Thursday, February 25, 2010

அ.தி.மு.க காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி விட்டதா?

டிஸ்கி : இது ரொம்ப நாட்களுக்கு முன்னாடி நான் எழுதிய இடுகை. அப்போது 
திரட்டிகளில் இணைக்காமல் விட்டதால், இப்போது !

ஒச்சரிக்கை, ச்சீ... எச்சரிக்கை   : தீவிர அரசியல் பார்வையாளர்கள் , அப்படியே அடுத்த வலைப்பதிவிற்கு போவது நல்லது ! ஏதோ எனக்குத் தெரிந்த அரசியல் இதுதான்,இவ்வளவுதான்  ! இடுகையைப் படித்து விட்டு கடுப்பானால், அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல !

கொஞ்ச நாட்களாகவே, தமிழக அரசியலில் , கூட்டணி மாற்றம் ஏற்படும் என்ற பேச்சு சற்று பலமாக கேட்கத் துவங்கியிருக்கிறது. ஜெயலலிதா, தேர்தல் கமிஷன் விழாவில் பங்குபெற்றது முதலே இந்த பரபரப்பு தொற்றிக் கொண்டது. அந்த விழா ஆரம்பிப்பதற்கு மு, ஜெயலலிதாவும் , சோனியா காந்தியும் சந்தித்து பேசிக்கொண்டார்கள் என்ற செய்தியும் பெரிதாக பேசப் பட்டது. என்ன தான் நடக்கிறது நாட்டில் ?!


எஸ்.வீ. சேகர் கட்சியில் இருந்து நீக்கப் பட்டது தான் இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் ஆரம்பமாக நான் நினைக்கிறேன்.பிறகு அனிதா ராதாகிருஷ்ணன் கட்சியில் இருந்து விலகி மீண்டும் MLA ஆனார்.அவரைத் தொடர்ந்து , மேலும் இரண்டு MLA க்கள் கலைஞரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்கள்.திமுக பொதுக்குழு கூட்டத்தில் கூட கலந்து கொண்டார்கள். இந்த நிலையில் , மேலும் 20 MLA க்களை , திமுகவினர் 'உஷார்' செய்து விட்டதாகவும், அவர்கள் எந்நேரமும், அதிமுகவில் இருந்து வெளியேறலாம் என்றும் பேசப் படுகின்றது.இதற்கிடையில், பென்னாகரம் இடைதேர்தல் தேதி வேறு அறிவிக்கப் பட்டிருக்கிறது. பாமக சார்பில் ஏற்கனவே வேட்பாளர் அறிவிக்கப் பட்டாகிவிட்டது. இப்போது , திமுக,அதிமுக ,தேமுதிக போன்ற கட்சிகளும் தமது வேட்பாளர்களை அறிவித்து விட்டார்கள். பென்னாகரம் தொகுதி மக்களுக்கு  கொண்டாட்டம் தான்! ஆனால் , இந்த இடைத் தேர்தலிலேயே தேமுதிக - அதிமுக கூட்டணி வரும் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், பேரம் சரிவரவில்லை போலும்!


எது எப்படியோ , வரும் 2011 சட்ட மன்ற பொதுத் தேர்தலில் கூட்டணி மாற்றம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. கூட்டணி எப்படி இருக்கக் கூடும் ?  திமுக + பாமக + விசி மற்றும் அதிமுக + தேமுதிக + காங்கிரஸ் + மதிமுக ? தோழர்கள் நிலைமை இன்னும் கவலைக்கிடமாகவே இருக்கிறது.


                           நன்றி - புகைப்பட உதவி : www.haryanawatch.blogspot.கம


தமிழகத்தில் , தற்போது ஆட்சியை பிடிக்குமளவிற்கு செல்வாக்கு இல்லையென்றாலும் கூட, அமைச்சரவையில் பங்கு பெறுமளவிற்கு காங்கிரசிற்கு தகுதி இருப்பதாக, ராகுல் காந்தி நினைக்கிறார்.இதை அவ்வ போது , இளங்கோவனும் சொல்லிக் கொண்டுதானிருக்கிறார். ஆனால் கலைஞர் இதற்கெல்லாம் செவி கொடுக்கப் போவதில்லை.விஜயகாந்தும் , ஒரு 10 ,15  MLA க்களாவது கட்சிக்கு தேவை என்பதை உணரத் தொடங்கியிருக்கிறார். இது குறித்த பேச்சு வார்த்தைகளும் கூட , கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கிடையில் ஆரம்பித்துவிட்டதாக, ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.
 
எது எப்படியோ 2011 , ஆம் ஆண்டு சட்ட மன்ற  பொதுத் தேர்தல்,தமிழக அரசியல் வாதிகளுக்கு மட்டுமல்ல , தமிழக மக்களுக்கும் கூட சற்று எதிர்பார்ப்புகளை அதிகரித்திருக்கிறது.தமிழகத்தில் இருக்கக் கூடிய , கிட்டத் தட்ட 10 'வருங்கால ' முதல்வர்கள் கதி , நமது 'கை'யில் (அதாவது , HAND ! நீங்க அந்த 'கை' ன்னு நெனைச்சா, அதுக்கு நான் பொறுப்பில்லை !) தான் இருக்கிறது.

எப்படியாவது , 2011 க்குள் , வாக்காளர் அடையாள அட்டை வாங்கிவிட வேண்டும்!
UPDATE : இப்போ வாக்காளர் அடையாள அட்டை வாங்கிட்டோம்ல ?! எது எப்படியோ , 2011  நம்ம கை(விரல்-ல!) லதான் !


                                          நன்றி - புகைப்பட உதவி - www.article.wn.com


Saturday, February 20, 2010

புதிய பதிவு போடுவது எப்படி...?முன்குறிப்பிற்கு முன் குறிப்பு : இது ஒரு மீள் பதிவாகும்.இந்த பதிவை,முதல் முறை எழுதும் போது, என்னுடைய வலைப்பூவை பல திரட்டிகளில் இணைக்காமல் இருந்தேன்.இப்போதுதான் இணைத்திருப்பதால், என்னுடைய ப்ளாக் ரசிகர்களுக்காக ( ! ) மீள்பதிவிடுகிறேன்.முன்குறிப்பு : இது , சும்மா , விளையாட்டுக்கு நான் போடும் பதிவாகும். சீரியசான பதிவர்கள் இதைப் படித்துவிட்டு என் மேல் கடுப்பாக வேண்டாம். இதை ஒரு புதிய பதிவரின் ஆர்வக் கோளாறு என்றும் எடுத்துக் கொள்ளலாம். தொலைக் காட்சி, செய்தித்தாள் ஆகியவற்றைப் போல் வலைதளங்களும் மக்கள் அதிகம் புழங்கும் மீடியாவகும். எனவே இதை நான் மிகவும் மதிக்கிறேன் என்பதை இவ்விடத்தில் கூறிக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறேன்.

------------------------------------------------------------------------------------------

கூகிள் புண்ணியத்திலோ அல்லது வேர்டு பிரெஸ் புண்ணியத்திலோ ஒருவழியாக, ஒரு இலவச பிளாக் வெகு சுலபமாக கிடைத்து விடுகிறது. ஆனால், கல்யாண பந்தியில் , அளவு தெரியாமல் நிறைய சாப்பாடு வாங்கிக் கொண்டு, கடைசியில் சாப்பிட முடியாமல் முழிப்பதை போன்று, ஒரு புதிய பதிவு போட முழித்துக் கொண்டிருப்பவர்களுக்கான பதிவு இது.

புதிய பதிவு போட என்னால் முடிந்த சில யோசனைகள் :

1.மென்பொருள் துறையில் பணிபுரியும் பலருக்கு, தினமும் பல ' பார்வார்ட் ' மின்னஞ்சல்கள் வரும். அவற்றில் ஏதாவது ஒன்றை , புது பதிவாக போட்டு , இறுதியில் நண்பன் மெயில் பண்ணியது என்று பின் குறிப்பிடலாம்.

2. ஏதாவது , ஒரு பத்திரிகை செய்தியை அப்படியே போட்டு கடைசியில் அந்த பத்திரிகைக்கு நன்றி நவிலலாம்.

3. உங்கள் மொபைல் போனில், நீங்கள் எப்போதோ எடுத்த பழைய புகைப்படங்களை போட்டு 'ஆட்டோகிராப் ' என்று தலைப்பிடலாம்.

4. நீங்கள் ஏற்கனவே பிரசுரம் செய்த பதிவை ' மீள் பதிவு ' என்று புது தலைப்பு போட்டு புது பதிவாக கணக்கில் ஒன்று அதிகரிக்கலாம்.

5.சக பதிவர்களின் பதிவையோ அல்லது புதியதாக வெளியிடப்பட்ட புத்தகங்களையோ அல்லது நீங்கள் பார்த்த திரைப்படங்களையோ விமர்சனம் செய்கிறேன் பேர்வழி என்று புது பதிவிடலாம். மதிப்பெண்கள் கூட வழங்கலாம்.

6. உங்களின் பயணங்களை ஒரு ' பயணக் கட்டுரை ' யாக சில படங்களுடன் வெளியிடலாம்.

7.அரசு இயந்திரத்தின் குளறு படிகள், சமூக அவலங்கள் போன்றவற்றை சற்றே கார சாரமாக எழுதலாம். முடிந்த வரை கெட்ட வார்த்தைகளை தவிர்த்தல் நலம்.

8.சில சமையல் குறிப்புகளை அவற்றின் படங்களுடன் போடலாம். நீங்கள் அந்த உணவை செய்து பார்த்துதான் குறிப்புகளை சொல்ல வேண்டும் என்று இல்லை.

9.அல்லது , ' புதிய பதிவு போடுவது எப்படி ? ' என்பதைப் போல , சில யோசனைகளைப் பட்டியலிடலாம். பட்டியல்களுக்கு தேவையான யோசனைகளுக்கு இதைப் போன்ற வலைத் தளங்களின் பதிவுகளை ஒருமுறை வாசித்தால், உங்களுக்கே ஒரு ' ஐடியா ' கிடைக்கும்.பின் குறிப்பு : முன்குறிப்பை இன்னொரு முறை படிக்கவும்.

Monday, February 15, 2010

நன்றிப் பெருவிழா ... நற்றமிழ்த் திருவிழா...

நேற்று வள்ளுவர் கோட்டத்தில் , காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை, கலைஞருக்கு பாராட்டு விழா (எத்தன ? )எடுக்கும் நோக்கத்தில் , மத்திய அமைச்சர் திரு.ஜெகத்ரட்சகன் (ஆமா, அவரேதான் !! ) ஏற்பாடு செய்திருந்த, " நன்றிப் பெருவிழா... நற்றமிழ்த் திருவிழா " என்ற பெயரில் ஒரு விழா எடுத்தார்கள்! காலைமுதலே , கருத்தரங்கம் ,அது இது என்று 'களை' கட்டத் தொடங்கியிருந்தது வள்ளுவர் கோட்டம் !நான் மதியம் 3  மணிக்குதான் போய் சேர்ந்தேன். நண்பன் வருவதற்கு , கொஞ்சம் தாமதமானதால் , கொஞ்ச நேரம் அங்க இங்க சுத்திக்கிட்டு இருந்தேன். சரி உள்ள போய் பார்க்கலாமுன்னு , தீவிர சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதித்தார்கள். உள்ளே நுழைந்தவுடன், 'டாஸ்மாக்' வாசனை தூக்கியது. ஆங்காங்கே, உடன்பிறப்புகள் ஒருங்கிணைந்து , தாக சாந்தி செய்து கொண்டிருந்தார்கள் ! வள்ளுவர் கோட்டம் அருகே இருந்த இரண்டு டாஸ்மாக் கடைகளுக்கும் நல்ல வருமானம் கிடைத்திருக்கும்.


4  மணி வரை, "லக்ஷ்மன் ஸ்ருதி" இசைக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. உடன் பிறப்புகள் ஆங்காங்கே 'உற்சாக நடனமாடி' க்கொண்டிருந்தார்கள் . எல்லோரும், அவரவர் ஊர்களில் இருந்து , வேன் ,லாரி மூலம் கும்பலாக வந்திருந்தார்கள். 6  மணி போல, V .I .P கள் வரத் தொடங்கியிருந்தார்கள். துணை முதல்வர் முதலாவதாக வந்து சேர்ந்தார்.கொஞ்ச நேரம் கழித்து, அஞ்ச நெஞ்சனும் வந்து சேர, விழா இனிதே ஆரம்பமாகியது. எக்கச் சக்க செலவு செய்திருந்தார்கள். உபயம் : ஜெகத் ரட்சகன்.


ஏதோ சினிமா செட் போல அமைத்திருந்தார்கள். ராஜா காலத்து செட். வந்திருந்த அனைவரையும் (V .I .P  களுக்கு தான், நமக்கல்ல !) வழி நெடுக சேவகர்கள் நின்று வரவேற்றார்கள். ராஜ நர்த்தகி யின் நடனம் கூட இருந்தது. பின்பு , அரசவையில் அனைவரும் உட்கார்ந்து , புகழ் பாட ஆரம்பித்தார்கள். இரண்டு மத்திய அமைச்சர்கள், ரஜினி , கமல் என்று ' பழைய ' ஆட்கள் தான் இந்த முறையும் !

ரஜினி, கமல் உடன் மம்மூட்டியும் வந்திருந்தார்கள். யாரும் மிரட்டியதாகத் தெரியவில்லை! நானும், அ.தி.மு.க MLA யாரவது தி.மு.க வில் சேர வந்திருக்கிறார்களா என்று பார்த்தேன்.கண்ணுக்கு யாரும் புலப் படவில்லை!!! கொஞ்ச நாள் WAIT பண்ணுவோம்! " என்னடா வருஷம் ஆரம்பிச்சு , இன்னும் ரெண்டு பாராட்டு விழாதான் நடந்திருக்கு ?" ன்னு நெனைக்கறதுக்குள்ள , இந்த விழா!!

ஒரு வேளை ,கலைஞரே , "இனிமே , எனக்கு பாராட்டு விழாவே எடுக்கக் கூடாது " ன்னு சொன்னாலும் , "பாராட்டு விழாவே வேண்டாமென்று சொன்ன பெருந்தலைவா !!! " என்று அடுத்த விழா நடத்தி விடுவார் ஜகத் ரட்சகன்  !!!

Friday, February 12, 2010

அசல் - திரை விமர்சனம்

அசல் படம் பார்த்து ஒரு வாரம் ஆகியும் , அதைப் பற்றிய விமர்சனம் எழுத வேண்டும் என்று தோன்ற வில்லை ! காரணமும் புரிய வில்லை!! ஆனால் நான் பதிவு எழுத ஆரம்பித்த பிறகு பார்த்த அனைத்து படங்களுக்கும் விமர்சனம் எழுதுவது என்று முடிவு செய்து விட்டதால், இதனை எழுதுகிறேன். ஆனாலும், "உன்னைப் போல் ஒருவன் " க்கு இன்னும் விமர்சனம் எழுத வில்லை! இப்போது கூட தோன்ற வில்லை (அதெல்லாம், படம் பார்த்த ஓரிரு நாட்களில் எழுதி விட வேண்டும் இல்லையென்றால் , மீண்டும் எழுதுவது ரொம்பக் கஷ்டம்.இதோ , இப்போது  , அசல் க்கு விமர்சனம் எழுதுகிறேனே , இதைப் போல! )அல்டிமேட் ஸ்டார் என்ற "பட்டம்"  போடாமல், சாதாரணமாக பெயர் போட ஆரம்பிக்கும் போதே, இது மற்ற "தல" படங்களைப் போல இருக்காது என்று நான் கணித்தது, கடைசி வரை உண்மையாகவே இருந்தது. அஜீத்குமார் ( ஆமாங்க, இனிமே எல்லாம் இப்படித்தான் !) அறிமுகக் காட்சியிலும் , ஓவர் பில்ட் அப் இல்லை. ஏற்கனவே ,தமிழ் சினிமாவில் பார்த்துப் பழக்கப் பட்ட கதை தான் என்றாலும் , படத்தின் வேகம் சீராகவே கொண்டுசெல்லப் படுவதில் , திரைக் கதை நல்ல பங்காற்றியிருக்கிறது. உபயம் - சரண் , அஜீத் குமார் மற்றும் யூகி சேது.ஆம், நடிப்பையும் தாண்டி கால்பதிக்க  அஜீத் முயன்றிருக்கிறார். வாழ்த்துக்கள்.

படம் ஆரம்பித்து 15  நிமிடங்களுக்கு , ஒரே கூச்சலாக இருந்ததால் , வசனங்கள்  சரியாகக் கேக்கவில்லை . கதையின் போக்கை வைத்து, நானே கணித்துக் கொண்டதுதான் மிச்சம்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு , சுரேஷ் நடித்திருக்கிறார் என்று நினைக்கிறேன். ஏமாற்றுக் கார போலீஸ் வேடத்தில் , தன்னை சரியாக பொருத்திக் கொள்கிறார். யூகி சேது , அப்பப்போ வந்து , எப்பவாவது சிரிக்க வைக்கிறார். வாரணம் ஆயிரத்தில் , பார்த்த சமீராவா இது ?! பாவனாவிற்கும் , சராசரியான தமிழ்த் திரைப் பட கதாநாயகி வேடம்தான். தற்போது , சிறப்புத் தோற்றங்களில் கலக்கி வரும் இளைய திலகம், இதிலும் அதை MAINTAIN  செய்கிறார்.இசை அமைப்பாளர் பரத்வாஜ் , இன்னும் கொஞ்சமாவது , மெனக் கெட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது! பாடல்களில் எதுவுமே ஹிட் ஆனதாகத் தெரியவில்லை. "டோன்ட்ட டோயன்ங் " பாடல் மட்டும் பார்க்கும் போது நன்றாக இருந்து. முதலில், படத்திற்கு HARRIS  ஜெயராஜ் தான் இசை அமைப்பதாக இருந்தது. "ஏண்டா மாற்றினார்கள் " என்று தோன்றுகிறது. மன்னிக்கவும் பரத் வாஜ். பின்னணி இசையும் சொல்லிக் கொள்ளும் படி இல்லை. வழக்கமாக, சரண் - பரத்வாஜ் கூட்டணி என்றாலே , பாடல்கள் நன்றாக இருக்கும் என்று ஒரு எதுர்பார்ப்புடன் செல்வோம் தானே ?! வேண்டாம், ஏமாந்து விடாதீர்கள் ! அஜீத் போன்ற மாஸ் ஹீரோ கிடைத்திருக்கும் பொது , புகுந்து விளையாடி இருக்கலாமே பரத் வாஜ் ?!

கேமரா மேன் யாரோ வெளிநாட்டுக் காரவுக போல .நல்லாதான் படம் புடிச்சிருக்கிறாரு !
இது தல படம்தான் இல்லையென்றால், ( வழக்கமான )சரண்  படம் கூட இல்லை. ஆனால், இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது சரண். ஆனால், அடிக்கடி  'தல' , 'தல' என்று சொல்லி, தல வலிக்க வைக்கிறார்கள். படம் நெடுக, புகை (புடை !?) சூழ வருகிறார் அஜீத். அன்புமணி ராமதாஸ், கடிதம் எழுதியதில், தவறே இல்லை என்றுதான் நினைக்கிறேன் !

அசல் - போட்ட அசலை பிரபு (சிவாஜி பிலிம்ஸ் ) எடுத்திருவார்.
Saturday, February 6, 2010

சம்பள உயர்வு வேண்டுமா ?

ஏதோ சம்பள உயர்வுக்கு வழி சொல்லும் பதிவு இது என்று நினைத்து விடாதீர்கள் !
வேலை செய்யும் ஒவ்வொருவருக்கும் மிக்க மகிழ்ச்சி தரக் கூடிய விஷயங்களில் முக்கியமானவை - விடுமுறையும் , சம்பள உயர்வும் !! அப்படி சம்பள உயர்வு நடக்கும்  இடங்களில் , இப்படி நடந்தால் எப்படி இருக்கும் என்ற எனது கற்பனைதான் இந்த பதிவு.

எல்லாரும் , சரத் குமார் , வடிவேல் நடித்த  மாயி திரைப் படம் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இல்லை என்றால் , அட்லீஸ்ட் இந்த காமெடி சீனையாவது பார்த்திருப்பீர்கள். (பார்க்காதவர்கள் ஒரு முறை இந்த வீடியோவை பார்ப்பது நன்று ! CLICK பண்ணி பாருங்க).

இங்கு வடிவேல் - முதலாளி அல்லது HR  ( EMPLOYER ).
இன்னொருவர் - என்னைப் போல் ஒருவன் , உங்களைப் போல் ஒருவன் - அதாங்க , EMPLYOEE .

இனி  ஓவர் டு   சம்பளப் பேச்சு வார்த்தை  !
இதை ஆபீஸ் நேரத்தில் ஓபன் செய்து படிக்காதீர்கள் ! சம்பளம் குறைக்கப்  படவும் வாய்ப்புகள் இருக்கிறது  !!


Thursday, February 4, 2010

தமிழ்ப் படம்...

என்னுடைய திரைப்பட வரலா........ற்றில் முதல் முறையாக , அடுத்த நாள் ஆபீஸ் இருக்கும் போதே ( ஆபீஸ் போறாராமா ! ) , முதல் நாள் செகண்ட் ஷோ படத்துக்கு போனேன்! தமிழ்ப் படம் தான் !திருவான்மியூர் ஜெயந்தி - யில் தான் !! 20 ரூபாதான் !!!தியேட்டர் காம்பவுண்ட் முழுவதும் பிரம்மாண்டமான பேனர்கள் ! வேற யாருக்கு , நம்ம  தயாநிதி அழகிரிக்குத்  தான். பேனரின் ஒரு மூலையில் , 'சிவா' நடிக்கும் 'தமிழ்ப் படம்' என்று போட்டிருந்தார்கள். தயாரிப்பு தரப்பு , கொஞ்சம் பெரிய இடம் என்பதால், படத்திற்கு விளம்பரம் வெகு பிரமாதம். நல்ல எதிர்பார்ப்பும் கூட ! சரி சரி படம் எப்படி இருக்கு ?!
படத்தின் ஆரம்பக் காட்சி முதலே , தமிழ் சினிமாவில் அரைக்கப் பட்ட மாவுகளை , ஞாபகப் படுத்துகிறார்கள். சில நிமிடங்களில் , நம்மை இம்ப்ரெஸ் செய்து விடுகிறார் இயக்குனர் c .s  அமுதன்.

இப்படி ஒரு படத்தில் கதா நாயகன் பாத்திரத்தில் , மிர்ச்சி சிவா நன்றாக பொருந்துகிறார்.
அறிமுக ஹீரோயீன் தமிழ்த் தெரியாமல் கூட, கொஞ்சம் நடித்திருக்கிறார் அல்லது முயற்சித்திருக்கிறார். ஒருவேளை , தமிழ் படங்களில், தமிழ் தெரியாதவர்கள் தான் ஹீரோயினாக இருக்கிறார்கள் என்பதை குத்திக் காட்டுகிறார்களோ என்னவோ ?! படத்தில், ஆங்காங்கே தலை காட்டும் அனைத்து கதா பாத்திரங்களும், தங்களுடைய வழக்கமான கேரக்டர்களிலேயே வருவது, ரசிக்கும் படியாகத்தான் இருக்கிறது.
 மற்றபடி , M .S பாஸ்கர் , மனோபாலா, வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோர் கதாபாத்திரங்கள் குறிப்பிட்டு சொல்லும்படியாக இல்லை.கேமரா நீரவ் ஷா - வாமே ? போஸ்டர் பாத்துதான் தெரிஞ்சுக்கிட்டேன். அப்புறம், இசை அமைப்பாளர் கண்ணன் , பாடல்களில் முத்திரை பதித்திருக்கிறார் . அதிலும் , "பச்சை " என்று ஆரம்பிக்கும் அந்த அறிமுகப் பாடல் , உண்மையிலேயே பிரமாதம். நம்ம இளைய தளபதிக்கே அறிமுகப் பாடலாக வைக்கலாம் ! " ஒமாக சியா " பாடலும் , விக்கிரமன் பாணியில், ஒரே பாடலில் ஹீரோ  முன்னேறும் பாடலும் கூட நன்றாகத்தான் இருக்கிறது.


மிக வேகமாக பயணிக்கும் திரைக்கதை ( ?! )  , இரண்டாம் பாதியில் நகர மறுக்கிறது ! கொஞ்ச பேர் படம் முடிவதற்கு முன்னதாகவே கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.ஏற்கனவே பார்த்து பழக்கப் பட்ட காட்சிகள் என்பதால் , அடுத்து நடக்க இருப்பதை முன்கூட்டியே அறியும் பாக்கியம் பெற்று விடுகிறோம் ! முன்னொரு காலத்தில் , விஜய் டி.வி யில் பிரபலமாக இருந்த, "லொள்ளு சபா" வை ஞாபகப் படுத்துகிறது தமிழ்ப் படம்.

தயாரிப்பு தரப்பு பற்றி அனைவருக்கும்  தெரிந்ததால், எப்படியும் திருட்டு VCD  வராது. தமிழ்ப் படம் - நம்பிப் போகலாம் !
Blog எழுதுறவன் மனுசன்னா ...
Follow பண்றவன்
பெரியமனுசன் ...

பெரிய மனுசங்க....

நான் எனது பள்ளி நாட்களின் இறுதியிலும், கல்லூரி நாட்களிலும் எழுத வேண்டுமென்று நினைத்த நாட்குறிப்பின் வெளிப்பாடுதான் இந்த வலை தளம்.சினிமா, அரசியல், கலை, விளையாட்டு தொடர்பான விஷயங்களை பகிர்ந்து கொள்ள எனக்கான இடம் (உங்களுக்குமானது தான் !).


(இன்னும் எத்தன பேர்டா கெளம்பி இருக்கீங்க ?!)

2011 சட்டசபைத் தேர்தலில் கூட்டணி எப்படி இருக்கும் ?

வ - த - ந - மீ - வ = வந்தமைக்கும் தந்தமைக்கும் நன்றி , மீண்டும் வருக !

தேசாந்திரி , அங்க பாரு...

தேசாந்திரி ,  அங்க பாரு...

வந்தார்கள் சென்றார்கள்...


நம்ம நிலைமையை பாருங்க!

Contact Us

Name

Email *

Message *