Saturday, December 18, 2010

ஸ்பெக்ட்ரம் ஸ்பெஷல் - 1

டிஸ்கி : இந்த இடுகை முழுவதும் நகைச்சுவைக்காகவே.
யார் மனதையும் புண்படுத்த அல்ல !
 
இந்தியாவில் இப்போதைய "ஹாட்" டாபிக் - ஸ்பெக்ட்ரம் தான் ! இது போன்றதொரு 'நிகழ்வு' மன்னர் (இராஜ ராஜ சோழன் அல்ல !) காலத்தில் நிகழ்ந்திருந்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையின் விளைவே இவ்விடுகை !

                                         நன்றி - புகைப்பட உதவி : www.serpholicmedia.com

ஆனால் அப்போதுதான் ஸ்பெக்ட்ரம் இல்லையே ?! அது இல்லாட்டி என்ன , எப்படியும் தூது விட புறா வாங்கித் தானே ஆகணும் ?!

=====================================================================================

"மந்திரி தான் புறா விற்றதில் எந்த ஊழலும் நடக்க வில்லை என்கிறாரா ?"

"ஆமாம், தான் செய்த அனைத்தும் மன்னருக்கு தெரிவித்து விட்டுதான் செய்ததாக சொல்கிறார் !"

=====================================================================================

"மந்திரி , தன் பதவியை இராஜினாமா செய்து விட்டாராமே ?!"

"ஆமாம் ."

"ஆனால், கடந்த மாதம் , தான் ஊழலே செய்ய வில்லை என்று சொன்னாரே ?!"

"ம்ம்... கேட்டால், 'அது போனா மாசம், இது இந்த மாசம் ' என்கிறார் !"

=====================================================================================

புறா விற்றதில் , இதற்கு முன்னாள் இருந்த மந்திரிகள் என்ன வழிமுறைகள் பின்பற்றினார்களோ , அந்த வழி முறைகளைத்தான் நானும் பின் பற்றினேன் என்பதை அவையோருக்கு சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன் !

=====================================================================================

                                    நன்றி - புகைப்பட உதவி :  http://oratorgreat.blogspot.com/

" மன்னர் ஏன் திடீரென்று செல் போன் கனெக்ஷனை துண்டித்து விட்டு, 200 தீப்பெட்டிகளும், நூலும் ஆர்டர் செய்துள்ளார் ?! "

"செல் போனில் பேசினால் ஒட்டுக் கேட்கிறார்களாம் ! அதனால், இனிமேல் தீப்பெட்டித் தொலை பேசி மூலம் தான் பேசுவாராம் !"

 =====================================================================================
 "மன்னர் செம கடுப்புல இருக்கார் போல ?!"

"ஏன் , என்ன ஆச்சு ?!"

" 'தந்தையே, ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன ?' என்று இளவரசர் கேட்டதற்கு , 'ம்ம்ம்..வெங்காயம்' ன்னு பதில் சொல்றார்!"

6 comments:

  1. ஹா ஹா நல்லாயிருக்கு.. நல்லா தான் கற்பனை பண்றீங்க...

    ReplyDelete
  2. வாங்க வெறும்பய ....
    ஊக்கத்திற்கு நன்றி...!
    வ - த - ந - மீ - வ !

    ReplyDelete
  3. செம காமெடிங்க . நீங்க டிஸ்கி போடாமே இருந்துருக்கலாம் .அப்ப கூட அவிங்களுக்கு ஒரைக்காதுங்க

    ReplyDelete
  4. வாங்க மணி...
    //செம காமெடிங்க . நீங்க டிஸ்கி போடாமே இருந்துருக்கலாம் .அப்ப கூட அவிங்களுக்கு ஒரைக்காதுங்க//
    ஹ்ம்ம்...
    வ - த - ந - மீ - வ !

    ReplyDelete
  5. ஜோக்ஸ் நல்லாயிருக்குங்க... தீப்பெட்டி ஜோக் அருமை.

    ReplyDelete
  6. @பாரத்... பாரதி...
    ஊக்கத்திற்கு நன்றி நண்பரே !
    //ஜோக்ஸ் நல்லாயிருக்குங்க... தீப்பெட்டி ஜோக் அருமை.//
    முயற்சி வெற்றி பெற்றதென்று நினைக்கிறேன் !
    வ - த - ந - மீ - வ !

    ReplyDelete

போற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... !

தமிழில் பின்னூட்டமிட CLICKகுங்க....

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...