ஒச்சரிக்கை, ச்சீ... எச்சரிக்கை : தீவிர அரசியல் பார்வையாளர்கள் , அப்படியே அடுத்த வலைப்பதிவிற்கு போவது நல்லது ! ஏதோ எனக்குத் தெரிந்த அரசியல் இதுதான்,இவ்வளவுதான் ! இடுகையைப் படித்து விட்டு கடுப்பானால், அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல !
வந்தாச்சு தேர்தல் ஆண்டு ! வாக்காளர்களுக்கு கொண்டாட்டம்தான் ! ஆடுகள் தான் பாவம் ! தேர்தலில் வெற்றிபெற வேண்டிய 'முஸ்தீபுகள்' குறித்து தலைவர்கள் திட்டம் தீட்ட ஆரம்பித்திருப்பார்கள் !
"எல்லாம் சரி , கேப்டன் எங்க போவார் ?! " - பெரும்பாலான வாக்காளர்களின் மனதில் இப்போது இருக்கும் கேள்வி இதுதான் ! கட்சி ஆரம்பித்து கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் ஆகப்போகிறது. நிறைய தேர்தல்களை சந்தித்து விட்டார் கேப்டன். வர இருக்கிற தேர்தல், யாருக்கு திருப்பு முனையாக இருக்கிறதோ இல்லையோ , அவரது அரசியல் வாழ்க்கையில் முக்கியமான தேர்தல் தான் ! எனவே தனது கட்சிக்கு இன்னும் கொஞ்சம் அதிகமான MLA க்கள் தேவை என்பதை உணர்ந்திருப்பார். மேடை தோறும் "திமுக மீண்டும் ஆட்சிக்கு வர விட மாட்டேன் " என்று கூறி வருகிறார் !
நன்றி - புகைப்பட உதவி - www.indiasummary.com
நாளை சேலத்தில் தேமுதிக வின் 'மக்கள் உரிமை மீட்பு மாநாடு' நடைபெற இருக்கிறது.அநேகமாக இந்த மாநாட்டிலேயே தனது "மக்கள் கூட்டணி" யை உறுதி செய்து விடுவார் என்று நினைக்கிறேன் ! கொஞ்ச நாட்களாக நடக்கும் நிகழ்ச்சிகளும் அதைத்தான் உணர்த்துகின்றன !
'திடீரென்று' கேப்டன் டிவி பேட்டிகளில் ,
சுப்பிரமணியம் சுவாமி வருகிறார்,
சோ வருகிறார் ,
நாஞ்சில் சம்பத் வருகிறார்,
தா பாண்டியன் வருகிறார்,
ராம கிருஷ்ணன் வருகிறார் !
ஆம், கிட்டத் தட்ட 'ஜெ'வைத் தவிர்த்து அனைத்து "தோழமை"க் கட்சி பிரதிநிதிகளும் வருகின்றார்கள் !
நன்றி - புகைப்பட உதவி - www.transcurrents.com
இன்று மாலை கூட, "மாலை மலரில் தேமுதிக சார்பில், அதிமுக தலைமையை விமர்சித்து வந்த விளம்பரத்திற்கும் , தேமுதிக விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை " என்று அவசர அறிக்கை வருகிறது , கேப்டனிடமிருந்து !
ஆக, கேப்டன் போயஸ் தோட்டம் பக்கம் வருகிறார் என்றுதான் தோன்றுகிறது! இந்த தேர்தல் சற்று 'இன்டரஸ்டிங்' காகவே இருக்கும் என்று நம்புகிறேன்.ஒருவேளை , நம்ம கணிப்பு சரியாக இருந்து, தேர்தலில் இந்த கூட்டணி வெற்றி பெற்றால், துணை முதல்வராக கேப்டன் வருவாரோ என்னவோ ?! பார்ப்போம் !
No comments:
Post a Comment
போற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... !
தமிழில் பின்னூட்டமிட CLICKகுங்க....