Wednesday, November 11, 2009

ஒரு ஆட்டோ கிராப்...




கடந்த ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ணகிரி வரை போயிருந்தேன்.என்னுடன் பனிரெண்டு வருடம் கூட படித்தவனுடைய ( !) அண்ணனுக்கு கல்யாணம் என்றால் போகாமல் இருக்க முடியுமா ?

முதலில் என்னுடன், நண்பனுடன் வேலை செய்யும் இருவர் வருவதாக இருந்தது.இருவரும் தெலுங்குக் காரர்கள்.தமிழ் பேசத் தெரியாது. மழை காரணமாக ஒருவர் வரமுடியவில்லை(தப்பித்தார் !) .

வெள்ளிக்கிழமை இரவு ஆரம்பித்த மழை சனிக்கிழைமை நாங்கள் ரயில் ஏறும் வரையிலும் குறையாமல் பெய்து கொண்டிருந்தது.இருந்தாலும் மழையின் மீது துளி வெறுப்பும் வரவில்லை.மாறாக மழையில் நனைவதை மனம் விரும்பத்தான் செய்தது. ஆனால் இப்பொழுதெல்லாம் மழையில் நனைபவர்களை பார்ப்பதே அரிதாகி விட்டது. யாருக்குமே மழையில் நனைய விருப்பம் இருப்பதில்லையா என்ன? நனைந்தால் உடல் நலம் பாதிக்கும் என்ற பயம்தான் காரணம் போலும் !

சென்னை முதல் ஆம்பூர் வரை ரயில், பின்பு அங்கிருந்து கிருஷ்ணகிரி வரை பேருந்து பயணம். நேரமாகிக் கொண்டே போனதால் உட்கார இடமில்லையென்றாலும், ஏறி ஒருவழியாக எழு மணி ரிசப்சனுக்கு( இந்திய நேரப்படி !)எட்டு மணிக்கு போய்சேர்ந்தோம்.

வீட்டிற்கு தொலை பேசிய போது அன்று இரவு வரை சென்னையில் மழை பெய்ததாக சொன்னார்கள்.

எனது பால்யத்தின் சுவடுகள் இந்த ஊரில்தான் பதிந்திருக்கின்றன.இதை எனது சொந்த ஊர் என்று சொல்லலாமா என்று தெரியவில்லை. ஒருவருக்கு சொந்த வீடு இருந்தால் ஒரு ஊர் சொந்த ஊராகுமா ? அல்லது சொந்த பந்தங்கள் இருந்தால் ஒரு ஊர் சொந்த ஊராகுமா? என்றால் இந்த இரண்டுமே எனக்கு இங்கு இல்லை. இருந்தாலும் யாரவது என்னிடம் ' உங்க சொந்த ஊர் எது ? ' என்று கேட்கும் போது, முதலில் என் ஞாபகத்திற்கு வருவது , கிருஷ்ணகிரி தான்.

நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக்கூடத்து நண்பர்களை சந்திக்கும் ஆவலுடன் தான் எனது இந்த பயணம் ஆரம்பித்தது. கிட்டத்தட்ட இருபது பேர் வந்தார்கள். ரெண்டு பேர் மிலிடரி, ரெண்டு பேர் டாக்டர், ரெண்டு பேர் சுயதொழில் என்று ஆளாளுக்கு ஒரு வேலையில் இருக்கிறார்கள். கொஞ்ச பேர் தந்தையாகி இருந்தார்கள்.அந்த ஊரிலேயே வேலை பார்ப்பவர்களை பார்த்து கொஞ்சம் பொறாமையும் வந்தது !

திருமணம் முடிந்து மதியம் லன்ச் ஐயும் முடித்துக் கொண்டு , பேருந்திலேயே கிளம்பி மீண்டும் சென்னை வந்து சேர்ந்தோம்.வந்தவுடன் மழை மீண்டும் பொழிய ஆரம்பித்திருந்தது.



1 comment:

  1. நாங்கள் ரயில் ஏறும் வரையிலும்
    -- Adhu dhaana paathaen... Yennada K'giri ku train vittuttangala-nu... Appuram thaan therinjadhu
    சென்னை முதல் ஆம்பூர் வரை ரயில், பின்பு அங்கிருந்து கிருஷ்ணகிரி வரை பேருந்து பயணம்...

    ReplyDelete

போற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... !

தமிழில் பின்னூட்டமிட CLICKகுங்க....

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...