Sunday, May 30, 2010

இப்போ உங்களுக்கு வயசு 13... நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க ?

நிறைய தமிழ் படங்களில் பார்த்திருப்பீர்கள் ! கதாநாயகனையோ அல்லது வில்லனையோ சூழ்ந்து கொண்டு  ஒரு மன நல மருத்துவர்  தன் கையால்  காற்றில் வட்டமிட்டுக் கொண்டே, "இப்போ உங்களுக்கு வயசு 13 . இப்போ நீங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க ? " என்பது மாதிரியான கேள்விகளை கேட்டுக் கொண்டிருப்பார் ! அவ்வாறு , எனது  பால்யத்தை திடீரென்று ஞாபகப் படுத்திய ஒரு மின்னஞ்சல் இது. வெறும் புகைப் படங்களாகத்தான் வந்தது . அங்கங்கே , என்னுடைய 'கை வண்ணம்' ( வசனங்கள் தான் !)  கோர்த்து ( டேய் !) இங்கு வடித்துள்ளேன் ! (டேய் டேய் !!)

மின்னஞ்சல் அனுப்பிய நண்பருக்கு நன்றிகள் !

 ******************************************************************************************************************

சில விஷயங்கள் , ஒரு புகைப்படம் போல மனதில் பதிந்து விடுகின்றன இல்லையா? அதுபோன்று நம்முடைய பால்யத்தில் நம் மனதில் பதிந்து, இப்போது புதைந்து போன சில விஷயங்களை ஞாபகப் படுத்தும் ஒரு முயற்சியாக இந்த இடுகை... (சூப்பர் பில்ட் அப்பு ! )

1 . மூன்றாம் வகுப்பு வரை ,என் பள்ளிக் கூட வாழ்கையின் முக்கிய குறிக்கோளே , ஒரு INK பேனா வாங்க வேண்டுமென்பதுதான் ! இதற்காக, பள்ளியில் கட்டாயப் படுத்துகிறார்கள் என்று பொய் கூட சொல்லியிருக்கிறேன். அப்போதெல்லாம், எல்லோர் வீட்டிலும் INK பாட்டில் இருக்காது. நாங்களெல்லாம் , எங்கள் பள்ளிக் கூடத்திற்கு முன்னாடி இருக்கும் 'செல்லா ஸ்டோர்ஸ்' இல் , 10 பைசாவிற்கு BRIL INK நிரப்பிக் கொள்வோம். புதியதாக பேனா வாங்குபவர்களுக்கு INK இலவசம் !



2 . பள்ளிக் கூட ஆரம்ப  நாட்களில், புதியதாக வாங்கிய நோட்டு புத்தகங்களுக்கு அட்டை போட்டு, LABEL ஓட்டுவது ஒரு கலை ! எங்களூரில், 'ஜெயந்தி ஸ்டூடியோஸ்' இல் தரும் இலவச லேபில்களே என்னுடைய பெரும்பான்மையான அட்டைகளை ஆக்கிரமித்திருக்கும் ! எல்லாவற்றையும் ஓட்டுவது இந்த CAMEL GUM மூலம்தான் !



3 . CHEAP அண்ட் BEST என்றால், அந்த வயதில் ரெனால்ட்ஸ் பேனாதான் ! ஒரு பேனா வாங்கினால், குறைந்தது ஆறு மாதங்களுக்கு தாங்கும் ! (அப்போதெல்லாம், நான் இந்த அளவிற்கு 'எழுத்தாளன்' (!) இல்லீங்க ! ). அப்பிடி காலியானாலும், ரீபில்  மட்டும்தான் வாங்குவோம் ! பழைய BODY யை , அது  விரிசல் விட்டிருந்தாலும் , செல்லோ டேப் போட்டு ஒட்டி உபயோகிப்போம் !



4 . BALL POINT பேனாவிலிருந்து , INK பேனாவிற்கு மாறுவது ஒரு சந்தோஷமென்றால் , INK பேனாவிலிருந்து HERO பேனாவிற்கு மாறுவது அதைவிட சந்தோசம் ! உண்மையில், என் வகுப்பில் யார் HERO பேனா வைத்திருக்கிறானோ , அவன்தான் HERO !


5 .எங்கள் வீட்டில், வருடத்திற்கு ஒரு GEOMENTRY  BOX எல்லாம் வாங்கித் தர முடியாது !
ஒன்று வாங்கினால், அது அப்படியே 'அடுத்த வாரிசுக்கு' தரப் படும் ! எப்படியும் கணிதப் பாடத்திற்கு மட்டும் தான் தேவை என்பதால், இண்டர்வல்களிலும், உணவு இடைவேளைகளிலும் , மாற்றி மாற்றி உபயோகம் செய்வதும் நடக்கும். இப்போதும், ஏதாவது GEOMENTRY பாக்ஸ் பார்த்தால், அதை , 'கடித்துத்' திறந்தது ஞாபகத்திற்கு வருகிறது , அல்லது, கடித்துத்   திறந்து பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது !
மேலும் GEOMNTRY BOX என்றாலே அப்போது (இப்போதும் ?!)  NATRAJ தான் !



6 . நாம் பள்ளி வாழ்க்கையில் , பேனாவிற்கு நிகராக அல்லது அதிகமாக பயன் படுத்தியது  பென்சிலாகதான் இருக்க வேண்டும் ! என்னுடைய பால்யத்தில் , 1 ரூபாய்க்கு NATRAJ பென்சில் கிடைக்கும் ! NATRAJ பென்சில் சிகப்பும் கருப்பும் கலந்து இருக்கும் ! SHARPNER மூலம் சீவிய பிறகு இருக்கும் குப்பையை (?) எங்கள் புத்தகத்தில் சேமித்து வைப்போம் !


7 . என் பதின் வயதுகளில் , பள்ளிக் கூடமற்ற நேரங்களில் , என்னுடன் எப்போதும் இருப்பது  பக்கத்துக்கு வீட்டின் TAPE RECORDER தான்.எப்போதும், MGR தத்துவப் பாடல்களும், சிவாஜி சோகப் பாடல்களும் , 80 களில் வந்த இளைய ராஜா பாடல்களனைத்தும் ஒலித்துக் கொண்டிருக்கும்! நமக்கு தேவையான பாடல்களை கடைகளுக்கு எழுதிக் கொடுத்தால், பக்கத்திற்கு 6 பாடல்கள் என்று 12 பாடல்கள் பதிந்து தருவார்கள் !


8 . இதே போன்று VIDEO கேசெட். சுருக்கமாக 'டெக்' என்று சொல்வோம் ! பணக்கார கல்யாண வீடுகளில் மட்டுமே காணக் கிடைக்கும் ஒரு பொருள் !எங்கள் ஊரில், ஊர்மக்கள் அனைவரும் சேர்ந்து பணம் திரட்டி 'மாட்டுக் கார வேலன்' உம், 'கவுரவம்' உம் , VIDEO வாடகைக்கு எடுத்து பார்த்தோம் !


9 . கணினி துறை சம்பந்தமான பொருட்களில் , கணினிக்கும் முன்பே , எனக்கு பரிச்சயமானது FLOPPY தான். இதற்குள் எப்படி தகவலை சேமிக்கிறார்கள் என்று ஆச்சர்யமாகத் தோன்றும் ! 10 வருடங்களுக்கு முன்பு, ஆச்சர்யமளித்த ஒரு பொருள் ,இப்போது  OUT OF FASHION அல்லது OUT OF PASSION ஆகி விட்டது !




10 . புகைப் படங்கள் எப்போதும் ஆச்சர்யமளிப்பவை ! கூடவே , கேமராவும் ! நம் கண்களில் காணும் உலகத்திற்கும் , கேமரா வழியே காணும் உலகத்திற்கும் வித்தியாசங்கள் அதிகமிருப்பதாக உணர்கிறேன் நான் ! அதன் வழியே காணும் உலகம் அழகானதைத் தோன்றும் எனக்கு ! உங்களுக்கு ?!



11 . அப்போதெல்லாம்,  வீடுகளின் பொருளாதாரத்தை, அந்த வீட்டில் தொலைபேசி இருக்கிறதா இல்லையா என்பதை வைத்தே தீர்மானிக்கப் படுவதாக நினைத்திருக்கிறேன் ! எங்கள் வீட்டிற்கு தொலை பேசி இணைப்பு கொடுத்ததை , ஒரு பண்டிகையைப் போல கொண்டாடியிருக்கிறோம் ! ஏதேனும் அழைப்பு வந்தால், அதை எடுப்பதில் எங்களுக்குள் சண்டையே நடக்கும் ! ஆனால், இப்போது செல்லிடப் பேசி ( CELL PHONE ) இல்லாத வாழ்க்கையை நினைத்துப்  பார்க்கவே பயமாக இருக்கிறது !



12 . தொலை பேசி இல்லாத காலங்களில் ,தபால் காரரின் வருகைக்கு காத்திருப்பது சுகமான ஒரு விஷயம் ! இன்றும் பண்டிகை தவறாமல் அஞ்சல் அட்டையில் வாழ்த்து அனுப்பும் பெரியப்பா , அப்போது மாதமொருமுறை கடிதம் எழுதுவார் ! பிறகு, முழு ஆண்டு தேர்வு முடிந்து , தேர்வு முடிவுகளும் POST CARD மூலமாகத்தான் ! 'தேர்ச்சி பெற்றுள்ளான் ' என்று , எங்கள் தமிழ் ஆசிரியை எழுதி அனுப்பிய கடிதத்தை பார்த்தவுடன் , நம் பதிவிற்கு 1000 பின்னூட்டங்கள் வந்தது போன்று ஒரு மகிழ்ச்சியிருக்கும் !அப்போது  தபால் காரர் , குடும்பத்தில் ஒருவரை போன்று நெருக்கமானவரை இருந்தார்! இன்று, கடிதங்களையோ அல்லது தபால்காரர்களையோ பார்க்க முடிவதில்லை , அல்லது நாம் கடிதங்கள் எழுதுவதில்லை ! நீங்கள் கடைசியாய் யாருக்கு , எப்பொழுது கடிதம் எழுதி அதை POST செய்தீர்கள் என்று நினைவிருக்கிறதா ?!



 மேலும்  சில  புகைப்படங்கள் , பால்யத்தில் நான் உபயோகிக்காத , எனக்கு பரிச்சயமில்லாத பொருட்கள். இவை தொடர்பான உங்களின் , ஆட்டோ கிராப் கள் வரவேற்கப் படுகின்றன .







சிறந்த ஆட்டோகிராப்புகளுக்கு இந்த நூற்றாண்டின் சிறந்த BIKE பரிசாக வழங்கப் படும். மாதிரி BIKE கீழே !







 



போட்டியில் பங்கு பெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ! படத்தை பெரிதாக்க , CLICK பண்ணி பாருங்கள் ! நன்றி !!
 
(குறிப்பு : ஒருவேளை உங்களுக்கு பரிசு கிடைத்தால் , உங்களின் DRIVING லைசென்சையும் கொண்டு வரவும் !)

9 comments:

  1. நான் ஏழாவது படித்த போது முதல் முதல் இந்த பிக் fun bubblegum வந்தது. எங்கள் வகுப்புக்கு வந்து கான்வாஸ் செய்து ரன் சேர்பவர்களுக்கு பரிசு பொருள் தரப்படும் என அறிவித்தனர். ரன் சேர்பதற்காக மற்ற மாணவர்களுடன் விளையாண்ட பூவா! தலையா! இன்னமும் நினைவில் . இந்த ஹீரோ பேனாவை கடைசி வரை என்னால் வாங்கவே முடியவில்லை. இப்போது நாட்டம் விட்டு விட்டது. இருப்பினும் எதையாவது தேடிக் கொண்டே இருக்கிறது மனது.
    கோல்ட் ஸ்பாட், லவ் ஒ ! சோடா மூடிகள் தான் எங்கள் பைகளை நிரப்பி இருக்கும் எப்போதும்.

    ReplyDelete
  2. @நாளும் நலமே விளையட்டும்....
    எங்கள் வீட்டில் பபுள் கம் சாப்பிடுவது,ஒரு பெருங்குற்றமாக கருதப் பட்டதால், அதன்
    மீதிருந்த ஆர்வமே போய் விட்டது !
    வந்தமைக்கும் தந்தமைக்கும் நன்றி... மீண்டும் வருக !

    ReplyDelete
  3. புதிய நோட், புக் , களின் வாசனை ...அப்புறம் அந்த nylon மிக்கி மௌஸ் படம் போட்ட ரப்பர் ...புத்தகங்களினூடே இருக்கும் மயிலிறகு ....எல்லாம் ஒரு முறை என்னை பள்ளிக்கூட அறைகளுக்குள் அழைத்து சென்று விட்டன ....நன்றி நண்பரே !!!

    ReplyDelete
  4. மிக அருமை நண்பரே இது போன்றவை தான் நான் எதிர்பார்த்தேன்.
    The build up was nice and your post deserves it.
    Thanks a lot for taking me to my school days.
    Really felt nice.

    ReplyDelete
  5. @ பிரின்ஸ்...
    வந்தமைக்கும் தந்தமைக்கும் நன்றி... மீண்டும் வருக !

    @Arun..
    //The build up was nice and your post deserves it.//
    ரொம்ப நன்றிங்க...
    தங்களின் தொடர்ச்சியான ஊக்கத்திற்கு நன்றி நண்பரே...
    மீண்டும் வருக...

    ReplyDelete
  6. Mail la english la padichen. Desandhiri tamil la kalakiteenga...

    ReplyDelete
  7. அருமையான நினைவுகள் அதெல்லாம்...உங்க பதிவு பழைய நியாபகத்தைக் கிளறும் விதமாகவே இருக்கு...நன்றிகள்....

    ReplyDelete
  8. @பிரியமுடன் ரமேஷ்...
    ஊக்கத்திற்கு நன்றி நண்பரே...
    //.உங்க பதிவு பழைய நியாபகத்தைக் கிளறும் விதமாகவே இருக்கு///
    சந்தோஷம்...

    வ - த - ந - மீ - வ !

    ReplyDelete

போற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... !

தமிழில் பின்னூட்டமிட CLICKகுங்க....

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...