Friday, January 15, 2010

ஆயிரத்தில் ஒருவன்...





நீண்ட எதிர்பார்ப்புகளுக்கும் , நிறைய போராட்டங்களுக்கும் பிறகு , ஒரு வழியாக இந்த பொங்கலன்று "ஆயிரத்தில் ஒருவன்" ரிலீஸ் ஆகிவிட்டது. நேற்று இரவே, என் நண்பன் படத்திற்கு போயிட்டு வந்து , 'கதையே புரியலடா' ன்னு சொல்ல ஆரம்பிச்சான். ஆனா அவன்கிட்டயும் 'கதை புரியலன்னாலும் பரவால்ல , என்கிட்டே சொல்லாத' ன்னு , நம்ம கொள்கையை ( ! ) நிலை நிறுத்தி விட்டு , இன்று பிற்பகல் ஷோவிற்கு சென்றேன். எங்கயா ? வழக்கம் போல திருவான்மியூர் தியாகராஜாவிற்குதான் !

கேட்டிற்கு வெளியே , டிக்கெட்டை பிளாக் கில் விற்று கொண்டிருந்தார்கள். ஒருவேளை , கவுண்ட்டரில் டிக்கெட் கிடைக்காதோ என்று உள்ளே போனால் , கவுண்ட்டரில் கூட்டமே இல்லை ! ஆனால் நாற்பது ருபாய் டிக்கெட்டை, தியேட்டர் காரர்களே நாற்பத்தைந்து ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்தார்கள். நல்ல வேளை , நான் உள்ளே போகும் வரை படம் ஆரம்பிக்க வில்லை. சில பல விளம்பரங்களுக்குப் பிறகு இனிதே படத்தை ஆரம்பித்தார்கள்.

என்னுடைய விமர்சனங்களில் , படத்தின் கதையை ஒருபோதும் சொல்லக் கூடாது என்று முடிவு செய்து வைத்திருக்கிறேன். இதுவரையும் அப்படித்தான். படம் ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே , திரைக்கதை , வேறு பாதையில் பயணிக்க ஆரம்பித்து விடுகிறது. காடுகளும், ஆபத்துகளும் நிறைந்த பாதை அது. இதுவரை , தமிழ் சினிமா பயணிக்காத பாதையும் கூட ( எனக்குத் தெரிந்து ) ! இப்படி ஒரு படத்தைத் தயாரிப்பதற்கு , முன்வந்த தயாரிப்பாளர் மிகவும் பாராட்டிற்கு உரியவர்.

கார்த்தி யின் இரண்டாவது படமிது ! அவ்வளவாக வசனங்களுக்கு வேலையில்லாததால் , வசனம் பேசும் சில இடங்களிலும் ' பருத்தி வீரன் ' வெளிப்படுகிறான். ஆண்ட்ரியாவும் , ரீமாசென்னும் கார்த்திக்கு சமமான கதாபாத்திரங்களில் மிகக் கச்சிதமாக பொருந்துகிறார்கள். படத்தின் பெரும்பாலான காட்சிகளுக்கு கிராபிக்ஸ் உதவி இருக்கிறது. ஆனால் , இயல்பான காட்சிகளுடன் பொருந்தி விடுவதால் சுவாரஸ்யம் குறைவதில்லை !

ராம்ஜி யின் ஒளிப்பதிவு படத்தின் மிகப் பெரும் பலம். வெவ்வேறு காலங்களில் , பயணிக்கும் கேமரா , நம்மையும் அந்தந்த காலங்களுக்கு கூட்டிச் செல்கின்றது. ராம்ஜிக்கு ' ஆயிரம் பொற்காசுகள் ' பரிசளிக்கலாம். அடுத்த படியாக, ஜி. வி . பிரகாஷ் குமார் ! செல்வராகவன் - யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியின் , வேதியியல் ( அட , கெமிஸ்ட்ரி தாங்க) இந்த புதிய கூட்டணிக்கும் இருக்குமா என்று கேட்டவர்களுக்கு, நல்ல பதில் சொல்லியிருக்கிறார் ஜி.வி ! வாழ்த்துக்கள் !
இந்த கூட்டணி , " மாலை நேரத்து மயக்கம் " வரை தொடர்கிறது.

அப்புறம் , பார்த்திபனைப் பற்றி சொல்ல மறந்துட்டேனே ?! என்னத்த சொல்றது , நீங்களே படத்துல பாருங்க. பிரமாதம். முதலில் பார்த்திபன் கதாபாத்திரத்தில், தனுஷ் இருப்பதாக இருந்தது. நல்ல வேளை , தனுஷ் தப்பித்தார் ! நாமும் !! அந்த இடத்தில் , தனுஷை கற்பனை செய்து பார்ப்பதே சற்று கடினமானதாக இருக்கிறது.

படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது , அருகில் என் இருந்த ஒருவர் " ஓம் மேல ஆசைதான் " பாடலை , தனது செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருக்கும் போது , திரையரங்க ஊழியர்கள் வந்து செல்போனை 'பறி'முதல் செய்தனர். இந்த நேர்மை , டிக்கட் கவுண்ட்டரிலும் இருந்திருந்தால் பரவாயில்லை !

நண்பன் சொன்னது போல் , எனக்கும் கதை முழுமையாக புரியவில்லை. அதனால் என்ன ? இசையைப் புரிந்திராதவர்கள் கச்சேரிகளுக்குப் போவதில்லையா ? சில விஷயங்களுக்கு புரிதலைக் காட்டிலும் , பிடித்தல் தான் முக்கியம்.

எல்லாம் சரி , படம் எப்படி ?
என் பக்கத்துக்கு சீட்டில் இருந்தவர் அடித்த கமன்ட் -

" ங்கோ ...... படத்த என்னமா எடுத்திருக்காண்டா !!! ".

என் கருத்தும் கிட்டத் தட்ட இதைப் போன்றதுதான் !

20 comments:

  1. உங்களுக்கெல்லாம் நெஜமாவே ரொம்ப பெரிய மனசு. ஒரு மொக்க படத்த இப்படி மாஞ்சி மாஞ்சி விமர்சனம் பண்றிங்களே..

    ReplyDelete
  2. /கேட்டிற்கு வெளியே , டிக்கெட்டை பிளாக் கில் விற்று கொண்டிருந்தார்கள். ஒருவேளை , கவுண்ட்டரில் டிக்கெட் கிடைக்காதோ என்று உள்ளே போனால் , கவுண்ட்டரில் கூட்டமே இல்லை ! ஆனால் நாற்பது ருபாய் டிக்கெட்டை, தியேட்டர் காரர்களே நாற்பத்தைந்து ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்தார்கள்.//

    ithu நிஜமா..

    ReplyDelete
  3. @ மக்கு பிளாஸ்திரி...
    எனக்குத் தெரிந்து நான் பார்த்த தமிழ்ப் படங்களிலேயே மிகப் பிரம்மாண்டமானது இதுதான் நண்பரே... படத்தின் திரைக் கதை சற்று குழப்பமாக இருந்தாலும், இப்படிப் பட்ட முயற்சிக்காகவே படக் குழுவினரை பாராட்டலாம் , இல்லையா ? வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ! மீண்டும் வருக !!!

    ReplyDelete
  4. ஹ்ம்ம் ... கண்டிப்பா தமிழ் சினிமாவில் இந்த படம் மிகபெரிய மையில்கல். விமர்சனம் நன்றாக இருக்கிறது .

    ReplyDelete
  5. @ ரோமியோ...
    வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ! மீண்டும் வருக !!!

    ReplyDelete
  6. @ கேபிள் சங்கர்...
    நிஜமாதாங்க.... நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.
    நேத்திக்கே எங்கண்ணன் போனாப்புல.. அப்பவும் கவுன்ட்டருல கூட்டமில்லையாம்! இங்க இருக்குறவுக எல்லாம் நாலு நாள் லீவுக்கு சொந்த ஊருக்கு போயிருப்ப்பாங்க. திங்கக் கிழமைல இருந்து கொஞ்சம் கூட்டம் வரும்னு நம்பலாம் !

    வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ! மீண்டும் வருக !!!

    ReplyDelete
  7. ஆயிரந்தான் இருந்தாலும் இத்தனை கோடி செலவு பண்ணி வித்தியாசமான ஒரு முயற்சி பண்ணியிருக்காங்க அதற்காகவாவது பார்க்கலாம் இல்லையா? தயாரிப்பாளர் போட்ட காச எடுப்பாரா?

    ReplyDelete
  8. @cena
    நிச்சயம் பார்க்கலாம் ...... (படத்துக்கு நான் கியாரண்டி !!!)
    கண்டிப்பா போட்ட காச எடுத்துருவார் .... எடுக்கணும் ! இல்லையென்றால், இது போன்ற படங்களை இனிமேல் தமிழில் எதிர் பார்க்க முடியாது !
    வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ! மீண்டும் வருக !!!

    ReplyDelete
  9. naanum padam parkanumnu try panren sankar.. aana inga padam release agala...

    ReplyDelete
  10. @ கும் கட்டை...
    உண்மையிலேயே இது , செல்வாவின் புதிய மற்றும் தைரியமான முயற்சிதான் பரணி. கண்டிப்பாக படத்தை பார் !

    ReplyDelete
  11. விமர்சனம் நல்லா இருக்கு.. கண்டிப்பா பார்க்குறோம்ங்க..

    ReplyDelete
  12. @ திவ்யா ஹரி...
    நிச்சயம் பார்க்க வேண்டிய படம் தான் ! பாருங்கள் !!
    வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ! மீண்டும் வருக !!!

    ReplyDelete
  13. Yesterday i saw this movie in satyam... Really very nice and "Must Watch" movie. Excellent effort by AO team.

    ReplyDelete
  14. @ Kandaiya...
    வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ! மீண்டும் வருக !!!

    ReplyDelete
  15. Enna Katha purilyalaya.. enga neega news paper pakkurathu illa ya... tamil ppl in srilanka...
    tamil ppl in some island... oru mitpu kulu poguthu... ithukku appuram naa yethu solla pa...
    cbi oppisers ellam naa paperla pakka than asaptturean... :D....

    Review was really good...

    ReplyDelete
  16. @manivasagam

    படத்தின் இரண்டாவது பாதியில் சில காட்சிகள் இலங்கைத் தமிழர்களை ஞாபகப்படுத்தியது என்னவோ உண்மைதான்...

    வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ! மீண்டும் வருக !!!

    ReplyDelete
  17. நிச்சயமாக இந்த திரைப்படம் ஒரு மிக சிறந்த படைப்பு.. இத்தகைய விமர்சனங்கள் இது போன்ற படத்திற்கு ஊக்கமளிக்கும் ஒன்றாக இருக்கும்.. உழைப்பு படம் முழுவதும் தெரிகிறது..

    ReplyDelete
  18. @SincerelyFriend
    ஆம் நண்பரே....
    வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ! மீண்டும் வருக !!!

    ReplyDelete
  19. நான் அதிசயித்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று!!!
    வழமையாக திரைக்கு வரும் படங்களில் இருந்து வேறுபட்டதான திரைக்கதையமைப்பைக்கொண்டதொரு திரைப்படம் இது.இவை மாதிரியான படங்கள் மென்மேலும் வரவேண்டும். இந்த மாதிரியான படங்கள் தமிழ் திரைப்பட வரலாற்றினை வேறு பரிமாணத்தில் இட்டுச்செல்வது மாத்திரமல்லாது அதன் தரத்தையும் உயர்த்துகிறது என்பது உண்மையே!!!

    மற்றும் “தேசாந்திரி” ( ஐயா ) அவர்களுக்கும் எனது இதயம் பரவசப்படும் வாழ்த்துகள்....
    பதிவுகள் சிலவற்றை இன்று பார்வையிட்டேன். பிரமாதம்.....

    ReplyDelete
  20. @RAVIKARAN GOKULRAJH...

    //இந்த மாதிரியான படங்கள் தமிழ் திரைப்பட வரலாற்றினை வேறு பரிமாணத்தில் இட்டுச்செல்வது மாத்திரமல்லாது அதன் தரத்தையும் உயர்த்துகிறது என்பது உண்மையே!!!//

    நீங்கள் சொல்வது உண்மைதான் நண்பரே !
    ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் எடுக்கப் போவதாக, ஒரு பேட்டியில் செல்வராகவன் கூறியிருப்பதாக ஞாபகம் !
    வ - த - ந - மீ - வ !

    //“தேசாந்திரி” ( ஐயா ) அவர்களுக்கும் எனது இதயம் பரவசப்படும் வாழ்த்துகள்....
    பதிவுகள் சிலவற்றை இன்று பார்வையிட்டேன். பிரமாதம்..... ///

    வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே ! உங்களைப் போன்றவர்களின் வாழ்த்துக்கள்தான் என்னை ஊக்கப் படுத்துகின்றன !
    நன்றி!

    ReplyDelete

போற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... !

தமிழில் பின்னூட்டமிட CLICKகுங்க....

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...