Tuesday, March 30, 2010

அங்காடித் தெரு...

கடந்த சனிக் கிழமை , நானும் நண்பனும் திருவான்மியூர் ஜெயந்தி தியேட்டரில் "அங்காடித் தெரு " திரைப்படம் பார்த்தோம். எங்கே டிக்கெட் கிடைக்காமல் போய் விடுமோ என்று 2 .30 மணி ஷோவிற்கு , 2  மணிக்கே டிக்கெட் கவுண்ட்டரில் ஆஜர் ! கிட்டத் தட்ட 10 வது ஆளாக நின்று கொண்டிருந்தேன். கூட்டம் குறைவு தான்! 25 ரூபாய் டிக்கெட்.வாங்கிக் கொண்டு உள்ளே போய் FAN க்கு கீழே இடம் போட்டு உக்காந்தாச்சு !வசந்த பாலனுடைய  'வெயில்' திரைப்படம் எனக்கு பிடித்தமான திரைப் படங்களில் ஒன்று ! ஆனால், அந்த படத்தை கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது (?!) , CD யில் பார்த்தது ! அது அறியாத வயசு ! இப்போதெல்லாம் திரைப்படங்களை  ( திருட்டு ) CD யில் பார்ப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். எனவே ஒரு வித ஆர்வம்  கலந்த எதிர்பார்ப்புடன் தான் படத்திற்கு சென்றேன்.படத்திற்கு அவ்வளவாக விளம்பரம் செய்யப் படவில்லை என்பதால் கூட கூட்டம் குறைவாக இருந்திருக்கக் கூடும் !

படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே இது ஒரு 'எதார்த்த' சினிமா என்று உணர்த்தி விடுகிறார்கள் . " அது என்னடா ?! ஆ, ஊன்னா எதார்த்த சினிமா , எதார்த்த சினிமா - ன்னு சொல்றீங்க ?!" ன்னு கேட்கிறீர்களா ? ஒண்ணுமில்லைங்க , படத்தில் வரும் காட்சிகள் நிஜத்திலும் நடக்க சாத்தியம் இருந்தால் , அதுதான் எதார்த்த சினிமா ! படத்தின் கதாபாத்திரங்களில் ,உங்களையும் , உங்களை சார்ந்தவர்களையும் எளிதாக பொருத்திப் பார்க்க முடிகிறதென்றால் அதுதான்  எதார்த்த சினிமா !!நமக்கு வெறும் செய்திகளாகத் தெரியும் நிகழ்வுகள், அது சார்ந்தவர்களின் வாழ்க்கையை எவ்வளவு பாதிக்கிறது என்பதை அழகாக , மிக அழகாக சொல்லியிருக்கிறார் வசந்த பாலன். கதாநாயகனாக அறிமுகம் ஆகியிருக்கும் மகேஷ் , சரியான தேர்வு. அஞ்சலியும் கூட ! மகேஷின் நண்பன் - மாரிமுத்து வாக நடித்திருப்பவரும் சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். துணிக் கடையில் SUPERVISOR ஆக வரும் இயக்குனர் A .வெங்கடேஷ் அந்த பாத்திரத்திற்கு அவ்வளவு பொருத்தம் ! வாழ்த்துக்கள் !! இது போன்று , கதாபாதிரங்களுக்கு ஏற்ற நடிகர்களை தேர்வு செய்வதிலேயே வெற்றிக்கு பலமான அடித்தளம் போட்டிருக்கிறார் வசந்த பாலன் .படம் நெடுக , சின்ன சின்ன கதாபாத்திரங்கள் வந்து ஆச்சர்யமூடுகின்றன !


இசையமைப்பாளர்கள் இருவர் - G .V பிரகாஷ் குமார் மற்றும் விஜய் ஆண்டனி. "அவள்அப்படி ஒன்றும் அழகில்லை " தவிர மற்ற பாடல்கள் எதுவும் படம் பார்ப்பதற்கு  முன்பு தெரியாது . படம் பார்த்த பிறகும் கூட. ஆனால் , எந்த பாடலும் தேவை இல்லாத இடைச்செருகலாக தெரிய வில்லை! ஜெய மோகனின் வசனங்களும் படத்திற்கு ஒரு பலம் தான் ! ஒளிப்பதிவாளரும் வசந்த பாலனுக்கு கை கொடுக்கிறார். கலை இயக்குனருக்கும் பாராட்டுகள் !!படம் பார்ப்பதற்கு முன்பு நண்பனின் கருத்தை கேட்ட போது, "மெகா சீரியல் மாதிரி இருக்குடா " ன்னு சொன்னான் ! எனக்கொன்றும் அப்படித் தோன்ற வில்லை.எனக்கு மெகா சீரியல்கள் பிடிப்பதில்லை , நான் பார்ப்பதுமில்லை !! எனக்கு பிடித்தமான படங்களின் எண்ணிக்கையில் , இன்னுமொன்றை கூட்டியிருக்கிறார் வசந்த பாலன்.

அங்காடித் தெரு - தி.நகர் ரங்கநாதன் தெரு !!

மேலும் விவரங்களுக்கு ,

அங்காடித் தெரு - திரைபடத்தின் இணையதளம் CLICK க்குங்க

Sunday, March 21, 2010

TPL - தமிழ்நாடு போலிங் லீக் - TAMIL NADU POLLING LEAUGE ...

இப்போது இந்தியாவையே ஆட்டிப் படைக்கும் IPL நடந்து கொண்டிருக்கிறது.இதே போல் தமிழ் நாட்டையே ஆட்டிப் படைக்கும் பென்னாகரம் இடைத் தேர்தலுக்கான 'பணிகள்' நடந்து கொண்டிருக்கிறது. இதைப் போன்ற தேர்தல்களை , TPL - TAMILNADU POLLING LEAGUE என்று அழைத்தால் என்ன என்று எனக்கு தோன்றியதின் விளைவு தான் இந்த பதிவு...IPL க்கும் TPL க்கும் என்னென்ன வித்தியாசங்கள் இருக்கும் ?

1 .IPL - வருடத்திற்கு ஒரு முறை தான் நடக்கும்...
TPL - ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் ( சில சமயம் அப்பப்ப கூட ! ).

2 . IPL  - ஸ்பான்சர் - DLF (இப்போதைக்கு )
TPL - ஸ்பான்சர் - தேர்தல் ஆணையம்  ( எப்பவுமே .. !)


3 . IPL - கூட்டணி கிடையாது.
TPL - கூட்டணி உண்டு ( கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது !!! )

4 .IPL  - விளையாடுபவர்கள் ஏலம் எடுக்கப் படுவார்கள் .
TPL - பார்வையாளர்கள் (வாக்காளர்கள் (!)) ஏலம் எடுக்கப் படுவார்கள் .5 . IPL - ஏலத்தொகை கோடிகளில் இருக்கும் .
TPL - ஏலத்தொகை ஆயிரங்களில் இருக்கும் .

6 .IPL - ஒரு  வீரரை ஒரு அணிதான் ஏலம் எடுப்பார்கள்.
TPL - ஒரு வாக்காளரை  பலர் ஏலம் எடுப்பார்கள் . ஏலத்தொகை எதிரணியினரை பொறுத்து அதிகரிக்கும்.

7 .IPL -  நடுவர் சொல்வதை வீரர்கள் கேட்பாளர்கள்.
TPL - கட்சியினர் சொல்வதை நடுவர்கள் கேட்க வேண்டும் !

8 . IPL - 20 ஓவர்கள் .
TPL  - 234 தொகுதிகள் .

9 . IPL - மொத்தம் 8  அணிகள்.
TPL - ரெண்டே ரெண்டு முக்கிய அணிகள். எப்போதாவது மூன்றாவது அணி வரும் ! போகும் !!10 . IPL - ஒவ்வொரு அணிக்கும் ஒரு கேப்டன்.
TPL - மொத்தத்துக்கும் ஒரே கேப்டன் !!11 .IPL -  இறுதியில் ஏதாவது ஒரு அணி ஜெயிக்கும் .
TPL - இறுதியில் மக்கள் அணி மட்டுமே தோற்கும் !!!

 


 நான் ஏதாவது வித்தியாசங்களை தவறி விட்டிருந்தால் , பின்னூட்டத்தில் சொல்லவும்.
சரியான வித்தியாசங்களை சொல்வோருக்கு , பெண்ணாகரத்தில் ஒரு மாதம் தங்குவதற்கு வீடு வாடகைக்கு எடுத்துத்தரப்படும் !!

Saturday, March 13, 2010

உண்மையான ஹீரோக்கள்...

எனக்கு "உண்மையான ஹீரோக்கள் " என்ற தலைப்பில் ,ஆங்கிலத்தில் வந்த மின்னஞ்சல் இது . ஏதோ என்னால் முடிந்த அளவு தமிழில் மொழி மாற்றம் செய்து பதிவிடுகிறேன்.2008 இல்  Sichuan இல் (சீன எல்லைக்கு உட்பட்டது என்று நினைக்கிறேன் ) ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது எடுக்கப் பட்ட புகைப்படங்கள் இவை.பார்த்த மாத்திரத்தில் , நம்மை பாதிக்கக் கூடியவை.

****************************************************************************************************

300 அணுகுண்டுகளை ஒரே நேரத்தில் வெடிக்கசெய்தால் எவ்வளவு சேதம் உண்டாகுமோ , அதை ஒத்தது இந்த நிலநடுக்கம். கிட்டத்தட்ட 30 ,000 உயிர்களை பலிகொண்டது இந்த பூகம்பம்.


 எல்லா பெரு நகரங்களும் தரை மட்டமாகின.மலைகள் மடுக்களாகின.


 லட்சக் கணக்கான மக்கள் தங்கள் அன்பிற்குரியவர்களையும், வீடுகளையும்,மற்றுமனைத்தையும்  இழந்தனர்.ஆனால், அரசாங்கத்தின் மீதோ , அதிகாரிகள் மீதோ குற்றம் சொல்வதை விடுத்து மக்களுக்கு மக்களே உதவி செய்ய ஆரம்பித்தனர். பூகம்பம் நிகழ்ந்துசில மணிநேரங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக இரத்ததானம் செய்ய வரிசை காட்டி நின்றனர்.இந்தவரிசை பல கிலோ மீட்டர் தூரம் நீண்டது.DUJIANYANG என்ற நகர், போக்குவரத்து நெரிசலால் சிக்கித் தவித்தது.காரணம் , பூகம்பமல்ல.விரும்பி சேவை செய்ய வந்த VOLUNTEER -களால்தான்.1000 க்கும் மேற்பட்ட டாக்சி டிரைவர்கள் தலைமையில் கூட்டம் நகரை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தது.மருத்துவப் பணியாளர்கள் அசாதாராணமான சூழ்நிலையிலும் மிகச்சிறந்த சேவை அளித்தனர்.PARKING ஏரியாவில் பல கர்ப்பிணிகள் குழந்தைகளை பெற்றெடுத்தனர்.


 WAN JIABAO , 66 வயதான சீனப் பிரதம மந்திரி, சம்பவம் நடந்த 30 நிமிடங்களில் அந்த இடத்திற்கு வந்தார்.மீட்புக் குழுவிற்கு தலைமையேற்று முன் நின்று மீட்புப் பணிகளை மேற்கொண்டார்.1000 க்கும் மேற்பட்ட ,  ராணுவத்தை சேர்ந்த பாராசூட் வீரர்கள் ,  கனத்த மழை , பலத்த காற்று , அடர்ந்த மேகம் இவை எவற்றையும் பொருட்படுத்தாமல், சுமார் 20,000 அடி உயரத்தில் இருந்து குதித்தனர் , நாம் குதிக்கப் போகும் இடத்தில் யாரவது இருப்பார்களா என்றெல்லாம் யோசிக்கவில்லை ! முதலில் குதித்த சீனியர் COLONEL, LIZHENBO விற்கு வயது 51 .
இராணுவத்தினரும் , மீட்புக் குழுவினரும் விடாது மீட்புப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். மீட்பு வாகனங்கள் செல்ல முடியாத இடங்களுக்கு , டன் கணக்கில் எடை  இருக்கும் சாதனங்களை தங்கள் கைகளாலேயே சுமந்து சென்றனர்.


நிவாரண தொகை கொடுக்க, மக்கள் கூட்டம் கூட்டமாய் காத்திருந்தனர் . செல்வந்தர்கள் கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்தனர். ஆனால் , கீழுள்ள படத்தில் வலதுபுறம் இருக்கும் XU CHAO என்ற 60 வயது காரர் கொடுத்த தொகை மிகவும் பெரியது.பரம ஏழையான XU CHAO வீடில்லாதவர்.இந்த பூகம்பத்திற்கு முன்பிருந்தே ! காலையில் 5 YUAN களை கொடுத்த இவர் , மதியத்திற்குள் மீண்டும் 100 YUAN களை கொடுத்தார். பூகம்பத்தில் சிக்கிய மக்கள் தன்னை விட மிகவும் பரிதாபத்திற்குரியவர்கள் என்றார் XU CHAO .SONG XINYING என்கிற 3 வயது குழந்தை , இடிபாடுகளில் இருந்து 2 நாட்களுக்கு பிறகு மீட்கப் பட்டது.தன் கால்களை ஒன்றை இழந்து விட்டிருந்தாள் SONG XINYING . இந்த விஷயம் அவளின் பெற்றோர்களுக்கு தெரியாது ! பூகம்பத்தின் போது , தங்களின் கைகளை இவளுக்கு மேலாக கூடாரம் போல் வைத்து இவளை பாதுகாத்தனர். ஆனால் அவர்கள் சடலமாகதான் மீட்கப் பட்டனர் !


ஒரு 5 வயது சிறுவன் 24 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப் படுகிறான்.அவனது இடது கை உடைந்திருக்கிறது.மீட்கப்பட்டவுடன் , மீட்புக் குழுவினர்களை பார்த்து நன்றியுடன் புன்னகைக்கிறான் ! அனைவரையும் அழ வைத்த சிரிப்பு அது !! நாம் மற்றவர்கள் அழுவதை பார்த்து சிரித்திருக்கிறோம் இல்லையா ?! இவன் சிரிப்பதை அழுகையோடு பார்க்கிறார்கள் இராணுவத்தினர் !!


ZHANG JIWANG என்ற 11 வயது சிறுவன் , தனது 3 வயது தங்கையான ZHANG HAN ஐ  தூக்கிக் கொண்டு , 12 மணி நேரம் நடந்து பாதுகாப்பான இடத்திற்கு (??) சென்று சேர்த்தான்.


YUVAN WENTIN என்கிற 26 வயது பள்ளி ஆசிரியை , தானிருந்த 3 வது மாடியிலிருந்து , தரை தளத்திற்கு செல்ல தன் மாணவர்களுக்கு உதவிக்கொண்டிருந்தார்.பெரும்பாலான மாணவர்கள் இவ்வாறு மீட்கப் பட்டனர். மீதமிருந்த கொஞ்ச மாணவர்களுக்கு உதவும் போது, பள்ளிக் கட்டிடம் அவள் மீது சரிந்தது ! தன் வாழ்வின் இறுதி நிமிடங்கள் அதுதான் என்று தெரிந்ததும், தன் உடலையே, ஒரு கேடயமாக பயன்படுத்தி , சில மாணவர்களின் மீது கான்க்ரீட் விழாமலிருக்க முயற்சித்திருக்கிறார் !


கீழுள்ள படத்தில் புன்னகைக்கும் இந்த சிறுமி , ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவி. தன்னை கட்டிடக் குப்பைகளில் இருந்து மீட்டெடுத்த மீட்புக் குழுவினரிடம் , புன்னகையுடன் கூறுகிறாள் - "தைரியமாக இருங்கள் " !!ஒரு பச்சிளம் குழந்தை, 24 மணி நேரம் கழித்து எந்த ஒரு சிரைப்புமில்லாமல் மீட்கப் பட்டது.பிறந்து , 3 முதல் 4  மாதங்கள் மட்டுமே ஆகியிருக்கக் கூடும் ! இடிபாடுகளுக்கு இடையில்  சிக்கியிருந்த போதும், முட்டியிட்டு , தன் தலை குனித்து இந்த குழந்தைக்கு பாலூட்டியிருக்கிறார்  இதன் தாய் ! மீட்புக் குழுவை சேர்ந்த ஒருவர், இந்த குழந்தையிடம் இருந்து ஒரு செல் போனை எடுத்திருக்கிறார் . அதன் முகப்பில் ஒரு TEXT மெசேஜ் இருந்தது - "DEAR CHILD , IF YOU SURVIVE - PLEASE REMEMBER - MOM LOVES YOU FOREVER " !!****************************************************************************************************
நீங்களே சொல்லுங்கள்.இவர்கள் ஹீரோக்கள் தானே ?!

 இதை மெயிலில் அனுப்பிய நண்பருக்கு நன்றி.


இந்த பூகம்பம் பற்றிய தகவல்களுக்கு இங்கே CLICK கவும்.Sunday, March 7, 2010

விண்ணைத் தாண்டி வருவாயா...

இன்று மதியம் , திருவான்மியூர் தியாகராஜாவில் , " விண்ணைத் தாண்டி வருவாயா" திரைப்படம் பார்த்தேன். வேறு யாரும், "கம்பேனிக்கு" வரவில்லை. நான் மட்டுமே! நல்ல கூட்டம். என்னுடைய திரைப்பட வரலா....ற்றில் அதிக அளவு இளம்பெண்கள் கூட்டம் பார்த்தது, இந்த திரைப்படத்தில் தான். 45 ரூபாய் டிக்கெட். ஒருவாரம் ஆகியும், ஞாயிற்றுக் கிழமை மதிய ஷோவிற்கு இந்த அளவு கூட்டம் வருகிறதென்றால் , படம் உண்மையிலேயே HIT தான், ஏனென்றால்  இப்போதெல்லாம், 50 நாட்கள் படம் ஓடுவதே , ஒரு வரலாறுதான்.
படத்திற்கு, சிம்பு - த்ரிஷா ஜோடி , கவுதம் வாசுதேவ மேனன் இயக்கம் என்பதையெல்லாம் "தாண்டி" , A .R ரஹ்மான் இசை என்பதே பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியிருந்தது. அவரின் பெயரை திரையில் காணும் போதே , திரையரங்கில் விசில் சத்தங்களும், கைத்தட்டல்களும் "விண்ணை"ப் பிளக்கின்றன ! ரஹ்மான் ரஹ்மான் தான். சிம்புவை இவ்வளவு SMART ஆக பார்க்கும் போது , நன்றாகத்தான் இருக்கிறார். உண்மையில் , இது யாருமே எதிர்பார்க்காத COMBINATION தான்.ஆனால், நன்றாக WORKOUT ஆகியிருக்கிறது. EXPESSIONS  இல் ஆயிரம் வித்தியாசங்கள் காட்டியிருக்கிறார் சிம்பு. இந்த மாதிரி படங்கள் மேலும் பண்ணுங்க பாஸ் ! நளினி ஸ்ரீராமின் உடைகளில் த்ரிஷாவின் அழகு கூடியிருக்கிறது - வயது குறைந்திருக்கிறது.நாம், தினசரி வாழ்வில் எதிர்கொள்ளும் இரண்டு கதாபாத்திரங்கள் தான், படத்தின் HERO - HEROINE (ஸ்பெல்லிங் கரெக்டா ?!) . ஆரம்பத்தில், ஒரு வித்தியாசமான காதல் கதை - மறுபடியும் என்று விளம்பரப் படுத்தினார்கள்.அது நிஜம்தான்.கவுதம்  வாசுதேவ மேனன் , "நாங்களும் LOVE SUBJECT படம் எடுப்போம்ல ?! " என்று சவால் விட்டு சாதித்திருக்கிறார்.வாழ்த்துக்கள் கவுதம் வாசுதேவ மேனன் ! யாருப்பா அந்த கணேஷ் ?! எல்லாருக்கும் , இதுமாதிரி ஒரு "சீனியர்" FRIEND  இருந்தால் நல்லாயிருக்குமே என்று தோன்ற வைக்கிறார் ! உண்மையிலேயே , அவரா 'காக்க காக்க ' கேமரா மேன் ?! நான் என்னவோ , R .D .ராஜ சேகர் - னு தானே நெனைசுக்கிடிருந்தேன் ?!மனோஜ் பரமஹம்சா வின் ஒளிப்பதிவு மிகவும் அருமை.இது அவருக்கு முதல் படம் (தமிழில்  ?) என்று நினைக்கிறேன்.படம் முழுவதும், ரஹ்மானின் ஆதிக்கம் மேலோங்கியே இருக்கிறது. அதுதான் ரஹ்மான் ! 'ஏன் இதயம் ' என்று ஆரம்பிக்கும் பாடல் ஒன்றே போதும் - படம்  முடியும் வரை ரீங்காரமிட்டுக் கொண்டேயிருக்கிறது நம் செவிகளில் ! வசனங்களில் ஆங்கிலக் கலப்பு அதிகம்தான் என்றாலும் ,தவிர்க்க முடியாததாகிறது .

விண்ணைத் தாண்டி வருவாயா - நல்லாயிருக்கு சார்!!

Saturday, March 6, 2010

தீராத விளையாட்டுப் பிள்ளை

போன வாரம் ஞாயிற்றுக் கிழமை, நானும் , நண்பனும் திருவான்மியூர் ஜெயந்தியில் "தீராத விளையாட்டுப் பிள்ளை " திரைப் படம் பார்த்தோம். முதலில், " விண்ணைத் தாண்டி வருவாயா " பார்ப்பதாகத்தான் திட்டம். அங்கு, TICKET RATE மிக அதிகமாகவும் , கூட்டம் மிக மிக அதிகமாகவும் இருந்ததால், சுமூகமாகப் போய் விடலாமென்று தீ.வி.பி போனோம். நம்ம நேரம், அங்கயும் கூட்டம். இருந்தாலும் , டிக்கெட் கிடைத்தது ! ஆனால், டிக்கெட் விலை ,இனிமேல் 20  இல்லை . 25  ரூபாதான் போல !


SUN  TV   உதவியால், படத்திற்கு மிக நல்ல விளம்பரம் ஏற்படுத்தப் பட்டிருந்தது.பாடல்களும் , SURYAN FM இல் போட்டு போட்டு ஓரளவிற்கு நன்றாக இருப்பதாகத் தெரிந்தது. விஷாலுக்கு , "சத்யம் "," தோரணை " படு தோல்விகளுக்குப்  பிறகு மிகவும் அவசியமான வெற்றி இது!

ஒரு NEAT ஆன PLAY BOY கதையில், விஷால் , கதாநாயகன் பாத்திரத்தில் நன்றாகவே பொருந்திக் கொள்கிறார்.ஆனால், அவ்வப் போது விஜய் - யின் மேனரிசங்களை ஞாபகப் 'படுத்துகிறார்'.படத்தில் மூன்று கதாநாயகிகள் . அதில், நீது சந்திரா மட்டுமே நமக்கு பரிச்சயமான  முகம் (?!) . (உபயம் - யாவரும் நலம் ) மற்ற இருவரில் , ' ப்ரியா ' வாக நடித்திருப்பவர் உண்மையாகவே நன்றாக நடித்திருக்கிறார்.விஷாலின் நண்பர்களாக வரும் சந்தானமும் , சத்யனும் பேசும் வசனங்களுக்கு , அவ்வப் போது திரை அரங்கில் சிரிப்பொலி கேட்கிறது. விஷால் மட்டுமே படத்திற்கு போதாது என்ற நிதர்சனமறிந்து , சும்மா ஒப்புக்கு ஒரு கதாபாத்திரத்தை நுழைத்து , அதில் பிரகாஷ் ராஜை நடிக்க வைத்திருக்கிறார்கள்.அவரும் , தன் கடைமையை செவ்வனே செய்திருக்கிறார்.சென்னையை அழகாகக் காட்டியிருக்கிறார்  ஒளிப்பதிவாளர் அரவிந்த்கிருஷ்ணா.
அறிமுக இயக்குனர் திரு ,  முதல் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார் - அதில் சந்தேகமில்லை.இசைஅமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் , படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம்.


SO ,தீராத விளையாட்டுப் பிள்ளை ?
.
.
.
.
.
.
.
.
.
.  
.
.
.
.
.
.
.
.
.


அடப் போங்க , எவ்ளோ நேரம்தான் எதுகை மோனை-ல PUNCH யோசிக்கிறது ?!,
Blog எழுதுறவன் மனுசன்னா ...
Follow பண்றவன்
பெரியமனுசன் ...

பெரிய மனுசங்க....

நான் எனது பள்ளி நாட்களின் இறுதியிலும், கல்லூரி நாட்களிலும் எழுத வேண்டுமென்று நினைத்த நாட்குறிப்பின் வெளிப்பாடுதான் இந்த வலை தளம்.சினிமா, அரசியல், கலை, விளையாட்டு தொடர்பான விஷயங்களை பகிர்ந்து கொள்ள எனக்கான இடம் (உங்களுக்குமானது தான் !).


(இன்னும் எத்தன பேர்டா கெளம்பி இருக்கீங்க ?!)

2011 சட்டசபைத் தேர்தலில் கூட்டணி எப்படி இருக்கும் ?

வ - த - ந - மீ - வ = வந்தமைக்கும் தந்தமைக்கும் நன்றி , மீண்டும் வருக !

தேசாந்திரி , அங்க பாரு...

தேசாந்திரி ,  அங்க பாரு...

வந்தார்கள் சென்றார்கள்...


நம்ம நிலைமையை பாருங்க!

Contact Us

Name

Email *

Message *