Saturday, March 26, 2011

2016 - தேர்தல் அறிக்கை இதோ... (பதிவர்களுக்கு பரிசு மழை !)

நமக்கு எவ்வளவோ உதவிகள் செய்திருக்கும் நம்ம அரசியல் கட்சிகளுக்கு, நாம ஏதாவது செஞ்சிருக்கோமா ?! ன்னு யோசிச்சு பார்த்தப்ப தான், சரி இந்த தேர்தலை விட்டுடுவோம். வரப்போற 2016 சட்டமன்ற தேர்தலுக்கு , நானே ஒரு அறிக்கை தயார் பண்ணி குடுக்கலாம்னு ! நம்மாலான சிறு உதவி !

( முழுவதும் நகைச்சுவைக்காகவே ! யார் மனதையும் புண்படுத்த அல்ல ! )


# ஆறாம் வகுப்பு முதல், கல்லூரி வரையிலான மாணவர்களுக்கு, ஒரு பாடத்திற்கு  60 இலவச மதிப்பெண்கள் வழங்கப்படும்.

# ஒரு ஓட்டுனர், ஒரே வழித்தடத்தில் 10 வருடங்களுக்கு மேல் ஒரு பேருந்தை ஓட்டியிருந்தால், அந்த பேருந்தை அவரே வைத்துக் கொள்ளலாம். ( உபயம் - உடன் பணி புரியும் நண்பர் )

# ஒரு குடும்பம் 5 வருடங்களுக்கு மேல் ஒரே வீட்டில் வாடகைக்கு இருந்தால், அந்த வீடு அவர்களுக்கே வழங்கப் படும் (நாமளும் எவ்ளோ நாள்தான் வாடகை வீட்லயே இருக்கிறது ?!). வீட்டு ஓனர் விருப்பப்பட்டால்  , 15 லட்ச ரூபாய்  (வாடகை தாரருக்கு ! ) செலுத்தி அந்த வீட்டைத் திரும்பப் பெறலாம்.

# ஒரு பதிவர் நூறு பதிவுகளுக்கு மேல் எழுதி, ஒன்றுமே பரவலாக பேசப் படவில்லை என்றால், ரூபாய் . 50 மட்டும் செலுத்தினால்  போதும் - தெருவுக்குத் தெரு அவரின் பதிவுகள் போஸ்டர் அடித்து ஒட்டப் படும். போஸ்டர் செலவை அரசே ஏற்கும். 100 ரூபாய் செலுத்தினால், தொலைக் காட்சிகளிலும் , திரை அரங்கங்களிலும் காண்பிக்கப் படும்.

# தெருவிற்கு ஒரு 'அரசு ATM மெசின்' நிறுவப் படும். பொது மக்கள் தங்கள் ரேசன் கார்டுகளை SWIPE செய்து, மாதம் ருபாய் 10000 பெற்றுக் கொள்ளலாம்.

 நன்றி - புகைப்பட உதவி : http://www.travel247.tv/india/tourist-guide/indian-money

# பொது மக்களின் பொழுது போக்கிற்காக, அனைத்து மாவட்டத் தலை நகரங்களிலும் ஒரு கடற்கரை ஏற்படுத்தப் படும்.அவை , திங்கள் - முதல் வெள்ளி வரை காலை 4 மணிமுதல் இரவு 2 மணி வரை யும், ஞாயிற்றுக்க் கிழமைகளில், 24 மணிநேரமும் திறந்திருக்கும்.

# ஒருவர், ரயில் பயணத்தை  முடித்து விட்டு , அவருடைய பயணசீட்டை காட்டினால், பயணக் கட்டணத்தின் இரண்டு மடங்கு பணம் இலவசமாக வழங்கப் படும்.

# டெல்லியில் இருந்து நமக்கு வரவேடிய அதிகாரங்களை , நடுவில் இருக்கிற மாநிலங்கள் பிரித்துக் கொள்வதால், தமிழகத்தை டெல்லிக்குப் பக்கத்தில் மாற்றுவதற்கோ , அல்லது டெல்லியை தமிழகத்திற்கு பக்கத்தில் மாற்றுவதற்கோ முயற்சி மேற்கொள்ளப் படும் ( உபயம் - வடிவேலு காமெடி ).

# எல்லாவற்றிற்கும் மேலாக, வாக்காள நண்பர்களே , நீங்கள் ஒவ்வொருவரும், தலா இரண்டு ஓட்டுக்கள் அளிக்க ஏற்பாடு செய்யப் படும்.


                        நன்றி - புகைப்பட உதவி :http://www.secwhistleblowerprogram.org

# இவை அனைத்திற்கும் முத்தாய்ப்பாக, (உதாரணத்திற்கு) உங்கள்  வீட்டில் இரண்டு குழந்தைகள் 10 , மற்றும் 8 வயதுகளில் இருப்பார்களே யானால், அவர்கள் இருவரையும் ஒருங்கிணைத்து ஒரு ஓட்டாக கணக்கில் கொள்ளப் படும்.


(இந்த தேர்தல் அறிக்கைக்கு  காப்புரிமை பெறலாமென்று இருக்கிறேன் ! 2016  இல்  நல்ல விலை போக வாய்ப்பிருக்கிறது !)



No comments:

Post a Comment

போற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... !

தமிழில் பின்னூட்டமிட CLICKகுங்க....

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...