கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை.
இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்பது வழக்கம். அப்படி செய்கையில், குறைந்தது ஒரு நாளைக்கு ஒருவராவது என் தளத்திற்கு வந்து போய்க்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தது. அதெப்படி என்று STATCOUNTER தளத்தில் இருக்கும் வசதியை பயன் படுத்தி ஆராய்ந்து கொண்டிருந்தேன்.
அந்த தளத்தில், எந்த வார்த்தையை ஒரு தேடுதளத்தில் கொடுத்தால், நமது வலைத்தளம் , தேடல் முடிவுகளில் தெரிகிறது என்று பார்க்க முடியும். பின் அந்த LINK ஐ கொண்டு நமது வலைதளத்திற்கு வருவார்கள். கடந்த ஒரு வருட காலமாக, என் வலைதளத்திற்கு வாசகர்களை கொண்டுவந்து சேர்க்கும் அந்த மந்திர தேடல் சொல் என்ன தெரியுமா ?
"மின்சாரம் தயாரிப்பது எப்படி ?!"
என்று GOOGLE இல் தேடினால் என்னுடைய
10 ரூபாயில் ரிமோட் தயாரிப்பது எப்படி... ?
என்கிற பதிவு தேடல் முடிவுகளில் தெரியும் (இப்பொழுதல்ல!).
என் தளத்திற்கு வரும் 36 சதவிகித நண்பர்கள் இந்த வார்த்தையை தேடுவதின் மூலமே வருகிறார்கள் !
"எப்பொழுது தேவை இருக்கிறதோ அப்பொழுது தான் புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும்" என்று ஒரு அறிஞர் சொல்லியிருக்கிறார். அது உண்மைதான் போலும்.
தமிழக மக்கள் இதுவரை பார்த்திராத வரலாறு காணாத மின்வெட்டால் அவதிப்பட்டு கொண்டிருக்கின்றனர். அதன் விளைவால் தான் எப்படித்தான் மின்சாரம் தயாரிக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு, அதை நாமளும் முயற்சிக்கலாம் என்று தேடுகிறார்கள்.
அப்படி யாரவது புதிய தொழில்நுட்பத்தை கண்டு பிடித்தால், அந்த சாதனையின் பெரும் பங்கு கழக அரசுகளுக்கே சொந்தம் !
உண்மையில், மின்பற்றாக்குறை பல்வேறு தொழில்களை முடக்கியிருக்கிறது என்பதுதான் உண்மை. மருத்துவம், கட்டுமானம், அச்சகம், ஆடை உற்பத்தி, இயந்திர வேலைகள், உழவு என எத்தனையோ தொழில்களை கேள்விக்குறி ஆக்கியுள்ளது இந்த மின்வெட்டு.
நாம் என்ன செய்யலாம் ?
- தேவையற்ற மின் நுகர்வை குறைப்பதன் மூலம் மட்டுமே நம் பங்களிப்பை கொடுக்க இயலும்.
- நீங்கள் ஒரு அறையில் இருக்கும் பொது இன்னோர் அறையில், மின்விசிறியும் மின்வளக்கும் தேவை இல்லை தானே ?
- கணினியில் வேலை செய்வோர், வேலை நேரம் முடிந்ததும் கணினியை 'SHUT DOWN ' (LOG OFF அல்ல !) செய்யலாம். உணவு இடைவேளை, தேனீர் இடைவேளை செல்லும் போது MONITOR ஐ அணைத்து விடலாம்.
- குறைந்த தொலைவில் உள்ள மாடிகளுக்கு LIFT க்கு பதிலாக, படிக்கட்டுகளை உபயோகிக்கலாம். ஒரே நேரத்தில் இரண்டு மூன்று LIFT களை வரவழைக்காமல் , ஒன்றை மட்டுமே அழைக்கலாம்.
- தேவையற்ற நேரங்களில் ஹீட்டர் மற்றும் AC பயன்பாட்டை குறைக்கலாம்.
- என்னைப் போன்று எப்போதாவது பதிவெழுதலாம் ! ;)
அருமையான பதிவு.
ReplyDeleteமிகவும் நன்று ...
Tamil News
Arimai Sankar, unmaiyum kooda
ReplyDeleteArimai Sankar, unmaiyum kooda
ReplyDeleteI would highly appreciate if you guide me through this. Thanks for the article…
ReplyDeleteTamil News | Tamil Newspaper | Latest Tamil News | Kollywood News