Monday, April 26, 2010

சச்சின் டெண்டுல்கருக்கு ஒரு பகிரங்கக் கடிதம்...

அன்பிற்குரிய சச்சின் அவர்களுக்கு,



        இந்தியாவிலுள்ள கோடிக்கணக்கான  உங்கள்  ரசிகர்களில் ஒருவர் எழுதிக் கொள்வது. இப்போது  நடைபெற்றுவரும் DLF IPL 3 யில், நீங்கள் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறீர்கள்.வழக்கம் போல வாழ்த்துக்கள் ! ஆனால், முன்பு  உங்களிடம் இருந்த அந்த பொறுமை, இப்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகின்றது போல் எனக்குத் தோன்றுகிறது. உங்களுக்கு அழகே, அந்த பொறுமைதானே ஐயா ? இந்த போட்டிகளை விட எத்தனையோ கடினமான, த்ரில்லிங்கான போட்டிகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் தானே ? இது என்ன சாதாரண IPL தானே ? இந்த பதிவை எழுத  ஆரம்பிக்கும் போது நீங்கள் IPL 2010 FINAL  விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். முடிவு என்னவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். ஒருவேளை, உங்கள் தலைமையிலான மும்பை அணி, தோற்றே  போனாலும் கூட, உங்களை நாங்கள் பழைய சச்சின் டெண்டுல்கராகவே பார்க்க விரும்புகிறோம்.



அப்படி மும்பை இந்தியன்ஸ் அணி தோற்றுப் போனாலும், நீங்கள் என்றைக்குமே தோற்க மாட்டீர்கள் சச்சின் ! யாரவது உங்களுடன் போட்டி போட்டால்தானே தோற்பதற்கு ?!
நான் என் நண்பர்களிடம் அடிக்கடி  சொல்லி பெருமைப் பட்டுக் கொள்வதுண்டு - இன்றைய கிரிக்கெட்டில் சச்சினைப் போல ஒரு ஜென்டில் மேன் வேறு யாருமில்லை என்று! ஆனால், நீங்கள் இவ்வளவு கோபப்  பட்டு விளையாடி நாங்கள் பார்த்ததே இல்லையே ? உண்மையில் இது போன்ற போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயம் உங்களுக்கு உண்டென்பது எங்களுக்கும் தெரியும். இது ஒரு வகையில் உங்களைப் போன்ற மூத்த வீரர்களுக்கு மானப் பிரச்சனையாகவும் பார்க்கப் படுகிறது. என்னதான் இருந்தாலும் எங்களுக்கு இந்த சச்சின் வேண்டாம். பழைய சச்சினைக் கொடுங்கள் ! சர்வதேச போட்டிகளில் இருந்து நீங்கள் ஓய்வு பெறக் கூடாதென்பதை நாங்கள் எவ்வளவு விரும்புகிறோமோ , அதே அளவுக்கு நீங்கள் IPL இல் இருந்து கூடிய சீக்கிரம் ஓய்வு பெற்று விடுங்கள் என்று வேண்டிக்கொள்கிறோம் -  உங்களை முழு இந்தியாவிற்குமானவராக ஏற்றுக் கொண்டு விட்ட பிறகு !



ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகனின் கனவு, வருகின்ற 2011  இல் உலகக் கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என்பது. ( 2011 ல நாங்க எத்தனைதான் எதிர்பார்க்கிறது ? தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார் என்பதற்கும் இதே ஆண்டுதான் , பதிலை வைத்துக் கொண்டிருக்கிறது ! ) அதிலும் உங்கள் பங்களிப்பு அதிகம் இருக்க வேண்டுமென்பது ! இந்த IPL கருமத்தைஎல்லாம் விட்டு விட்டு வெளியே வாருங்கள். உங்களின் ஒவ்வொரு சிங்கிள் ரன்னிற்கும் விசிலடிக்க கோடி இந்திய  மக்கள் காத்திருக்கிறார்கள் !



 2011 நம்ம கையிலே,  சந்திப்போண்டா  தோழா நாம WORLD CUP ல !

7 comments:

  1. U r correct... I saw the angry in Sachin's eyes when his team mates are getting out in today's match.We want gentleman Sachin...

    ReplyDelete
  2. Super Sankar... Kala kara.. wonderful comment.U have became an professional writer.Congrats.

    ReplyDelete
  3. ஆம்.. சச்சின் முழு இந்தியாவிற்கும் பொதுவானவர்.. அவரை பிரித்து பார்க்க வைக்கும் ஐ.பி.எல் சச்சினுக்கு தேவையில்லை
    என்ற உங்கள் கருத்துடன் முழுமையாக ஒத்துப்போகிறேன்..

    ReplyDelete
  4. நன்றாக சொன்னீர்

    ReplyDelete
  5. நல்ல பதிவு. ஐ.பி.எல்லில் சச்சின் தன ஒழுக்கமான ஆட்டத்தை தானே வெளிப்படுத்தினார். ஏன் எங்காவது தவரிளைத்தாரா எனக்குத் தெரியாது எனவே தெளிவு படுத்த முடியுமா?

    ReplyDelete
  6. @Jegankumar.SP,@Venkatesh
    ஆம் நண்பரே ! வருகைக்கும் தருகைக்கும் நன்றி.
    மீண்டும் வருக.

    @sweetheart
    நன்றி கோபி.

    @நாடோடித்தோழன்
    இதுவும் ஒரு வகையில் , IPL பற்றிய உங்களது பதிவுடன் தொடர்புடையதுதான் நண்பரே.


    @SShathiesh-சதீஷ்,
    அவருடைய ஆட்டத்தில் வழக்கம் போல எந்த குறையும் இல்லை நண்பரே! குறிப்பாக, அபிஷேக் நாயர் ரன் அவுட் ஆகும்போது அவர் கோபத்தின் உச்சிக்கே சென்று BAT ஆல் தரையை ஓங்கி அடித்தார்.மேலும், அவர் கிளவுசில் பந்து பட்டு CATCH ஆனது , அவருக்கு தெரிந்தும் ,நடுவர் 'நாட் அவுட்' சொன்னவுடன் அதை மறுக்காமல், களத்திலேயே இருந்து விட்டார் (இது என் நண்பன் சொன்னது.நான் MATCH முழுதாக பார்க்கவில்லை .YOU TUBE இல் பார்த்தல் தெரியும் என நினைக்கிறேன் ).நான் அவரை குறை சொல்ல வில்லை. வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாயம் அவருக்கு ! தங்களின் முதல் வருகைக்கும் தருகைக்கும் நன்றி நண்பரே, மீண்டும் வருக !

    ReplyDelete
  7. ya.. u r correct sankar.. We want the old Sachin.. Even I supported Mumbai instead of Chennai as I am a big fan of Sachin... Very Nice Sankar.. Nee engayo Poita !!!!

    ReplyDelete

போற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... !

தமிழில் பின்னூட்டமிட CLICKகுங்க....

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...