Posts

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

Image
கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்பது வழக்கம். அப்படி செய்கையில், குறைந்தது ஒரு நாளைக்கு ஒருவராவது என் தளத்திற்கு வந்து போய்க்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தது. அதெப்படி என்று STATCOUNTER தளத்தில் இருக்கும் வசதியை பயன் படுத்தி ஆராய்ந்து கொண்டிருந்தேன்.
அந்த தளத்தில், எந்த வார்த்தையை ஒரு தேடுதளத்தில் கொடுத்தால், நமது வலைத்தளம் , தேடல் முடிவுகளில் தெரிகிறது என்று பார்க்க முடியும். பின் அந்த LINK ஐ கொண்டு நமது வலைதளத்திற்கு வருவார்கள். கடந்த ஒரு வருட காலமாக, என் வலைதளத்திற்கு வாசகர்களை கொண்டுவந்து சேர்க்கும் அந்த மந்திர தேடல் சொல் என்ன தெரியுமா ?
"மின்சாரம் தயாரிப்பது எப்படி ?!" 
என்று GOOGLE இல் தேடினால் என்னுடைய 10 ரூபாயில் ரிமோட் தயாரிப்பது எப்படி... ? என்கிற பதிவு தேடல் முடிவுகளில் தெரியும் (இப்பொழுதல்ல!).

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி ... பிம்பிளிக்கி பிளாப்பி !

Image
இருவாரங்களாக விஜய் டிவி யில் NVOK (நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி) நிகழ்ச்சியின் விளம்பரங்கள் களை கட்டிக் கொண்டிருக்கின்றன. முதல் கேள்வி கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று கேட்கப் பட்டது.
SMS மூலமாக பதில் அனுப்பலாம் என்றனர் ! சரி ஒரு ட்ரை செய்துதான் பார்ப்போமே என்று , அவர்கள் கேட்ட மிகக் கடினமான (!) கேள்விக்கு மிகச்சரியான பதிலை அனுப்பினேன். ஒரு SMS க்கு 3 ரூபாய். வாய்ப்பை தவற விடக் கூடாதென்று , எங்கள் வீட்டில் 4
 பேரும் தலா 1 SMS அனுப்பினோம் ! போனா 12 ருபாய், வந்தால் 1 கோடி ! எப்படி ஐடியா ?!

பதிலை அனுப்பி விட்டு, கோடீஸ்வரக் கனவுகளுடன் தூங்கிப்  போனேன்.   மறுநாள் காலை 8 மணிக்கு எழுந்து பார்த்தால், ரிப்ளை வந்திருந்தது. நான் முதல் கட்டத் தேர்வில் தேறி விட்டதாகவும், அடுத்த படியாக நம் பாலினம், ஊர், பின் கோடு போன்றவற்றை அனுப்பவும் என்று கேட்டிருந்தார்கள். ஆஹா ! ஆண்டவன் கண்ணைத் திறந்து விட்டான் ! என்று மேலே படித்தால், 20 நிமிடங்களுக்குள் ரிப்ளை அனுப்ப வேண்டும் என்று போட்டிருந்தார்கள் ! அதனால் என்ன ?! அனுப்பிவிடவேண்டியதுதானே என்கிறீர்களா ?! நானும் அப்படிதான் நினைத்தேன் ! ஆனால் அவர்கள் ரிப்ளை அனுப்பி…

கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் விரைவில் இடமாற்றம் ?!

Image
முன் குறிப்பு : முழுவதும் கற்பனையே, யாரையும் புண்படுத்த அல்ல!

நேற்று அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பின் சாராம்சம் : கிண்டி கத்திப்பாராவில் செயல் பட்டு வரும், பெரிய மேம்பாலம் விரைவில் இட மாற்றம் செய்யப் பட உள்ளது. புதிய கத்திப்பாரா மேம்பாலம் , சென்னைக்கு மிக அருகில் உள்ள திண்டிவனத்திற்கு மாற்றம் செய்யப் படுகிறது.( சென்னையில் இருந்து, திண்டிவனத்திற்கு அடிக்கடி பருந்து வசதி உள்ளது !). தற்போது உள்ள மேம்பாலம், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விளையாடுவதற்கான 'சறுக்கல்' ஆக, மாற்றம் செய்யப் படும். இதன் மூலம், இந்தியாவிலேயே, ஏன், உலகிலேயே குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் பொழுதுபோக்கில், தமிழகம் முன்னோடியாகத் திகழும்.


                         நன்றி - புகைப்பட உதவி : www.picasaweb.google.com

டிஸ்கி : சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு அண்ணா நூற்றாண்டு நூலகம் இடமாற்றம் செய்யப்படும் என்கிற அறிவிப்பின் 'பாதிப்பு' தான் இந்த பதிவு.

==========================================================================

இருக்கிற மருத்துவமனைகளின் நிலைமையை சீராக்கினாலே, தமிழகம் குழந்தைகள்  நலனில் மட்டுமல்…

அமெரிக்காவின் கடன் பிரச்சனைக்கு தீர்வு இதோ ! (நகைச்சுவைக்காக மட்டும் !)

Image
 டிஸ்கி : இந்த பதிவு, முழுவதும் நகைச்சுவைக்காகவே . சிரிப்பு வந்தால் சிரித்துவிட்டு போகவும். இல்லையேல் அப்படியே அடுத்த தளத்திற்கு போகவும்.
அங்க அடிச்சா இங்க வலிக்கும் என்பார்களே.. அது போல அமெரிக்காவில் பொருளாதார பிரச்சினை வந்தால், உலகம் முழுவதும் திகிலடிக்கிறது. லோன் போட யோசிக்க வேண்டியிருக்கிறது. டீலக்ஸ் BUS ஐ, விட்டு விட்டு LSS BUS க்காக காத்திருக்கிறார்கள்.  அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் IT ஆசாமிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. என்ன வாழ்க்கைடா இது என்கிறார்கள்.


எதுக்கு இவ்வளவு கஷ்டம் ?!
இத்தனைக்கும்  நாம் பதிவெழுதும் இந்த தளம் ஒரு அமெரிக்க கம்பெனி தானே நமக்கு கொடுத்தது ?! ஒரு நன்றிக் கடனாக , அமெரிக்க கடன் பிரச்சினைக்கு தீர்வு  சொல்வது நம் கடமை இல்லையா ?
 இதோ, அமெரிக்காவிற்கு மட்டுமல்ல எங்கு கடன் பிரச்சினை இருந்தாலும் , அதற்கு ஓர் அருமருந்து ! 


நன்றி புகைப்பட உதவி : http://www.financialfacts.org/wading-through-the-recession-tips-and-advice/
http://allkavach.com/products-shri-dhan-laxmi-yantra-23.aspx

ஸ்ரீ தனலட்சுமி எந்திரம் !

 அமெரிக்க பதிவர்கள் யாராவது வாங்கி, வெள்ளை மாளிகையில் கொடுங்களே…

கனவுக் கவிதை (யாமாம் !)...

Image
கனவுக் கவிதை (யாமாம் !)நன்றி - புகைப்பட உதவி - http://bharatendu.wordpress.com/tag/chanakya/

காக்கைகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டிருந்தது... கோடிக் கணக்கான காக்கைகள் பறந்து கொண்டிருந்தன...
ஆங்காங்கே சில மனிதர்கள்... அவர்களும், காக்கைகளால்  சுற்றி வளைத்து  தாக்கப் பட்டுக் கொண்டிருந்தார்கள் ...
ஒரு தாய் பென்குயின் ,  தனது குழந்தைக்கு வேடிக்கைக் காட்ட என்னைப் பணித்தது...
பறவைகளின் தோட்டங்களில் மலர் பறிக்க,  மனிதர்கள் பணியமர்த்தப் பட்டிருந்தார்கள்...
ஆங்காங்கே கிடந்த ராட்சத  பறவைகள், அவைதம் சிறகுகளென பயமூட்டிய படி பறந்து கொண்டிருந்தன...
தங்கள் வீட்டு காம்பவுண்டில்,  சில காக்கைகள் எங்களுக்கு உணவளித்தன...
குழம்பு சோறு முடித்துவிட்டு,  மறு சோறு வாங்க பயத்துடன் எத்தனித்த  போது, "வேணுங்கறத  எடுத்துக்கோ" என்றதோர்  கிழட்டுக் காக்கை...
டிஸ்கி : என் கனவில் வந்த காட்சிகள் இவை.

அக்ஷய திருதியை சிறப்புக் கவிதை (யாமாம் !)

Image
நன்றி : புகைப்பட உதவி - http://elayarajaartgallery.com/oilpainting.html


அக்ஷய திருதியை அன்றைக்கு நகை வாங்கினால், வீட்டிற்கு லக்ஷ்மி வருவாள் என்று, எல்லா வீட்டு லக்ஷ்மிகளும்,
நகைக் கடை வரிசையில்!


===========================================================================


                    நன்றி : புகைப்பட உதவி - http://flickrhivemind.net


அதிகாலையில் இருந்தே,
ஒரு எறும்பும், நானும்,
உன் வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருக்கிறோம்.
கோலம் போட,  நீ அரிசி மாவை எடுத்துக் கொண்டு வருவாய் என்றும்,
கோலம் போட, அரிசி மாவை எடுத்துக் கொண்டு நீ வருவாய் என்றும் !உலகின் மிகச் சிறிய திகில் கதை... (18+)

Image
டிஸ்கி 1 : இளகிய மனம் கொண்டவர்கள், இதய நோயாளிகள் யாரும் இந்தக் கதையை, தனியாக படிக்க வேண்டாமென்று எச்சரிக்கப் படுகிறார்கள். =========================================================================                                       நன்றி : புகைப்பட உதவி - htp://delhi.olx.in
நானும் என் நண்பன் குமாரும், ஒரு பிணத்தை  அதன் வீட்டில் ஒப்படைக்க, அதைத் தூக்கிக் கொண்டு சைக்கிளில் சென்று கொண்டிருந்தோம்.


கதை அவ்வளவுதான் ! 

"இதில் எங்கே திகில் இருக்கிறது ?!" என்ற கேட்கிறீர்கள் ?! 

நானும் , குமாரும் வைத்திருந்த  பிணம், என் நண்பன் குமாருடையது !
========================================================================= டிஸ்கி 2 : இது நெஜமாவே , என் கனவில் வந்தது !