Friday, June 18, 2010

கடந்த இடுகைக்கான விடைகள்...

கடந்த இடுகையில் , கேள்விகள்  மாதிரி இரண்டு கேட்டிருந்தேன். அதற்கான விடைகள்  இந்த இடுகையின் கடைசியில். முயற்சிக்க விரும்புபவர்கள் , அங்கே கொஞ்சம் போயிட்டு வந்துடுங்க !

*********************************************************************************************
நம் வாழ்க்கையில் பல நேரங்களில் , 'பேசாம, பள்ளிக் கூட பையனாகவே இருந்திருக்கலாம்' என்று தோன்றும் இல்லையா ? அது போன்று , கடந்த வாரம் எனக்கு தோன்றியது ! 'ஏன்?' என்கிறீர்களா ?


 " உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி , தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை " என்ற செய்திதான் அதற்கு காரணம் !

இந்த மாநாடு தேவையா, இல்லையா என்கிற வாத, பிரதிவாதங்கள் ஒரு புறம் இருக்கட்டும் ! இந்த மாநாட்டுக்காக வெளியிடப்  பட்டிருக்கும் பாடல் மிகவும் நன்றாக இருக்கிறது ! பார்க்கவும் , கேட்கவும் !


********************************************************************************************

கேள்வி மாதிரி - 1 :


முதல் வாரம் - கோல்டன் வீக்,
இரண்டாம் வாரம் - சில்வர் வீக்,
மூன்றாம் வாரம் - காப்பர் வீக்,
நான்காம் (அல்லது) கடைசி வாரம் - ____________________________ ?
 கடைசி வாரம் - பாப்பர் வீக் !

கேள்வி மாதிரி - 2 :
லலித் மோடியை கதா நாயகனாக வைத்து நம்ம ராதா மோகன் திரைப்படம் இயக்கினால் படத்திற்கு என்ன பெயர் வைப்பார் ?

' SEBI' யும் நானும்  ?!


பின் குறிப்பு : இது போன்று பல நகைச்சுவைகளை (!) நான் எழுதியதுண்டு. இனி வரும் காலங்களில் எனது இடுகைகளை அவை அலங்கரிக்கும்  என்பதை , மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் 'கொல்'கிறேன் !

2 comments:

  1. இந்த மாநாடு தேவையா, இல்லையா - neenga enna solreenga Desanthiri?

    ReplyDelete
  2. @Kumar014...
    மாநாடு நடத்துறது நல்லதுதான் - தி மு க விற்கு...!
    அவர்கள் கட்சியை கொங்கு மண்டலத்தில் பலப்படுத்துவதற்கு இந்த மாநாடு உதவும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்...
    என்னைக் கேட்டால் , ஆடம்பரமின்றி நடத்துவதில் தவறொன்றும் இல்லை...!
    வ - த - ந - மீ - வ!

    ReplyDelete

போற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... !

தமிழில் பின்னூட்டமிட CLICKகுங்க....

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...