Saturday, March 6, 2010

தீராத விளையாட்டுப் பிள்ளை

போன வாரம் ஞாயிற்றுக் கிழமை, நானும் , நண்பனும் திருவான்மியூர் ஜெயந்தியில் "தீராத விளையாட்டுப் பிள்ளை " திரைப் படம் பார்த்தோம். முதலில், " விண்ணைத் தாண்டி வருவாயா " பார்ப்பதாகத்தான் திட்டம். அங்கு, TICKET RATE மிக அதிகமாகவும் , கூட்டம் மிக மிக அதிகமாகவும் இருந்ததால், சுமூகமாகப் போய் விடலாமென்று தீ.வி.பி போனோம். நம்ம நேரம், அங்கயும் கூட்டம். இருந்தாலும் , டிக்கெட் கிடைத்தது ! ஆனால், டிக்கெட் விலை ,இனிமேல் 20  இல்லை . 25  ரூபாதான் போல !


SUN  TV   உதவியால், படத்திற்கு மிக நல்ல விளம்பரம் ஏற்படுத்தப் பட்டிருந்தது.பாடல்களும் , SURYAN FM இல் போட்டு போட்டு ஓரளவிற்கு நன்றாக இருப்பதாகத் தெரிந்தது. விஷாலுக்கு , "சத்யம் "," தோரணை " படு தோல்விகளுக்குப்  பிறகு மிகவும் அவசியமான வெற்றி இது!

ஒரு NEAT ஆன PLAY BOY கதையில், விஷால் , கதாநாயகன் பாத்திரத்தில் நன்றாகவே பொருந்திக் கொள்கிறார்.ஆனால், அவ்வப் போது விஜய் - யின் மேனரிசங்களை ஞாபகப் 'படுத்துகிறார்'.படத்தில் மூன்று கதாநாயகிகள் . அதில், நீது சந்திரா மட்டுமே நமக்கு பரிச்சயமான  முகம் (?!) . (உபயம் - யாவரும் நலம் ) மற்ற இருவரில் , ' ப்ரியா ' வாக நடித்திருப்பவர் உண்மையாகவே நன்றாக நடித்திருக்கிறார்.



விஷாலின் நண்பர்களாக வரும் சந்தானமும் , சத்யனும் பேசும் வசனங்களுக்கு , அவ்வப் போது திரை அரங்கில் சிரிப்பொலி கேட்கிறது. விஷால் மட்டுமே படத்திற்கு போதாது என்ற நிதர்சனமறிந்து , சும்மா ஒப்புக்கு ஒரு கதாபாத்திரத்தை நுழைத்து , அதில் பிரகாஷ் ராஜை நடிக்க வைத்திருக்கிறார்கள்.அவரும் , தன் கடைமையை செவ்வனே செய்திருக்கிறார்.



சென்னையை அழகாகக் காட்டியிருக்கிறார்  ஒளிப்பதிவாளர் அரவிந்த்கிருஷ்ணா.
அறிமுக இயக்குனர் திரு ,  முதல் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார் - அதில் சந்தேகமில்லை.இசைஅமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் , படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம்.


SO ,தீராத விளையாட்டுப் பிள்ளை ?
.
.
.
.
.
.
.
.
.
.  
.
.
.
.
.
.
.
.
.


அடப் போங்க , எவ்ளோ நேரம்தான் எதுகை மோனை-ல PUNCH யோசிக்கிறது ?!,

6 comments:

  1. நல்ல பதிவு நண்பரே தொடர்ந்து எழுதி பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. @சசிகுமார்

    நன்றி நண்பரே....
    வருகைக்கும் , பின்னூடத்திற்கும் ,வாழ்த்துகளுக்கும் நன்றி...
    மீண்டும் வருக...

    ReplyDelete
  3. நல்ல விமர்சனம் நண்பரே

    ReplyDelete
  4. @nanrasitha

    நன்றி நண்பரே....
    வருகைக்கும் , பின்னூடத்திற்கும் நன்றி...
    மீண்டும் வருக...

    ReplyDelete
  5. நண்பரே...!!!! தரமான பதிவு...!!!

    பதிவில் சிறு திருத்தும் படம் பெருவாரியாக சென்னை அடுத்து உள்ள மகாந்திர SEZ ஒளிபதிவு செயப்ட்டுள்ளது....!!!!

    பின்குறிப்பு : மகாந்திர SEZ பற்றி மட்டும் ஒரு தனி பதிவு எழுதலாம்...!!!!

    ReplyDelete
  6. @manivasagam
    நண்பா..
    நேற்று நீ சொன்ன பிறகுதான்,MAHINDRA INFO CITY யில் படம் பிடித்திருக்கிறார்கள் என்று எனக்கு தெரியும்.
    ஆனால், இதுவரைக்கும் நான் MAHINDRA INFO CITY யை , TV யில் கூட பார்த்ததில்லை !!
    பார்த்த பிறகு பதிவிடலாம்.
    வருகைக்கும் , பின்னூடத்திற்கும் நன்றி...
    மீண்டும் வருக...

    ReplyDelete

போற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... !

தமிழில் பின்னூட்டமிட CLICKகுங்க....

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...