"நிம்மதியான திருமண வாழ்க்கை பெறுவது எப்படி...?" ங்கற தலைப்பை பார்த்தவுடனே, "ஆஹா ! இதைத்தானே இவ்ளோ நாளா தேடிட்டு இருந்தேன் ?!" ன்னு சொல்றீங்களா ?! நீங்க சரியான இடத்திற்குத்தான் வந்திருக்கீங்க!
அ. நீங்கள் திருமணமான ஆணா ?
ஆ. நீங்கள் இன்னும் கொஞ்ச நாட்களில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறீர்களா ?
மேற்கண்ட மூன்று கேள்விகளில் எதாவது ஒன்றிற்கு உங்களுடைய பதில், "ஆம்" என்றால், மேலே படிங்க !
இது எனக்கு ஆங்கிலத்தில் வந்த மின்னஞ்சல்.கொஞ்சம் தமிழ்ப் 'படுத்தி' இருக்கிறேன். மின்னஞ்சலிய நண்பனுக்கும், இதன் உண்மையான 'ஓனருக்கும்' நன்றி.
பொது நலன் கருதி வெளியிடுவோர் : உங்கள் தேசாந்திரி - பழமை விரும்பி.
##########################################################################################
ஒரு ஊர்ல ஒரு வயசான தம்பதி இருந்தாங்க. அவங்களுக்கு கல்யாணமாகி 65 வருசமாச்சு! ஆணா இதுவரைக்கும் ரெண்டு பேரும் ஒரு சின்ன சண்ட கூட போட்டதில்ல ! இதப் பார்த்து ஊர்ல இருக்க எல்லாரும் ரொம்ப ஆச்சர்யப்பட்டாங்க !
உடனே, எல்லாருமா சேர்ந்து முடிவு பண்ணி அவங்களுக்கு ஒரு பாராட்டு விழா ஏற்பாடு பண்ணாங்க. (ஆஹா, திரும்பவும் ஒரு பாராட்டு விழாவா ?!)
அந்த விழாவுல நெறைய பத்திரிக்கைக்காரங்களும் கலந்துகிட்டாங்க. அதுல ஒருத்தர், ஆர்வம் தாங்காம , அந்த புருஷன் கிட்ட கேட்டாரு ,"அது எப்புடிங்க ?! 65 வருசத்துல ஒரு தடவ கூட சண்ட போடாம உங்களால இருக்க முடிஞ்சுது ?!"
அதுக்கு அந்த கிழவர் சொன்னாராம்,
"தம்பி, எங்களுக்கு கல்யாணமான அடுத்த நாளே, நாங்க ஹனிமூனுக்கு மெட்ராஸ் வந்தோம், எல்லா இடத்தையும் சுத்தி பாத்துட்டு கடைசியா மெரீனா பீச்சுக்கு போனோம். அங்க குதிர சவாரி போகணும்னு அவ ஆசப் பட்டா. சரின்னு, அவ ஒரு குதிரையிலயும், நான் ஒரு குதிரையிலயும் சவாரி பண்ண ஆரம்பிச்சோம் !"
"ஹ்ம்ம்..."
"என் குதிரை நல்லாத்தான் இருந்துச்சு. ஆனா , அவ வந்த குதிரை சரியாவே ஓடல. ஒரு முறை, அவள கீழ தள்ளி விட்டுடிச்சு. அவ, குதிரையை பார்த்து ஒச்சரிச்சா... ச்சி எச்சரிச்சா, 'இது உனக்கு முதல் தடவை...' "
"ஹ்ம்ம்ம்..."
"திரும்பவும் மேல ஏறி, சவாரி பண்ண ஆரம்பிச்சா... ஆனா பாரு , அந்த குதிர ரெண்டாவது தடவையும் அவள கீழே தள்ளிடுச்சி ! கொஞ்சம் கோவமான எம்பொண்டாட்டி, குதிரையைப் பார்த்து சொன்னா, 'இது உனக்கு ரெண்டாவது தடவை !' "
"ஹ்ம்ம்ம்ம்..."
"ஆனா, அடுத்த வாட்டியும் அவளை கீழ தள்ளிடுச்சு அந்த குதிரை. உடனே, பக்கத்துல இருந்த பெரிய பாறாங்கல்ல தூக்கி, அது மேல போட்டு , அந்த குதிரைய கொன்னே போட்டுட்டா..."
"ஹ்ம்ம்ம்ம்ம்..."
"உடனே நான் கேட்டேன், 'ஏண்டி, உனக்கு கொஞ்சமாவது மூளை இருக்கா ?! பாவம் அந்த வாயில்லா ஜீவனை இப்புடி கல்லத் தூக்கிப் போட்டு கொன்னுட்டியே ?!'"
"ஹ்ம்மம்ம்ம்ம்..."
"அதுக்கு அவ சொன்னா, 'யோவ், இது உனக்கு முதல் தடவை...' ! இப்போ தெரியுதா ?! நான் எப்புடி 65 வருஷம் ஓட்டினேன்னு ?!'"
##########################################################################################
சரி நீங்க கல்யாணமானவரா, இல்லையான்னு எப்புடி கண்டு பிடிக்கிறது ?
இடுகையோட ஆரம்பத்துல, மூணு கேள்வி கேட்டிருந்தேன்னு சொன்னேன் இல்ல ?!
இல்லை.
உண்மையிலேயே ரெண்டு கேள்விதான் இருக்கு. இத நீங்க கண்டுக்காம படிச்சிருந்தா, உங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சுங்கறது கன்பார்ம்டு !
புகைப்பட உதவி : http://acarelessdreamer.typepad.com/ , http://waltonportfolio.com
எல்லாம் சரி.. நீங்க கால்கட்டு போட்டவரா.. இல்லையா? அத சொல்லுங்க சார்...
ReplyDeleteஅன்புடன் ஆர்.வி.எஸ்.
@RVS...
ReplyDelete//நீங்க கால்கட்டு போட்டவரா.. இல்லையா? அத சொல்லுங்க சார்...
//
நான் இந்த வருஷம் சுதந்திர தினம் கொண்டாடினேன்...
அடுத்த வருசமும் கொண்டாடுவேன் சார்....
வ - த - ந - மீ - வ!
நம்ப தலைவரு ௬௫ வருஷம் வேஸ்ட் பண்ணிட்டாரே
ReplyDelete! சம்சாரம்' யோவ், இது உனக்கு முதல் தடவை...'ன்னு சொன்னப்ப குதிரை மேல தானே இருந்தாரு,அப்பிடியே ஜூட் விட்டிருக்கலாமில்லே!
ஹ்ம்ம்.... இது உங்களுக்கு தெரிஞ்சு என்ன சார் பண்றது...?
ReplyDeleteவருங்கால சந்ததிகளுக்கு இது ஒரு நல்ல செய்தியாக இருக்கும்...!!
You should mention the source from where you copied this.
ReplyDeleteI mean the name of the original author, who deserves the appreciation
ReplyDelete@Jayadeva...
ReplyDelete//You should mention the source from where you copied this. ///
நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்....
நாமதான் டிஸ்கி போட்டுட்டோமேன்னு நெனைக்கறதுக்குள்ள....
//I mean the name of the original author, who deserves the appreciation ///
யாருன்னு தெரியலைங்க...
நாம என்ன திருவள்ளுவர நேர்லயா பார்த்திருக்கோம்?!
(தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்க, இன்னா செய்தாரை ஒறுத்தல் !)
அந்த மாதிரி நெனச்சுக்க வேண்டியதுதான் !!
வ - த - ந - மீ - வ!
ரொம்ப simple, கல்யாணம் பண்ணின உடனே divorce வாங்கிடனும். ஹி ஹி ஹி ...
ReplyDelete@My Verses ...
ReplyDeleteஆஹா... ஏன்னா ஒரு ஐடியா...!!!
டிவோர்சே வாங்குறது எப்படின்னு சொல்றீங்களே ?!
வ - த - ந - மீ - வ!
அந்த இரண்டு கேள்வி, மூன்று கேள்வி பிரமாதம்...!!!
ReplyDeleteபி . கு :
நான் அதை காவனித்தேன்...
@manivasagam...
ReplyDeleteஹ்ம்ம்... நன்றி நண்பா...
என்ன ஆச்சு ஒரு "அழைப்புமே" இல்ல, ரொம்ப நாளா ?!
வ - த - ந - மீ - வ!