Sunday, September 5, 2010

நான் ஏன் பதிவரானேன் ? பாகம் - 3

நான் ரொம்பவும் நகைச்சுவை உணர்வு உள்ளவன் என்று நான் நானே நினைத்துக்  கொள்வேன் ! 

அது எப்படி என்று கேட்கிறீங்களா ?! 








முதல் வரியை மீண்டும் படிக்கவும் !


அவ்வாறு நான் நினைக்க காரணமாயிருந்த சில தருணங்களில், நான் கூறிய வசனங்களை இங்கே ஒரு தொடராக இடுகையிட்டு வருகிறேன். ஏற்கனவே இரண்டு பாகங்கள் வெளிவந்திருக்கின்றன (!) .




நான் ஏன் பதிவரானேன் ? பாகம் - 1 
நான் ஏன் பதிவரானேன் ? பாகம் - 2

முடிந்தால், அதையும் ஒரு எட்டு பார்த்துட்டு வந்துடுங்களேன் ?!

 *********************************************************************************************************

அலுவலகத்தில், சூடான அரசியல் விவாதங்கள் அடிக்கடி நடக்கும். ஒருநாள், சென்னை ஸ்ரீபெரும்புதூரில் அமையவிருக்கும் (?) ,கிரீன் பீல்ட் விமான நிலையம் பற்றி பேச்சு திரும்பியது. அந்த விமான நிலையத்திற்கு ஏன் அந்த பெயர் வைத்திருக்கிறார்கள் என்று கேட்டார்கள்.

"விவசாய நிலங்களில் அமைய இருப்பதால் அப்படி பேர் வெச்சிருப்பாங்க  ?! " ன்னு சொல்லி  வைத்தேன்.


 *********************************************************************************************************

அலுவலகத்தில் பணிபுரியும் சக பணியாளார் ஒருவர், இடது கையால் எழுத முயற்சித்துக் கொண்டிருந்தார். ஏதோ ஓரளவிற்கு எழுதினாலும், மெதுவாகவே எழுத முடிந்தது அவரால் ! என்னருகே வந்து அவ்வாறு எழுதிக் காண்பித்தார்.

"நான் இதவிட  வேகமா இடது  கையில் எழுதுவேன் " என்றேன்.


"நிஜமாவா ?!"

"ஆமாங்க !" - இது நான்.

20 நொடி இடைவெளி....

"ஆனா யாரும் படிக்க முடியாது !"



 *********************************************************************************************************

ஒவ்வொரு வாரமும் சனி ஞாயிறு விடுமுறைக்கு தவறாமல் ஊருக்கு சென்று விடும் நண்பனொருவன், இந்த வாரம் போகாமல், சென்னையிலேயே இருந்துவிட்டான். நான் அலைபேசியபோது இதை என்னிடம் சொன்னான்.

"ஏண்டா இந்த வாரம் ஊருக்கு போகல ?!" - நான்.

"சித்தப்பாவும், சித்தியும் கல்யாணத்துக்கு வந்திருந்தாங்க டா" - நண்பன்.

"அவங்களுக்குதான் , ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சே டா ?!" - நான் !

புகைப்பட உதவி - http://iconicon.net

4 comments:

  1. என்னமோ சொல்லறிங்க போங்க. - இது நான்,
    வாழ்த்துக்கள் தேசாந்தரி

    ReplyDelete
  2. @VSP...
    வாழ்த்துக்கு நன்றிங்க...!!!
    வ - த - ந - மீ - வ!

    ReplyDelete
  3. நீங்களே எழுதும்போது நான்கூட எழுதலாம் போல

    ReplyDelete
  4. @nellai அண்ணாச்சி...
    ஹ்ம்ம்... வாங்க அண்ணாச்சி... ரொம்ப நாளா ஆளையே காணோம் ?!

    //நீங்களே எழுதும்போது நான்கூட எழுதலாம் போல //

    எதோ ஒரு வகையில ஒரு எழுத்தாளரை உருவாகிய பெருமை எனக்கு கிடைக்கட்டும் !

    ReplyDelete

போற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... !

தமிழில் பின்னூட்டமிட CLICKகுங்க....

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...