Saturday, July 31, 2010

உலகத் தமிழ்ப் பதிவர்கள் தினம் - தலைப்பில்லா இடுகைகள் 31 . 07 .2010

ஒரு அறிவிப்பு ...

அண்மைய செய்தி


கடந்த இரண்டு வாரங்களாக  காணாமல் போயிருந்த இந்த பிளாகின் 'மொதலாளி'  திரு.தேசாந்திரி - பழமை விரும்பி , இன்று பின்னூட்டம்போடும் போது கண்டுபிடிக்கப் பட்டார். அவரிடம் கைவசம் சரக்கு இல்லை என்பதால், இவ்வளவு நாட்களாக தலைமறைவாக இருந்ததாக எமது சிறப்பு செய்தியாளரிடம் தெரிவித்தார். மேலும், அவ்வப் போது , சரக்கு கிடைத்தால் மீண்டும் மொக்கை போட வருவார் என்று தெரிகிறது. ஆகவே , பொதுமக்கள் அனைவரும் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம் என்று அதிகாரப் பூர்வமற்ற வட்டாரங்களில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

(டிஸ்கி - எனது வலைதளத்தின் நீண்ட கால (!) வாசக (!!)  நண்பர் ஒருவர், நான் அடிக்கடி பதிவு போடுவதில்லை என்று வருத்தம் தெரிவித்திருந்தார் ! அவருக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த செய்தி. (கோவிச்சுக்காதீங்க அருண் , சும்மா ஜாலிக்காகத்தான் ! )).இந்த இடுகை  மூலம் அந்த வாசக நண்பரை , சக பதிவராகும் படி கேட்டுக் 'கொல்'கிரேன்!
(நல்லா மாட்டிக்கிடீங்கள ?! இப்ப இன்னா பண்ணுவீங்க ?!)

புகைப்பட உதவி - www.bygonebutlins.com

ஒரு சுய தம்பட்டம்...

ஒரு நாள் கூகிளாரிடம் , தமிழ் வார்த்தைகளை சொல்லி தேடச் சொன்ன போதுதான் , வலையுலகம் என்று ஒன்று இருப்பதை எதேர்ச்சையாக அறிந்தேன். பிறகு, இளவஞ்சி,  வால்பையன் ஆகியோரது வலைத்தளங்களை வாசிக்கலானேன். இவர்களைப் பார்த்துதான், நானும் 'எழுத' ஆரம்பிதேன் ! ( அவங்களைச் சொல்லனும் !)


இன்றுடன் நான் வலையுலகிற்கு வந்து ஒருவருடம் ஆகிறது !!!

(யாருங்க அது, ஜூலை 31 - ஐ உலகத்  தமிழ்ப் பதிவர்கள் தினமாக்க வேண்டுமென்று சவுண்டு  விடுறது ?!)கடந்த ஒருவருட காலமாக, மொத்தம் 60 இடுகைகள் இட்டிருக்கிறேன். அவற்றில் ஒரு மீள் இடுகை, இன்னொன்று வெட்டி , ஒட்டியது. சில, எனக்கு வந்த மின்னஞ்சல்களை மொழி பெயர்த்தும், டிங்கரிங் & பட்டி பார்த்து ஒப்பேத்தியது.எல்லாவற்றிற்கும் வந்தும், 'தந்தும்' ஆதரவளித்த நண்பர்களுக்கும்,திரட்டிகள்,சக பதிவர்கள்,வாசக நண்பர்கள் மற்றும்  எனது நன்றிகள்!

ஆர்குட் எனக்கு அறிமுகமான புதிதில், பெரும்பாலான நேரத்தை , அத்தளத்திலேயே கழித்தேன். இப்போது , பிளாக்கர் ! இன்னும் எத்தனை நாள் 'தீவிரமாக' எழுதுவேன் என்று தெரிய வில்லை.

என்னுடைய முதல் இடுகை  - முதல் அஞ்சல் ...(அட போஸ்ட் தாங்க )


ஐம்பதாவது இடுகைன்னு நெனைச்சு நான் போட்ட 49 வது இடுகை

ஒரு விமர்சனம்...

கடந்த வாரம் வெள்ளிக் கிழமை , 'மதராசப்  பட்டினம் ' திரைப்படம் போயிருந்தேன். இந்த படத்திற்கான விளம்பரங்கள் என்னை வெகுவாகக் கவர்ந்திருந்தன. மேலும், இயக்குனர் விஜயின் 'பொய் சொல்லப் போறோம்' திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்றாகும் (அவருடைய 'கிரீடம்' படம் இன்னும் பார்க்க வில்லை. ஆனால், தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பாகும் சில காட்சிகளை பார்த்திருக்கிறேன். நன்றாகத்தான் இருந்தன !). ஆகவே இரண்டு வார காலம்  ஆனாலும், யாரிடமும் கதை கேட்காமல் போய்விடலாம் என்று நினைத்தால், நம்ம பதிவர்கள் பதிவில் முதல் இரண்டு வரிகளிலேயே படத்தின் 'ஒன் லைன்' ஐ சொல்லி விடுகிறார்கள் ! ஒரு வழியாக ஓரளவு கதையை யூகித்துக் கொண்டு , போய் அமர்ந்தேன் !படத்தின் பெயர் போடுவதே அழகாக இருக்கிறது.பழைய மதராசப் பட்டினத்தை காட்டுவார்கள் என்று 'நம்பி' போன நான் கொஞ்சம் ஏமாந்துதான் போய்விட்டேன்.பெரும்பாலான காட்சிகள் 'செட்' தான் என்று அப்பட்டமாகத் தெரிந்தாலும் , இப்படி காட்டுவதற்கே அவர்கள் எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பார்கள் என்று என்றும் தோன்றுகிறது ! விமர்சனம் செய்வதுதான் சுலபம் , இல்லையா ?! படத்தின் இசை , ஜி.வி.பிரகாஷ்குமார். ஏற்கனவே ஆயிரத்தில் ஒருவனில் , தன்னை நிரூபித்தவர் ! பாடல்கள் எல்லாமே நன்றாகத் தான் இருக்கின்றன. பின்னணியிலும் முன்னணி வகிக்கிறார்! அப்புறம் ஒளிப் பதிவு - நீரவ் ஷா ! நல்லாத்தான் இருக்கு !


ஆர்யாவும் மற்ற நடிகர்களும் நன்றாக  நடித்திருக்கிறார்கள். அமரர் , திரு 'ஹனீபா' அவர்களுக்கு இதுதான் கடைசிப் படம். படப் பிடிப்பின் போதே, அவருக்கு உடல்நலம் மிகவும் மோசமாக இருந்ததாகவும், அதையும் பொருட் படுத்தாமல் நடித்துக் கொடுத்திருக்கிறார் என்று, இயக்குனர் விஜய் ஒரு வானொலிப் பேட்டியில் தெரிவித்திருக்கிறார். படத்தின் பல காட்சிகளில், அவர் உடல் நலம் குன்றியது நன்றாகவே தெரிந்தது ! நல்ல கலைஞர் ! கதாநாயகி எமி ஜாக்சன் , ஏற்கனவே ஏதோ படத்தில் பார்த்தது போல இருக்கிறார். நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார்.ஒரு கட்டத்தில் இடைவேளை எப்படா வரும் என்று எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டேன். அவ்வளவு நீளமாக இருப்பது போன்ற ஒரு தோற்றம்.பிற்பாதியின் இறுதியிலும் கொஞ்சம் இழுவையாக இருப்பது போன்று தோன்றியது ! (மன்னியுங்கள்  விஜய் !).
படம் வெளியான வாரத்தில், கூட்டம் இன்றைய சென்னையை போல இருந்தது! பிறகு வந்த வாரங்களில் அப்போதைய சென்னை அளவிற்கு தான் கூட்டமிருந்தது ! ஒட்டு மொத்தமாக , மதராசப் பட்டிணம் - அழகு.

11 comments:

 1. 2வது இன்னிங்ஸ் துவக்கியுள்ள தேசாந்திரி விரைவில் சதம் அடிக்க வந்துவிட்டார். ஸ்டார்ட் மியூசிக்

  ReplyDelete
 2. @அருண் பிரசாத்...
  வாங்க தல... வாழ்த்துக்கு நன்றி..

  @உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) ...
  வாங்க உலவு..
  உங்க புது வெப் சைட் டிசைன் நல்லா இருக்கு...
  வாழ்த்துக்கு நன்றி...

  @ எல்லோருக்கும்...
  வ - த - ந - மீ - வ !

  ReplyDelete
 3. வலைப்பதிவின் முதல் பிறந்த நாளிற்கு வாழ்த்துகள்...

  ReplyDelete
 4. @இராகவன் நைஜிரியா...
  வாங்க ராகவன் ஐயா...
  வாழ்த்துக்கு நன்றி...
  வ - த - ந - மீ - வ !

  ReplyDelete
 5. அலைய ஆரம்பித்து ஒரு வருடம்..இன்னும் பலகாலம் அலைய வாழ்த்துக்கள் தேசாந்திரி!
  காடு மேடெல்லாம் சுற்றி அனுபவங்களைப்
  பதிய வாழ்த்துக்கள் சகோதரா !
  http://vanavilmanithan.blogspot.com/

  ReplyDelete
 6. @மோகன்ஜி...
  வாங்க ஜி...
  வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி...
  வ - த - ந - மீ - வ !

  ReplyDelete
 7. முதல் ஆண்டை வெற்றிகரமாக முடித்து இரண்டாம் ஆண்டிலும் வெற்றி காண வாழ்த்துக்களுடன்
  உங்கள்
  நீண்ட கால (!) வாசக (!!) நண்பர்

  Blog எழுதுறவன் மனுசன்னா ...
  Follow பண்றவன் பெரியமனுசன் ...
  -தேசாந்திரி - பழமை விரும்பி
  உங்கள் தத்துவப்படி அறிவுரைப்படி நான் பெரிய மனுஷனாவே இருக்க விரும்புகிறேன்
  (yappa na escape)

  ReplyDelete
 8. http://arunthanigaivelan.weebly.com/

  ReplyDelete
 9. இன்னும் பல நல்ல " கருத்துள்ள கருத்துசெரிவுள்ள பதிவுகள் " எழுத என்னுடைய வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 10. @நா.மணிவண்ணன்....

  வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே !

  //" கருத்துள்ள கருத்துசெரிவுள்ள பதிவுகள் "//
  ஹ்ம்ம்.... முயற்சிக்கிறேன்...
  வ - த - ந - மீ - வ !

  ReplyDelete

போற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... !

தமிழில் பின்னூட்டமிட CLICKகுங்க....

Blog எழுதுறவன் மனுசன்னா ...
Follow பண்றவன்
பெரியமனுசன் ...

பெரிய மனுசங்க....

நான் எனது பள்ளி நாட்களின் இறுதியிலும், கல்லூரி நாட்களிலும் எழுத வேண்டுமென்று நினைத்த நாட்குறிப்பின் வெளிப்பாடுதான் இந்த வலை தளம்.சினிமா, அரசியல், கலை, விளையாட்டு தொடர்பான விஷயங்களை பகிர்ந்து கொள்ள எனக்கான இடம் (உங்களுக்குமானது தான் !).


(இன்னும் எத்தன பேர்டா கெளம்பி இருக்கீங்க ?!)

2011 சட்டசபைத் தேர்தலில் கூட்டணி எப்படி இருக்கும் ?

வ - த - ந - மீ - வ = வந்தமைக்கும் தந்தமைக்கும் நன்றி , மீண்டும் வருக !

தேசாந்திரி , அங்க பாரு...

தேசாந்திரி , அங்க பாரு...

வந்தார்கள் சென்றார்கள்...


நம்ம நிலைமையை பாருங்க!

Contact Us

Name

Email *

Message *