Showing posts with label தலைப்பில்லா இடுகைகள். Show all posts
Showing posts with label தலைப்பில்லா இடுகைகள். Show all posts

Saturday, July 31, 2010

உலகத் தமிழ்ப் பதிவர்கள் தினம் - தலைப்பில்லா இடுகைகள் 31 . 07 .2010

ஒரு அறிவிப்பு ...

அண்மைய செய்தி


கடந்த இரண்டு வாரங்களாக  காணாமல் போயிருந்த இந்த பிளாகின் 'மொதலாளி'  திரு.தேசாந்திரி - பழமை விரும்பி , இன்று பின்னூட்டம்போடும் போது கண்டுபிடிக்கப் பட்டார். அவரிடம் கைவசம் சரக்கு இல்லை என்பதால், இவ்வளவு நாட்களாக தலைமறைவாக இருந்ததாக எமது சிறப்பு செய்தியாளரிடம் தெரிவித்தார். மேலும், அவ்வப் போது , சரக்கு கிடைத்தால் மீண்டும் மொக்கை போட வருவார் என்று தெரிகிறது. ஆகவே , பொதுமக்கள் அனைவரும் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம் என்று அதிகாரப் பூர்வமற்ற வட்டாரங்களில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

(டிஸ்கி - எனது வலைதளத்தின் நீண்ட கால (!) வாசக (!!)  நண்பர் ஒருவர், நான் அடிக்கடி பதிவு போடுவதில்லை என்று வருத்தம் தெரிவித்திருந்தார் ! அவருக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த செய்தி. (கோவிச்சுக்காதீங்க அருண் , சும்மா ஜாலிக்காகத்தான் ! )).இந்த இடுகை  மூலம் அந்த வாசக நண்பரை , சக பதிவராகும் படி கேட்டுக் 'கொல்'கிரேன்!
(நல்லா மாட்டிக்கிடீங்கள ?! இப்ப இன்னா பண்ணுவீங்க ?!)

புகைப்பட உதவி - www.bygonebutlins.com

ஒரு சுய தம்பட்டம்...

ஒரு நாள் கூகிளாரிடம் , தமிழ் வார்த்தைகளை சொல்லி தேடச் சொன்ன போதுதான் , வலையுலகம் என்று ஒன்று இருப்பதை எதேர்ச்சையாக அறிந்தேன். பிறகு, இளவஞ்சி,  வால்பையன் ஆகியோரது வலைத்தளங்களை வாசிக்கலானேன். இவர்களைப் பார்த்துதான், நானும் 'எழுத' ஆரம்பிதேன் ! ( அவங்களைச் சொல்லனும் !)


இன்றுடன் நான் வலையுலகிற்கு வந்து ஒருவருடம் ஆகிறது !!!

(யாருங்க அது, ஜூலை 31 - ஐ உலகத்  தமிழ்ப் பதிவர்கள் தினமாக்க வேண்டுமென்று சவுண்டு  விடுறது ?!)



கடந்த ஒருவருட காலமாக, மொத்தம் 60 இடுகைகள் இட்டிருக்கிறேன். அவற்றில் ஒரு மீள் இடுகை, இன்னொன்று வெட்டி , ஒட்டியது. சில, எனக்கு வந்த மின்னஞ்சல்களை மொழி பெயர்த்தும், டிங்கரிங் & பட்டி பார்த்து ஒப்பேத்தியது.எல்லாவற்றிற்கும் வந்தும், 'தந்தும்' ஆதரவளித்த நண்பர்களுக்கும்,திரட்டிகள்,சக பதிவர்கள்,வாசக நண்பர்கள் மற்றும்  எனது நன்றிகள்!

ஆர்குட் எனக்கு அறிமுகமான புதிதில், பெரும்பாலான நேரத்தை , அத்தளத்திலேயே கழித்தேன். இப்போது , பிளாக்கர் ! இன்னும் எத்தனை நாள் 'தீவிரமாக' எழுதுவேன் என்று தெரிய வில்லை.

என்னுடைய முதல் இடுகை  - முதல் அஞ்சல் ...(அட போஸ்ட் தாங்க )


ஐம்பதாவது இடுகைன்னு நெனைச்சு நான் போட்ட 49 வது இடுகை

ஒரு விமர்சனம்...

கடந்த வாரம் வெள்ளிக் கிழமை , 'மதராசப்  பட்டினம் ' திரைப்படம் போயிருந்தேன். இந்த படத்திற்கான விளம்பரங்கள் என்னை வெகுவாகக் கவர்ந்திருந்தன. மேலும், இயக்குனர் விஜயின் 'பொய் சொல்லப் போறோம்' திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்றாகும் (அவருடைய 'கிரீடம்' படம் இன்னும் பார்க்க வில்லை. ஆனால், தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பாகும் சில காட்சிகளை பார்த்திருக்கிறேன். நன்றாகத்தான் இருந்தன !). ஆகவே இரண்டு வார காலம்  ஆனாலும், யாரிடமும் கதை கேட்காமல் போய்விடலாம் என்று நினைத்தால், நம்ம பதிவர்கள் பதிவில் முதல் இரண்டு வரிகளிலேயே படத்தின் 'ஒன் லைன்' ஐ சொல்லி விடுகிறார்கள் ! ஒரு வழியாக ஓரளவு கதையை யூகித்துக் கொண்டு , போய் அமர்ந்தேன் !



படத்தின் பெயர் போடுவதே அழகாக இருக்கிறது.பழைய மதராசப் பட்டினத்தை காட்டுவார்கள் என்று 'நம்பி' போன நான் கொஞ்சம் ஏமாந்துதான் போய்விட்டேன்.பெரும்பாலான காட்சிகள் 'செட்' தான் என்று அப்பட்டமாகத் தெரிந்தாலும் , இப்படி காட்டுவதற்கே அவர்கள் எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பார்கள் என்று என்றும் தோன்றுகிறது ! விமர்சனம் செய்வதுதான் சுலபம் , இல்லையா ?! படத்தின் இசை , ஜி.வி.பிரகாஷ்குமார். ஏற்கனவே ஆயிரத்தில் ஒருவனில் , தன்னை நிரூபித்தவர் ! பாடல்கள் எல்லாமே நன்றாகத் தான் இருக்கின்றன. பின்னணியிலும் முன்னணி வகிக்கிறார்! அப்புறம் ஒளிப் பதிவு - நீரவ் ஷா ! நல்லாத்தான் இருக்கு !


ஆர்யாவும் மற்ற நடிகர்களும் நன்றாக  நடித்திருக்கிறார்கள். அமரர் , திரு 'ஹனீபா' அவர்களுக்கு இதுதான் கடைசிப் படம். படப் பிடிப்பின் போதே, அவருக்கு உடல்நலம் மிகவும் மோசமாக இருந்ததாகவும், அதையும் பொருட் படுத்தாமல் நடித்துக் கொடுத்திருக்கிறார் என்று, இயக்குனர் விஜய் ஒரு வானொலிப் பேட்டியில் தெரிவித்திருக்கிறார். படத்தின் பல காட்சிகளில், அவர் உடல் நலம் குன்றியது நன்றாகவே தெரிந்தது ! நல்ல கலைஞர் ! கதாநாயகி எமி ஜாக்சன் , ஏற்கனவே ஏதோ படத்தில் பார்த்தது போல இருக்கிறார். நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார்.



ஒரு கட்டத்தில் இடைவேளை எப்படா வரும் என்று எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டேன். அவ்வளவு நீளமாக இருப்பது போன்ற ஒரு தோற்றம்.பிற்பாதியின் இறுதியிலும் கொஞ்சம் இழுவையாக இருப்பது போன்று தோன்றியது ! (மன்னியுங்கள்  விஜய் !).
படம் வெளியான வாரத்தில், கூட்டம் இன்றைய சென்னையை போல இருந்தது! பிறகு வந்த வாரங்களில் அப்போதைய சென்னை அளவிற்கு தான் கூட்டமிருந்தது ! ஒட்டு மொத்தமாக , மதராசப் பட்டிணம் - அழகு.

Friday, June 11, 2010

தலைப்பில்லா இடுகைகள்... 06.06.2010

ஒரு அட !
கொஞ்ச நாட்களுக்கு  முன்னாடி என் தந்தை ஒரு விஷயம் சொன்னார்..
ஒரு மாதத்தின் நான்கு வாரங்களை எப்படி அழைக்கலாம் ?!



முதல் வாரம் - கோல்டன் வீக்,
இரண்டாம் வாரம் - சில்வர் வீக்,
மூன்றாம் வாரம் - காப்பர் வீக்,
நான்காம் (அல்லது) கடைசி வாரம் - ____________________________ ?

முடிந்தால் யூகித்துப் பாருங்களேன் ! விடை ( !) அப்புறம் .....

ஒரு ஒப்பீடு...
கடந்த மூன்றாம் தேதி, தமிழக முதல்வரின் 87 வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது ! திருவான்மியூர் வடக்கு மாட வீதியில் மாபெரும் விழா எடுத்தார்கள். கிட்டத் தட்ட ஒரு வாரத்திற்கு அந்த வழியையே அடைத்து விட்டிருந்தார்கள் !
இந்த இடத்தில் இரண்டு புகைப்படங்களை பதிவிட நினைக்கிறேன் !

முதல் புகைப்படம்...
இந்த பிறந்த நாள் விழா நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில், அடையார் இந்திரா நகர் பகுதியில் எடுத்த புகைப்படம் இது. நேரம் : இரவு  9 .30 மணி.


இரண்டாம் புகைப்படம்...
விழா முடிந்து , அரை மணி நேரம் கழித்து, திருவான்மியூர் வடக்கு மாட வீதியில் எடுத்த புகைப்படம் இது! நேரம் : 10 .00 மணி.



இது எப்படி இருக்கு ?! நோ கமெண்ட்ஸ்...

ஒரு நகைச்சுவை அல்லது கேள்வி ...



லலித் மோடியை கதா நாயகனாக வைத்து நம்ம ராதா மோகன் திரைப்படம் இயக்கினால் படத்திற்கு என்ன பெயர் வைப்பார் ?
(டிஸ்கி : இந்த நகைச்சுவையை (!) கடந்த 2009  ஆம் ஆண்டு எழுதியது. இப்போது, "ரீமிக்ஸ் " செய்து  வெளியிடுகிறேன்.)

ஒரு தகவல்...
என்னுடைய வலைப்பதிவின் முதல் வாசகன் ( அடிக்கடி போன் பண்ணி , " BLOG எழுதிகிட்டு இருக்கேன் படிடா, BLOG எழுதிகிட்டு இருக்கேன் படிடா" னு  டார்ச்சர் பண்ணிதான் படிக்க வெச்சேன் !) , என் நண்பன் வேலை விஷயமாக வெளி நாடு சென்றிருக்கிறான் !  "அதுக்கு என்னா இப்போ ? " ன்னு கேக்கறீங்களா ?! இனி என் தளத்திற்கு அமெரிக்காவிலிருந்து ஒரு வாசகன் இருக்கிறான் !

ஒரு பொன்மொழி(யாமாம்!)..

ஒரு  விஷயம் உன் பெற்றோருக்கு தெரியக் கூடாதென்று  நீ நினைக்கிறாய் என்றால், நீ தப்பு செய்து கொண்டிருக்கிறாய் என்று  அர்த்தம்! 


ஒரு எதிர்பார்ப்பு...



சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது, தமிழக அரசியல் களம். அடிக்கடி, கண்டனக் கூட்டங்களும், பட்ஜெட் விளக்கப் பொதுக் கூட்டங்களும் நடக்கத் தொடங்கியிருக்கின்றன. எனக்கு அரசியல் விவரம் தெரிந்து  (!) , நான் சந்திக்கும் முதல் சட்டப் பேரவை தேர்தல் வருகிற 2011  தேர்தல் தான் ! அதற்குள் எப்படியாவது, வாக்காளர் அடையாள அட்டை வாங்கிவிட வேண்டும்!

 *************************************************************************************************

முதலில் எழுதிய "அட"  விற்கான விடையையும், நகைச்சுவைக்கான விடையையும் அடுத்த இடுகையில் வெளியிடலாம் என நினைக்கிறேன். தங்களின் விடைகள் வரவேற்கப் படுகின்றன ! நான் நினைத்த விடைகளை சரியாக கணிப்பவர்களுக்கு,


















எந்த பரிசும் தர இயலாது ! மன்னிக்கவும்.
(சங்கமே அபராதத்துலதான் போய்கிட்டிருக்கு !!) 
;)

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...