Friday, January 29, 2010

சாப்ட் வேர் துறையில் தொழிற்சங்கங்கள்...



இந்த பதிவின் தலைப்பைப் பார்த்தவுடன் ஏதோ சீரியசாக எழுதப் போகிறேன் என்று நினைத்து விடாதீர்கள். ஒரு நகைச்சுவை ( !) கலந்த கற்பனை முயற்சிதான் ! இன்றைய நிலைமையில் எனக்குத் தெரிந்து மென்பொருள் துறையில் மட்டுமே தொழிற்சங்கங்கள் இருப்பதில்லை ( அல்லது அனுமதிக்கப் படுவதில்லை).ஆனால் அவ்வாறு தொழிற்சங்கங்கள் இருந்தால் , நாம் கேள்விப் படக் கூடிய செய்திகள் எப்படி இருக்கும் ?! மேலே படியுங்கள் , இல்லை இல்லை கீழே படியுங்கள் !

*************************************************************************************
செய்தி நம்பர் ஒன்று :

அகில இந்திய டெவலப்பர் சங்க பேரவை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது - மென்பொருள் துறையில் வேலை செய்யும் அனைவருக்கும் பென்ஷன் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி , நாளை ஒரு நாள் அடையாள " பக் எழுதும் " போராட்டம் நடைபெறும். இந்த போராட்டத்தில் அனைத்து தரப்பு சாப்ட் வேர் ஆசாமிகளும் கலந்து கொண்டு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். தொடர்புக்கு ___________________ என்ற தொலைபேசி எண்ணை அழைக்கவும்.
 
(நிர்வாகம் - இல்லைன்னா மட்டும் இவனுங்க பக் இல்லாம ப்ரோக்ராம் எழுதிடுவானுங்க ?! )
செய்தி நம்பர் இரண்டு :

தமிழக சாப்ட்வேர் சங்கங்களின் கூட்டமைப்பு , இன்று சென்னையில் வெளியிட்ட அறிக்கை : முறையான காரணமின்றி, இன்று பணிநீக்கம் செய்யப்பட்ட ஆயிரத்தி இருநூறு மென்பொருள் ஊழியர்களை , எந்த நிபந்தனையுமின்றி உடனே பணியில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட பதினைந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி , ____ பார்க் அருகே நடை பெறும், மாபெரும் உண்ணா விரதப் போராட்டத்தில் நமது மதிப்பிற்குரிய தலைவர் திரு._______________ அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற இருக்கிறார்கள். உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு , தங்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

குறிப்பு : உண்ணாவிரதத்திற்கான சாப்பாடு டோக்கன்களை , மன்னிக்கவும் - உண்ணா விரதத்திற்குப் பிறகான சாப்பாட்டு டோக்கன்களை www .உண்ணாவிரதம்.நான்-veg .com (சைவம் ) மற்றும் www .உண்ணாவிரதம்.நான்-non-veg .com (அசைவம் ) என்கிற வெப் சைடில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

செய்தி நம்பர் மூன்று :

அனைத்துலக டெஸ்டிங் பாசறையின் மூன்றாமாண்டு மாநில மாநாடு வரும் பிப்ரவரி இரண்டு மற்றும் மூன்றாம் தேதிகளில் மதுரை மேலூர் அருகே உள்ள சிங்கம்புணரியில் நடைபெற இருக்கிறது. மாநாட்டுக்கு வரும் ஒவ்வொரு " ப்ராஜக்ட் மேனேஜரும் " , குறைந்தது இருபது           " Trainee " களை கூட்டிவர வேண்டும் என்று நமது பாசறையின் செயலாளர் திரு._______________ அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

*************************************************************************************
மேலே உள்ள கோடிட்ட
இடங்களை உங்களுக்கு வேண்டியவர்கள் அல்லது வேண்டாதவர்களின் , பெயர்களையும் தொலைபேசி நம்பரையும் கொண்டு நிரப்புங்கள். தைரியம் இருந்தால் உங்கள் ப்ராஜக்ட் மேனேஜருக்கும் ஒரு காப்பி அனுப்புங்கள் !

No comments:

Post a Comment

போற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... !

தமிழில் பின்னூட்டமிட CLICKகுங்க....

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...