Saturday, July 17, 2010

10 ரூபாயில் ரிமோட் தயாரிப்பது எப்படி... ?

எல்லோர் வீட்டிலும் ரிமோட் வைத்திருப்பீர்கள்.
அது,  டிவி க்கு மட்டும் இருக்கும். அல்லது டிவிடி க்கு மட்டுமோ அல்லது, மியூசிக் பிளேயர்க்கு மட்டுமோ இருக்கும்.மிஞ்சிப் போனால் டிவி , டிவிடி , மியூசிக் பிளேயர் மூன்றுக்கும் சேர்த்து இருக்கும் !


 நாங்கள் எங்கள் வீட்டில் ஒரு புது ரிமோட் கண்டுபிடித்திருக்கிறோம் . இதனை எல்லாவிதமான சுவிட்சுகளுக்கும் பயன் படுத்தலாம்.

அந்த ரிமோட்டின் சிறப்பம்சங்கள் :

1 . விலை பத்து ரூபாய் முதல் இருபது ரூபாய் வரை.

2 . மின்சார செலவு கிடையாது.

3 . பேட்டரி (செல் ) போடத் தேவையில்லை.

4 .யாவரும் எளிதாக உபயோகிக்கலாம்.

5 .சர்வீஸ் செய்ய வேண்டிய அவசியமில்லை.

6 .டிவி, பிரிட்ஜ் , வாஷிங் மெஷின், தண்ணீர் மோட்டார்,பேன், மிக்சி, கிரைண்டர் என சகல வீட்டு உபயோக பொருட்களுக்கும் பயன் படுத்தலாம்.

குறைகள்:

1 . ஒரு மீட்டர் தூரம் வரையில்தான் 'சிக்னல்' கிடைக்கும்.

2 . உங்களுக்கு எத்தனை மீட்டர் தேவையோ அத்தனை 'ரிமோட்' வாங்க வேண்டியிருக்கும்.அல்லது உங்களுக்கு விருப்பப் பட்ட 'சைஸ்' ல வாங்க வேண்டும்.

3 .'உடையாமல்' பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வளவு சாதகங்களும், இத்துனூண்டு பாதகங்களும் நிறைந்த அந்த ரிமோட்டை அறிமுகம்  செய்வதில் நான் மிகுந்த பெருமை அடைகிறேன் !

இந்த ரிமோட்டை எங்க வீட்டுல , அம்மா 'அறிமுகம்' செய்த போது எடுத்த படம் உங்கள் பார்வைக்கு ,
இந்த ரிமோட்டிற்கு , தமிழ்நாடு மற்றும் இந்தியாவெங்கும் விற்பனையாளர்கள் வரவேற்கப் படுகிறார்கள். மேலும் தொடர்புக்கு ,

கெக்றான் மெக்றான் இன்னோவேசன்ஸ் அண்ட் இமேஜிநேசன்ஸ் ,
சென்னை குறுக்குத் தெரு,
தமிழ்நாடு (போஸ்ட்),
இந்தியா.குறிப்பு : இந்த அட்ரசுக்கு  எந்த ஆட்டோவும் வரமுடியாது !

38 comments:

 1. ஃபோன் நம்பர், ...ப்ளீஸ்


  http://vaarththai.wordpress.com

  ReplyDelete
 2. @soundr...
  டிரிபிள் ஜீரோ டபுள் ஜீரோ அல்லது டபுள் ஜீரோ டிரிபிள் ஜீரோ ....
  (சும்மா நகைச்சுவைக்காகத்தான், கோவிச்சுக்காதீங்க தலைவா !)
  வ - த - ந - மீ - வ

  ReplyDelete
 3. அந்த குச்சியாலேயே...

  ReplyDelete
 4. @ksurendran...
  எவ்ளோ கஷ்டப் பட்டு ரிமோட் கண்டு பிடிச்சிருக்கேன் ?!
  அதப் பொய் சாதாரணமா 'குச்சி' என்று கூறிய உங்களை
  வன்மையாகக் கண்டிக்கிறேன் !
  வ - த - ந - மீ - வ !

  ReplyDelete
 5. நா கூட ஏதோ நல்ல தொழிலா இருக்கும் போலன்னு படிச்சா கடைசில கண்ணுல ரத்தம் வந்துடுச்சுடா சாமி

  ReplyDelete
 6. @நா.மணிவண்ணன்...
  கண்ணுல ரத்தம் வராம இருக்க வேற ஒண்ணு கண்டு பிடிச்சிருக்கேன்.இந்த ரிமோட் வாங்குபவர்களுக்கு மட்டுமே அதன் விவரங்கள் அனுப்பப் படும்.
  மேலதிக தகவல்களுக்கு, மேலே உள்ள முகவரியை தொடர்பு கொள்ளவும்.
  அலுவலக நேரம், காலை 10 மணி முதல், அதே நாள் காலை 10 மணி வரை.
  வ - த - ந - மீ - வ !

  ReplyDelete
 7. புதுசா ஜீடி நாயுடு ஒருத்தர் வந்துட்டாரு ந்னு நினைச்சேன்.கடுப்படிச்சிட்டியேய்யா

  ReplyDelete
 8. என்னா ஒரு வில்லத்தனம்?அருமை

  ReplyDelete
 9. அட! ரூம் போடு யோசிபிங்கலோ...
  உங்கள.................................

  ReplyDelete
 10. தல, நீங்களுமா? எப்பதலிருந்து மொக்கை கூட்டணில சேர்ந்தீங்க

  ReplyDelete
 11. @ஆர்.கே.சதீஷ்குமார்...
  தங்களின் பின்னூட்டத்தில் 'கடுப்படிச்சிட்டியேய்யா' என்று உள்ளதை ,'கண்டுபிடுச்சிட்டியேயா' என்று மாற்றுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

  @சிபி.செந்தில்குமார்...
  இது வில்லத் தனம் இல்லை நண்பரே ! 'நல்லத்' தனம் !! :). நீங்க சென்னிமலை சிபி.செந்தில் குமாரா ?! ஆனந்த விகடனில் படித்திருக்கிறேன் !  @Arun...
  இது சாதாரணமா எனக்கு தோன்றியதுதான். நானெல்லாம் ரூம் போட்டு யோசிச்சா , நீங்களெல்லாம் தாங்க மாட்டீங்க சொல்லிபுட்டேன் !!

  @அருண் பிரசாத்...
  இதெல்லாம் , யாராவது கூப்பிட்டாதான் சேரணுமா என்ன ?! நாமளா சேர்ந்துக்க வேண்டியதுதான் தல!
  (என்னையும் , யாராவது மதிச்சு கூப்பிடுவாங்கன்னு நெனைக்கிறீங்க ?!)

  @அனைவருக்கும் ...
  வ - த - ந - மீ - வ !

  ReplyDelete
 12. நெனச்சேன் ! இந்தமாதிரி ஏதாவது இருக்குமுன்னு.

  நல்லாத்தான் இருக்கு.

  ReplyDelete
 13. @கக்கு - மாணிக்கம்...
  தங்கள் ஊக்கத்திற்கு நன்றி நண்பரே ...!:)
  வ - த - ந - மீ - வ !

  ReplyDelete
 14. இதுக்கு 10 ரூபாய் செலவு பண்ணுறது ஓவர். ஏதாவது மரத்துல இருந்து ஒடைச்சிக்க வேண்டியது தான

  ReplyDelete
 15. இந்த ரிமோட் குரங்கை ஆட வைக்கிற ரிமோட் ஆச்சே!!!பார்த்து பதமா இருங்க!! இதை அம்மா வேற மாதிரி யூஸ் பண்ணா உடம்பு புண்ணாப்போகும்!!!! இஃகி!! இஃகி!!!

  ReplyDelete
 16. @அருண் பிரசாத்...
  //இதுக்கு 10 ரூபாய் செலவு பண்ணுறது ஓவர். ஏதாவது மரத்துல இருந்து ஒடைச்சிக்க வேண்டியது தான //
  இதெல்லாம் மார்கெட்டிங் ரகசியம் தல.
  இப்புடி ஓப்பனா போட்டு ஒடைக்காதீங்க ...!
  உங்களுக்கு ஒரு ரிமோட் ப்ரீயா தரலாம்னு இருந்தேன்...
  இனி அது கிடையாது போங்க... :)

  வ - த - ந - மீ - வ !

  @தேவன் மாயம்...
  //இந்த ரிமோட் குரங்கை ஆட வைக்கிற ரிமோட் ஆச்சே!!!பார்த்து பதமா இருங்க!! இதை அம்மா வேற மாதிரி யூஸ் பண்ணா உடம்பு புண்ணாப்போகும்!!!! இஃகி!! இஃகி!!! ///
  அதுக்குதான் 1 மீட்டர் வரை மட்டுமே சிக்னல் வர்ற மாதிரி செட் பண்ணியிருக்கேன் !
  நமக்கும் , அம்மாவுக்கும் எப்பவும் 1 மீட்டர் கேப் இருக்குற மாதிரி பாத்துக்கிடணும் !தங்கள் ஊக்கத்திற்கு நன்றி நண்பரே ...!:)

  வ - த - ந - மீ - வ !

  ReplyDelete
 17. உமக்கு அடுத்த ஜென்மப் பிறப்பு தமிழகச் சாமியாராகக் கடவது.

  ReplyDelete
 18. @கிரி...
  //உமக்கு அடுத்த ஜென்மப் பிறப்பு தமிழகச் சாமியாராகக் கடவது. ///
  நான் என்ன அவ்வளவு புண்ணியமா செய்து விட்டேன் ?!
  வ - த - ந - மீ - வ !

  ReplyDelete
 19. கைல மாட்டினா அந்த ரிமோட்டாலா ஒரே போடு...

  ReplyDelete
 20. @அமுதா கிருஷ்ணா...
  //கைல மாட்டினா அந்த ரிமோட்டாலா ஒரே போடு... //
  பாத்து... ரிமோட் உடையாம பாத்துக்கிடுங்க...
  ஹி... ஹி...


  @【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║...
  //சூப்பர் ரிமோட். :)))//
  எதோ உங்களுக்காவது புரிஞ்சுதே...
  :) ;)

  @maruthu...
  //முடியலே!!!!!! ///
  இதுக்கேவா ?! இன்னும் எவ்வளவோ இருக்குங்க !!!

  @அனைவருக்கும் ...
  வ - த - ந - மீ - வ !

  ReplyDelete
 21. இந்த அட்ரசுக்கு எந்த ஆட்டோவும் வரமுடியாது - நேர்லயே தேடி வர்றோம் இருங்க பாய்...

  ReplyDelete
 22. @Kumar014...
  //நேர்லயே தேடி வர்றோம் இருங்க பாய்//
  நாங்கெல்லாம் சுர்ஜித் சிங்க் பர்னாலாவுக்கே டாட்டா காமிச்சவுங்க...
  (போன குடியரசு தினத்துல..!) எங்கிட்டயேவா ?!
  வாய்யா.... நீயா நானா பாத்துடலாம்..  (விஜய் டிவி ல ஞாயித்துக் கிழமை நைட்..)
  வ - த - ந - மீ - வ !


  @தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை...
  நன்றி நண்பா...!
  வ - த - ந - மீ - வ !

  ReplyDelete
 23. சூப்பர் ரிமோட்டுங்க!

  ReplyDelete
 24. அடுத்த மொக்கை என்ன ?

  ReplyDelete
 25. @வால்பையன்...
  வாங்க வாங்க...!
  வ - த - ந - மீ - வ !

  @நா.மணிவண்ணன்...
  //அடுத்த மொக்கை என்ன ? //
  ஹ்ம்ம்... கூடிய சீக்கிரம்....
  ;)

  ReplyDelete
 26. யோவ்!!! இந்த வார இடுகை எங்கையா?

  ReplyDelete
 27. ஹஹஹஹா , என்னமோ ஏதோனு வந்து பாத்தா...., கடைசில தொப்பி!!!!. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

  ReplyDelete
 28. @Arun...
  //யோவ்!!! இந்த வார இடுகை எங்கையா? //
  அதைத்தான் நானும் தேடிகிட்டிருக்கேன்.. ஹிஹிஹி :)
  வ - த - ந - மீ - வ !

  @Jey...
  வாங்க...வாங்க..
  வ - த - ந - மீ - வ !

  ReplyDelete
 29. காணவில்லை!!! காணவில்லை!!!
  கடந்த சில நாட்களாக இந்த ப்ளொகை எழுதிக்கொண்டு வந்த இந்த ப்ளாக் ஒவ்நெரை காணவில்லை என்று மிகுந்த வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறோம்.

  கண்டுபிடித்து தருவோருக்கு அவரின் கண்டுபிடிப்பான 10 ருபாய் ரிமோட் இலவசமாக வழங்கப்படும்

  ReplyDelete
 30. @Arun ...
  //
  காணவில்லை!!! காணவில்லை!!!
  கடந்த சில நாட்களாக இந்த ப்ளொகை எழுதிக்கொண்டு வந்த இந்த ப்ளாக் ஒவ்நெரை காணவில்லை என்று மிகுந்த வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறோம்.

  கண்டுபிடித்து தருவோருக்கு அவரின் கண்டுபிடிப்பான 10 ருபாய் ரிமோட் இலவசமாக வழங்கப்படும்
  //

  வந்துட்டோம்ல ?!

  ReplyDelete
 31. bhai unga kandupidipa kunnakudi koil adivarathu sedhuki vachiranga !!! UNGALUKU pinadi vara sandhadigal adha padichu therinchikitum !!

  ReplyDelete
 32. @gumkattai...
  //UNGALUKU pinadi vara sandhadigal adha padichu therinchikitum !! //
  ஹ்ம்ம்....
  வ - த - ந - மீ - வ !

  ReplyDelete
 33. தூக்கத்திலும் சிரிப்பு வரும், என்னே ஒரு காமெடி !

  ReplyDelete
 34. தூக்கத்திலும் சிரிப்பு வரும், என்னே ஒரு காமெடி !

  ReplyDelete
 35. நீ எல்லாம் நல்லா வருவாடா............

  ReplyDelete

போற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... !

தமிழில் பின்னூட்டமிட CLICKகுங்க....

Blog எழுதுறவன் மனுசன்னா ...
Follow பண்றவன்
பெரியமனுசன் ...

பெரிய மனுசங்க....

நான் எனது பள்ளி நாட்களின் இறுதியிலும், கல்லூரி நாட்களிலும் எழுத வேண்டுமென்று நினைத்த நாட்குறிப்பின் வெளிப்பாடுதான் இந்த வலை தளம்.சினிமா, அரசியல், கலை, விளையாட்டு தொடர்பான விஷயங்களை பகிர்ந்து கொள்ள எனக்கான இடம் (உங்களுக்குமானது தான் !).


(இன்னும் எத்தன பேர்டா கெளம்பி இருக்கீங்க ?!)

2011 சட்டசபைத் தேர்தலில் கூட்டணி எப்படி இருக்கும் ?

வ - த - ந - மீ - வ = வந்தமைக்கும் தந்தமைக்கும் நன்றி , மீண்டும் வருக !

தேசாந்திரி , அங்க பாரு...

தேசாந்திரி , அங்க பாரு...

வந்தார்கள் சென்றார்கள்...


நம்ம நிலைமையை பாருங்க!

Contact Us

Name

Email *

Message *