Sunday, June 27, 2010

ராவணனும் பிரின்ஸ் ஆப் பெர்சியாவும்...

ஏன்...?
ஆமா...!
நெஜமாவா ?!
நீ என்ன  நம்பல ?!
எப்படி ?!
நேத்திக்குதான் !!
எத்தன பேர் ?
நான் மட்டும்தான் !
எவ்ளோ ?
45 ரூபா !
எங்க ?
தியாகராஜா !


என்னங்க எங்கேயோ கேட்ட ஞாபகமா ?!
ஆமாங்க நேற்றைக்குதான் மணி ரத்தினத்தின் 'ராவணன்' படம் பார்த்தேன். அதைதான் , அவர் 'பாணியில்' சொல்ல 'ட்ரை' பண்ணேன் ! நீங்க டென்சன் ஆகாம மேலே ( அதாவது , 'கீழே' !) படிங்க !

'ஆக்சுவலா' (!) நான் போன வாரமே 'ராவணன்' பார்க்க போனேனுங்க ! அங்க என்னடான்னா, டிக்கட் இருந்தாதான் தியேட்டர் உள்ளயே உடுவேன்னுட்டானுங்க ! "போங்கடா நீங்களும் உங்க ராவணனும்" ன்னுட்டு, அப்படியே ரோடை கிராஸ் பண்ணி , நம்ம 'ஆஸ்தான' தியேட்டரான ஜெயந்தி தியேட்டருக்கு போய் , 'பிரின்ஸ் ஆப் பெர்சியா (தமிழில்)'  பாத்துட்டு வந்துட்டேன்! ராவணன் போயிட்டு புறமுதுகிட்டு வந்ததுல , ஒரு 20 நிமிஷம் MISS பண்ணிட்டேன் ! அந்த படத்துக்கே விமர்சனம் எழுதனும்னுதான் நெனைச்சுகிட்டு இருந்தேன் ! ஆனா, படத்துல ஒருத்தர் பேரும் தெரியாததால, 'பிரின்ஸ் ஆப் பெர்சியா' தப்பிச்சது ! மொத்ததுல, படம் அமர்க்களம் !



சரி , நம்ம ராவணன் பக்கம் வருவோம் ! என்னுடைய  'கொள்கைப்' படி, எந்த விமர்சனமும்  இதுவரை படிக்க வில்லை , யாரிடமும் கதையும் கேட்க வில்லை! என் விருப்பப் படி, படம் ஆரம்பிப்பதற்கு முன்னாடியே போய் உக்காந்தாச்சு !
( எனக்கெல்லாம், 'WELCOME' , 'முன் இருக்கையில் கால் வைத்து அசுத்தம் செய்யாதீர்' , 'புகை பிடிக்காதீர்', 'அரங்கை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுங்கள் ' என்று SLIDE போடுவதிலிருந்து படம் பார்த்தால்தான் ஒரு திருப்தி !  இவையும் ஒரு படத்தின் அங்கமாகத்தான் பார்க்கிறேன் நான் !)

இதற்கு முன் , நான் தியேட்டரில் பார்த்த ஒரே மணி ரத்தினம் படம் - 'ஆய்த எழுத்து '!  அந்த படத்திற்கும் நான் போன போது கூட்டம் இல்லை! கடந்த வாரம் தியேட்டருக்கு உள்ளேயே போக முடியாத படிக்கு கூட்டம் ! இந்த வாரம் , பாதி தியேட்டர் காலி! ஏன் இந்த வித்தியாசம் ?! இணையமும் , VCD இணைத்து செய்யும் மாயமிது ! படம் வெளியிட்ட இரண்டு நாட்களிலேயே, அல்லது வெளியிட்ட நாளன்றே இணையத்தில் காணக் கிடைக்கின்றன அத்துணைத் திரைப்படங்களும் ! ( சில சமயங்களில் வெளியிடுவதற்கு முன்னமே ! )

இதையெல்லாம் தாண்டி இரண்டாவது வாரமும் கூட்டம் வர வேண்டுமென்று சொன்னால் ,படத்தின் விமர்சனங்கள் இந்த இடத்தில் முக்கிய பங்காற்றுகின்றன ! எதிர்மறையான எந்த ஒரு விமர்சனமும் படத்தின் வெற்றியை பெருமளவு பாதிக்கக் கூடும் !





இரண்டு வருடங்களாக பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கிய படம்.தமிழிலும் இந்தியிலும், விக்ரமும், அபிஷேக் பச்சனும் தங்களுடைய கதாப் பாத்திரங்களை மாற்றி நடிக்கிறார்கள் என்று பேசப் பட்டிருந்தாலும், தமிழில் அபிஷேக் நடிக்கவில்லை ! இந்தியில் விக்ரம் இருக்கிறாரா என்றும் தெரிய வில்லை ! ( யாராவது RAVAN பார்த்திருந்தா சொல்லுங்க ).
அதிரடியான இசையுடன் (வீரா வீரா !) பெயர் போட ஆரம்பிக்கிறார்கள் ! 'கந்தசாமி' எதிர்பார்த்த வெற்றி அளிக்காததால், விக்ரம் இந்த படத்தினை மிகவும் எதிர்பார்த்திருப்பார் ! நாமும்தானே ?! எதிர்பார்த்ததை கொடுத்திருக்கிறார் , மணி ரத்தினம் விக்ரமிற்கும், விக்ரம் நமக்கும் !


ஐஸ்வர்யா ராயை பார்க்கும் போது, ஏதோ இந்திப் படம் பார்க்கும் 'பீலிங்'  ! அவர் பேசும் தமிழும் ஒட்டவில்லை ! இந்தியில் பார்க்கும் போது நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் ! ( எந்திரன் என்ன செய்யப் போகிறார் ?! ) பழைய மணிரத்தினம் ஹீரோக்களான , கார்த்தி , பிரபுவும் நடித்திருக்கிறார்கள் ! படம் முழுவதும் காட்டுப் பகுதியில் தான் ! அதற்கேற்றவாறு ஒளிப் பதிவில் அசத்தியிருக்கிறார்கள் சந்தோஷ் சிவன் - மணிகண்டன் ! கலை இயக்குனருக்கு சற்று சவாலான வேலைதான் ! சமாளித்திருக்கிறார் ! கொச்சியில் இருக்கும் என் நண்பனொருவன் , அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு போன போது, அந்த கோவில் செட் - ஐ பார்த்ததாகவும், மிகவும் நேர்த்தியாக இருப்பதாகவும்  சொன்னான்! நானும் படம் வெளிவருவதற்கு முன்னரே  புகைப்படங்களில் பார்த்திருக்கிறேன் !



வசனங்கள் - சுஹாசினி. படத்தின் ஆரம்ப காட்சிகளில் வரும் வசனங்கள் என்னவென்று புரியவில்லை! காரணம் அவரா , அல்லது ஒலிப் பதிவா, இல்லை தியேட்டர் ஸ்பீக்கரா, இல்லை நம்ம காதா என்று புரிவதற்குள் அடுத்தடுத்த  வசனங்கள் ! ஆனால் கொஞ்ச நேரம் கழித்து புரிய ஆரம்பித்து விடுகின்றன ! நடுவே வரும் ப்ரியாமணி செக்மென்ட்டில் மட்டுமே கொஞ்சம் காடுகளில் இருந்து வெளிவந்திருக்கிறது கேமரா !

இசை - A . R ரஹ்மான் ! வேறென்ன சொல்ல ?! சூப்பரப்பு ! ( இருந்தாலும் 'செம்மொழி' பாட்டு மாதிரி இல்லையே என்று சொல்லப் படாது !) ' உசுரே போகுது ' பாட்டு முழுவதுமாக வருவதில்லை போன்ற ஒரு தோற்றம் !

திரைக்கதை & இயக்கம்  - மணி ரத்னம். இவரின் ஓரிரு படங்களைத் தவிர மற்ற அனைத்திலும் எதாவது ஒரு உண்மை  சம்பவமோ , அல்லது இதிகாசமோ தான் "BASE LINE" ஆக இருக்கும் ! இந்த வகையில் , இப்படத்தின்  கதாப் பாத்திரங்கள், யாரைக் குறிக்கின்றன என்று ராமாயணம் அறிந்த அனைவரும்  எளிதில் ஊகிக்க முடியும் ! இருப்பினும் பெயர் போடும் போது , " இப்படத்தில் வரும் கதாப் பாத்திரங்களும் சம்பவங்களும் கற்பனையே ! யாரையும் குறிப்பிடுவன அல்ல ! " என்றுதான் போடுகிறார்கள் !

எது எப்படி இருந்தாலும், 'படம் நல்லா  இருந்துச்சு ' என்று சொல்ல வைத்து விடுகிறார் மணிரத்னம் !

அப்புறம் சொல்ல மறந்துட்டேனே ?! பிருத்விராஜ் ! கதா பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்திக் கொள்கிறார் ! வாழ்த்துக்கள் பிருத்வி !

16 comments:

  1. //எது எப்படி இருந்தாலும், 'படம் நல்லா இருந்துச்சு ' என்று சொல்ல வைத்து விடுகிறார் மணிரத்னம் !//

    லாஜிக் ஓட்டைகள் நொம்ப இருக்கு சார். மனிகூடவா இப்படி?>>>

    ReplyDelete
  2. @ Jey...
    //லாஜிக் ஓட்டைகள் நொம்ப இருக்கு சார். மனிகூடவா இப்படி?>>> //
    தமிழ்ப் படங்களில் லாஜிக் பார்க்கக் கூடாதென்பதுதான் 'லாஜிக்' !!!
    :) :) :)
    வ - த - ந - மீ - வ !!!

    ReplyDelete
  3. எப்படி நல்ல படம் என்று சொல்கிறீர்கள், தெரியவில்லை. இதுவரை மணிரத்தினம் அவர்கள் வழங்கிய படங்களில், இது மிகவும் மோசமான திரைகதை, வசனம், இசை அமைந்துள்ள படம். துணிச்சலாக ராவணனை கதாநாயகனாக சித்தரிக்கவும் இல்லை, ஏதோ தயக்கம். இன்னும் சொல்லிகொண்டே போகலாம். ஒளிப்பதிவைத் தவிர படத்தில் சொல்லிக்கொள்ளும் படியாக ஒன்றுமில்லை. பின்னணி இசை பிரமாதம் என்று சொல்பவர்களைப் பார்த்து பரிதாபமாக இருக்கிறது. ஐஸ்வர்யா பச்சன் அவர்கள் நடுக் காட்டிலும், 14 நாட்களும் சிறிதுகூட ஒப்பனை கலையாமல் இருப்பது உலக சாதனைதான், அதுவும் பலமுறை தண்ணீரில் விழுந்து எழுந்த பிறகும். ஐஸ்வர்யாவைக்கூட ஒப்பனை இல்லாமல் காட்டமுடியாதா?

    ReplyDelete
  4. @azhagan....
    நானும் வசனங்கள் திருப்தியாக இல்லை என்றுதான் சொல்லியிருக்கிறேன் நண்பரே !
    பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகி விட்டன !
    என்னைப் பொறுத்தவரை , இரண்டரை மணி நேரம் எந்த உறுத்தலும் இல்லாமல் இருந்தாலே போதும் என்று நினைக்கிறேன் !
    (சில படங்களுக்கு போயிட்டு , ஏன்டா போனோம் என்று நொந்து போயிருக்கிறேன் ! :( )
    சாதாராண சினிமா ரசிகனாக என்னை திருப்திப் படுத்தியது , ராவணன் !
    //ஐஸ்வர்யாவைக்கூட ஒப்பனை இல்லாமல் காட்டமுடியாதா?//
    நல்ல கேள்வி ! இதுக்கே இப்படின்னா, இந்திரனுக்கு என்ன பண்ண போகிறீர்கள் நண்பா ?! :) :)
    /// தமிழ்ப் படங்களில் லாஜிக் பார்க்கக் கூடாதென்பதுதான் 'லாஜிக்' !!! // ரிப்பீட்டு :)

    வ - த - ந - மீ - வ !!!

    ReplyDelete
  5. @azhagan....
    //இதுக்கே இப்படின்னா, இந்திரனுக்கு என்ன பண்ண போகிறீர்கள் நண்பா ?! :) :)///
    மன்னிக்கவும் எந்திரன் - இந்திரன் ஆகி விட்டது :(

    ReplyDelete
  6. ராவணன் படத்துக்கு பிளஸ் பாயிண்ட் ஒளிப்பதிவு தான் அதை பற்றி சொல்லாம விட்டுடீங்களே!! ஒலிப்பதிவும் குறை சொல்லும் படி இல்லை ...ஒருவேளை நீங்க பார்த்த தியேட்டர் சவுண்ட் செட்டிங் சரி இல்லையோ என்னவோ ??
    //' உசுரே போகுது ' பாட்டு முழுவதுமாக வருவதில்லை போன்ற ஒரு தோற்றம் !// எனக்கும் அப்படி தான் பீல் ஆச்சி... மற்றபடி விமர்சனம் நல்லா இருக்கு

    ReplyDelete
  7. anbuLLa Desanthiri,

    Pl. see my review in Tamil of Hindi 'Raavan'.

    nanRi!

    Cinema Virumbi
    http://cinemavirumbi.blogspot.com

    ReplyDelete
  8. @ப்ரின்ஸ்...
    //ராவணன் படத்துக்கு பிளஸ் பாயிண்ட் ஒளிப்பதிவு தான் அதை பற்றி சொல்லாம விட்டுடீங்களே!!//

    நான் ஒரே வரியில் முடித்து விட்டேன் நண்பரே !

    //ஒளிப் பதிவில் அசத்தியிருக்கிறார்கள் சந்தோஷ் சிவன் - மணிகண்டன் !//


    // மற்றபடி விமர்சனம் நல்லா இருக்கு//
    மிக்க நன்றி நண்பரே !!! :)

    வ - த - ந - மீ - வ !!!

    ReplyDelete
  9. @Cinema Virumbi...
    விமர்சனம் படித்தேன் நண்பரே... நன்றாக இருந்தது.. !
    'சினிமா விரும்பி' இந்த படத்தை விரும்பலை போல ?!
    வ - த - ந - மீ - வ !!!

    ReplyDelete
  10. bhai, review super.

    songs edhuvum fullah varaathu. ellae max 2.5 min than. mulu paadalkal irunthaal padathin neelam athikamagi thoivaga irukumenbathu en karuthu.

    suhasini's dialogues than padathula periyyyya minus...

    ReplyDelete
  11. @Kumar014...
    //mulu paadalkal irunthaal padathin neelam athikamagi thoivaga irukumenbathu en karuthu.
    //
    ஆனால், பாடல்களுக்காகவே படம் பார்க்க வருபவர்களும் இருக்கிறார்கள் !!
    அவர்களை ஏமாற்றிவிட்டார் மணி ரத்னம் ! :(
    //suhasini's dialogues than padathula periyyyya minus...//
    ஹ்ம்ம்ம்...
    வ - த - ந - மீ - வ !!!

    ReplyDelete
  12. "எனக்கெல்லாம், 'WELCOME' , 'முன் இருக்கையில் கால் வைத்து அசுத்தம் செய்யாதீர்' , 'புகை பிடிக்காதீர்', 'அரங்கை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுங்கள் ' என்று SLIDE போடுவதிலிருந்து படம் பார்த்தால்தான் ஒரு திருப்தி ! இவையும் ஒரு படத்தின் அங்கமாகத்தான் பார்க்கிறேன் நான் "

    இதே மாதிரி தான் நானும் ... :)

    ReplyDelete
  13. @S.Sudharshan...
    //இதே மாதிரி தான் நானும் ... :) //
    என் இனமடா நீ ... (தப்பா எடுத்துக்காதீங்க,படத்துல டைலாக் இப்படிதான் வரும் !)
    வ - த - ந - மீ - வ !!!

    ReplyDelete
  14. bhai naanum indha padatha hydla than parthen. naan padathuku poikitu irukumpothu officela irundhu call vandhuchu.. ada pongada vara mudiyathunu solli intha padathuku ponen.. Padam ok than romba nalla illa !!! olipathivu super.. even locations kuda arumai and even songs too !!! matha padi padathula onnum andha alavuku perusa illa !!! But naan first scenea miss paniten !!! adhan konjam varutham !!!

    ReplyDelete
  15. hindhila padam odave illa.. nee tamila parthutu hindila parthana kandipa tamil than pidikum !! (hindi puriyadhunu solladha ?!!)abishekuku nadikave varala !!! vikram nalla difference kaatirupan !! vikram tamila raavanan.. hindila raaman !!

    ReplyDelete
  16. @gumkattai...
    தகவலுக்கு நன்றி...
    வ - த - ந - மீ - வ!

    ReplyDelete

போற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... !

தமிழில் பின்னூட்டமிட CLICKகுங்க....

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...