்க்க போறோம்னா , படத்தோட சென்சார் சர்டிபிகேட் போடறதுல இருந்து பார்க்கணும் னுதான் ஆசை.அப்படி பார்த்தாதான், முழு படமும் பார்த்த மாதிரி ஒரு ' பீலிங் '. ஆனால், இப்போதெல்லாம் , ' படம் பாத்தா போதும் ' ங்கற நிலைமைல இருக்கறதால, ஒரு அஞ்சு நிமிஷம் படம் ஓடின பிறகும் என்டர் ஆனேன்.

ஒரு லவ் பாயாக , சின்னத் தளபதி கச்சிதமாகப் பொருந்துகிறார். ஆனால் ' பிசினஸ் மேக்னட் ' வேடத்தில் கண்ணை உறுத்துகிறார்.தமன்னா ஒரு அப்பாவி பெண்ணாக காட்டப் பட வேண்டும் என்பதற்காக, 'தொண தொண ' வென்று பேசிக் கொண்டே இருப்பதால், ஒரு அலுப்பு வருவது என்னவோ உண்மை. நம்ம சந்தானம், வழக்கம் போல் சந்து கிடைக்கும் இடங்களில் எல்லாம் லந்து கூட்டி கலக்கியிருக்கிறார்.

ரொம்ப நாள் கழிச்சு வித்யா சாகர் மியூசிக்ல ஒரு படம் பார்த்தேன். பாடல்களில் ' மக்கா மக்கா ', ' ஓடோடி போறேன் ' போன்றவை அக்மார்க் வித்யா சாகர் ராகங்கள். ஒளிப் பதிவும் அருமை.

படத்தை ' சன் பிக்சர்ஸ் ' வாங்கியிருப்பதால் , எப்படியும் ' ஹிட் ' ஆக்கி விடுவார்கள். ஏன்னா , ' திண்டுக்கல் சாரதி ' யவே சூப்பர் ஹிட் ஆக்கிய பெருமை அவர்களுக்குண்டு. ஆனால், ஒரு ஹிட் படத்திற்கு உரிய அத்தனை அம்சங்களும், 'கண்டேன் காதலை ' க்கும் உண்டு.

கண்டேன் காதலை - காணலாம் ஒருமுறை !


மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...