(மீள்பதிவு)
அன்பிற்குரிய சச்சின் அவர்களுக்கு, இந்தியாவிலுள்ள கோடிக்கணக்கான உங்கள் ரசிகர்களில் ஒருவர் எழுதிக் கொள்வது. இப்போது நடைபெற்றுவரும் DLF IPL 3 யில், நீங்கள் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறீர்கள்.வழக்கம் போல வாழ்த்துக்கள் ! ஆனால், முன்பு உங்களிடம் இருந்த அந்த பொறுமை, இப்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகின்றது போல் எனக்குத் தோன்றுகிறது. உங்களுக்கு அழகே, அந்த பொறுமைதானே ஐயா ? இந்த போட்டிகளை விட எத்தனையோ கடினமான, த்ரில்லிங்கான போட்டிகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் தானே ? இது என்ன சாதாரண IPL தானே ? இந்த பதிவை எழுத ஆரம்பிக்கும் போது நீங்கள் IPL 2010 FINAL விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். முடிவு என்னவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். ஒருவேளை, உங்கள் தலைமையிலான மும்பை அணி, தோற்றே போனாலும் கூட, உங்களை நாங்கள் பழைய சச்சின் டெண்டுல்கராகவே பார்க்க விரும்புகிறோம்.
அப்படி மும்பை இந்தியன்ஸ் அணி தோற்றுப் போனாலும், நீங்கள் என்றைக்குமே தோற்க மாட்டீர்கள் சச்சின் ! யாரவது உங்களுடன் போட்டி போட்டால்தானே தோற்பதற்கு ?!
நான் என் நண்பர்களிடம் அடிக்கடி சொல்லி பெருமைப் பட்டுக் கொள்வதுண்டு - இன்றைய கிரிக்கெட்டில் சச்சினைப் போல ஒரு ஜென்டில் மேன் வேறு யாருமில்லை என்று! ஆனால், நீங்கள் இவ்வளவு கோபப் பட்டு விளையாடி நாங்கள் பார்த்ததே இல்லையே ? உண்மையில் இது போன்ற போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயம் உங்களுக்கு உண்டென்பது எங்களுக்கும் தெரியும். இது ஒரு வகையில் உங்களைப் போன்ற மூத்த வீரர்களுக்கு மானப் பிரச்சனையாகவும் பார்க்கப் படுகிறது. என்னதான் இருந்தாலும் எங்களுக்கு இந்த சச்சின் வேண்டாம். பழைய சச்சினைக் கொடுங்கள் ! சர்வதேச போட்டிகளில் இருந்து நீங்கள் ஓய்வு பெறக் கூடாதென்பதை நாங்கள் எவ்வளவு விரும்புகிறோமோ , அதே அளவுக்கு நீங்கள் IPL இல் இருந்து கூடிய சீக்கிரம் ஓய்வு பெற்று விடுங்கள் என்று வேண்டிக்கொள்கிறோம் - உங்களை முழு இந்தியாவிற்குமானவராக ஏற்றுக் கொண்டு விட்ட பிறகு !
ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகனின் கனவு, வருகின்ற 2011 இல் உலகக் கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என்பது. ( 2011 ல நாங்க எத்தனைதான் எதிர்பார்க்கிறது ? தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார் என்பதற்கும் இதே ஆண்டுதான் , பதிலை வைத்துக் கொண்டிருக்கிறது ! ) அதிலும் உங்கள் பங்களிப்பு அதிகம் இருக்க வேண்டுமென்பது ! இந்த IPL கருமத்தைஎல்லாம் விட்டு விட்டு வெளியே வாருங்கள். உங்களின் ஒவ்வொரு சிங்கிள் ரன்னிற்கும் விசிலடிக்க கோடி இந்திய மக்கள் காத்திருக்கிறார்கள் !
2011 நம்ம கையிலே, சந்திப்போண்டா தோழா நாம WORLD CUP ல !
சர்வதேச போட்டிகளில் இருந்து நீங்கள் ஓய்வு பெறக் கூடாதென்பதை நாங்கள் எவ்வளவு விரும்புகிறோமோ , அதே அளவுக்கு நீங்கள் IPL இல் இருந்து கூடிய சீக்கிரம் ஓய்வு பெற்று விடுங்கள் என்று வேண்டிக்கொள்கிறோம் //
ReplyDeleteநானும் வழிமொழிகிறேன்.
@கே. ஆர்.விஜயன்
ReplyDeleteவாங்க சார்,
வருகைக்கு நன்றி.மீண்டும் வருக !