எங்கேயோ கேட்ட ஞாபகமா ?!
வானொலியுடனான எனது நட்பை குறித்த இடுகை இது.
நன்றி - புகைப்பட உதவி: www.abagond.wordpress.com
பால்யத்தில், அடிக்கடி தஞ்சாவூருக்கு எங்கள் தாத்தாவைப் பார்க்க போவதுண்டு. 75 - 80 வயது இருக்கும் அவருக்கு.எப்போதும் கையில் ஒரு TRANSISTOR வைத்திருப்பார். மெதுவாக ஒலித்துக் கொண்டே இருக்கும் அந்த TRANSISTOR தான் அவரின் பெரும்பாலான நேரங்களில் துணையாக இருக்கும் - பாட்டி இறந்த பின்பு !கூடவே ஒரு பெரிய ரேடியோவும் வைத்திருப்பார். செய்திகள் வரும் நேரங்களில் ,அதனை TUNE செய்வது தான் "சக" பேரப்பிள்ளைகளின் வேலை. எல்லா அலைவரிசைகளிலும் எந்தெந்த நேரங்களில் செய்திகள் வரும் என்பதை மனப் பாடமாக தெரிந்து வைத்திருந்தார் .
நன்றி - புகைப்பட உதவி : www.jamthechannel.com
அதனை கேட்டுக் கொண்டே தூங்கியும் விடுவார். "சரி தூங்கி விட்டாரே" , என்றெண்ணி ரேடியோவை OFF செய்தால், உடனே விழித்துக் கொள்வார் ! பல முதியவர்களின் உற்ற தோழனாய் இருந்து கொண்டிருந்தது வானொலிதான். அதனுடனான நெருக்கத்தை, அவர்கள் தொலைக் காட்சியுடன் கொண்டிருக்கவில்லை !
என் சிறுவயதில், வானொலியில் திரைப் படங்களை வசனத் தொகுப்பாக ஒலி பரப்புவார்கள்.இப்போதும், "தெய்வ மகன்" படத்தை பற்றி நினைக்கும் போதெல்லாம், அதன் வசனத் தொகுப்பைக் கேட்ட அந்த மாலைப் பொழுது , மனதில் மீள் பதிவாகிறது ! இப்போதெல்லாம் , வானொலி என்றாலே FM ஞாபகம் தான் வருகிறது !கொஞ்ச நாட்களாக தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
நன்றி - புகைப்பட உதவி : www.blog.emman.in
சென்னை வந்த புதிதில் , FM கேட்பது என்பது புதிய அனுபவத்தைக் தரக் கூடியதாய் இருந்தது. அப்போதெல்லாம் , தனியார் நிறுவன FM களை கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால், இப்போது அரசு வானொலியின் ஒரு பிரிவான FM ரெயின்போ 101 .4 தான் எனது விருப்பம் ! தொகுப்பாளர்கள் , ஏதோ நம் அண்டை வீட்டுக் காரர்கள் போல் உணரவைக்கிறார்கள் ! மணிக்கொரு முறை செய்திச் சுருக்கம் , அடிக்கடி பழைய பாடல்கள் என நெருக்கமாயிருக்கிறது ! 105 .6 பண்பலை, மாலை நேரங்களில் நல்ல நாடகங்களை ஒளிபரப்புகிறார்கள் . 102 .3 FM கோல்டில் , விரிவான செய்திகள் கேட்கலாம். பணி முடிந்து, கூட்டமில்லா மாநகரப் பேருந்தின் சன்னலோர இருக்கை கிடைத்தால், அந்த பயணத்தில் நிச்சய தோழன் 101.4 FM ரெயின்போ தான் !
காலப் போக்கில் , "MODERN ஆக்குகிறேன்" என்ற பெயரில் இது போன்ற வானொலி சேவைகளின் பழமையை மாற்றாமலிருக்க வேண்டும் ! எங்கள் வீட்டில் பழைய CASSET கள் நிறைய உண்டு ! ஆனால், 'பல' முறை பழுது பார்த்தும் , மீண்டும் மீண்டும் பழுதாகிக் கொண்டேஇருந்தது ! சரி ஒரு புது TAPE ரெகார்டர் வாங்கலாமென்று, ஒரு 15 கடைகளில் ஏறி இறங்கியிருப்பேன் ! எங்குமே கிடைக்கவில்லை !
நன்றி - புகைப்பட உதவி: www.sony.lv
ஒருமுறை, என் தந்தை, "உங்களைப் பார்க்க ஊருக்கு வருகிறேன் , ஏதாவது வாங்கி வர வேண்டுமா" என்று தாத்தாவை கேட்டதற்கு - "ஒரு TRANSISTOR மட்டும் வாங்கிட்டு வாடா !" என்றார். சில வருடங்களில் தாத்தா இறந்தும் விட்டார் ! அவர் வைத்திருந்த இரண்டு TRANSISTOR களும், ஒரு பெரிய ரேடியோவும் பழுதாகிப் போயிருந்தன ! இப்போது அந்த வீட்டில் யாரும் வானொலி கேட்பதில்லை. அதனைப் பழுது பார்க்க, யாரும் விரும்புவதுமில்லை, யாருக்கும் நேரமுமில்லை ! ஆனால், வானொலியானது, தன் அலைகளை காற்றில் பறக்கவிட்ட படியேதானிருக்கிறது , அதனைக் கேட்பவர்கள்தான் குறைந்து விட்டார்கள் !
Subscribe to:
Post Comments (Atom)
மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)
கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...
-
எல்லோர் வீட்டிலும் ரிமோட் வைத்திருப்பீர்கள். அது, டிவி க்கு மட்டும் இருக்கும். அல்லது டிவிடி க்கு மட்டுமோ அல்லது, மியூசிக் பிளேயர்க்கு மட்...
-
நிறைய தமிழ் படங்களில் பார்த்திருப்பீர்கள் ! கதாநாயகனையோ அல்லது வில்லனையோ சூழ்ந்து கொண்டு ஒரு மன நல மருத்துவர் தன் கையால் காற்றில் வட்டமி...
-
டிஸ்கி : இந்த பதிவு, முழுவதும் நகைச்சுவைக்காகவே . சிரிப்பு வந்தால் சிரித்துவிட்டு போகவும். இல்லையேல் அப்படியே அடுத்த தளத்திற்கு போகவும். ...
இரவு 11மணிக்கு சென்னை சூரியன் எஃப்ம் ல் யாழ் சுதாகர் கேளுங்க பாஸ் ரேடியோ பிடிக்கும்
ReplyDeleteபழைய நினைவுகளை புதுபித்தமைக்கு நன்றி
ReplyDeleteஅருமை ...........
அது ஒரு காலம் .
ReplyDelete@nellai அண்ணாச்சி...
ReplyDelete//இரவு 11மணிக்கு சென்னை சூரியன் எஃப்ம் ல் யாழ் சுதாகர் கேளுங்க பாஸ் ரேடியோ பிடிக்கும்//
ஹ்ம்ம்... கேப்போம் அண்ணாச்சி....
ஆனா எங்க அம்மாவுக்கு சூரியன் FM ல ராஜ சேகர் பண்ற நிகழ்ச்சி ரொம்ப புடிக்கும்...
வ - த - ந - மீ - வ!!!
@உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com)...
//பழைய நினைவுகளை புதுபித்தமைக்கு நன்றி
அருமை ...........//
வாங்க உலவு...
ஊக்கத்திற்கு நன்றி...
வ - த - ந - மீ - வ!!!
@நா.மணிவண்ணன்...
//அது ஒரு காலம்//
ஹ்ம்ம்... ஒரு TIME MACHINE இருந்தால், அந்த காலத்துலயே பொய் செட்டில் ஆகிடுவேன் !
வ - த - ந - மீ - வ!!!