Saturday, November 19, 2011

கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் விரைவில் இடமாற்றம் ?!

முன் குறிப்பு : முழுவதும் கற்பனையே, யாரையும் புண்படுத்த அல்ல!


நேற்று அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பின் சாராம்சம் :
கிண்டி கத்திப்பாராவில் செயல் பட்டு வரும், பெரிய மேம்பாலம் விரைவில் இட மாற்றம் செய்யப் பட உள்ளது. புதிய கத்திப்பாரா மேம்பாலம் , சென்னைக்கு மிக அருகில் உள்ள திண்டிவனத்திற்கு மாற்றம் செய்யப் படுகிறது.( சென்னையில் இருந்து, திண்டிவனத்திற்கு அடிக்கடி பருந்து வசதி உள்ளது !). தற்போது உள்ள மேம்பாலம், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விளையாடுவதற்கான 'சறுக்கல்' ஆக, மாற்றம் செய்யப் படும். இதன் மூலம், இந்தியாவிலேயே, ஏன், உலகிலேயே குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் பொழுதுபோக்கில், தமிழகம் முன்னோடியாகத் திகழும்.


                         நன்றி - புகைப்பட உதவி : www.picasaweb.google.com

டிஸ்கி : சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு அண்ணா நூற்றாண்டு நூலகம் இடமாற்றம் செய்யப்படும் என்கிற அறிவிப்பின் 'பாதிப்பு' தான் இந்த பதிவு.

==========================================================================

இருக்கிற மருத்துவமனைகளின் நிலைமையை சீராக்கினாலே, தமிழகம் குழந்தைகள்  நலனில் மட்டுமல்ல, அனைவரின் நலனிலும் முன்னோடியாகத் திகழும் என்பதே என் எண்ணம்.அதை விடுத்து, 'இத அங்கவை , அத இங்கவை ' என்று 'மாற்று அரசியல்'  செய்வதை மக்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள்.
எதற்கும் இடமாற்றம் செய்வதற்கு முன் ஒருமுறை பார்த்து விடலாம் என்று கடந்த வாரம் நானும், நண்பனும் போயிருந்தோம்.



                       நன்றி - புகைப்பட உதவி - www.annacentenarylibrary.blogspot.com 

ஒரு அரசு நூலகத்திற்கான எந்த ஒரு 'அறிகுறியும்' இன்றி, அட்டகாசமாக இருந்தது. ஒவ்வொரு தளமாக சுற்றிப்பார்க்கவே நான்கு மணி நேரம் ஆகிற்று.
மேலும் அங்கிருந்த வருகையர் பதிவேட்டில், எல்லாரும் நூலக மாற்றம் தேவையற்றது என்றுதான் எழுதியிருந்தார்கள். அத்துணை பெரும் திமுக வைச் சேர்ந்தவர்களாக இருக்க வாய்ப்புகள் குறைவுதானே ?! ஒருவர் எழுதியிருந்தது, "நாங்கள் விரும்பியது ஆட்சி மாற்றம் தான் - நூலக மாற்றம் இல்லை " !


சட்டப் பேரவையை இடமாற்றம் செவதில் ஒரு லாஜிக் இருக்கிறது. (அது சரியா தவறா என்பது வேறு விஷயம் !) . நீங்கள் அங்கு போவீர்கள், வருவீர்கள். நூலகத்திற்கு நீங்கள் வருவது சாத்தியமா என்ன ?! இருந்துவிட்டுத்தான் போகட்டுமே ?!



2 comments:

  1. கலக்கல் பதிவு சரியான சவுக்கடி!

    நன்றி! த ம ஓ 1
    நம்வலைவழி வாருங்கள்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  2. @புலவர் சா இராமாநுசம்...
    வருகைக்கு நன்றி ஐயா...
    நிச்சயம் வருகிறேன் !
    வ - த - ந - மீ - வ!!!

    ReplyDelete

போற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... !

தமிழில் பின்னூட்டமிட CLICKகுங்க....

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...