Friday, June 11, 2010

தலைப்பில்லா இடுகைகள்... 06.06.2010

ஒரு அட !
கொஞ்ச நாட்களுக்கு  முன்னாடி என் தந்தை ஒரு விஷயம் சொன்னார்..
ஒரு மாதத்தின் நான்கு வாரங்களை எப்படி அழைக்கலாம் ?!



முதல் வாரம் - கோல்டன் வீக்,
இரண்டாம் வாரம் - சில்வர் வீக்,
மூன்றாம் வாரம் - காப்பர் வீக்,
நான்காம் (அல்லது) கடைசி வாரம் - ____________________________ ?

முடிந்தால் யூகித்துப் பாருங்களேன் ! விடை ( !) அப்புறம் .....

ஒரு ஒப்பீடு...
கடந்த மூன்றாம் தேதி, தமிழக முதல்வரின் 87 வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது ! திருவான்மியூர் வடக்கு மாட வீதியில் மாபெரும் விழா எடுத்தார்கள். கிட்டத் தட்ட ஒரு வாரத்திற்கு அந்த வழியையே அடைத்து விட்டிருந்தார்கள் !
இந்த இடத்தில் இரண்டு புகைப்படங்களை பதிவிட நினைக்கிறேன் !

முதல் புகைப்படம்...
இந்த பிறந்த நாள் விழா நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில், அடையார் இந்திரா நகர் பகுதியில் எடுத்த புகைப்படம் இது. நேரம் : இரவு  9 .30 மணி.


இரண்டாம் புகைப்படம்...
விழா முடிந்து , அரை மணி நேரம் கழித்து, திருவான்மியூர் வடக்கு மாட வீதியில் எடுத்த புகைப்படம் இது! நேரம் : 10 .00 மணி.



இது எப்படி இருக்கு ?! நோ கமெண்ட்ஸ்...

ஒரு நகைச்சுவை அல்லது கேள்வி ...



லலித் மோடியை கதா நாயகனாக வைத்து நம்ம ராதா மோகன் திரைப்படம் இயக்கினால் படத்திற்கு என்ன பெயர் வைப்பார் ?
(டிஸ்கி : இந்த நகைச்சுவையை (!) கடந்த 2009  ஆம் ஆண்டு எழுதியது. இப்போது, "ரீமிக்ஸ் " செய்து  வெளியிடுகிறேன்.)

ஒரு தகவல்...
என்னுடைய வலைப்பதிவின் முதல் வாசகன் ( அடிக்கடி போன் பண்ணி , " BLOG எழுதிகிட்டு இருக்கேன் படிடா, BLOG எழுதிகிட்டு இருக்கேன் படிடா" னு  டார்ச்சர் பண்ணிதான் படிக்க வெச்சேன் !) , என் நண்பன் வேலை விஷயமாக வெளி நாடு சென்றிருக்கிறான் !  "அதுக்கு என்னா இப்போ ? " ன்னு கேக்கறீங்களா ?! இனி என் தளத்திற்கு அமெரிக்காவிலிருந்து ஒரு வாசகன் இருக்கிறான் !

ஒரு பொன்மொழி(யாமாம்!)..

ஒரு  விஷயம் உன் பெற்றோருக்கு தெரியக் கூடாதென்று  நீ நினைக்கிறாய் என்றால், நீ தப்பு செய்து கொண்டிருக்கிறாய் என்று  அர்த்தம்! 


ஒரு எதிர்பார்ப்பு...



சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது, தமிழக அரசியல் களம். அடிக்கடி, கண்டனக் கூட்டங்களும், பட்ஜெட் விளக்கப் பொதுக் கூட்டங்களும் நடக்கத் தொடங்கியிருக்கின்றன. எனக்கு அரசியல் விவரம் தெரிந்து  (!) , நான் சந்திக்கும் முதல் சட்டப் பேரவை தேர்தல் வருகிற 2011  தேர்தல் தான் ! அதற்குள் எப்படியாவது, வாக்காளர் அடையாள அட்டை வாங்கிவிட வேண்டும்!

 *************************************************************************************************

முதலில் எழுதிய "அட"  விற்கான விடையையும், நகைச்சுவைக்கான விடையையும் அடுத்த இடுகையில் வெளியிடலாம் என நினைக்கிறேன். தங்களின் விடைகள் வரவேற்கப் படுகின்றன ! நான் நினைத்த விடைகளை சரியாக கணிப்பவர்களுக்கு,


















எந்த பரிசும் தர இயலாது ! மன்னிக்கவும்.
(சங்கமே அபராதத்துலதான் போய்கிட்டிருக்கு !!) 
;)

6 comments:

  1. வந்துட்டு போனதுக்கு டெம்போ செலவாவது கொடுபீங்களா பாஸ் ?

    ReplyDelete
  2. என்ன கொடும சார் இது

    ReplyDelete
  3. கடைசி வாரம் - துரு பிடிச்ச இரும்பு

    ஆடலுக்கு இப்படி ஒரு பில்ட் - அப் ஆ??

    பொன்மொழி(யாமாம்!). - super...

    ReplyDelete
  4. @ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) ...
    //வந்துட்டு போனதுக்கு டெம்போ செலவாவது கொடுபீங்களா பாஸ் ? //
    கூழ் 'குடிக்க' வேணும்னா வரேன் , குடுக்கறதுக்கு ஒண்ணுமில்ல...!!!ஹி... ஹி...
    வ - த - ந - மீ - வ !

    ReplyDelete
  5. @nellai அண்ணாச்சி...
    //என்ன கொடும சார் இது//
    இது சும்மா 'டிரைலர்' தான் அண்ணாச்சி...
    இனி மரண மொக்கைகள் தான் !
    வ - த - ந - மீ - வ !

    ReplyDelete
  6. @Kumar014 ...
    //கடைசி வாரம் - துரு பிடிச்ச இரும்பு///
    எங்கப்பா சொன்னது இது இல்லை நண்பா...
    அடுத்த இடுகையில் பதில் அளிக்கிறேன்..
    //ஆடலுக்கு இப்படி ஒரு பில்ட் - அப் ஆ??//
    ஹா.. ஹா..
    உண்மையில் ஆடல் தான் எனக்கு முதலில் ஊக்கமளித்தான் ...
    கொஞ்சம் கேப் விட்டு கமன்ட் போடலாமில்ல ?!
    நான் இப்படி படிச்சுட்டேன்.. // துரு பிடிச்ச இரும்பு
    ஆடலுக்கு இப்படி ஒரு பில்ட் - அப் ஆ??// :):)
    //பொன்மொழி(யாமாம்!). - super... ///
    நன்றி... நன்றி...
    வ - த - ந - மீ - வ !

    ReplyDelete

போற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... !

தமிழில் பின்னூட்டமிட CLICKகுங்க....

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...