Sunday, May 9, 2010

நான் ஏன் பதிவரானேன் ? - பாகம் 1...

"நீ ஏன் பதிவர் ஆனே ?" ன்னு நீங்க கேக்கலைனாலும், சொல்லவேண்டியது என் கடைமைங்க ! . மேல படிங்க . 


என்னங்க ? 'மேல' படிங்க ன்னா , கீழ படிக்கிறீங்க ? சரி படிச்சிட்டு போங்க !

**********************************************************************************************************************************************************

முதலாமாண்டு மாணவர் விடுதி... மதிய உணவு நேரம்... அனைவரும் அரக்க பறக்க உணவருந்தி கொண்டிருந்தோம். அப்போது ஹாஸ்டலில் தரப்படும் அப்பளத்தை, அடுத்தவர் தட்டிலிருந்து 'ஆட்டையப் ' போடுவது ஒரு பேஷன் ! என் நெருங்கிய நண்பன் ஒருவன் , என்னுடைய அப்பளத்தை எடுக்க , தட்டில் கைவைக்க முனைந்தான் !
நான் - " முதல்ல  அப்பளம் , FRIEND எல்லாம் அப்பறம் " !

**********************************************************************************************************************************************************


அதே முதலாமாண்டு மாணவர் விடுதி. எங்கள் அறையில் எப்போதும் மாணவர் கூட்டம் கூட்டி அரட்டையடித்துக் கொண்டிருப்போம். யாராவது ஒருத்தர் மாட்டினால் போதும், அவனை கிண்டலடிப்பதுதான் அன்றைய பொழுது போக்கு ! அந்த வகையில், மாட்டிய ஒருவனை எல்லோரும் ஒட்டகத்தை சுத்தம் செய்பவன்   என்று ஓட்டிக் கொண்டிருந்தார்கள். அவனும் எப்படியோ சமாளித்துக் கொண்டிருந்தான்.

" வாரத்துக்கு எத்தன நாள் இந்த வேலை ?" இது நண்பர்கள்.
"வாரத்தில் 5  நாள் தான்"
"அப்ப மற்ற நாட்கள் ?!"
"ரெஸ்ட் தான் !"
"ரெஸ்ட் ஒட்டகதிற்க்கா ?! உனக்கா ?!" - நான் .

**********************************************************************************************************************************************************

கல்லூரி படிப்பு  முடிந்து , வேலை தேடிக்கொண்டிருந்த காலம். கல்லூரி நண்பன் ஒருவன் போன் செய்து, தான் யாரென்று சொல்லாமல் 'சஸ்பென்ஸ்' வைத்துக் கொண்டிருந்தான் .

"டேய் , நீ யாருன்னு சொல்டா . இல்ல ஒரு 'க்ளூ' வாவது கொடேன் !" - நான்.
"நீ எந்த காலேஜ்ல படிச்ச ?"
"_______ காலேஜ் ல ."
"எந்த BRANCH ?" - இது நண்பன்.
"IT "
"எந்த வருஷம் ?"
"நாலு வருஷமும் அதே BRANCH தான் ?" - அடியேன்.
அதுக்கு பிறகு அவன் கால் பண்ணவே இல்லை !

**********************************************************************************************************************************************************
அலுவலகத்தில் நண்பர்களுடன் காலை உணவு அருந்திக் கொண்டிருந்தேன். நண்பர் கொண்டு வந்திருந்த தோசையில், சிறிய கல் ஒன்று இருந்தது.
"என்னப்பா , தோசையில கல் இருக்கு ?" மற்றொரு நண்பர்.
" 'கல்' தோசை கேள்விப் பட்டதில்லையா ? அதான் இது " - வேறு யார், நாந்தேன் !

**********************************************************************************************************************************************************

ஒரு வருடத்திற்கு முன்பு, தகவல் தொழிநுட்பத் துறையில் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பொருளாதார பெருமந்தம் தனது வேலையை காட்டிக் கொண்டிருந்த காலம்.உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்த  நான் , தலை முடியை நன்றாக SHORT ஆக வெட்டியிருந்தேன்.
"இது என்னப்பா , புது விதமான கட்டிங் ? " - உறவினர் .
"இதுதாங்க COST CUTTING ! " - பிரபல(!) பதிவர் தேசாந்திரி - பழமை விரும்பி (அட , நாந்தாங்க , அப்படியெல்லாம் சிரிக்கக் கூடாது !! ).

**********************************************************************************************************************************************************
ஒருவாரம் முன்பு , அலுவலக நண்பர்களுடன்  மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, பேச்சு நித்யானந்தா பற்றி திரும்பியது. அப்போது , ஒரு நண்பர் சொன்னார்,

"புட்ட பர்த்தி சாய்பாபா , ஆள் எப்படின்னு தெரியாது. ஆனால், அவர் மற்றவர்களுக்கு நிறைய உதவி செய்கிறார். இதுமாதிரி, தனக்கும் செய்து, மற்றவருக்கும் எதாவது செய்தால் பரவாயில்லை . ஆனால், நித்தியானந்தா ?!"

"அதுக்குதான் , CD விட்டிருக்காங்களே ?!" - நான் !

**********************************************************************************************************************************************************

அரசியல் பேசிக்கொண்டிருந்த நண்பர் ஒருவர் சொன்னார் ,
" 'மக்கள் நல திட்டம்' ங்கற பேர்ல, திட்டத்திற்கு ஒதுக்கிய  பணத்தை திருடறதுலயே எல்லாரும் குறியா இருக்கானுக !"
" 'திட்டம் போட்டு திருடற கூட்டம்' னு நீங்க கேள்விப் பட்டதில்ல ?!"

**********************************************************************************************************************************************************

நமக்குள்ள இவ்வளவு 'திறமை' இருக்கும் போது, நான் ஏன், வலைத்தளம் ஆரம்பிக்கக் கூடாது ?! நீங்களே சொல்லுங்க !


டிஸ்கி - மேலே சொன்னதெல்லாம், ஒரு தமாசுக்குதான் . உண்மையில் , இளவஞ்சி,வால்பையன் , போன்றோர்களின் வலைதளத்தை பார்த்த பிறகுதான் , பதிவுலகிற்குள் பாதம் பதிக்கும் ஆசை வந்தது. அவர்களுக்கு என் நன்றிகள். இவர்கள் மட்டுமல்லாமல், என் வலை தளத்திற்கு வந்து, FOLLOWERS ஆகியும், ஆகாமலும், பின்னூட்டங்கள் இட்டும், இடாமலும்  என்னை ஊக்கப்படுத்தி வரும் அனைத்து நண்பர்களுக்கும், திரட்டிகளுக்கும் ,GOOGLE க்கும்  மற்ற அனைவருக்கும் என் நன்றிகள் .

17 comments:

 1. மன்னிக்கவும் நண்பர்களே, 50 வது இடுகைன்னு நெனச்சேன்...இடுகை இட்ட பின்புதான் தெரிந்தது, இது 49 வது இடுகை...

  ReplyDelete
 2. தங்களின் 49வது இடுகைக்கு வாழ்த்துகள்...

  50வது இடுகைக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. // "நான் ஏன் பதிவரானேன்? ".... 49 வது இடுகை ....! //

  இதுக்கெல்லாமா கவலைப் படுவாங்க... லூஸ்ல விடுங்க... நடப்பவை எல்லாம் நல்லதற்கே..

  ReplyDelete
 4. ஒத்துக்கறேன்.. உங்களுக்கு முழு தகுதி இருக்கு;) நெக்ஸ்ட் மீட் பண்றேன்..
  50-க்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் . ஒண்ணுமில்ல 49 தடவ சொன்னேன்.

  ReplyDelete
 6. 49வது இடுகைக்கு வாழ்த்துகள்...

  50வது இடுகைக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. @இராகவன் நைஜிரியா.....
  //இதுக்கெல்லாமா கவலைப் படுவாங்க... லூஸ்ல விடுங்க... நடப்பவை எல்லாம் நல்லதற்கே..////
  21 பேருக்கு நல்லதுனா ,எதுவுமே தப்பில்லைங்க...( எனக்கு 21 பாலோயர்ஸ் வந்துட்டாங்களாக்கும் !)
  தங்களின் வருகைக்கும் தருகைக்கும் நன்றி நண்பரே... மீண்டும் வருக....

  ReplyDelete
 8. @பிரசன்னா....
  ////ஒத்துக்கறேன்.. உங்களுக்கு முழு தகுதி இருக்கு;) //////
  வேற வழி இல்லைங்க... ஒத்துக்கிட்டுதான் ஆகணும்... ஹி ஹி....
  வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.... மீண்டும் வருக...

  ReplyDelete
 9. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா).....
  யார் ஒத்துக்கிட்டாலும் இல்லைனாலும் நீங்க ரொம்ப நல்லவருங்க.... ஹி..ஹி...
  வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்
  நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி (49 தரம் இருக்குல்ல ?!)
  மீண்டும் வருக...

  ReplyDelete
 10. @S Maharajan....
  வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே , மீண்டும் வருக...

  ReplyDelete
 11. இப்போது தான் உங்கள் தளத்திற்கு முதலில் வருகிறேன்.
  50 க்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. @முகுந்த் அம்மா....
  தங்களின் முதல் வருகைக்கு நன்றி...
  மீண்டும் வருக..

  ReplyDelete
 13. நண்பரே இன்னும் நிறைய எழுதுங்கள்
  வாழ்த்துகளுடன்
  நன்றி

  ReplyDelete
 14. @Arun....
  தங்களின் வருகைக்கும் தருகைக்கும் நன்றி நண்பரே... மீண்டும் வருக...

  ReplyDelete
 15. பெரிய கல்லுல தோசை சுட்டா சின்ன சின்ன கல்லு இருக்கத்தான் செய்யும் - இது நான், வாழ்த்துக்கள் தேசாந்தரி

  ReplyDelete
 16. @VSP...
  //பெரிய கல்லுல தோசை சுட்டா சின்ன சின்ன கல்லு இருக்கத்தான் செய்யும்//
  தத்துவம்லாம், பயங்கரமா இருக்கு ?!
  வாங்க... வாங்க..
  //வாழ்த்துக்கள் தேசாந்தரி //
  வாழ்த்துக்கு நன்றிங்க!!!
  வ - த - ந - மீ - வ!

  ReplyDelete

போற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... !

தமிழில் பின்னூட்டமிட CLICKகுங்க....

Blog எழுதுறவன் மனுசன்னா ...
Follow பண்றவன்
பெரியமனுசன் ...

பெரிய மனுசங்க....

நான் எனது பள்ளி நாட்களின் இறுதியிலும், கல்லூரி நாட்களிலும் எழுத வேண்டுமென்று நினைத்த நாட்குறிப்பின் வெளிப்பாடுதான் இந்த வலை தளம்.சினிமா, அரசியல், கலை, விளையாட்டு தொடர்பான விஷயங்களை பகிர்ந்து கொள்ள எனக்கான இடம் (உங்களுக்குமானது தான் !).


(இன்னும் எத்தன பேர்டா கெளம்பி இருக்கீங்க ?!)

2011 சட்டசபைத் தேர்தலில் கூட்டணி எப்படி இருக்கும் ?

வ - த - ந - மீ - வ = வந்தமைக்கும் தந்தமைக்கும் நன்றி , மீண்டும் வருக !

தேசாந்திரி , அங்க பாரு...

தேசாந்திரி , அங்க பாரு...

வந்தார்கள் சென்றார்கள்...


நம்ம நிலைமையை பாருங்க!

Contact Us

Name

Email *

Message *