" எது? நம்ம கவுண்டருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதா? யார் கொடுத்தாங்க ? எப்போ கொடுத்தாங்க ? " என்று கேள்விக் கணைகளுடன் நீங்கள் இந்த பதிவிற்கு வந்திருப்பது எனக்குப் புரிகிறது. இதெல்லாம் நாமளா செய்யறதுதாங்க ! அவர் ஆட்சியில் இருந்தாலாவது , மாதம் இரண்டு விருது வழங்கிக் கொள்வார். ஆனால் பாவம் , மனுஷன் ஆஸ்பத்திரியில்தானே இருக்கிறதா பேசிக்கறாங்க ?
ஆகவே," நம்ம கவுண்டருக்கு நாம விருது கொடுக்கலைனா , வேற யாரு கொடுக்கிறது ?! " என்று , நமது பதிவர் சங்கத்தின் (!) பொதுக் (?) குழுவில் கூடி முடிவு செய்தது போல , திருவாளர் கவுண்டமணி அவர்களுக்கு "வாழ் நாள் சாதனையாளர் " விருது வழங்குவதென ஒருமனதாக (?!) தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.
அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது பெற , என்னென்ன தகுதிகள் இருக்கிறது என்று நீங்கள் கேட்டீர்களேயானால் , என்னால் தர முடிந்த ஒரே பதில் , ( ஜெகத் இரட்சகனைப் போல !) " எங்க இஷ்டம் , நாங்க குடுப்போம் !". என்னுடைய சிறு வயதில், நான் 'கரகாட்டக் காரன் ' திரைப்ப் படத்தை மட்டும் கிட்டத் தட்ட 10 முறை பார்த்திருப்பேன் ! காரணம் நம்ம கவுண்டர் ஐயாவா அல்லது இளையராஜாவா என்பது இன்னும் எனக்கு புரியவில்லை.. அந்த வாழைப் பழ காமெடி சீனுக்காகவே படம் பார்க்கப் போனவன் நான் !
அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் TV கிடையாது. எங்காவது ,TV இருக்கிற வீடாகப் பார்த்து அந்த வீட்டின் வாசலிலேயே நின்று, கவுண்டருக்காகவே , கதவிடுக்கின் வழியாக எட்டிப் பார்த்து , திட்டு வாங்கியும் (என் வீட்டிலும் , அந்த TV வீட்டிலும் ) மீண்டும் மீண்டும் போய்ப் பார்த்திருக்கிறேன்.இதனாலேயே, என் அப்பா கரகாட்டக்காரன் ஆடியோ கேசட் வாங்கிவந்தார். கேசட் வாங்கியாச்சு சரி - TAPE RECORDER ? ஆம், கரகாட்டக் காரன் கேசட்டுக்காக ஒரு புது TAPE RECORDER வாங்க வைத்தவன் நான்! பால்யத்தில் மிகவும் விரும்பிப் பார்த்த கவுண்டமணி செந்தில் காமெடிகள் , பதின் வயதுகளில் எரிச்சலூட்ட்டக் கூடியவையாக இருந்தன. ஆனால், இப்போது மீண்டும் அவற்றையே விரும்புகிறேன் ! இதுதான் அவர்களின் வெற்றி !!
இதுவரை அவருக்கு பெரிய அளவிலான விருதுகள் எதுவும் வழங்கப் படவில்லை என்ற எனது ஆதங்கமே இந்த பதிவின் ஆரம்பம்.வாங்க, நாம எல்லோரும் சேர்ந்து கொடுப்போம் இந்த விருதை,
அவருடைய இடம் இன்னும் நிரப்பப் படாமலேயே இருக்கிறது.அதை நிரப்புவதும் கஷ்டம்.உண்மையில், அவர் ஒரு சாதனையாளர் தான் இல்லையா ?இனி அரசு விருதுகளில், சிறந்த நகைச்சுவை கலைஞர்களுக்கு "கவுண்டமணி விருது" வழங்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்! நீங்க என்ன சொல்றீங்க ?!
Subscribe to:
Post Comments (Atom)
மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)
கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...
-
எல்லோர் வீட்டிலும் ரிமோட் வைத்திருப்பீர்கள். அது, டிவி க்கு மட்டும் இருக்கும். அல்லது டிவிடி க்கு மட்டுமோ அல்லது, மியூசிக் பிளேயர்க்கு மட்...
-
நிறைய தமிழ் படங்களில் பார்த்திருப்பீர்கள் ! கதாநாயகனையோ அல்லது வில்லனையோ சூழ்ந்து கொண்டு ஒரு மன நல மருத்துவர் தன் கையால் காற்றில் வட்டமி...
-
டிஸ்கி : இந்த பதிவு, முழுவதும் நகைச்சுவைக்காகவே . சிரிப்பு வந்தால் சிரித்துவிட்டு போகவும். இல்லையேல் அப்படியே அடுத்த தளத்திற்கு போகவும். ...
ஆம் கண்டிப்பாக கவுண்டமணி அவர்களுக்கு தர வேண்டிய விருது தான்.
ReplyDeleteநண்பா உங்கள் எழுத்து நடை ரசிக்கும் படி உள்ளது
மிக்க நன்றி
@Arun....
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே.....
உண்மையில் மனதார பாராட்டவும் ஒரு மனது வேண்டும்... மிக்க நன்றி...
உண்மையில் கவுண்ட மணிக்கு பல விருதுகள் கொடுக்கபட்டிருக்க வேண்டும்.
ReplyDeleteடூப் வைத்து சண்டை போட்டு ஹீரோவாக பெயர்வாங்கி ஏதோ ஒரு நாதாரி பல்கலை கழகத்திலிருந்து
டாக்டர் பட்டம் வாங்கியதெல்லாம் இருக்கும் பொது,நகைசுவையில் மட்டுமல்லாது குணசித்திர நடிப்பிலும் பிரகாசித்து தமிழர்களின் அன்பையும் பாராட்டுதலையும் கொண்டவர்.
அவருக்கு நிச்சயம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவேண்டும் என்பதே அனைவரின் ஆசை. யார் தந்தாலும் தராவிட்டாலும் நாம் தருவோம்.
@கக்கு - மாணிக்கம்...
ReplyDelete//நகைசுவையில் மட்டுமல்லாது குணசித்திர நடிப்பிலும் பிரகாசித்து தமிழர்களின் அன்பையும் பாராட்டுதலையும் கொண்டவர்.//
நிச்சயம் நண்பரே !
//அவருக்கு நிச்சயம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவேண்டும் என்பதே அனைவரின் ஆசை. யார் தந்தாலும் தராவிட்டாலும் நாம் தருவோம். //
கூடிய சீக்கிரம் அனைவரின் ஆசையும் நிறைவேறும் என்று நம்புவோம் !
வ - த - ந - மீ - வ!