Thursday, October 21, 2010

2011 - தமிழ்நாடு - தேர்தல் - தலைவர் - எந்திரன்

டிஸ்கி : எந்திரன், எந்திரன், எந்திரன் ! எங்க பாத்தாலும் ஒரே எந்திரன் மயம்தான் கொஞ்ச நாட்களாகவே ! சரி, இந்த சமயத்த "யூஸ்"  பண்ணி கல்லா காட்டினா என்ன ?! ன்னு தோணிச்சு ! 


எந்திரன் இந்த வருஷம் ரிலீஸ் ஆகாம , அடுத்த வருஷம் எலெக்சன் சமயத்துல ரிலீஸ் ஆனா எப்பிடி இருக்கும்னு ஒரு நகைச்சுவை கலந்த காமெடி ( எது ?! நகைச்சுவை கலந்த காமெடி யா ?! ) கற்பனை ! இந்த இடுகை முழுதும் நகைச்சுவைக்காகவே எழுதப் பட்டது. யார் மனதையும் புண் படுத்த அல்ல !

***************************************************
"தலைவர்  ஏன் கோவமா இருக்கார் ?!"
" '2016  வரை கூட்டணியில் இருந்தாதான் 4 எந்திரன் டிக்கெட் கொடுப்பேன்'  ன்னு கூட்டணி தலைவர் சொல்லிட்டாராம் !"

***************************************************
அன்பான வாக்காளர் பெருமக்களே...
எங்களது ஆட்சியில் தான் "எந்திரன்" திரைப்படம் வெளிவந்தது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் !

 ***************************************************
 "இந்த தடவை அந்த கட்சி தான் தேர்தல்ல ஜெயிக்கும்னு எப்படி உறுதியா சொல்லுற ?!"
"அந்த கட்சியில்தான் ஒரு ஓட்டுக்கு ரெண்டு 'எந்திரன்' டிக்கெட் கொடுக்கறதா முடிவு பண்ணியிருக்காங்க "

 ***************************************************
"நம்ம தலைவர் ஏன் ரொம்ப சந்தோசமா இருக்கார் ?!"
"இன்னைக்கு நடக்குற பொதுக் கூட்டத்துல , தலைவருக்கு 'எந்திரன்' ன்னு பட்டம் கொடுக்கப் போறாங்களாம் ! "



 ***************************************************
"தலைவர் ஏன் 'நான் 40 ,  50  டிக்கெட்டுக்காக கட்சி நடத்தலை' ன்னு அறிக்கை விடுறார் ?!'"
" 'எங்க கூட்டணியில சேர்ந்தா 50 எந்திரன் டிக்கெட் கொடுக்கறேன் ',  கூட்டணி தலைவர் சொன்னாராம் !"

 ***************************************************


தலைவரே, சொன்னா கேளுங்க. நாங்க ஜெயிச்சா வீட்டுக்கு ஒரு ரோபோ இலவசமாக தருவோம்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க ! 

 ***************************************************

நன்றி - புகைப்பட உதவி :  www.indiaglitz.com , www.hindu.com



11 பேர் கமென்ட் போட்ருக்காங்க, நீங்க என்ன சொல்றீங்க?!:

நாகராஜசோழன் MA said...

அப்படி வந்திருந்தா கூட நமக்கு வசதியா இருந்திருக்கும். ஈஸியா எம் எல் ஏ ஆகி இருப்பேன்.

தேசாந்திரி-பழமை விரும்பி said...

@நாகராஜசோழன் MA ...
உங்க உண்மையான பேரே இதானா ?! நல்லாயிருக்கு!
அப்போ சோழர் பரம்பரையில் ஒரு (பிரபல) பதிவர் ன்னு சொல்லிக்கலாம் !
//அப்படி வந்திருந்தா கூட நமக்கு வசதியா இருந்திருக்கும். ஈஸியா எம் எல் ஏ ஆகி இருப்பேன்.//
எந்திரன் இல்லைனா என்னங்க ?! மேதை, விருத்தகிரி ன்னு நெறையா வரப் போகுது !
எப்படியும் MLA ஆகிடலாம் !

ப.செல்வக்குமார் said...

//அன்பான வாக்காளர் பெருமக்களே...
எங்களது ஆட்சியில் தான் "எந்திரன்" திரைப்படம் வெளிவந்தது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் !
//

இதெல்லாமா சொல்லுறாங்க ..!!

ப.செல்வக்குமார் said...

//தலைவரே, சொன்னா கேளுங்க. நாங்க ஜெயிச்சா வீட்டுக்கு ஒரு ரோபோ இலவசமாக தருவோம்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க !
//

ஓஹோ ..!!

தேசாந்திரி-பழமை விரும்பி said...

@ப.செல்வக்குமார்....
//இதெல்லாமா சொல்லுறாங்க ..!!
//
இது என்ன ?! இதுக்கு மேலயும் சொல்லுவாங்க !
//ஓஹோ ..!!
//
ஹ்ம்ம்ம்..!

நா.மணிவண்ணன் said...

"தலைவர் நைட் சின்ன விட்டுக்கு போகலையாம்

"ஏன்"

"எந்திரன் படத்துக்கு கூட்டிட்டு போகலைன்னு கோவமாம்

நா.மணிவண்ணன் said...

அடேங்கப்பா

nellai அண்ணாச்சி said...

நகைச்சுவையான பதிவு

தேசாந்திரி-பழமை விரும்பி said...

@நா.மணிவண்ணன்...
//"தலைவர் நைட் சின்ன விட்டுக்கு போகலையாம்

"ஏன்"

"எந்திரன் படத்துக்கு கூட்டிட்டு போகலைன்னு கோவமாம் //
ஏன் ?! நல்லாதானே போய்க்கிட்டிருக்கு ?!
வ - த - ந - மீ - வ !!!

@nellai அண்ணாச்சி ...
வாங்க அண்ணாச்சி... ஊக்கத்திற்கு நன்றி...!!!
வ - த - ந - மீ - வ

Sekar said...

good fun

தேசாந்திரி-பழமை விரும்பி said...

@Sekar...
வாங்க டாக்டர்..
ஊக்கத்திற்கு நன்றி...
வ - த - ந - மீ - வ !!!

Post a Comment

போற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... !

தமிழில் பின்னூட்டமிட CLICKகுங்க....