Friday, December 24, 2010

நேயர்கள் இனி கேட்கலாம்... செய்திச் சுருக்கம் !

எங்கேயோ கேட்ட ஞாபகமா ?!
வானொலியுடனான எனது நட்பை குறித்த இடுகை இது.


                             நன்றி - புகைப்பட உதவி: www.abagond.wordpress.com

பால்யத்தில், அடிக்கடி தஞ்சாவூருக்கு எங்கள் தாத்தாவைப் பார்க்க போவதுண்டு. 75 - 80 வயது இருக்கும் அவருக்கு.எப்போதும் கையில் ஒரு TRANSISTOR வைத்திருப்பார். மெதுவாக ஒலித்துக் கொண்டே இருக்கும் அந்த TRANSISTOR  தான் அவரின் பெரும்பாலான நேரங்களில் துணையாக இருக்கும் - பாட்டி இறந்த பின்பு !கூடவே ஒரு பெரிய ரேடியோவும் வைத்திருப்பார். செய்திகள் வரும் நேரங்களில் ,அதனை TUNE செய்வது தான் "சக" பேரப்பிள்ளைகளின் வேலை. எல்லா அலைவரிசைகளிலும் எந்தெந்த நேரங்களில் செய்திகள் வரும் என்பதை மனப் பாடமாக தெரிந்து வைத்திருந்தார் .
                                           நன்றி - புகைப்பட உதவி  : www.jamthechannel.com


அதனை கேட்டுக் கொண்டே தூங்கியும் விடுவார். "சரி தூங்கி விட்டாரே" , என்றெண்ணி ரேடியோவை OFF செய்தால், உடனே விழித்துக் கொள்வார் ! பல முதியவர்களின் உற்ற தோழனாய் இருந்து கொண்டிருந்தது வானொலிதான். அதனுடனான நெருக்கத்தை, அவர்கள் தொலைக் காட்சியுடன் கொண்டிருக்கவில்லை !


என் சிறுவயதில், வானொலியில் திரைப் படங்களை வசனத் தொகுப்பாக  ஒலி பரப்புவார்கள்.இப்போதும், "தெய்வ மகன்" படத்தை பற்றி நினைக்கும் போதெல்லாம், அதன் வசனத் தொகுப்பைக் கேட்ட அந்த மாலைப் பொழுது , மனதில் மீள் பதிவாகிறது ! இப்போதெல்லாம் , வானொலி என்றாலே FM ஞாபகம் தான் வருகிறது !கொஞ்ச நாட்களாக தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன்.


                                           நன்றி - புகைப்பட உதவி : www.blog.emman.in

சென்னை வந்த புதிதில் , FM கேட்பது என்பது புதிய அனுபவத்தைக் தரக்  கூடியதாய் இருந்தது. அப்போதெல்லாம் , தனியார் நிறுவன FM களை கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால், இப்போது அரசு வானொலியின் ஒரு பிரிவான FM ரெயின்போ 101 .4 தான் எனது விருப்பம் ! தொகுப்பாளர்கள் , ஏதோ நம் அண்டை வீட்டுக் காரர்கள்  போல் உணரவைக்கிறார்கள் ! மணிக்கொரு முறை செய்திச் சுருக்கம் , அடிக்கடி பழைய பாடல்கள் என நெருக்கமாயிருக்கிறது ! 105 .6 பண்பலை, மாலை நேரங்களில் நல்ல நாடகங்களை ஒளிபரப்புகிறார்கள் . 102 .3 FM கோல்டில் , விரிவான செய்திகள் கேட்கலாம். பணி முடிந்து, கூட்டமில்லா மாநகரப் பேருந்தின் சன்னலோர இருக்கை கிடைத்தால், அந்த பயணத்தில் நிச்சய தோழன் 101.4 FM ரெயின்போ தான் !


காலப் போக்கில் , "MODERN ஆக்குகிறேன்" என்ற பெயரில் இது போன்ற வானொலி சேவைகளின் பழமையை மாற்றாமலிருக்க வேண்டும் ! எங்கள் வீட்டில் பழைய CASSET கள் நிறைய உண்டு ! ஆனால், 'பல' முறை பழுது பார்த்தும் , மீண்டும் மீண்டும் பழுதாகிக் கொண்டேஇருந்தது ! சரி ஒரு புது TAPE ரெகார்டர் வாங்கலாமென்று, ஒரு 15 கடைகளில் ஏறி இறங்கியிருப்பேன்  ! எங்குமே கிடைக்கவில்லை !

                                              நன்றி - புகைப்பட உதவி: www.sony.lv


ஒருமுறை, என்  தந்தை, "உங்களைப் பார்க்க ஊருக்கு வருகிறேன் , ஏதாவது வாங்கி வர வேண்டுமா" என்று தாத்தாவை கேட்டதற்கு - "ஒரு TRANSISTOR  மட்டும் வாங்கிட்டு வாடா !" என்றார். சில வருடங்களில் தாத்தா  இறந்தும் விட்டார் ! அவர் வைத்திருந்த இரண்டு TRANSISTOR களும், ஒரு பெரிய ரேடியோவும் பழுதாகிப் போயிருந்தன ! இப்போது அந்த வீட்டில் யாரும் வானொலி கேட்பதில்லை. அதனைப் பழுது பார்க்க, யாரும் விரும்புவதுமில்லை, யாருக்கும் நேரமுமில்லை ! ஆனால், வானொலியானது, தன் அலைகளை காற்றில் பறக்கவிட்ட படியேதானிருக்கிறது , அதனைக் கேட்பவர்கள்தான் குறைந்து விட்டார்கள் !

Saturday, December 18, 2010

ஸ்பெக்ட்ரம் ஸ்பெஷல் - 1

டிஸ்கி : இந்த இடுகை முழுவதும் நகைச்சுவைக்காகவே.
யார் மனதையும் புண்படுத்த அல்ல !
 
இந்தியாவில் இப்போதைய "ஹாட்" டாபிக் - ஸ்பெக்ட்ரம் தான் ! இது போன்றதொரு 'நிகழ்வு' மன்னர் (இராஜ ராஜ சோழன் அல்ல !) காலத்தில் நிகழ்ந்திருந்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையின் விளைவே இவ்விடுகை !

                                         நன்றி - புகைப்பட உதவி : www.serpholicmedia.com

ஆனால் அப்போதுதான் ஸ்பெக்ட்ரம் இல்லையே ?! அது இல்லாட்டி என்ன , எப்படியும் தூது விட புறா வாங்கித் தானே ஆகணும் ?!

=====================================================================================

"மந்திரி தான் புறா விற்றதில் எந்த ஊழலும் நடக்க வில்லை என்கிறாரா ?"

"ஆமாம், தான் செய்த அனைத்தும் மன்னருக்கு தெரிவித்து விட்டுதான் செய்ததாக சொல்கிறார் !"

=====================================================================================

"மந்திரி , தன் பதவியை இராஜினாமா செய்து விட்டாராமே ?!"

"ஆமாம் ."

"ஆனால், கடந்த மாதம் , தான் ஊழலே செய்ய வில்லை என்று சொன்னாரே ?!"

"ம்ம்... கேட்டால், 'அது போனா மாசம், இது இந்த மாசம் ' என்கிறார் !"

=====================================================================================

புறா விற்றதில் , இதற்கு முன்னாள் இருந்த மந்திரிகள் என்ன வழிமுறைகள் பின்பற்றினார்களோ , அந்த வழி முறைகளைத்தான் நானும் பின் பற்றினேன் என்பதை அவையோருக்கு சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன் !

=====================================================================================

                                    நன்றி - புகைப்பட உதவி :  http://oratorgreat.blogspot.com/

" மன்னர் ஏன் திடீரென்று செல் போன் கனெக்ஷனை துண்டித்து விட்டு, 200 தீப்பெட்டிகளும், நூலும் ஆர்டர் செய்துள்ளார் ?! "

"செல் போனில் பேசினால் ஒட்டுக் கேட்கிறார்களாம் ! அதனால், இனிமேல் தீப்பெட்டித் தொலை பேசி மூலம் தான் பேசுவாராம் !"

 =====================================================================================
 "மன்னர் செம கடுப்புல இருக்கார் போல ?!"

"ஏன் , என்ன ஆச்சு ?!"

" 'தந்தையே, ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன ?' என்று இளவரசர் கேட்டதற்கு , 'ம்ம்ம்..வெங்காயம்' ன்னு பதில் சொல்றார்!"

Saturday, November 27, 2010

ஆண்டவன் உங்களுக்கு ரெண்டு மடங்கு படி அளப்பான் !

ஒரு நாலஞ்சு மாசம் இருக்கும். இது  நடந்து.
வழக்கமாக நான் செல்லும் பேருந்து , வழக்கம் போல தாமதமாகத்தான் வருமென்பதால், பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன். பேருந்து நிலையம் முழுக்க, ஏதோ ஒரு பதற்றம் தொற்றிக் கொண்டிருந்தது, பீக் ஹவர்களில் எப்போதுமே இப்படித்தான் !


                                    நன்றி - புகைப்பட உதவி : www.thehindubusinessline.com

இவ்வளவு நாட்களாக, ஒரே பேருந்தில் (வழித் தடத்தில் ) சென்று வருவதால், சக பயணிகள் நன்றாகவே அறிமுகமாகியிருந்தார்கள்.ஆனால் யாருடனும் பேசிக் கொண்டதில்லை ! வழிமேல் விழிவைத்து காத்திக் கொண்டிருந்த போதுதான் அந்தப் பெரியவர் என்னருகில் வந்தார்.ஒரு 65 வயது இருக்கும். குறைவான உயரம்.மாநிறம்.ஐந்து நாள் தாடி. மெதுவாக என்னுடனான உரையாடலை ஆரம்பித்தார், என் பதிலை எதிர்பார்க்கமலேயே !

**********************************************************************************************

"நீங்க இந்த ஊருதானா தம்பி ?"

".............."

"எங்க வேல  பாக்குறீங்க ?"

".............."

 "எனக்கு கன்னியாகுமரி பக்கங்க !"

 ".............."

**********************************************************************************************

"அனாவசியமாக" யாரிடமும் பேசக் கூடாது என்பது , மாநகர வாழ்க்கை எல்லோருக்கும் ஏதோ ஒரு  வகையில் போதித்து விடுகிறது போலும் ! பேருந்து நிலையத்தில் இருந்த யாரும் - யாரிடமும் பேசிக் கொள்ளவில்லை.இவர் ஏன் குறிப்பாக என்னிடம் வந்து சுய புராணம் சொல்லிக்கொண்டிருக்கிறார் ?! அவர் பேசும் தொனியில் இருந்தே, ஏதோ பண உதவி கேட்கப் போகிறார் என்பதை ஊகித்தவனாய் நின்று  கொண்டிருந்தேன்.

**********************************************************************************************

"எனக்கு நாலு பசங்க தம்பி..."


".............."

"யாருமே எங்களை கவனிக்கல தம்பி ..."


".............."

"சரி, அவனுங்களை ஏன் நம்பணும்னு , கெளம்பி சென்னை வந்துட்டேன் - எதாவது வேலை செஞ்சு பொழச்சிக்கலாம்னு."


" ?!?!?!?! "

"என் பொஞ்சாதி வேற ஒடம்புக்கு முடியாம ஊர்ல கெடக்கா தம்பி..."


"ம்ம்ம்ம்...."


"ஆனா, வயசாயிடுச்சேன்னு இந்த கெழவனுக்கு யாரும் வேல தர மாட்டேங்கறாங்க தம்பி..."


"ஓ....!"


"இப்போ திரும்பி ஊருக்கே போய்டலாமுன்னு தோணுது..."


"ம்ம்ம்..."

"ஆனா கையில சுத்தமா காசு இல்ல தம்பி - பஸ்ல போனா கொறஞ்சது 500  ரூபா ஆகும். ஆனா, ECR ல நின்னு எதாவது லாரில ஏறி 100 ரூபா கொடுத்தா ஊர்ல எறக்கி விட்டுருவாங்க ! கொஞ்சம் உதவி பண்ணுங்க தம்பி - ஆண்டவன் உங்களுக்கு ரெண்டு மடங்கு படி அளப்பான் !"


                                      நன்றி - புகைப்பட உதவி :www.shutterstock.com

**********************************************************************************************


சொல்லி முடிதவரின் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை பார்த்த நான் கொஞ்சம் அதிர்ந்துதான் போனேன்.

எவ்வளவு கஷ்டம் ?! ஒருவரிடம் உதவி கேட்பதற்கு முன்பு நாம் எவ்வளவு யோசிப்போம் ?! அதுவும் முகம் தெரியாத ஒருவரிடம் ? ஒரு மாதிரி கூச்சமாக இருக்கும் தானே ?! அதுவும் தன் பேரனைப் போல வயதுடைய ஒருவனிடம் காசுக்காக கேட்டு நிற்பது என்றால் , அவர் எவ்வளவு யோசித்திருப்பார் ? இது வரை எத்தனை பேரிடம் கேட்டிருப்பாரோ ? பரிதாபம் .

ஆனால் , நான்தான் எவ்வளவு கருணை உள்ளவன் ?! மாதம் ஆயிரக் கணக்கில் (!) சம்பாதிக்கிறோமே, ஒரு 100 ரூபாயில் என்ன ஆகிவிடப் போகிறது, இல்லையில்லை ஒரு 50  ரூபாயில் என்ன ஆகிவிடப் போகிறது  ?! பாவம் பெரியவர். 50 ரூபாய் எடுத்த என்னை பரிதாபப் பார்வையுடன் பார்த்தார்.

"லாரிக் காரங்க 100 ரூபாய்க்கு கொறைஞ்சு ஏத்த மாட்டாங்க தம்பி"

ஒரு 100 ரூபாயில் என்ன ஆகிவிடப் போகிறது ?! 100 ரூபாயைக் கொடுத்து ,
"சரிங்க ஐயா.அழுவாதீங்க . பத்திரமா ஊருக்குப் போய் சேருங்க " ன்னு சொல்லி அனுப்பினேன். நான்தான் எவ்வளவு கருணை உள்ளவன் ?! அன்று முழுவதும், பெரியவர் ஊருக்குப் போய் விட்டதாகவும், பொஞ்சாதியுடன் சந்தோசமாக இருப்பதாகவும் நினைத்துக்  கொண்டேன் .

**********************************************************************************************

ஒரு நாலஞ்சு நாள் இருக்கும். இது நடந்து. 

என்னைப் போலோருவன் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தான். அவன் வழி மேல் விழிவைத்துக் காத்துக் கொண்டிருந்தபோதுதான் அதே பெரியவர் அவனருகில் வந்தார்.ஒரு 65 வயது இருக்கும். குறைவான உயரம்.மாநிறம்.ஐந்து நாள் தாடி. மெதுவாக அவனுடனான உரையாடலை ஆரம்பித்தார், அவன் பதிலை எதிர்பார்க்கமலேயே !

"நீங்க இந்த ஊருதானா தம்பி ?! "

நன்றி - புகைப்பட உதவி : www.oxheyworld.com


மீதியை படிக்க, அவன் வலைத்தளம் எழுதுகிறானா என அறிந்து கொள்ள வேண்டும்!

ஒருவேளை அவனுக்கும் ஆண்டவன் ரெண்டு மடங்கு படி அளந்திருக்கிறானோ என்னவோ ?!

Saturday, November 20, 2010

இனி என்(ண்) நம்பர் !

எல்லோர் எண்ணங்களிலும் சில எண்கள் நிழலாடிக் கொண்டுதானிருக்கின்றன ! அப்படி, சில பிரபலங்களின் எண்ணங்களில்  இருக்கும் எண்கள் என்னவாக இருக்கும் ? ஒரு கற்பனை ! " எதனால் அந்த எண்கள் ? " என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன் !


நன்றி - புகைப்பட உதவி www.knitwareblog.com

செல்வி .ஜெ.ஜெயலலிதா , திரு .ஆ.ராசா - 1700000000000 ( கரெக்டான்னு தெரியல !)

 
முதல்வர் கலைஞர் - 118 

கேப்டன் விஜயகாந்த் - 100

பிரதமர் மன்மோகன் சிங் - 2 (G ! )

திரு .சச்சின் டெண்டுல்கர் - 400

 
மருத்துவர் ராமதாஸ் -

தமிழ்நாடு - 2011


இந்தியா - 2020


 
ஒபாமா - 123

 

உங்களுக்கு  தெரிஞ்சு ஏதாவது MISS ஆகியிருந்தா பின்னூட்டத்தில் சொல்லுங்க !

Saturday, November 13, 2010

மாநகர் வாழ்க்கை - கவிதை (யாமாம் !) நன்றி - புகைப்பட உதவி  : www.thehindu.com


பரபரக்கும் காலைப் பொழுது....

மாநகர்ப் பேருந்து நிறுத்தம்..

அடிபட்டுக் கிடக்கிறான் ஒருவன் ...

நின்று செல்லும் பேருந்துகளின்

ஒவ்வொரு ஜன்னலில் இருந்தும்

எட்டிப் பார்க்கின்றது ஒரு முகம்...

தன் மகனாகவோ, அண்ணனாகவோ , 

தந்தையாகவோ , கணவனாகவோ -

இருக்கக் கூடாதென...


நின்று செல்லும் பேருந்துகளின்

ஒவ்வொரு ஜன்னலில் இருந்து

வெளிப்படும்  முகங்களைப் பார்க்கிறான்,

தன் தந்தையாகவோ, தம்பியாகவோ,

மகனாகவோ ,மனைவியாகவோ -

இருக்கக் கூடாதா என !

Sunday, October 31, 2010

கொஞ்சம் உதவலாமா ?!

இந்த இடுகையை எப்படி ஆரம்பிப்பது என்று தெரிய வில்லை ! பிளாக்கர் விதிமுறைகளின் படி இது சரியா என்றும் தெரிய வில்லை ! ஆனால், ஒரு நல்ல விஷயத்திற்க்காகத்தான் என்பதால் தொடர்கிறேன் !

என் நண்பன் ஒருவனின் COUSIN சகோதரனுக்காக , அவன் அனுப்பிய மின்னஞ்சல் கீழே தரப்பட்டுள்ளது. ஆறு வயதுடைய சென்  விகாஷ் என்னும் அந்த சிறுவனுக்கு கேட்கும் திறனும் பேசும் திறனும் இல்லை . இதற்கான சிகிச்சையை பெற கோவையில் உள்ள ஒரு மருத்துவ மனையை அணுகிய போது , COCHLEAR IMPLATATION SURGERY என்னும் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள் ! அதற்கான செலவு சுமார் ஆறு லட்சம் ரூபாய் ஆகும் என்றும் ! நண்பர்களின் உதவியால் இப்போது சுமார் மூன்று லட்சம் ரூபாய் திரட்டியாகிவிட்டது ! ஆனால் டிசம்பரில் செய்வதாக சொல்லியிருந்த அறுவை சிகிச்சையை  இப்போது நவம்பர் இரண்டாம் வாரத்திற்குள் செய்யலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள் . மீதி மூன்று லட்ச ரூபாய் திரட்டும் முயற்சியில் இருக்கிறாகள் சென்விகாஷின் பெற்றோரும் என் நண்பனும் !
கொஞ்சம் உதவலாமா ?!மேலும் விவரங்களுக்கு :
பால முரளி - 91766 01928 (என் நண்பன் - சென் விகாஷின் COUSIN அண்ணன்).
ICICI ACCOUNT NO - 021201587702 , SANTHOME BRANCH ,

இராஜேந்திரன் - 98944 78214 (சென் விகாஷின் தந்தை)

என்ற எண்களை தொடர்பு கொள்ளவும் .

நீங்கள் பணம் அனுப்பும்போது REMARKS இல், CHEN VIKASH என்று குறிப்பிடவும்.பின்பு, மேலே உள்ள இருவரில் ஒருவருக்கு தெரியப்படுத்தி விடவும்.

அந்த மருத்துவ மனை இணைய தளத்திலும் இது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது .
http://enthospital.in/appeal.htm
மேற்கண்ட LINK ஐ VISIT செய்யவும். நன்றி !

Thursday, October 21, 2010

2011 - தமிழ்நாடு - தேர்தல் - தலைவர் - எந்திரன்

டிஸ்கி : எந்திரன், எந்திரன், எந்திரன் ! எங்க பாத்தாலும் ஒரே எந்திரன் மயம்தான் கொஞ்ச நாட்களாகவே ! சரி, இந்த சமயத்த "யூஸ்"  பண்ணி கல்லா காட்டினா என்ன ?! ன்னு தோணிச்சு ! 


எந்திரன் இந்த வருஷம் ரிலீஸ் ஆகாம , அடுத்த வருஷம் எலெக்சன் சமயத்துல ரிலீஸ் ஆனா எப்பிடி இருக்கும்னு ஒரு நகைச்சுவை கலந்த காமெடி ( எது ?! நகைச்சுவை கலந்த காமெடி யா ?! ) கற்பனை ! இந்த இடுகை முழுதும் நகைச்சுவைக்காகவே எழுதப் பட்டது. யார் மனதையும் புண் படுத்த அல்ல !

***************************************************
"தலைவர்  ஏன் கோவமா இருக்கார் ?!"
" '2016  வரை கூட்டணியில் இருந்தாதான் 4 எந்திரன் டிக்கெட் கொடுப்பேன்'  ன்னு கூட்டணி தலைவர் சொல்லிட்டாராம் !"

***************************************************
அன்பான வாக்காளர் பெருமக்களே...
எங்களது ஆட்சியில் தான் "எந்திரன்" திரைப்படம் வெளிவந்தது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் !

 ***************************************************
 "இந்த தடவை அந்த கட்சி தான் தேர்தல்ல ஜெயிக்கும்னு எப்படி உறுதியா சொல்லுற ?!"
"அந்த கட்சியில்தான் ஒரு ஓட்டுக்கு ரெண்டு 'எந்திரன்' டிக்கெட் கொடுக்கறதா முடிவு பண்ணியிருக்காங்க "

 ***************************************************
"நம்ம தலைவர் ஏன் ரொம்ப சந்தோசமா இருக்கார் ?!"
"இன்னைக்கு நடக்குற பொதுக் கூட்டத்துல , தலைவருக்கு 'எந்திரன்' ன்னு பட்டம் கொடுக்கப் போறாங்களாம் ! " ***************************************************
"தலைவர் ஏன் 'நான் 40 ,  50  டிக்கெட்டுக்காக கட்சி நடத்தலை' ன்னு அறிக்கை விடுறார் ?!'"
" 'எங்க கூட்டணியில சேர்ந்தா 50 எந்திரன் டிக்கெட் கொடுக்கறேன் ',  கூட்டணி தலைவர் சொன்னாராம் !"

 ***************************************************


தலைவரே, சொன்னா கேளுங்க. நாங்க ஜெயிச்சா வீட்டுக்கு ஒரு ரோபோ இலவசமாக தருவோம்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க ! 

 ***************************************************

நன்றி - புகைப்பட உதவி :  www.indiaglitz.com , www.hindu.com

Friday, October 8, 2010

யாரடி நீ காமினி ?! ( சவால் சிறுகதை )


அறிவிப்பு : இந்த கதையில் வரும் கதா பாத்திரங்களும், சம்பவங்களும் முழுவதும் கற்பனையே ! யாரையும் குறிப்பிடுவன அல்ல. 

எச்சரிக்கை : இளகிய மனம் படைத்தவர்கள், வயதானவர்கள்  , இருதய நோய் உள்ளவர்கள்,தன்னுடன் யாராவது ஒரு தைரிய சாலியை பக்கத்தில் வைத்துக் கொண்டு படிக்கவும். விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல !

டிஸ்கி : இப்படியெல்லாம் போட்டாதான் ஒரு கதை மாதிரி பில்ட் அப் ஆவது ,கொடுக்க முடியும் !

***************************************************
எல்லாருக்கும் வணக்கம்.நல்லாயிருக்கீங்களா ?! நம்ம பரிசல் அண்ணாச்சி ஒரு சிறுகதை போட்டி அறிவிச்சிருந்தாரு இல்ல ?! சரி நாமளும் எழுதிதான்  பார்ப்போமே என்ற ஒரு எண்ணத்தில் உதித்தது (!) தான் இந்த சிறுகதை (!!).  சரி, உக்கார்ந்து ஒரே மணி நேரத்துல எழுதி முடிச்சிரலாம்னுதான் நெனச்சேன் ! ஆனா, உண்மையிலேயே ஒரு வாரமாச்சுங்க இத எழுதுறதுக்கு ! எதாவது லாஜிக் குறைபாடுகள் இருந்தா, பின்னூட்டத்தில் சொல்லுங்க. செகண்ட் பார்ட்டுல (ஆஹா, இதுல இது வேறயா ?! ) திருத்திடலாம்.

பார்ப்போம் என்னதான் நடக்குதுன்னு!
இனி, சரவெடி !!!

***************************************************
 காமினி இந்த வார்த்தைகளை  சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.ஏன், சிவாவும் தான்.சுந்தரம் எப்போதுமே இவ்வாறு பேசிப் பார்த்ததில்லை இருவரும்.
"ஐயா எவ்ளோ வாட்டி சொல்லியும், இப்படி பண்ணிட்டு வந்திருக்கீங்களே ?! இப்படி சொதப்புவீங்கன்னு தெரிஞ்சிருந்தா, பேசாம செல்வத்துக்கிட்டயே  இத செய்ய சொல்லிருயிருப்பேன் ". இதோடு நிறுத்திக் கொண்டிருந்தாலும் பரவாயில்லையே ?!
இதற்கு அப்புறம் சொன்ன வார்த்தைகளுக்குத்தான் முதல் வரி.

சுந்தரம் தான் பரந்தாமனுக்கு வலது கை, வலது கண், வலது கால், வலது காது எல்லாமுமே.பரந்தாமனிடம் அவ்வப் போது  சண்டை போட்டுக் கொண்டு விருதாச்சலதிற்கு சென்று விட்டாலும் , இருப்பு கொள்ளாமல் ஓரிரு நாட்களில் மீண்டும் அவர் வீட்டிற்கே வந்து விடுவார். சுந்தரம் இல்லாத நாட்களில் பரந்தாமனுக்கு செல்வம் தான் சுந்தரம்.இன்றும் அப்படித்தான்.


"ஐயா, நா வேணும்னா டவுன் வரைக்கும் போய் சுந்தரத்தை இட்டுனு வந்துடட்டுங்களா ? " . செல்வத்தின் கேள்விக்கு வழக்கமான பதில்தான், பரந்தாமனிடமிருந்து. "நாயி எங்கடா போயிட  போவுது ?! ரெண்டு நாளானா, தானா வால ஆட்டிட்டு இதே வாசலுக்கு தானே வந்தாகணும் ?! விடுறா. சாயங்காலத்துக்குள்ள குடோனுக்கு போய், லோடு இறங்கிடுச்சான்னு  பாத்துட்டு போன் பண்ணு ". பதிலின் மறுமுனையில், டிராக்டர் வந்து நிற்க, செல்வம் தன்னுடன் நான்கு வேலையாட்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுப் போனான்.

***************************************************

ந்தமுறை எப்படியாவது அந்த வைரத்தை எடுத்தாக வேண்டும். சுந்தரத்திற்கு பரந்தாமனின் வார்த்தைகள் தான் வேதம். நான்கு முறை தவறவிட்டாகிவிட்டது. இன்னொருமுறை ஐயா பொறுமையாக இருக்க மாட்டார். ஆகவே தான், எவ்வளவு செலவானாலும் தேவலை,கிஷோரிடம் சொல்லி மெட்ராசிலிருந்து ஆட்களை இறக்கி விடலாமென்று யோசித்தான்.அந்த யோசனை தான் காமினியும் சிவாவும் இன்று விருதாச்சலதிற்கு வரக் காரணம். இருவரும் கிஷோரின் நண்பர்கள் தான். கிஷோர் சுந்தரத்தின் மகன் என்பது உங்களுக்கும், எனக்கும் பரந்தாமனுக்கும் மட்டும் தான் தெரியும் ! அவர்தான், மெட்ராஸ் காலேஜில்  சீட் வாங்கிக் கொடுத்து கிஷோரை படிக்க வைத்தார். ஆனால், ஏற்கனவே ஒருமுறை இவர்கள் நேரடியாக களத்தில் இறங்க, கொஞ்சம் எசகுப் பிசகாகிப் போனதால், "இந்த முறை குறி கரெக்டா இருக்கணும் ! " என்று சொல்லிக் கொண்டாள் காமினி .


***************************************************

ந்த வைரம் பரந்தாமனின் சேர்த்து வைத்திருந்த நகைகளில்  மிக முக்கியமானது. போனமுறை கரும்புத் தோப்புக்கு அருகில் கிணறு வெட்டும் போது கிடைத்த புதையலில் இருந்த ஒரே வைர நகை அது ஒன்றுதான். கோவில் திருவிழாவிற்காக பரந்தாமன் பக்கத்து ஊருக்கு போயிட்டு வருவதற்குள் , தர்ம கர்த்தா பெரிய நாயகம் தனது வேலையை காட்டி விட்டார். இப்போது அது இருப்பதும்  அவர் வீட்டில் தான்! ஆனால், அவ்வளவு ஈசியாக அவர் வீட்டிற்குள் போய்விட முடியாது. தனது பாதுகாப்புக்கென்று, போலீஸ் பாதுகாப்பை காசு கொடுத்து வாங்கி வைத்திருக்கிறார் பெரியநாயகம் . பெரிய நாயகம்தான் அவர்களுக்கு DSP , IG , எல்லாமுமே !ப்படி உள்ளே போவது ?!


பெரியநாயகம் ஒடம்புக்கு முடியாத நிலையில், ஆஸ்பத்திரியில் படுத்திருந்தார்.
எல்லாம் இந்த வெத்தல பாக்கு போடறதால வந்தது.ஏற்கனவே கேன்சர் முத்திப் போயிருந்தது. டாக்டரும், கண்ணாடியை கழற்றிக் கையில் வைத்துக்கொண்டே சொல்லி விட்டார் - "எதையும் ஒரு 24 மணி நேரம் கழிச்சுதான் சொல்ல முடியும் ! ".

"சரி அப்போ 24 மணி நேரம் கழிச்சு வரோம் எசமான்" என்று பெரிய நாயகத்தின் ஆட்கள் கழன்று கொண்டார்கள்.

மளிகை சாமானுக்கே காசில்லாத போது, இடைத் தேர்தல் வந்தால் எப்படி இருக்கும் ?! இந்த செய்தியும் அப்படிதான் இருந்தது சிவாவிற்கும் காமினிக்கும்.செய்தி கேட்டவுடன், காமினி தன் கையை அறுத்துக் கொண்டாள். எதற்கா ? அப்போதானே, பெரிய நாயகம் இருக்கும் ஆஸ்பத்திரியில் போய் அட்மிட் ஆக முடியும் ?! காமினி எப்போதுமே இப்படித்தான்.

***************************************************
விசாலம் மருத்துவ மனை
அறை எண் 392 .
காலை 11 . 30 மணி.

இன்று டிஸ்சார்ஜ் என்று சொன்னதால், பெரிய நாயகம், வண்டியை வர சொல்லியிருந்தார். யாரோ புது டிரைவர் என்று சொன்னார்கள்.

அதே விசாலம் மருத்துவ மனை ,
அதே அறை அல்ல , பக்கத்து அறை எண் 393 .
காலை 11 . 35 மணி.

காமினியின் கையை சுற்றியிருந்த குளுக்கோஸ் வயர்கள் இன்னும் கழற்றப் படவில்லை. இன்னும் ஒரு நாள் வரைக்கும் டிஸ்சார்ஜ் செய்ய முடியாது என்று டாகடர் சொல்லி விட்டார். டாக்டர் சொல்லிக்கொண்டிருக்கும் போது, காமினியின் கண்களும், காதுகளும் பக்கத்துக்கு அறையை உற்றுப் பார்த்துக் கொண்டும், ஒட்டுக் கேட்டுக் கொண்டும் இருந்தன .டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றி விட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

நாம் எதிர் பார்த்தது போலவே ( எதிர்பார்த்தீர்கள் தானே ?!) அவள் குதித்த இடம் , பெரிய நாயத்தின் ஜீப் தான் ! அசந்து தூங்கிக் கொண்டிருந்த நாயகம் இதை கவனிக்க வில்லை ! ஆனால், டிரைவர் பார்த்து விட்டான் !ஆனால் ஒன்றும் சொல்லவில்லை . ஏனென்றால், அவன் பெயர் சிவா ! வண்டியை நேரே பெரிய நாயகத்தின் பங்களாவிற்கு விரட்டினான்.

***************************************************

ன்னதான் பிளான் போட்டாலும், வில்லனின் வீட்டிற்குள் அவனுக்கே தெரியாமல் புகுந்த கதா நாயகி , ஒரு சமயம் அவனிடம்  மாட்டிக் கொள்ள  வேண்டும் இல்லையா ?! காமினிக்கும் அதுதான் நடந்தது . ஹாலில் நடுநாயகமாக , படுத்திருந்த பெரிய நாயகம் சற்று சோர்ந்து போய்தான் காணப் பட்டார்.அவர்  புது டிரைவரைப் பார்த்து கண்ணசைக்க, அவன் தலையசைத்தான். அசைத்து  முடிக்கையில், அவன் கையிலிருந்து துப்பாக்கி வெளிப்பட்டது ! “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.


"சாரி எனக்கும்  வேற வழி தெரியல" என்று சொன்ன காமினி , கண்ணிமைக்கும் நேரத்தில், பெரிய நாயகத்தை சுட்டு விட்டு, டிரைவர் சிவாவுடன் பங்களாவிலிருந்து வெளியேறினாள்.காவலுக்கு இருந்த போலீஸ் காரர்கள் , "ஐயாவுக்கு திரும்ப ஒடம்புக்கு முடியாமப் போயிடிச்சு . டவுன் வரைக்கும் போய் , டாக்டர் ஐயாவைக் கூட்டினு வந்திடுறோம்" என்று அவர்கள் சொன்னதை நம்பித்தான் ஆக வேண்டும் !ஜீப்பை வேகமாக விரட்டிய படி,அவர்கள் வந்து நின்ற இடம், பரந்தாமனின் பங்களா.

 “காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

எதிர்பார்த்த பாராட்டுதான் என்றாலும், காமினி, செயற்கை சிரிப்பொன்றை உதிர்த்து விட்டு சிவாவைப் பார்த்தாள். "ஐ ஆம் சாரி மிஸ்டர் பரந்தாமன். இந்த வைரத்தை உங்க கிட்ட ஒப்படைக்கறதுக்காக நாங்க இத மீட்கல ! ஞாயப்படி,சட்டப் படி, (இந்த கதைப் படி !) இதை  அரசாங்கத்துக்கிட்ட ஒப்படைக்கணும் ! அதை செய்யத்தான் நாங்க இங்க வந்தோம். இந்த வைரத்தோட கெடைச்ச மத்த நகைகள் ஏங்க இருக்குன்னு சொன்னீங்கன்னா நல்லாயிருக்கும் !" என்று தங்களின் அடையாள அட்டையை சிவாவும் காமினியும் காண்பித்தனர். அந்த அடையாள அட்டைகளில் அச்சிடப் பட்ட  "தமிழ் நாடு - காவல் துறை" என்ற  எழுத்துக்கள் பரந்தாமனின் கண்களில் ஒரு அதிர்ச்சியை உண்டாக்கியதில் ஆச்சர்யம் இல்லை  !

கிஷோரின் வேண்டுகோளுக்கிணங்க, பரந்தாமன் மேல் வழக்கு ஏதும் போடாமல், புதையலுடன் சென்னைக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்கள் சிவாவும், காமினியும்  !

கிஷோர் சொன்ன போதே, புதையலை அரசாங்கத்திடம் ஒப்படைத்திருந்தால், இவ்வளவு பிரச்சினை நடந்திருக்கத் தேவையில்லை! பெரியநாயகமும் குண்டடி பட்டு ஆஸ்பத்திரியில் சேர்ந்திருக்கத் தேவையில்லை !


**************முற்றும்**************


"அதெல்லாம்  சரி, சிறுகதை எழுதிருக்கேன்னு சொன்னியே , அது எங்க ?" என்று கேட்பவர்களுக்கு, அவர்களின் இடுகைக்கு வந்து இதையே பின்னூட்டமாகப் போடப் படும் என்று ஒச்சரிக்கிரேன்  ! ச்சீ .... எச்சரிக்கிறேன் !

புகைப்பட உதவி : http://paadumeen.blogspot.com, http://view.fdu.edu, http://agnosticnihilist.wordpress.com/

Tuesday, October 5, 2010

என்ன செய்ய ? - கவிதை(யாமாம் !)

 டிஸ்கி : கீழே உள்ள கவிதையின் ஒவ்வொரு வரியையும் இரண்டு இரண்டு முறை , இரண்டு இரண்டு முறை ( ஹ்ம்ம்.... இப்படித்தான் !) படிக்கவும் .அப்போதான் கவிதை மாதிரி தெரியும்.

இன்றைக்கு அலுவலகம் போவோமா ?

இல்லை வேண்டாமா ?

ஒரு சின்ன விஷயத்திற்கு இவ்ளோ குழப்பமா ?!

சரி, பூவா தலையா போட்டு பாத்துடுவோம்.

அது சரி... 


ஆனால்....

பூ விழுந்தால்  போவதா ?

இல்லை தலை விழுந்தால் போவதா ?!புகைப்பட உதவி - www.delawareonline.com

************************************************************************************************
இந்த கவிதையை(!) எழுதும் போது எனக்கு நண்பன் ஒருவன் அனுப்பிய குறுந்தகவல் ஞாபகம் வருகிறது.

முடிவெடுக்க சிரமமாய் இருக்கும் போது, பூவா தலையா போட்டுப் பாருங்கள். அதன் முடிவுக்காக இல்லை. நாணயம் காற்றில் இருக்கும் போது பூ விழவேண்டுமா, இல்லை தலையா என்ற உங்கள் விருப்பம் தெரியும் !

Thursday, September 30, 2010

நகைச்சுவை - நேர்முகத் தேர்வுகள் நடைபெறுவது எப்படி ?!


டிஸ்கி : எதோ ரொம்ப சீரியசான இடுகைன்னு நெனைச்சு வந்தவங்க மன்னிக்கணும். வழக்கம் போல, நகைச்சுவைங்கற பேர்ல மொக்கை தான் !

*********************************************************************************************************

எங்கள் கல்லூரியில், நடைபெறும் கலைநிகழ்சிகளில் , நாங்கள் MIMING என்ற பெயரில், பல மொக்கைகள் போட்டிருக்கிறோம்.எல்லாமே "ரீமிக்ஸ்" தான். பக்கத்துக்கு கல்லூரியில் நடந்த MIMING ஐ, அப்படியே பட்டி பார்த்து, டிங்கரிங் பண்ணி மேடையேற்றினோம். முதல் முறை, நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. பின்பு அதே MIMING ஐ மூன்று முறை PERFORM பண்ணின போது, அதை விட "பயங்கர" ரெஸ்பான்ஸ் ! இந்த எல்லா MIMING க்கும், நாந்தான் டைரக்டர் ! (நாங்க எல்லாருமே இப்படித்தான் சொல்லிக்குவோம் !)


அப்படியான ஒரு கலைநிகழ்ச்சியில்,  ஒரு கம்பெனிக்கு எல்லா நடிகர்களும் நேர்காணலுக்கு வருவது போன்ற ஒரு காட்சி இடம்பெற்றது. அதற்குரிய வாசனைகளை நான் எழுத, சக படைப்பாளி (!) ஒருவன், வடிவேலு போல  மிமிக்ரி செய்து அரங்கேற்றினோம் ! அந்த வசனம் இங்கே உங்கள் பார்வைக்கு !


*********************************************************************************************************


"ஏங்க , நேத்து இண்டர்வியூக்கு போனீங்களே என்ன ஆச்சு ?"
"அதா ஏம்மா கேக்குற ?"


"ஏன் என்னங்க ஆச்சு ?!"


"மொதல்ல ஒரு ரெண்டு பேருதாம்மா  கேள்வி கேட்டானுங்க. அப்புறம் அதுல ஒருத்தன், திடீர்னு MGR க்கு போன் போட்டு,
'மச்சான், இங்க ஒருத்தன் சிக்கியிருக்கான் , நீ கொஞ்சம் வர முடியுமா' ன்னு கேட்டான் !"


"எது, MGR க்கு போன் போட்டானா ?"

"ஆமாம்மா, எல்லா 'கம்பேனிலையும்' இருப்பானுங்க இல்ல ? இந்த வேலைக்கு ஆளு எடுக்குற பயலுக !"


"ஓஹோ , HR க்கு போன் போட்டாங்கன்னு சொல்லுங்க!"
"அது என்ன எழவோ தெரியலம்மா. அப்புறம் அங்க போனா, அங்க ஒரு மூணு  பேரும்மா, ஒன்ற(1 .5 ) மணிநேரம்,  அவனுங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேள்விம்மா, சும்மா திணறத் திணற கேட்டானுங்க."


"ஹ்ம்ம்...?!""நானும் சரி கேட்டுட்டு போங்கடான்னு விட்டுடேன். நானும் எவ்ளோ நேரந்தான், பதில் தெரிஞ்சா மாதிரியே நடிக்கிறது ?!"


"இவ்ளோ கேள்வி கேட்டானுங்களே, நீங்க ஒன்னும் சொல்லலையா ?!"


"ஹ்ம்ம்ஹூம்..."


"ஏங்க ?!"

"கேள்வி கேட்டிட்டுருக்கும்  போது அதுல ஒருத்தன் சொன்னான்,
'மச்சான், எவ்ளோ கேள்வி கேட்டாலும் தாங்குறான், இவன் ரொம்ப நல்லவன்'னு ஒரு வார்த்த சொல்லிட்டாம்மா !!!"
*********************************************************************************************************
 இவ்வாறாக, ஒருவழியாக வேலை கிடைச்சாச்சு ! அப்புறம், வேறென்ன ?! "இன்கிரிமென்ட்" தானே ?!


அதுக்கும் ஒரு கதை இருக்கு, 
அதை இங்கே CLICK பண்ணி  பாத்துக்குங்க!
சம்பள உயர்வு பெறுவது எப்படி ?!
ஆனா, இங்க வடிவேலுதான் முதலாளி !

புகைப்பட உதவி : ராஜ் டிவி, YOU TUBE, iStream.in

Sunday, September 5, 2010

நான் ஏன் பதிவரானேன் ? பாகம் - 3

நான் ரொம்பவும் நகைச்சுவை உணர்வு உள்ளவன் என்று நான் நானே நினைத்துக்  கொள்வேன் ! 

அது எப்படி என்று கேட்கிறீங்களா ?! 
முதல் வரியை மீண்டும் படிக்கவும் !


அவ்வாறு நான் நினைக்க காரணமாயிருந்த சில தருணங்களில், நான் கூறிய வசனங்களை இங்கே ஒரு தொடராக இடுகையிட்டு வருகிறேன். ஏற்கனவே இரண்டு பாகங்கள் வெளிவந்திருக்கின்றன (!) .
நான் ஏன் பதிவரானேன் ? பாகம் - 1 
நான் ஏன் பதிவரானேன் ? பாகம் - 2

முடிந்தால், அதையும் ஒரு எட்டு பார்த்துட்டு வந்துடுங்களேன் ?!

 *********************************************************************************************************

அலுவலகத்தில், சூடான அரசியல் விவாதங்கள் அடிக்கடி நடக்கும். ஒருநாள், சென்னை ஸ்ரீபெரும்புதூரில் அமையவிருக்கும் (?) ,கிரீன் பீல்ட் விமான நிலையம் பற்றி பேச்சு திரும்பியது. அந்த விமான நிலையத்திற்கு ஏன் அந்த பெயர் வைத்திருக்கிறார்கள் என்று கேட்டார்கள்.

"விவசாய நிலங்களில் அமைய இருப்பதால் அப்படி பேர் வெச்சிருப்பாங்க  ?! " ன்னு சொல்லி  வைத்தேன்.


 *********************************************************************************************************

அலுவலகத்தில் பணிபுரியும் சக பணியாளார் ஒருவர், இடது கையால் எழுத முயற்சித்துக் கொண்டிருந்தார். ஏதோ ஓரளவிற்கு எழுதினாலும், மெதுவாகவே எழுத முடிந்தது அவரால் ! என்னருகே வந்து அவ்வாறு எழுதிக் காண்பித்தார்.

"நான் இதவிட  வேகமா இடது  கையில் எழுதுவேன் " என்றேன்.


"நிஜமாவா ?!"

"ஆமாங்க !" - இது நான்.

20 நொடி இடைவெளி....

"ஆனா யாரும் படிக்க முடியாது !" *********************************************************************************************************

ஒவ்வொரு வாரமும் சனி ஞாயிறு விடுமுறைக்கு தவறாமல் ஊருக்கு சென்று விடும் நண்பனொருவன், இந்த வாரம் போகாமல், சென்னையிலேயே இருந்துவிட்டான். நான் அலைபேசியபோது இதை என்னிடம் சொன்னான்.

"ஏண்டா இந்த வாரம் ஊருக்கு போகல ?!" - நான்.

"சித்தப்பாவும், சித்தியும் கல்யாணத்துக்கு வந்திருந்தாங்க டா" - நண்பன்.

"அவங்களுக்குதான் , ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சே டா ?!" - நான் !

புகைப்பட உதவி - http://iconicon.net

Saturday, August 28, 2010

நிம்மதியான திருமண வாழ்க்கை பெறுவது எப்படி...?

ஹ்ம்ம்.... வாங்க... வாங்க... உங்களைதான் தேடிட்டு இருந்தேன்.
"நிம்மதியான திருமண வாழ்க்கை பெறுவது எப்படி...?" ங்கற தலைப்பை பார்த்தவுடனே, "ஆஹா ! இதைத்தானே இவ்ளோ நாளா தேடிட்டு இருந்தேன் ?!" ன்னு சொல்றீங்களா ?! நீங்க சரியான இடத்திற்குத்தான் வந்திருக்கீங்க!

அ. நீங்கள் திருமணமான ஆணா ?
ஆ. நீங்கள் இன்னும் கொஞ்ச நாட்களில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறீர்களா ?

மேற்கண்ட மூன்று கேள்விகளில் எதாவது ஒன்றிற்கு உங்களுடைய பதில், "ஆம்" என்றால், மேலே படிங்க !

இது எனக்கு ஆங்கிலத்தில் வந்த மின்னஞ்சல்.கொஞ்சம் தமிழ்ப் 'படுத்தி'  இருக்கிறேன். மின்னஞ்சலிய நண்பனுக்கும், இதன் உண்மையான 'ஓனருக்கும்' நன்றி.

பொது நலன் கருதி வெளியிடுவோர் : உங்கள் தேசாந்திரி - பழமை விரும்பி.

##########################################################################################

ஒரு ஊர்ல ஒரு வயசான தம்பதி இருந்தாங்க. அவங்களுக்கு  கல்யாணமாகி 65 வருசமாச்சு! ஆணா இதுவரைக்கும் ரெண்டு பேரும் ஒரு சின்ன சண்ட கூட போட்டதில்ல ! இதப் பார்த்து ஊர்ல இருக்க எல்லாரும் ரொம்ப ஆச்சர்யப்பட்டாங்க !
உடனே, எல்லாருமா சேர்ந்து முடிவு பண்ணி அவங்களுக்கு ஒரு பாராட்டு விழா ஏற்பாடு பண்ணாங்க. (ஆஹா, திரும்பவும் ஒரு பாராட்டு விழாவா ?!)

அந்த விழாவுல நெறைய பத்திரிக்கைக்காரங்களும்  கலந்துகிட்டாங்க. அதுல ஒருத்தர், ஆர்வம் தாங்காம , அந்த புருஷன் கிட்ட கேட்டாரு ,"அது எப்புடிங்க ?! 65  வருசத்துல ஒரு தடவ கூட சண்ட போடாம உங்களால இருக்க முடிஞ்சுது  ?!"அதுக்கு அந்த கிழவர் சொன்னாராம்,

"தம்பி, எங்களுக்கு கல்யாணமான அடுத்த நாளே, நாங்க ஹனிமூனுக்கு மெட்ராஸ் வந்தோம், எல்லா இடத்தையும் சுத்தி பாத்துட்டு கடைசியா மெரீனா பீச்சுக்கு போனோம். அங்க குதிர சவாரி போகணும்னு அவ ஆசப் பட்டா. சரின்னு, அவ ஒரு குதிரையிலயும், நான் ஒரு குதிரையிலயும் சவாரி பண்ண ஆரம்பிச்சோம் !"

"ஹ்ம்ம்..."

"என் குதிரை நல்லாத்தான் இருந்துச்சு. ஆனா , அவ வந்த குதிரை சரியாவே ஓடல. ஒரு முறை, அவள கீழ தள்ளி விட்டுடிச்சு. அவ, குதிரையை பார்த்து ஒச்சரிச்சா... ச்சி எச்சரிச்சா, 'இது உனக்கு முதல் தடவை...'  "

"ஹ்ம்ம்ம்..."

"திரும்பவும் மேல ஏறி, சவாரி பண்ண ஆரம்பிச்சா... ஆனா பாரு , அந்த குதிர ரெண்டாவது தடவையும் அவள கீழே தள்ளிடுச்சி ! கொஞ்சம் கோவமான எம்பொண்டாட்டி, குதிரையைப் பார்த்து சொன்னா, 'இது உனக்கு ரெண்டாவது தடவை !' "

"ஹ்ம்ம்ம்ம்..."

"ஆனா, அடுத்த வாட்டியும் அவளை கீழ தள்ளிடுச்சு அந்த குதிரை. உடனே, பக்கத்துல  இருந்த பெரிய பாறாங்கல்ல தூக்கி, அது மேல போட்டு , அந்த குதிரைய கொன்னே போட்டுட்டா..."

"ஹ்ம்ம்ம்ம்ம்..."

"உடனே நான் கேட்டேன், 'ஏண்டி, உனக்கு கொஞ்சமாவது மூளை இருக்கா ?! பாவம் அந்த வாயில்லா ஜீவனை இப்புடி கல்லத் தூக்கிப் போட்டு கொன்னுட்டியே ?!'"

"ஹ்ம்மம்ம்ம்ம்..."

"அதுக்கு அவ சொன்னா, 'யோவ், இது உனக்கு முதல் தடவை...' ! இப்போ தெரியுதா ?! நான் எப்புடி 65  வருஷம் ஓட்டினேன்னு ?!'"##########################################################################################

சரி நீங்க கல்யாணமானவரா, இல்லையான்னு எப்புடி கண்டு பிடிக்கிறது ?
இடுகையோட ஆரம்பத்துல, மூணு கேள்வி கேட்டிருந்தேன்னு  சொன்னேன்  இல்ல ?!

இல்லை.

 உண்மையிலேயே ரெண்டு கேள்விதான் இருக்கு. இத நீங்க கண்டுக்காம படிச்சிருந்தா, உங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சுங்கறது கன்பார்ம்டு !


 புகைப்பட உதவி : http://acarelessdreamer.typepad.com/ , http://waltonportfolio.com

Saturday, July 31, 2010

உலகத் தமிழ்ப் பதிவர்கள் தினம் - தலைப்பில்லா இடுகைகள் 31 . 07 .2010

ஒரு அறிவிப்பு ...

அண்மைய செய்தி


கடந்த இரண்டு வாரங்களாக  காணாமல் போயிருந்த இந்த பிளாகின் 'மொதலாளி'  திரு.தேசாந்திரி - பழமை விரும்பி , இன்று பின்னூட்டம்போடும் போது கண்டுபிடிக்கப் பட்டார். அவரிடம் கைவசம் சரக்கு இல்லை என்பதால், இவ்வளவு நாட்களாக தலைமறைவாக இருந்ததாக எமது சிறப்பு செய்தியாளரிடம் தெரிவித்தார். மேலும், அவ்வப் போது , சரக்கு கிடைத்தால் மீண்டும் மொக்கை போட வருவார் என்று தெரிகிறது. ஆகவே , பொதுமக்கள் அனைவரும் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம் என்று அதிகாரப் பூர்வமற்ற வட்டாரங்களில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

(டிஸ்கி - எனது வலைதளத்தின் நீண்ட கால (!) வாசக (!!)  நண்பர் ஒருவர், நான் அடிக்கடி பதிவு போடுவதில்லை என்று வருத்தம் தெரிவித்திருந்தார் ! அவருக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த செய்தி. (கோவிச்சுக்காதீங்க அருண் , சும்மா ஜாலிக்காகத்தான் ! )).இந்த இடுகை  மூலம் அந்த வாசக நண்பரை , சக பதிவராகும் படி கேட்டுக் 'கொல்'கிரேன்!
(நல்லா மாட்டிக்கிடீங்கள ?! இப்ப இன்னா பண்ணுவீங்க ?!)

புகைப்பட உதவி - www.bygonebutlins.com

ஒரு சுய தம்பட்டம்...

ஒரு நாள் கூகிளாரிடம் , தமிழ் வார்த்தைகளை சொல்லி தேடச் சொன்ன போதுதான் , வலையுலகம் என்று ஒன்று இருப்பதை எதேர்ச்சையாக அறிந்தேன். பிறகு, இளவஞ்சி,  வால்பையன் ஆகியோரது வலைத்தளங்களை வாசிக்கலானேன். இவர்களைப் பார்த்துதான், நானும் 'எழுத' ஆரம்பிதேன் ! ( அவங்களைச் சொல்லனும் !)


இன்றுடன் நான் வலையுலகிற்கு வந்து ஒருவருடம் ஆகிறது !!!

(யாருங்க அது, ஜூலை 31 - ஐ உலகத்  தமிழ்ப் பதிவர்கள் தினமாக்க வேண்டுமென்று சவுண்டு  விடுறது ?!)கடந்த ஒருவருட காலமாக, மொத்தம் 60 இடுகைகள் இட்டிருக்கிறேன். அவற்றில் ஒரு மீள் இடுகை, இன்னொன்று வெட்டி , ஒட்டியது. சில, எனக்கு வந்த மின்னஞ்சல்களை மொழி பெயர்த்தும், டிங்கரிங் & பட்டி பார்த்து ஒப்பேத்தியது.எல்லாவற்றிற்கும் வந்தும், 'தந்தும்' ஆதரவளித்த நண்பர்களுக்கும்,திரட்டிகள்,சக பதிவர்கள்,வாசக நண்பர்கள் மற்றும்  எனது நன்றிகள்!

ஆர்குட் எனக்கு அறிமுகமான புதிதில், பெரும்பாலான நேரத்தை , அத்தளத்திலேயே கழித்தேன். இப்போது , பிளாக்கர் ! இன்னும் எத்தனை நாள் 'தீவிரமாக' எழுதுவேன் என்று தெரிய வில்லை.

என்னுடைய முதல் இடுகை  - முதல் அஞ்சல் ...(அட போஸ்ட் தாங்க )


ஐம்பதாவது இடுகைன்னு நெனைச்சு நான் போட்ட 49 வது இடுகை

ஒரு விமர்சனம்...

கடந்த வாரம் வெள்ளிக் கிழமை , 'மதராசப்  பட்டினம் ' திரைப்படம் போயிருந்தேன். இந்த படத்திற்கான விளம்பரங்கள் என்னை வெகுவாகக் கவர்ந்திருந்தன. மேலும், இயக்குனர் விஜயின் 'பொய் சொல்லப் போறோம்' திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்றாகும் (அவருடைய 'கிரீடம்' படம் இன்னும் பார்க்க வில்லை. ஆனால், தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பாகும் சில காட்சிகளை பார்த்திருக்கிறேன். நன்றாகத்தான் இருந்தன !). ஆகவே இரண்டு வார காலம்  ஆனாலும், யாரிடமும் கதை கேட்காமல் போய்விடலாம் என்று நினைத்தால், நம்ம பதிவர்கள் பதிவில் முதல் இரண்டு வரிகளிலேயே படத்தின் 'ஒன் லைன்' ஐ சொல்லி விடுகிறார்கள் ! ஒரு வழியாக ஓரளவு கதையை யூகித்துக் கொண்டு , போய் அமர்ந்தேன் !படத்தின் பெயர் போடுவதே அழகாக இருக்கிறது.பழைய மதராசப் பட்டினத்தை காட்டுவார்கள் என்று 'நம்பி' போன நான் கொஞ்சம் ஏமாந்துதான் போய்விட்டேன்.பெரும்பாலான காட்சிகள் 'செட்' தான் என்று அப்பட்டமாகத் தெரிந்தாலும் , இப்படி காட்டுவதற்கே அவர்கள் எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பார்கள் என்று என்றும் தோன்றுகிறது ! விமர்சனம் செய்வதுதான் சுலபம் , இல்லையா ?! படத்தின் இசை , ஜி.வி.பிரகாஷ்குமார். ஏற்கனவே ஆயிரத்தில் ஒருவனில் , தன்னை நிரூபித்தவர் ! பாடல்கள் எல்லாமே நன்றாகத் தான் இருக்கின்றன. பின்னணியிலும் முன்னணி வகிக்கிறார்! அப்புறம் ஒளிப் பதிவு - நீரவ் ஷா ! நல்லாத்தான் இருக்கு !


ஆர்யாவும் மற்ற நடிகர்களும் நன்றாக  நடித்திருக்கிறார்கள். அமரர் , திரு 'ஹனீபா' அவர்களுக்கு இதுதான் கடைசிப் படம். படப் பிடிப்பின் போதே, அவருக்கு உடல்நலம் மிகவும் மோசமாக இருந்ததாகவும், அதையும் பொருட் படுத்தாமல் நடித்துக் கொடுத்திருக்கிறார் என்று, இயக்குனர் விஜய் ஒரு வானொலிப் பேட்டியில் தெரிவித்திருக்கிறார். படத்தின் பல காட்சிகளில், அவர் உடல் நலம் குன்றியது நன்றாகவே தெரிந்தது ! நல்ல கலைஞர் ! கதாநாயகி எமி ஜாக்சன் , ஏற்கனவே ஏதோ படத்தில் பார்த்தது போல இருக்கிறார். நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார்.ஒரு கட்டத்தில் இடைவேளை எப்படா வரும் என்று எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டேன். அவ்வளவு நீளமாக இருப்பது போன்ற ஒரு தோற்றம்.பிற்பாதியின் இறுதியிலும் கொஞ்சம் இழுவையாக இருப்பது போன்று தோன்றியது ! (மன்னியுங்கள்  விஜய் !).
படம் வெளியான வாரத்தில், கூட்டம் இன்றைய சென்னையை போல இருந்தது! பிறகு வந்த வாரங்களில் அப்போதைய சென்னை அளவிற்கு தான் கூட்டமிருந்தது ! ஒட்டு மொத்தமாக , மதராசப் பட்டிணம் - அழகு.

Saturday, July 17, 2010

10 ரூபாயில் ரிமோட் தயாரிப்பது எப்படி... ?

எல்லோர் வீட்டிலும் ரிமோட் வைத்திருப்பீர்கள்.
அது,  டிவி க்கு மட்டும் இருக்கும். அல்லது டிவிடி க்கு மட்டுமோ அல்லது, மியூசிக் பிளேயர்க்கு மட்டுமோ இருக்கும்.மிஞ்சிப் போனால் டிவி , டிவிடி , மியூசிக் பிளேயர் மூன்றுக்கும் சேர்த்து இருக்கும் !


 நாங்கள் எங்கள் வீட்டில் ஒரு புது ரிமோட் கண்டுபிடித்திருக்கிறோம் . இதனை எல்லாவிதமான சுவிட்சுகளுக்கும் பயன் படுத்தலாம்.

அந்த ரிமோட்டின் சிறப்பம்சங்கள் :

1 . விலை பத்து ரூபாய் முதல் இருபது ரூபாய் வரை.

2 . மின்சார செலவு கிடையாது.

3 . பேட்டரி (செல் ) போடத் தேவையில்லை.

4 .யாவரும் எளிதாக உபயோகிக்கலாம்.

5 .சர்வீஸ் செய்ய வேண்டிய அவசியமில்லை.

6 .டிவி, பிரிட்ஜ் , வாஷிங் மெஷின், தண்ணீர் மோட்டார்,பேன், மிக்சி, கிரைண்டர் என சகல வீட்டு உபயோக பொருட்களுக்கும் பயன் படுத்தலாம்.

குறைகள்:

1 . ஒரு மீட்டர் தூரம் வரையில்தான் 'சிக்னல்' கிடைக்கும்.

2 . உங்களுக்கு எத்தனை மீட்டர் தேவையோ அத்தனை 'ரிமோட்' வாங்க வேண்டியிருக்கும்.அல்லது உங்களுக்கு விருப்பப் பட்ட 'சைஸ்' ல வாங்க வேண்டும்.

3 .'உடையாமல்' பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வளவு சாதகங்களும், இத்துனூண்டு பாதகங்களும் நிறைந்த அந்த ரிமோட்டை அறிமுகம்  செய்வதில் நான் மிகுந்த பெருமை அடைகிறேன் !

இந்த ரிமோட்டை எங்க வீட்டுல , அம்மா 'அறிமுகம்' செய்த போது எடுத்த படம் உங்கள் பார்வைக்கு ,
இந்த ரிமோட்டிற்கு , தமிழ்நாடு மற்றும் இந்தியாவெங்கும் விற்பனையாளர்கள் வரவேற்கப் படுகிறார்கள். மேலும் தொடர்புக்கு ,

கெக்றான் மெக்றான் இன்னோவேசன்ஸ் அண்ட் இமேஜிநேசன்ஸ் ,
சென்னை குறுக்குத் தெரு,
தமிழ்நாடு (போஸ்ட்),
இந்தியா.குறிப்பு : இந்த அட்ரசுக்கு  எந்த ஆட்டோவும் வரமுடியாது !

Friday, July 16, 2010

நான் ஏன் பதிவரானேன் ? - பாகம் 2...

'நான் ஏன் பதிவரானேன்' னு ஏற்கனவே ஒரு முறை சொல்லியிருக்கிறேன்...

நான் ஏன் பதிவரானேன் ? - பாகம் 1 ..

நீங்கள் அந்த பாதிப்பிலிருந்து மீள்வதற்கு முன்னதாகவே இன்னொன்று !!


****************************************************************************************
என் அம்மா எப்பொழுதுமே பால் காய்ச்சும் போது கொஞ்சம் நிறையவே ( கொஞ்சமா இல்லை நிறையவா ?! ) தண்ணீர் ஊற்றுவார்.


"ஏம்மா, பால்ல இவ்ளோ தண்ணி கலக்குற ?! "


"ரொம்ப 'திக்'க்கா பால் குடிச்சா ஹார்ட் ப்ராப்ளம் வரும்ப்பா !! "


"ஆனா, ரொம்ப தண்ணியா குடிச்சா , கிட்னி ப்ராப்ளம் வந்துடுமேமா !"


****************************************************************************************

எங்கள் அலுவலகத்தில் வாரமொருமுறை அல்லது இருமுறை மீட்டிங் போட்டு , யாராரு எவ்ளோ ஆணி புடுங்கனும், எப்பக்குள்ள புடுங்கனும்னு டீடைலா சொல்லுவாங்க !
அதுவும் காலை போன உடனே ! ஆரம்பிச்சா ஒரு ஒன்றை மணி நேரம் தாங்கும் !! ஒரு நாள், காலை 'பேருண்டி' ( கொஞ்சமா சாப்பிடுறவங்களுக்குதான் 'சிற்றுண்டி'  !) சாப்பிடாமலே போய் விட்டேன் .அந்த நேரம் பார்த்து ,

"சரி மீட்டிங் வெச்சுக்கலாமா ?!" , இது குழு தலைவர் ( TEAM LEAD ஆமாம் !!)

"மொதல்ல ஈட்டிங் முடிச்சுக்கலாம் !" - வேற யாரு , அடியேன் தான் !

****************************************************************************************

அலுவலக நண்பர்கள் , ட்ரிங்க்ஸ் அடிப்பது பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

"என்னய்யா , இன்னிக்கு சரக்கா ?!"

"ஆமா ! அந்த பிளான்ல தான் இருக்கேன் !"

"உனக்கு பரவாயில்ல , பேட்சுலர் ரூம்ல இருக்க . நான் சரக்கடிக்குறது தெரிஞ்சா, வீடு ரெண்டாயிடும் ! "

"சரக்கடிச்சா , வீடு மட்டுமில்ல , எல்லாமே 'ரெண்டா'யிடும் !!"

 ****************************************************************************************
சின்ன வயசுல ,  'அவரு FOREIGN ல இருந்து வந்திருக்காரு' , 'இவரு அடுத்த வாரம் FOREIGN போகப் போறாரு' ன்னு  மத்தவங்க பேசுறதக் கேட்டிருக்கேன் ! அப்பவெல்லாம் நான் நெனச்சுப்பேன் ,

"அமெரிக்கா , ஜப்பான் மாதிரி 'FOREIGN ' ங்கற பேர்ல   ஒரு வெளி நாடு இருக்கும் போல !"

ஆமா, அந்த FOREIGN எங்க இருக்குங்க ?!   ****************************************************************************************
 டிஸ்கி : இந்த இடுகைக்கு போட வேண்டிய டிஸ்கி ஏற்கனவே பாகம் 1 க்கு போட்டதைப் போலவே இருக்குமென்பதால், அதைப் படித்துவிடுமாறு கேட்டுக் 'கொல்'கிரேன் !

Saturday, July 3, 2010

பொறியியல் கலந்தாய்வு - ஒரு பார்வை ...

இது அட்மிஷன் காலம் ! 12  ஆம் வகுப்பு முடித்து விட்டு கல்லூரி வாழ்க்கைக்கு தயாராகும் மாணவர்களுக்கும் , அவர்களது பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கு ஏதோ என்னால் முடிந்தவரை , எனக்கு தெரிந்த தகவல்களை தெரியப்படுத்தலாம் என்ற முயற்சியில் இந்த இடுகை!12 ஆம்  வகுப்பு முடிந்தவுடனேயே, தங்கள் கல்லூரிக்கனவுகளை காண ஆரம்பித்து விடுகின்றனர் மாணவர்கள் ! தனக்கு என்ன மதிப்பெண் வரும் என்பதை, எல்லா மாணவர்களும் ஓரளவிற்கு கணித்திருப்பார்கள் ! அதனால், அவர்களே ஒரு சில கல்லூரிகளை தேர்ந்து எடுத்து ஒரு 'லிஸ்ட்' தயார் செய்து வைத்திருப்பார்கள் !

மேலும், கண்டிப்பாக பொறியியல் தான் படிக்க வேண்டுமென்று மாணவர்களை காட்டாயப் படுத்தாதீர்கள் ! அவர்கள் என்ன விருப்பப் படுகிறார்கள் என்று தெரிந்து கொண்டு, பிறகு ஆலோசித்து ஒரு முடிவுக்கு வாருங்கள் . ( எதையும் 'பிளான்' பண்ணி பண்ணனும் !)  

 அப்படி உங்கள் 'பிளான்' பொறியியல் தான் என்றால்,  


சில டிப்ஸ் :


1 . உங்கள் கலந்தாய்வு நாளுக்கு முந்திய நாளே, கலந்தாய்வு நடக்கும் ஊருக்கு (சென்னை )சென்று விடுவது நலம் .

2 . எங்கே தங்குவது என்று யோசிக்கிறீர்களா ? கவலையை விடுங்கள் ! எனக்கு தெரிந்து , தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு இரண்டு குடும்பத்திற்கும் குறைந்தது ஒருவர் சென்னையில் தங்கி இருக்கிறார் ! அப்படியே போன் பண்ணி , " தம்பி , மெட்ராசுக்கு நம்ம பய கவுன்சிலிங்குக்கு வரப் போறோம் . நீ ரூம்ல , இருந்தா, அப்படியே உன்னையும் பாத்துட்டு போலாம்னு இருக்கோம் !" என்று சொல்லி வையுங்கள் ! படிப்பு விஷயமாதலால், அவரும் OK சொல்லி விடுவார் , முழு மனதுடன் ! அப்படி இல்லா விட்டாலும், நிறைய MANSION கள் இருக்கின்றன.

3 . நீங்கள் தங்கப் போகும் அறை , கலந்தாய்வு நடக்கும் இடத்தில் இருந்து ஒரு 10 கிலோ மீட்டருக்குள் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள் ! இல்லையென்றால், ஒரு 4 மணி மேரம் முன்னதாக கிளம்பி விடுங்கள் !4 .நீங்கள் , அண்ணா பல்கலைக் கழக பேருந்து நிறுத்தத்தில் இறங்கியவுடனேயே , நிறைய நோட்டீஸ்கள் கொடுப்பார்கள், எல்லாவற்றையும் வாங்கிக் கொள்ளுங்கள் ! எப்படியும் அரை கிலோ தேறும் ! வேறொன்றுக்கும் உபயோகப் படாது !

இந்தியாவில் உள்ள மொத்த பொறியியல் கல்லூரிகளில் கிட்டத்தட்ட 35 % கல்லூரிகள் தமிழ் நாட்டில் இருக்கின்றன !ஆனால், எல்லா கல்லூரிகளிலும் தரமான கல்விக்கு உத்திரவாதம் இல்லை! தமிழ்நாட்டில்  மொத்தமுள்ள 400  (தோராயமாக ) பொறியியல் கல்லூரிகளில் , 150 க்கும் குறைவான கல்லூரிகளில் மட்டுமே ஓரளவிற்கு நல்ல கல்வி கொடுக்கப் படுகின்றது ! எனவே நீங்கள் தயாரித்திருக்கும் லிஸ்டில் உள்ள கல்லூரிகள் , இந்த 150 க்குள்  இருத்தல் நலம் !

4 . எல்லா சான்றிதழ்களையும் , ஒன்றுக்கு இரண்டு நகல் எடுத்து  வைத்துக் கொள்ளுங்கள்.

5 . துண்டு பிரசுரங்களிலோ , அல்லது கல்லூரியின் இணைய தளத்திலோ வெளியிடப் பட்டிருக்கும் கட்டிட படங்களைப் பார்த்தோ , அவர்களின் 'SALIENT FEATURES ' என்று சொல்லப் பட்டிருக்கும் விஷயங்களைப் பார்த்தோ மட்டும் , எந்த கல்லூரியையும் தேர்வு செய்யாதீர்கள் ! அந்த கட்டிடங்கள் , நீங்கள் கட்டப் போகும் பணத்தில் கூட கட்டப் படலாம் !

6 . கண்டிப்பாக, CAMPUS INTERVIEW இருக்கும் கல்லூரியைத்தான் தேர்வு செய்ய வேண்டுமென்று அடம் பிடிக்காதீர்கள் ! எல்லோருக்கும் அது சாத்தியமில்லை ! 

(ஒரு மாணவன் , 60 % மதிப்பெண்களுடன் , ஓரளவிற்கு  தடையின்றி ஆங்கிலம் பேசி, சராசரியான தொழில்நுட்ப அறிவுடன் இருந்தாலே, கொஞ்சம்  தேடுதலும் இருந்தால் CAMPUS INTERVIEW இல்லையென்றாலும் , வெளியில் வந்து ஏதோ ஒரு வேலையில் சேரலாம் ! ஆனால் ,எடுத்த உடனேயே 30 ,000 ரூபாய் சம்பளத்தில், MNC யில் வேலை என்று எதிர்பார்க்க முடியாது ! அதற்கு ஓரிரு வருடங்கள் ஆகும் ! அதனால் என்ன ?! )

7 . கலந்தாய்வுக்காக நீங்கள் காத்திருக்கும் அறையில், ஒரு பெரிய திரையில் கல்லூரிகளின் காலி இட விவரங்கள் படமிட்டுக் காட்டப் படும். எனவே, நீங்கள் கலந்தாய்வுக்காக உள்ளே செல்லும் போது, மூன்று CHIOICE களை ச்சூஸ் பண்ண இது உதவியாக இருக்கும் !

8 . பெரும்பாலும் , நீங்கள் முதலில் தேர்வு செய்த கல்லூரியில், தேர்வு செய்த இடம் கிடைக்கும் .( இது கலந்தாய்வின் முதல் 10 நாட்களுக்கு  பொருந்தாது !) . இல்லாத பட்சத்தில், இரண்டாவது !


9 .IT மற்றும் ECE துறைகளில் தான், தன் மகன்/மகள் படிக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தாதீர்கள் ! CORE BRANCHES என்று அழைக்கப்படும்  சிவில்,ஆட்டோ மொபைல்,மெக்கானிக்கல் போன்ற துறைகள் , CIRCUIT BRANCHES என்று அழைக்கப் படும் IT ,ECE ,EEE ,CSE போன்ற துறைகள், இரண்டுமே சம அளவிலான வேலை வாய்ப்பினைத் தரக் கூடியவை !10 . முடிந்த வரை, மாணவர்களை விடுதியில் சேர்ந்து படிக்க அனுமதியுங்கள். அங்கு அவர்கள் பொறியியலுடன் சேர்த்து வாழ்க்கையையும் கற்றுக் கொள்வார்கள் ! எதாவது ஒரு விளையாட்டில் , கல்லூரியின் சார்பிலோ அல்லது துறையின் சார்பிலோ பங்கு பெற ஊக்கப் படுத்துங்கள் ! படிப்பு மட்டுமே வாழ்க்கை அல்ல!

11 . தமிழ் வழி பொறியியல் இந்த ஆண்டு முதல் அறிமுகப் படுத்தப் பட இருக்கிறது ! அதற்கான எதிர்கால வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்று தெரிய வில்லை !

மேலும் விவரங்களுக்கு - அண்ணா பலகலைக் கழக இணையதளம் - TNEA 2010 


இனிமையான கலந்தாய்வு அனுபவத்திற்கு வாழ்த்துக்கள் !
Blog எழுதுறவன் மனுசன்னா ...
Follow பண்றவன்
பெரியமனுசன் ...

பெரிய மனுசங்க....

நான் எனது பள்ளி நாட்களின் இறுதியிலும், கல்லூரி நாட்களிலும் எழுத வேண்டுமென்று நினைத்த நாட்குறிப்பின் வெளிப்பாடுதான் இந்த வலை தளம்.சினிமா, அரசியல், கலை, விளையாட்டு தொடர்பான விஷயங்களை பகிர்ந்து கொள்ள எனக்கான இடம் (உங்களுக்குமானது தான் !).


(இன்னும் எத்தன பேர்டா கெளம்பி இருக்கீங்க ?!)

அது போன மாசம்...

2011 சட்டசபைத் தேர்தலில் கூட்டணி எப்படி இருக்கும் ?

வ - த - ந - மீ - வ = வந்தமைக்கும் தந்தமைக்கும் நன்றி , மீண்டும் வருக !

தேசாந்திரி , அங்க பாரு...

தேசாந்திரி ,  அங்க பாரு...

வந்தார்கள் சென்றார்கள்...


நம்ம நிலைமையை பாருங்க!

Contact Us

Name

Email *

Message *