Saturday, February 19, 2011

நடுநிசி நாய்கள் - சிறப்பு சிறுகதை

ஒவ்வொரு இரவும் பணிமுடித்து காலத் தாமதமாக வீடு திரும்புவது என்பது எங்கள் வேலைக்கே உள்ள 'சிறப்பம்சம்'. ஆம், நான் ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன்.

சிலநாட்கள், 10 மணி,சிலநாட்கள் 12 மணி.அல்லது அடுத்தநாள் காலை 3 அல்லது 4 மணி. பெண்கள் என்றால், CAB ஏற்பாடு செய்து விடுவார்கள்.எனக்கு , சொந்தமாக ஒரு BIKE உண்டு. ஊரில் அப்பா வாங்கி வைத்திருந்தது. அதை நான் எடுத்துக் கொண்டு , அவருக்கு ஒரு புது TVS 50 வாங்கிக் கொடுத்து விட்டேன். வயசாகி விட்டதால், GEAR வண்டி ஓட்ட வேண்டாம் என்று சொல்லி வைத்திருக்கிறேன்.


இரவு தாமதமாக வந்தாலும், TRAFFIC போலீஸ் எங்களை எதுவும் கேட்க மாட்டார்கள். அதிகாலை 3 மணி ஆனாலும், சட்டையை IN பண்ணிக் கொண்டும், ID CARD ஐ, வெளியில் தெரியும் படி  மாட்டிக் கொண்டு வருவோம். அவர்களும் கணித்து விடுவார்கள். சிலசமயம் 100 - 200 கொடுப்பதுண்டு.

மெயின் ரோட்டில் வரும்போதெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்லை. உள்ளே தெருவில் நுழைந்து விட்டால், 'அவர்களின்' ஆட்டம் ஆரம்பமாகிவிடும். கூட்டமாக நின்று கொண்டு வருவோர் போவோரை மிரட்டிக்  கொண்டு  இருப்பார்கள். பெண்கள் CAB இல் சென்று விடுவதால் பிரச்சினை இல்லை.கூடவே SECURITY GAURD வேறு இருப்பார்கள்.என்னைப் போன்ற மென்பொருள் 'இளைஞர்களுக்கு' தான் கஷ்டம்.


கொஞ்சம் தைரிய சாலியாக இருந்தால் , நின்று  முறைத்துப் பார்க்கலாம். அவர்கள் திரும்பிப் போய் விடுவார்கள்.அல்லது நாம் கூட்டமாக இருக்க வேண்டும்.அப்போது அவர்கள் கொஞ்சம் பயப்படுவார்கள். ஒருத்தன் சவுண்டு கொடுத்தால் போதும், சுத்தி இருக்கிற எல்லாரும் சேர்ந்து கொள்வார்கள். இவர்களைத் தட்டிக் கேட்க ஆட்களே இல்லையா ?



இவர்களால் எத்தனை பேர் ACCIDENT ஆகியிருக்கிறார்கள் ?! எத்தனை மரணங்கள் ?! எத்தனை காயங்கள் ?! ஏன் இப்படி ?! இனியும் பொறுத்திருக்கக் கூடாது.திருப்பி அடிக்க வேண்டும்.

ஆஹா, இன்றும் லேட் ஆகிவிட்டதே ?!
பயம் என்னை ஆட்கொள்ள ஆரம்பித்தது. எவ்வளவு வேகமாக வண்டியை ஓட்டினாலும், துரத்திக் கொண்டே வருவார்களே ?! "இன்றோடு நான் பயந்து ஓடுவது கடைசியாக இருக்க வேண்டும்" , என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். HELMET போட்டுக் கொண்டு வண்டி ஓட்டினால், அவர்களின் கோபம் இன்னும் அதிகமாகி விடும்.

நாளை காலை முதல் வேலையாக இதைப் பற்றி புகார் சொல்லியாக வேண்டும். அல்லது அனைத்துப் பத்திரிக்கைகளுக்கும் செய்தியாவது அனுப்ப வேண்டும். நல்ல வேலை இன்று வெள்ளிக் கிழமை. நாளை ஆபீஸ் கிடையாது. இதுதான்  தக்க சமயம்.ACT NOW !

"என் சமூகத்திற்கு நான்" செய்யும் சிறு அல்லது பேரு உதவி இதுவாக இருக்கக் கூடும்!

சனிக்கிழமை காலை 11 மணி.
என் மொபைல் போனில் இருந்து சுழற்றினேன் - அல்லது கால் செய்தேன்.
1913 

"ஹலோ , சென்னை கார்பொரேசன் ?! நான் இங்க அடையார்ல இருந்து பேசறேன். தெரு நாய்கள் பத்தி கம்ப்ளைன்ட் பண்ணனும் ! ஒரே டார்ச்சரா இருக்கு சார் ! கொஞ்சம் CONNECT பண்றீங்களா ?!"



(நன்றி - கதைத்  தலைப்பு உதவி - கவுதம் வாசுதேவ மேனன் , புகைப்பட உதவி - www.tamilvix.com, http://www.flickr.com/photos/kxp130/229446264/)


9 comments:

  1. எல்லா ஊர்லயும் இப்படிதான் இருக்கு

    ReplyDelete
  2. @nellai அண்ணாச்சி...
    வாங்க அண்ணாச்சி...
    வ - த - ந - மீ - வ!!!

    ReplyDelete
  3. பையில் எப்போதும் சிறு கற்களை வைத்து இருங்கள், எறிய வேண்டாம், பயம் காட்ட

    ReplyDelete
  4. @ராம்ஜி_யாஹூ...
    ஹ்ம்ம்.. முயற்சி பண்ணி பார்க்கணும்.
    நாம ஓடினாதான் அவனுங்க தொறத்துவாங்க...
    நாம நின்னா அவங்களும் பயப்படுவாங்க.
    வ - த - ந - மீ - வ!!!

    ReplyDelete
  5. //ஹலோ , சென்னை கார்பொரேசன் ?! நான் இங்க அடையார்ல இருந்து பேசறேன். தெரு நாய்கள் பத்தி கம்ப்ளைன்ட் பண்ணனும் ! ஒரே டார்ச்சரா இருக்கு சார் ! கொஞ்சம் CONNECT பண்றீங்களா ?!"//

    இது சூப்பர்.... ஹிஹி

    :)

    ReplyDelete
  6. @மாணவன்...
    வாங்க மாணவன்...
    வ - த - ந - மீ - வ!!!

    ReplyDelete
  7. Yov yennaya idhu 'வ-த-ந-மீ-வ' ??

    ReplyDelete
  8. அதான் சைடு பார்ல "EXPLANATION" குடுதிருக்கேனேயா !
    பாக்கலையா ?!
    வ - த - ந - மீ - வ!!!

    ReplyDelete

போற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... !

தமிழில் பின்னூட்டமிட CLICKகுங்க....

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...