Showing posts with label பொறியியல் கலந்தாய்வு. Show all posts
Showing posts with label பொறியியல் கலந்தாய்வு. Show all posts

Saturday, July 3, 2010

பொறியியல் கலந்தாய்வு - ஒரு பார்வை ...

இது அட்மிஷன் காலம் ! 12  ஆம் வகுப்பு முடித்து விட்டு கல்லூரி வாழ்க்கைக்கு தயாராகும் மாணவர்களுக்கும் , அவர்களது பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கு ஏதோ என்னால் முடிந்தவரை , எனக்கு தெரிந்த தகவல்களை தெரியப்படுத்தலாம் என்ற முயற்சியில் இந்த இடுகை!



12 ஆம்  வகுப்பு முடிந்தவுடனேயே, தங்கள் கல்லூரிக்கனவுகளை காண ஆரம்பித்து விடுகின்றனர் மாணவர்கள் ! தனக்கு என்ன மதிப்பெண் வரும் என்பதை, எல்லா மாணவர்களும் ஓரளவிற்கு கணித்திருப்பார்கள் ! அதனால், அவர்களே ஒரு சில கல்லூரிகளை தேர்ந்து எடுத்து ஒரு 'லிஸ்ட்' தயார் செய்து வைத்திருப்பார்கள் !

மேலும், கண்டிப்பாக பொறியியல் தான் படிக்க வேண்டுமென்று மாணவர்களை காட்டாயப் படுத்தாதீர்கள் ! அவர்கள் என்ன விருப்பப் படுகிறார்கள் என்று தெரிந்து கொண்டு, பிறகு ஆலோசித்து ஒரு முடிவுக்கு வாருங்கள் . ( எதையும் 'பிளான்' பண்ணி பண்ணனும் !)  

 அப்படி உங்கள் 'பிளான்' பொறியியல் தான் என்றால்,  


சில டிப்ஸ் :


1 . உங்கள் கலந்தாய்வு நாளுக்கு முந்திய நாளே, கலந்தாய்வு நடக்கும் ஊருக்கு (சென்னை )சென்று விடுவது நலம் .

2 . எங்கே தங்குவது என்று யோசிக்கிறீர்களா ? கவலையை விடுங்கள் ! எனக்கு தெரிந்து , தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு இரண்டு குடும்பத்திற்கும் குறைந்தது ஒருவர் சென்னையில் தங்கி இருக்கிறார் ! அப்படியே போன் பண்ணி , " தம்பி , மெட்ராசுக்கு நம்ம பய கவுன்சிலிங்குக்கு வரப் போறோம் . நீ ரூம்ல , இருந்தா, அப்படியே உன்னையும் பாத்துட்டு போலாம்னு இருக்கோம் !" என்று சொல்லி வையுங்கள் ! படிப்பு விஷயமாதலால், அவரும் OK சொல்லி விடுவார் , முழு மனதுடன் ! அப்படி இல்லா விட்டாலும், நிறைய MANSION கள் இருக்கின்றன.

3 . நீங்கள் தங்கப் போகும் அறை , கலந்தாய்வு நடக்கும் இடத்தில் இருந்து ஒரு 10 கிலோ மீட்டருக்குள் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள் ! இல்லையென்றால், ஒரு 4 மணி மேரம் முன்னதாக கிளம்பி விடுங்கள் !



4 .நீங்கள் , அண்ணா பல்கலைக் கழக பேருந்து நிறுத்தத்தில் இறங்கியவுடனேயே , நிறைய நோட்டீஸ்கள் கொடுப்பார்கள், எல்லாவற்றையும் வாங்கிக் கொள்ளுங்கள் ! எப்படியும் அரை கிலோ தேறும் ! வேறொன்றுக்கும் உபயோகப் படாது !

இந்தியாவில் உள்ள மொத்த பொறியியல் கல்லூரிகளில் கிட்டத்தட்ட 35 % கல்லூரிகள் தமிழ் நாட்டில் இருக்கின்றன !ஆனால், எல்லா கல்லூரிகளிலும் தரமான கல்விக்கு உத்திரவாதம் இல்லை! தமிழ்நாட்டில்  மொத்தமுள்ள 400  (தோராயமாக ) பொறியியல் கல்லூரிகளில் , 150 க்கும் குறைவான கல்லூரிகளில் மட்டுமே ஓரளவிற்கு நல்ல கல்வி கொடுக்கப் படுகின்றது ! எனவே நீங்கள் தயாரித்திருக்கும் லிஸ்டில் உள்ள கல்லூரிகள் , இந்த 150 க்குள்  இருத்தல் நலம் !

4 . எல்லா சான்றிதழ்களையும் , ஒன்றுக்கு இரண்டு நகல் எடுத்து  வைத்துக் கொள்ளுங்கள்.

5 . துண்டு பிரசுரங்களிலோ , அல்லது கல்லூரியின் இணைய தளத்திலோ வெளியிடப் பட்டிருக்கும் கட்டிட படங்களைப் பார்த்தோ , அவர்களின் 'SALIENT FEATURES ' என்று சொல்லப் பட்டிருக்கும் விஷயங்களைப் பார்த்தோ மட்டும் , எந்த கல்லூரியையும் தேர்வு செய்யாதீர்கள் ! அந்த கட்டிடங்கள் , நீங்கள் கட்டப் போகும் பணத்தில் கூட கட்டப் படலாம் !

6 . கண்டிப்பாக, CAMPUS INTERVIEW இருக்கும் கல்லூரியைத்தான் தேர்வு செய்ய வேண்டுமென்று அடம் பிடிக்காதீர்கள் ! எல்லோருக்கும் அது சாத்தியமில்லை ! 

(ஒரு மாணவன் , 60 % மதிப்பெண்களுடன் , ஓரளவிற்கு  தடையின்றி ஆங்கிலம் பேசி, சராசரியான தொழில்நுட்ப அறிவுடன் இருந்தாலே, கொஞ்சம்  தேடுதலும் இருந்தால் CAMPUS INTERVIEW இல்லையென்றாலும் , வெளியில் வந்து ஏதோ ஒரு வேலையில் சேரலாம் ! ஆனால் ,எடுத்த உடனேயே 30 ,000 ரூபாய் சம்பளத்தில், MNC யில் வேலை என்று எதிர்பார்க்க முடியாது ! அதற்கு ஓரிரு வருடங்கள் ஆகும் ! அதனால் என்ன ?! )

7 . கலந்தாய்வுக்காக நீங்கள் காத்திருக்கும் அறையில், ஒரு பெரிய திரையில் கல்லூரிகளின் காலி இட விவரங்கள் படமிட்டுக் காட்டப் படும். எனவே, நீங்கள் கலந்தாய்வுக்காக உள்ளே செல்லும் போது, மூன்று CHIOICE களை ச்சூஸ் பண்ண இது உதவியாக இருக்கும் !

8 . பெரும்பாலும் , நீங்கள் முதலில் தேர்வு செய்த கல்லூரியில், தேர்வு செய்த இடம் கிடைக்கும் .( இது கலந்தாய்வின் முதல் 10 நாட்களுக்கு  பொருந்தாது !) . இல்லாத பட்சத்தில், இரண்டாவது !


9 .IT மற்றும் ECE துறைகளில் தான், தன் மகன்/மகள் படிக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தாதீர்கள் ! CORE BRANCHES என்று அழைக்கப்படும்  சிவில்,ஆட்டோ மொபைல்,மெக்கானிக்கல் போன்ற துறைகள் , CIRCUIT BRANCHES என்று அழைக்கப் படும் IT ,ECE ,EEE ,CSE போன்ற துறைகள், இரண்டுமே சம அளவிலான வேலை வாய்ப்பினைத் தரக் கூடியவை !



10 . முடிந்த வரை, மாணவர்களை விடுதியில் சேர்ந்து படிக்க அனுமதியுங்கள். அங்கு அவர்கள் பொறியியலுடன் சேர்த்து வாழ்க்கையையும் கற்றுக் கொள்வார்கள் ! எதாவது ஒரு விளையாட்டில் , கல்லூரியின் சார்பிலோ அல்லது துறையின் சார்பிலோ பங்கு பெற ஊக்கப் படுத்துங்கள் ! படிப்பு மட்டுமே வாழ்க்கை அல்ல!

11 . தமிழ் வழி பொறியியல் இந்த ஆண்டு முதல் அறிமுகப் படுத்தப் பட இருக்கிறது ! அதற்கான எதிர்கால வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்று தெரிய வில்லை !

மேலும் விவரங்களுக்கு - அண்ணா பலகலைக் கழக இணையதளம் - TNEA 2010 






இனிமையான கலந்தாய்வு அனுபவத்திற்கு வாழ்த்துக்கள் !

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...