நான் ஏன் பதிவரானேன் ? - பாகம் 1 ..
நீங்கள் அந்த பாதிப்பிலிருந்து மீள்வதற்கு முன்னதாகவே இன்னொன்று !!
****************************************************************************************
என் அம்மா எப்பொழுதுமே பால் காய்ச்சும் போது கொஞ்சம் நிறையவே ( கொஞ்சமா இல்லை நிறையவா ?! ) தண்ணீர் ஊற்றுவார்.
"ஏம்மா, பால்ல இவ்ளோ தண்ணி கலக்குற ?! "
"ரொம்ப 'திக்'க்கா பால் குடிச்சா ஹார்ட் ப்ராப்ளம் வரும்ப்பா !! "
"ஆனா, ரொம்ப தண்ணியா குடிச்சா , கிட்னி ப்ராப்ளம் வந்துடுமேமா !"
****************************************************************************************
எங்கள் அலுவலகத்தில் வாரமொருமுறை அல்லது இருமுறை மீட்டிங் போட்டு , யாராரு எவ்ளோ ஆணி புடுங்கனும், எப்பக்குள்ள புடுங்கனும்னு டீடைலா சொல்லுவாங்க !
அதுவும் காலை போன உடனே ! ஆரம்பிச்சா ஒரு ஒன்றை மணி நேரம் தாங்கும் !! ஒரு நாள், காலை 'பேருண்டி' ( கொஞ்சமா சாப்பிடுறவங்களுக்குதான் 'சிற்றுண்டி' !) சாப்பிடாமலே போய் விட்டேன் .அந்த நேரம் பார்த்து ,
"சரி மீட்டிங் வெச்சுக்கலாமா ?!" , இது குழு தலைவர் ( TEAM LEAD ஆமாம் !!)
"மொதல்ல ஈட்டிங் முடிச்சுக்கலாம் !" - வேற யாரு , அடியேன் தான் !
****************************************************************************************
அலுவலக நண்பர்கள் , ட்ரிங்க்ஸ் அடிப்பது பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.
"என்னய்யா , இன்னிக்கு சரக்கா ?!"
"ஆமா ! அந்த பிளான்ல தான் இருக்கேன் !"
"உனக்கு பரவாயில்ல , பேட்சுலர் ரூம்ல இருக்க . நான் சரக்கடிக்குறது தெரிஞ்சா, வீடு ரெண்டாயிடும் ! "
"சரக்கடிச்சா , வீடு மட்டுமில்ல , எல்லாமே 'ரெண்டா'யிடும் !!"
****************************************************************************************
சின்ன வயசுல , 'அவரு FOREIGN ல இருந்து வந்திருக்காரு' , 'இவரு அடுத்த வாரம் FOREIGN போகப் போறாரு' ன்னு மத்தவங்க பேசுறதக் கேட்டிருக்கேன் ! அப்பவெல்லாம் நான் நெனச்சுப்பேன் ,
"அமெரிக்கா , ஜப்பான் மாதிரி 'FOREIGN ' ங்கற பேர்ல ஒரு வெளி நாடு இருக்கும் போல !"
ஆமா, அந்த FOREIGN எங்க இருக்குங்க ?!
****************************************************************************************
டிஸ்கி : இந்த இடுகைக்கு போட வேண்டிய டிஸ்கி ஏற்கனவே பாகம் 1 க்கு போட்டதைப் போலவே இருக்குமென்பதால், அதைப் படித்துவிடுமாறு கேட்டுக் 'கொல்'கிரேன் !
அருமை. வாழ்த்துக்கள்
ReplyDeleteஹ்ம்ம் இது பரவால்ல அப்போ இந்த வார இடுகை அவ்ளோ தானா!
ReplyDeleteஎன்ன மாம்ஸ் நா ரொம்ப தொல்ல கொடுகறேன்ல
But Sorry
என் தொல்ல தொடரும்...
@மதுரை சரவணன்...
ReplyDeleteதங்கள் ஊக்கத்திற்கு நன்றி நண்பரே...!
வ - த - ந - மீ - வ !
@Arun...
//என்ன மாம்ஸ் நா ரொம்ப தொல்ல கொடுகறேன்ல
But Sorry
என் தொல்ல தொடரும்... ///
அன்புத் தொல்லை தானே !!! அதிலென்ன ?!
வ - த - ந - மீ - வ !