Showing posts with label சுய தம்பட்டம். Show all posts
Showing posts with label சுய தம்பட்டம். Show all posts

Sunday, September 5, 2010

நான் ஏன் பதிவரானேன் ? பாகம் - 3

நான் ரொம்பவும் நகைச்சுவை உணர்வு உள்ளவன் என்று நான் நானே நினைத்துக்  கொள்வேன் ! 

அது எப்படி என்று கேட்கிறீங்களா ?! 








முதல் வரியை மீண்டும் படிக்கவும் !


அவ்வாறு நான் நினைக்க காரணமாயிருந்த சில தருணங்களில், நான் கூறிய வசனங்களை இங்கே ஒரு தொடராக இடுகையிட்டு வருகிறேன். ஏற்கனவே இரண்டு பாகங்கள் வெளிவந்திருக்கின்றன (!) .




நான் ஏன் பதிவரானேன் ? பாகம் - 1 
நான் ஏன் பதிவரானேன் ? பாகம் - 2

முடிந்தால், அதையும் ஒரு எட்டு பார்த்துட்டு வந்துடுங்களேன் ?!

 *********************************************************************************************************

அலுவலகத்தில், சூடான அரசியல் விவாதங்கள் அடிக்கடி நடக்கும். ஒருநாள், சென்னை ஸ்ரீபெரும்புதூரில் அமையவிருக்கும் (?) ,கிரீன் பீல்ட் விமான நிலையம் பற்றி பேச்சு திரும்பியது. அந்த விமான நிலையத்திற்கு ஏன் அந்த பெயர் வைத்திருக்கிறார்கள் என்று கேட்டார்கள்.

"விவசாய நிலங்களில் அமைய இருப்பதால் அப்படி பேர் வெச்சிருப்பாங்க  ?! " ன்னு சொல்லி  வைத்தேன்.


 *********************************************************************************************************

அலுவலகத்தில் பணிபுரியும் சக பணியாளார் ஒருவர், இடது கையால் எழுத முயற்சித்துக் கொண்டிருந்தார். ஏதோ ஓரளவிற்கு எழுதினாலும், மெதுவாகவே எழுத முடிந்தது அவரால் ! என்னருகே வந்து அவ்வாறு எழுதிக் காண்பித்தார்.

"நான் இதவிட  வேகமா இடது  கையில் எழுதுவேன் " என்றேன்.


"நிஜமாவா ?!"

"ஆமாங்க !" - இது நான்.

20 நொடி இடைவெளி....

"ஆனா யாரும் படிக்க முடியாது !"



 *********************************************************************************************************

ஒவ்வொரு வாரமும் சனி ஞாயிறு விடுமுறைக்கு தவறாமல் ஊருக்கு சென்று விடும் நண்பனொருவன், இந்த வாரம் போகாமல், சென்னையிலேயே இருந்துவிட்டான். நான் அலைபேசியபோது இதை என்னிடம் சொன்னான்.

"ஏண்டா இந்த வாரம் ஊருக்கு போகல ?!" - நான்.

"சித்தப்பாவும், சித்தியும் கல்யாணத்துக்கு வந்திருந்தாங்க டா" - நண்பன்.

"அவங்களுக்குதான் , ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சே டா ?!" - நான் !

புகைப்பட உதவி - http://iconicon.net

Saturday, July 31, 2010

உலகத் தமிழ்ப் பதிவர்கள் தினம் - தலைப்பில்லா இடுகைகள் 31 . 07 .2010

ஒரு அறிவிப்பு ...

அண்மைய செய்தி


கடந்த இரண்டு வாரங்களாக  காணாமல் போயிருந்த இந்த பிளாகின் 'மொதலாளி'  திரு.தேசாந்திரி - பழமை விரும்பி , இன்று பின்னூட்டம்போடும் போது கண்டுபிடிக்கப் பட்டார். அவரிடம் கைவசம் சரக்கு இல்லை என்பதால், இவ்வளவு நாட்களாக தலைமறைவாக இருந்ததாக எமது சிறப்பு செய்தியாளரிடம் தெரிவித்தார். மேலும், அவ்வப் போது , சரக்கு கிடைத்தால் மீண்டும் மொக்கை போட வருவார் என்று தெரிகிறது. ஆகவே , பொதுமக்கள் அனைவரும் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம் என்று அதிகாரப் பூர்வமற்ற வட்டாரங்களில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

(டிஸ்கி - எனது வலைதளத்தின் நீண்ட கால (!) வாசக (!!)  நண்பர் ஒருவர், நான் அடிக்கடி பதிவு போடுவதில்லை என்று வருத்தம் தெரிவித்திருந்தார் ! அவருக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த செய்தி. (கோவிச்சுக்காதீங்க அருண் , சும்மா ஜாலிக்காகத்தான் ! )).இந்த இடுகை  மூலம் அந்த வாசக நண்பரை , சக பதிவராகும் படி கேட்டுக் 'கொல்'கிரேன்!
(நல்லா மாட்டிக்கிடீங்கள ?! இப்ப இன்னா பண்ணுவீங்க ?!)

புகைப்பட உதவி - www.bygonebutlins.com

ஒரு சுய தம்பட்டம்...

ஒரு நாள் கூகிளாரிடம் , தமிழ் வார்த்தைகளை சொல்லி தேடச் சொன்ன போதுதான் , வலையுலகம் என்று ஒன்று இருப்பதை எதேர்ச்சையாக அறிந்தேன். பிறகு, இளவஞ்சி,  வால்பையன் ஆகியோரது வலைத்தளங்களை வாசிக்கலானேன். இவர்களைப் பார்த்துதான், நானும் 'எழுத' ஆரம்பிதேன் ! ( அவங்களைச் சொல்லனும் !)


இன்றுடன் நான் வலையுலகிற்கு வந்து ஒருவருடம் ஆகிறது !!!

(யாருங்க அது, ஜூலை 31 - ஐ உலகத்  தமிழ்ப் பதிவர்கள் தினமாக்க வேண்டுமென்று சவுண்டு  விடுறது ?!)



கடந்த ஒருவருட காலமாக, மொத்தம் 60 இடுகைகள் இட்டிருக்கிறேன். அவற்றில் ஒரு மீள் இடுகை, இன்னொன்று வெட்டி , ஒட்டியது. சில, எனக்கு வந்த மின்னஞ்சல்களை மொழி பெயர்த்தும், டிங்கரிங் & பட்டி பார்த்து ஒப்பேத்தியது.எல்லாவற்றிற்கும் வந்தும், 'தந்தும்' ஆதரவளித்த நண்பர்களுக்கும்,திரட்டிகள்,சக பதிவர்கள்,வாசக நண்பர்கள் மற்றும்  எனது நன்றிகள்!

ஆர்குட் எனக்கு அறிமுகமான புதிதில், பெரும்பாலான நேரத்தை , அத்தளத்திலேயே கழித்தேன். இப்போது , பிளாக்கர் ! இன்னும் எத்தனை நாள் 'தீவிரமாக' எழுதுவேன் என்று தெரிய வில்லை.

என்னுடைய முதல் இடுகை  - முதல் அஞ்சல் ...(அட போஸ்ட் தாங்க )


ஐம்பதாவது இடுகைன்னு நெனைச்சு நான் போட்ட 49 வது இடுகை

ஒரு விமர்சனம்...

கடந்த வாரம் வெள்ளிக் கிழமை , 'மதராசப்  பட்டினம் ' திரைப்படம் போயிருந்தேன். இந்த படத்திற்கான விளம்பரங்கள் என்னை வெகுவாகக் கவர்ந்திருந்தன. மேலும், இயக்குனர் விஜயின் 'பொய் சொல்லப் போறோம்' திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்றாகும் (அவருடைய 'கிரீடம்' படம் இன்னும் பார்க்க வில்லை. ஆனால், தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பாகும் சில காட்சிகளை பார்த்திருக்கிறேன். நன்றாகத்தான் இருந்தன !). ஆகவே இரண்டு வார காலம்  ஆனாலும், யாரிடமும் கதை கேட்காமல் போய்விடலாம் என்று நினைத்தால், நம்ம பதிவர்கள் பதிவில் முதல் இரண்டு வரிகளிலேயே படத்தின் 'ஒன் லைன்' ஐ சொல்லி விடுகிறார்கள் ! ஒரு வழியாக ஓரளவு கதையை யூகித்துக் கொண்டு , போய் அமர்ந்தேன் !



படத்தின் பெயர் போடுவதே அழகாக இருக்கிறது.பழைய மதராசப் பட்டினத்தை காட்டுவார்கள் என்று 'நம்பி' போன நான் கொஞ்சம் ஏமாந்துதான் போய்விட்டேன்.பெரும்பாலான காட்சிகள் 'செட்' தான் என்று அப்பட்டமாகத் தெரிந்தாலும் , இப்படி காட்டுவதற்கே அவர்கள் எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பார்கள் என்று என்றும் தோன்றுகிறது ! விமர்சனம் செய்வதுதான் சுலபம் , இல்லையா ?! படத்தின் இசை , ஜி.வி.பிரகாஷ்குமார். ஏற்கனவே ஆயிரத்தில் ஒருவனில் , தன்னை நிரூபித்தவர் ! பாடல்கள் எல்லாமே நன்றாகத் தான் இருக்கின்றன. பின்னணியிலும் முன்னணி வகிக்கிறார்! அப்புறம் ஒளிப் பதிவு - நீரவ் ஷா ! நல்லாத்தான் இருக்கு !


ஆர்யாவும் மற்ற நடிகர்களும் நன்றாக  நடித்திருக்கிறார்கள். அமரர் , திரு 'ஹனீபா' அவர்களுக்கு இதுதான் கடைசிப் படம். படப் பிடிப்பின் போதே, அவருக்கு உடல்நலம் மிகவும் மோசமாக இருந்ததாகவும், அதையும் பொருட் படுத்தாமல் நடித்துக் கொடுத்திருக்கிறார் என்று, இயக்குனர் விஜய் ஒரு வானொலிப் பேட்டியில் தெரிவித்திருக்கிறார். படத்தின் பல காட்சிகளில், அவர் உடல் நலம் குன்றியது நன்றாகவே தெரிந்தது ! நல்ல கலைஞர் ! கதாநாயகி எமி ஜாக்சன் , ஏற்கனவே ஏதோ படத்தில் பார்த்தது போல இருக்கிறார். நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார்.



ஒரு கட்டத்தில் இடைவேளை எப்படா வரும் என்று எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டேன். அவ்வளவு நீளமாக இருப்பது போன்ற ஒரு தோற்றம்.பிற்பாதியின் இறுதியிலும் கொஞ்சம் இழுவையாக இருப்பது போன்று தோன்றியது ! (மன்னியுங்கள்  விஜய் !).
படம் வெளியான வாரத்தில், கூட்டம் இன்றைய சென்னையை போல இருந்தது! பிறகு வந்த வாரங்களில் அப்போதைய சென்னை அளவிற்கு தான் கூட்டமிருந்தது ! ஒட்டு மொத்தமாக , மதராசப் பட்டிணம் - அழகு.

Friday, July 16, 2010

நான் ஏன் பதிவரானேன் ? - பாகம் 2...

'நான் ஏன் பதிவரானேன்' னு ஏற்கனவே ஒரு முறை சொல்லியிருக்கிறேன்...

நான் ஏன் பதிவரானேன் ? - பாகம் 1 ..

நீங்கள் அந்த பாதிப்பிலிருந்து மீள்வதற்கு முன்னதாகவே இன்னொன்று !!


****************************************************************************************
என் அம்மா எப்பொழுதுமே பால் காய்ச்சும் போது கொஞ்சம் நிறையவே ( கொஞ்சமா இல்லை நிறையவா ?! ) தண்ணீர் ஊற்றுவார்.


"ஏம்மா, பால்ல இவ்ளோ தண்ணி கலக்குற ?! "


"ரொம்ப 'திக்'க்கா பால் குடிச்சா ஹார்ட் ப்ராப்ளம் வரும்ப்பா !! "


"ஆனா, ரொம்ப தண்ணியா குடிச்சா , கிட்னி ப்ராப்ளம் வந்துடுமேமா !"


****************************************************************************************

எங்கள் அலுவலகத்தில் வாரமொருமுறை அல்லது இருமுறை மீட்டிங் போட்டு , யாராரு எவ்ளோ ஆணி புடுங்கனும், எப்பக்குள்ள புடுங்கனும்னு டீடைலா சொல்லுவாங்க !
அதுவும் காலை போன உடனே ! ஆரம்பிச்சா ஒரு ஒன்றை மணி நேரம் தாங்கும் !! ஒரு நாள், காலை 'பேருண்டி' ( கொஞ்சமா சாப்பிடுறவங்களுக்குதான் 'சிற்றுண்டி'  !) சாப்பிடாமலே போய் விட்டேன் .அந்த நேரம் பார்த்து ,

"சரி மீட்டிங் வெச்சுக்கலாமா ?!" , இது குழு தலைவர் ( TEAM LEAD ஆமாம் !!)

"மொதல்ல ஈட்டிங் முடிச்சுக்கலாம் !" - வேற யாரு , அடியேன் தான் !

****************************************************************************************

அலுவலக நண்பர்கள் , ட்ரிங்க்ஸ் அடிப்பது பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

"என்னய்யா , இன்னிக்கு சரக்கா ?!"

"ஆமா ! அந்த பிளான்ல தான் இருக்கேன் !"

"உனக்கு பரவாயில்ல , பேட்சுலர் ரூம்ல இருக்க . நான் சரக்கடிக்குறது தெரிஞ்சா, வீடு ரெண்டாயிடும் ! "

"சரக்கடிச்சா , வீடு மட்டுமில்ல , எல்லாமே 'ரெண்டா'யிடும் !!"

 ****************************************************************************************
சின்ன வயசுல ,  'அவரு FOREIGN ல இருந்து வந்திருக்காரு' , 'இவரு அடுத்த வாரம் FOREIGN போகப் போறாரு' ன்னு  மத்தவங்க பேசுறதக் கேட்டிருக்கேன் ! அப்பவெல்லாம் நான் நெனச்சுப்பேன் ,

"அமெரிக்கா , ஜப்பான் மாதிரி 'FOREIGN ' ங்கற பேர்ல   ஒரு வெளி நாடு இருக்கும் போல !"

ஆமா, அந்த FOREIGN எங்க இருக்குங்க ?!  



 ****************************************************************************************
 டிஸ்கி : இந்த இடுகைக்கு போட வேண்டிய டிஸ்கி ஏற்கனவே பாகம் 1 க்கு போட்டதைப் போலவே இருக்குமென்பதால், அதைப் படித்துவிடுமாறு கேட்டுக் 'கொல்'கிரேன் !

Sunday, May 9, 2010

நான் ஏன் பதிவரானேன் ? - பாகம் 1...

"நீ ஏன் பதிவர் ஆனே ?" ன்னு நீங்க கேக்கலைனாலும், சொல்லவேண்டியது என் கடைமைங்க ! . மேல படிங்க . 


என்னங்க ? 'மேல' படிங்க ன்னா , கீழ படிக்கிறீங்க ? சரி படிச்சிட்டு போங்க !

**********************************************************************************************************************************************************

முதலாமாண்டு மாணவர் விடுதி... மதிய உணவு நேரம்... அனைவரும் அரக்க பறக்க உணவருந்தி கொண்டிருந்தோம். அப்போது ஹாஸ்டலில் தரப்படும் அப்பளத்தை, அடுத்தவர் தட்டிலிருந்து 'ஆட்டையப் ' போடுவது ஒரு பேஷன் ! என் நெருங்கிய நண்பன் ஒருவன் , என்னுடைய அப்பளத்தை எடுக்க , தட்டில் கைவைக்க முனைந்தான் !
நான் - " முதல்ல  அப்பளம் , FRIEND எல்லாம் அப்பறம் " !

**********************************************************************************************************************************************************


அதே முதலாமாண்டு மாணவர் விடுதி. எங்கள் அறையில் எப்போதும் மாணவர் கூட்டம் கூட்டி அரட்டையடித்துக் கொண்டிருப்போம். யாராவது ஒருத்தர் மாட்டினால் போதும், அவனை கிண்டலடிப்பதுதான் அன்றைய பொழுது போக்கு ! அந்த வகையில், மாட்டிய ஒருவனை எல்லோரும் ஒட்டகத்தை சுத்தம் செய்பவன்   என்று ஓட்டிக் கொண்டிருந்தார்கள். அவனும் எப்படியோ சமாளித்துக் கொண்டிருந்தான்.

" வாரத்துக்கு எத்தன நாள் இந்த வேலை ?" இது நண்பர்கள்.
"வாரத்தில் 5  நாள் தான்"
"அப்ப மற்ற நாட்கள் ?!"
"ரெஸ்ட் தான் !"
"ரெஸ்ட் ஒட்டகதிற்க்கா ?! உனக்கா ?!" - நான் .

**********************************************************************************************************************************************************

கல்லூரி படிப்பு  முடிந்து , வேலை தேடிக்கொண்டிருந்த காலம். கல்லூரி நண்பன் ஒருவன் போன் செய்து, தான் யாரென்று சொல்லாமல் 'சஸ்பென்ஸ்' வைத்துக் கொண்டிருந்தான் .

"டேய் , நீ யாருன்னு சொல்டா . இல்ல ஒரு 'க்ளூ' வாவது கொடேன் !" - நான்.
"நீ எந்த காலேஜ்ல படிச்ச ?"
"_______ காலேஜ் ல ."
"எந்த BRANCH ?" - இது நண்பன்.
"IT "
"எந்த வருஷம் ?"
"நாலு வருஷமும் அதே BRANCH தான் ?" - அடியேன்.
அதுக்கு பிறகு அவன் கால் பண்ணவே இல்லை !

**********************************************************************************************************************************************************
அலுவலகத்தில் நண்பர்களுடன் காலை உணவு அருந்திக் கொண்டிருந்தேன். நண்பர் கொண்டு வந்திருந்த தோசையில், சிறிய கல் ஒன்று இருந்தது.
"என்னப்பா , தோசையில கல் இருக்கு ?" மற்றொரு நண்பர்.
" 'கல்' தோசை கேள்விப் பட்டதில்லையா ? அதான் இது " - வேறு யார், நாந்தேன் !

**********************************************************************************************************************************************************

ஒரு வருடத்திற்கு முன்பு, தகவல் தொழிநுட்பத் துறையில் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பொருளாதார பெருமந்தம் தனது வேலையை காட்டிக் கொண்டிருந்த காலம்.உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்த  நான் , தலை முடியை நன்றாக SHORT ஆக வெட்டியிருந்தேன்.
"இது என்னப்பா , புது விதமான கட்டிங் ? " - உறவினர் .
"இதுதாங்க COST CUTTING ! " - பிரபல(!) பதிவர் தேசாந்திரி - பழமை விரும்பி (அட , நாந்தாங்க , அப்படியெல்லாம் சிரிக்கக் கூடாது !! ).

**********************************************************************************************************************************************************
ஒருவாரம் முன்பு , அலுவலக நண்பர்களுடன்  மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, பேச்சு நித்யானந்தா பற்றி திரும்பியது. அப்போது , ஒரு நண்பர் சொன்னார்,

"புட்ட பர்த்தி சாய்பாபா , ஆள் எப்படின்னு தெரியாது. ஆனால், அவர் மற்றவர்களுக்கு நிறைய உதவி செய்கிறார். இதுமாதிரி, தனக்கும் செய்து, மற்றவருக்கும் எதாவது செய்தால் பரவாயில்லை . ஆனால், நித்தியானந்தா ?!"

"அதுக்குதான் , CD விட்டிருக்காங்களே ?!" - நான் !

**********************************************************************************************************************************************************

அரசியல் பேசிக்கொண்டிருந்த நண்பர் ஒருவர் சொன்னார் ,
" 'மக்கள் நல திட்டம்' ங்கற பேர்ல, திட்டத்திற்கு ஒதுக்கிய  பணத்தை திருடறதுலயே எல்லாரும் குறியா இருக்கானுக !"
" 'திட்டம் போட்டு திருடற கூட்டம்' னு நீங்க கேள்விப் பட்டதில்ல ?!"

**********************************************************************************************************************************************************

நமக்குள்ள இவ்வளவு 'திறமை' இருக்கும் போது, நான் ஏன், வலைத்தளம் ஆரம்பிக்கக் கூடாது ?! நீங்களே சொல்லுங்க !


டிஸ்கி - மேலே சொன்னதெல்லாம், ஒரு தமாசுக்குதான் . உண்மையில் , இளவஞ்சி,வால்பையன் , போன்றோர்களின் வலைதளத்தை பார்த்த பிறகுதான் , பதிவுலகிற்குள் பாதம் பதிக்கும் ஆசை வந்தது. அவர்களுக்கு என் நன்றிகள். இவர்கள் மட்டுமல்லாமல், என் வலை தளத்திற்கு வந்து, FOLLOWERS ஆகியும், ஆகாமலும், பின்னூட்டங்கள் இட்டும், இடாமலும்  என்னை ஊக்கப்படுத்தி வரும் அனைத்து நண்பர்களுக்கும், திரட்டிகளுக்கும் ,GOOGLE க்கும்  மற்ற அனைவருக்கும் என் நன்றிகள் .

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...