Friday, September 11, 2009

தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில்.



இன்று தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு முக்கியமான நாள்.
ஏன் ?சொன்னால் நம்ப மாட்டீர்கள்

(அப்புறம் எதுக்கு சொல்றன்னு கேக்கறீங்களா . வேற என்ன பண்றது. ப்ளாக் எழுத ஆரம்பிச்சாச்சி . எதையாச்சி எழுத வேணாமா? .ஒரு போஸ்ட்க்கு டாபிக் கெடைக்கறது எவ்ளோ கஷ்டம்னு எழுதி பாத்தாதான் தெரியும் !)

இன்றுதான் அரசி (செல்வியின் இரண்டாம் பாகம்) மெகாத் தொடர் முடிவுக்கு வந்தது. ஒரு வழியாக சுபம் போட்டார்கள் (இந்த ஒரு இடத்தில் மட்டும் தான் சுபம்).வரும் திங்கட் கிழமை முதல் அடுத்த அபத்தம் ஆரம்பம். செல்லமே என்ற புதிய மெகாத் தொடர் போடப் போகிறார்கள்.

அதிலும் ராதிகா வுக்கு தொல்லை கொடுப்பதேற்கே யாராவது வில்லன்களும், பாழாய்ப்போன விதியும் வரும். அதையெல்லாம் பல வருடங்களில் எப்படி தாண்டி வருகிறார் என்பதுதான் கதையாக (!) இருக்கும்.

அதெப்படி இவ்ளோ கரெக்டா சொல்றேன்னு பாக்கறீங்களா?
சற்றேறக்குறைய எல்ல தமிழ் மெகாத் தொடர்களிலும் இதுதான் கதையாகக் கொள்ளப் படுகிறது.இப்போது இந்த மாதிரியான தொடர்களிலும் சண்டை,பாட்டு எல்லாம் போடுகிறார்கள்.

இந்த வகையில் விஜய் டிவியும் மக்கள் டிவி, சாரி மக்கள் தொலைக்காட்சியும் கொஞ்சம் பரவாயில்லை.


5 comments:

  1. நல்ல வேளை செல்வி தொடர் முடியும் போது(?) அரசியின் மகள்தான் செல்வி என்று இழுத்தார்களே. அது போல செல்லமே தொடர் முன்னோட்டம் காண்பித்த போது பயந்து போனேன். எங்கே அரசியின் பேத்தியை எல்லோரும் செல்லமே செல்லமே என்று கொஞ்சினார்களே. அரசியின் பேத்தியை வைத்து இன்னும் 600 எபிஸோட் செய்வார்களோ என்று. தாங்கமுடியாத குழப்ப வினாக்கள் இதோ
    1)அரசி தந்த 100 கோடி சொத்தையும் விஸ்வ நாதன் தந்த 100 கோடி சொத்தையும் அனுபவிக்கும் செல்வி வீட்டில் ஒரு வேலையாள் கூடவா இல்லை.
    அட ஒரு காவலாளி கூட பாதுகாப்புக்கு இல்லாமல் 2)சரோஜினிக்கும் ஜீஜேவுக்கும் விஸ்வ நாதன் மூலம் மிரட்டல் இருந்தாலும் யார் வேண்டுமானாலும் நடு வீடு வரை வருவார்களாம்.
    3)அரசி திருத்த நினைத்தவர்கள் வாழ்க்கை என்ன ஆனது?
    4) நல்ல தம்பியும் விஸ்வ நாதனும் செத்துவிட்டால் மட்டும் போதுமா? அவர்களது வெளி நாட்டு தொடர்பு தீவிரவாதிகளை யார் அல்லது எப்படி பிடிப்பது?
    5) கோலங்கள் தொடரில் இப்போது அதிகமாகவே மறைமுகமாக இலங்கை பிரச்சனையை தோழர் பாலகிருஷ்ணன் பேசுகிறார். எதில் போய் முடியுமோ?
    6) அரசியின் மகனும் மகளும் எப்போது திருந்தின மாதிரி பேசுவார்கள்? எப்போது திட்டுவார்கள்? என்னவாயிற்று அவர்களது குடும்ப வாழ்க்கை

    ReplyDelete
  2. வீரராகவன் - தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக.

    ReplyDelete
  3. தேசாந்திரி - உனக்கு செல்வி, அவங்க அம்மா, அவ மகள் மூணு பேர்ல யாரை பிடிக்கும்?

    ReplyDelete
  4. @Kumar014...
    //தேசாந்திரி - உனக்கு செல்வி, அவங்க அம்மா, அவ மகள் மூணு பேர்ல யாரை பிடிக்கும்?//
    எனக்கு மட்டுமில்லை... எல்லோருக்கும் செல்வியை தான் பிடிக்கும்...
    ஆனாலும் அநியாயத்துக்கு நல்லவங்க செல்வி 'அம்மா'.. :) ('செல்வி'யோட அம்மா இல்ல)..
    ;)
    வ - த - ந - மீ - வ !

    ReplyDelete

போற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... !

தமிழில் பின்னூட்டமிட CLICKகுங்க....

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...