Tuesday, October 5, 2010

என்ன செய்ய ? - கவிதை(யாமாம் !)

 டிஸ்கி : கீழே உள்ள கவிதையின் ஒவ்வொரு வரியையும் இரண்டு இரண்டு முறை , இரண்டு இரண்டு முறை ( ஹ்ம்ம்.... இப்படித்தான் !) படிக்கவும் .அப்போதான் கவிதை மாதிரி தெரியும்.





இன்றைக்கு அலுவலகம் போவோமா ?

இல்லை வேண்டாமா ?

ஒரு சின்ன விஷயத்திற்கு இவ்ளோ குழப்பமா ?!

சரி, பூவா தலையா போட்டு பாத்துடுவோம்.

அது சரி... 


ஆனால்....

பூ விழுந்தால்  போவதா ?

இல்லை தலை விழுந்தால் போவதா ?!



புகைப்பட உதவி - www.delawareonline.com

************************************************************************************************
இந்த கவிதையை(!) எழுதும் போது எனக்கு நண்பன் ஒருவன் அனுப்பிய குறுந்தகவல் ஞாபகம் வருகிறது.

முடிவெடுக்க சிரமமாய் இருக்கும் போது, பூவா தலையா போட்டுப் பாருங்கள். அதன் முடிவுக்காக இல்லை. நாணயம் காற்றில் இருக்கும் போது பூ விழவேண்டுமா, இல்லை தலையா என்ற உங்கள் விருப்பம் தெரியும் !

11 comments:

  1. சிந்தனையை தூண்டும் கவிதை

    ReplyDelete
  2. @nellai அண்ணாச்சி...
    அப்பிடி என்னங்க பண்ணிட்டேன் ?!
    ஹி..ஹி...

    @ மதுரை சரவணன்..
    வாங்க... ஊக்கத்திற்கு நன்றி...

    வ - த - ந - மீ - வ!

    ReplyDelete
  3. //நாணயம் காற்றில் இருக்கும் போது பூ விழவேண்டுமா, இல்லை தலையா என்ற உங்கள் விருப்பம் தெரியும் !//

    இது நல்லா இருக்கு

    ReplyDelete
  4. @அருண் பிரசாத்...
    வாங்க தல...
    ஊக்கத்திற்கு நன்றி....
    வ - த - ந - மீ - வ !

    ReplyDelete
  5. /ஆனால்....
    பூ விழுந்தால் போவதா ?

    இல்லை தலை விழுந்தால் போவதா ?!
    /

    அதுக்கும் ஒரு தடவ பூவா தலையா போட்டு பார்த்துடுங்களேன்.!!

    ReplyDelete
  6. //சிந்தனையை தூண்டும் கவிதை//

    சிந்தனைய தூண்டும் கவிதையோ ..?!

    ( இப்படி மொக்க கமெண்ட் போடலாம்கல்ல ..?! பிடிக்கலேன்னா சொல்லிடுங்க ..!!)

    ReplyDelete
  7. //போற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... !//

    பேன் போட்டு விடுங்க , தூற்றிட்டு போறோம் ..!! ஹி ஹி ஹி..

    ReplyDelete
  8. கவிதா கவிதா (மன்னிக்கவும் ) கவிதை கவிதை

    ReplyDelete
  9. @ஈரோடு தங்கதுரை...
    வாங்க தங்கதுரை...
    ஊக்கத்திற்கு நன்றி...
    நிச்சயம் நீங்கள் பங்கு பெற்ற நிகழ்ச்சியை பார்க்கிறேன்...

    @ப.செல்வக்குமார்...
    //அதுக்கும் ஒரு தடவ பூவா தலையா போட்டு பார்த்துடுங்களேன்.!! //
    திரும்பத் திரும்ப பேசுற நீ...திரும்பத் திரும்ப பேசுற நீ...

    //சிந்தனைய தூண்டும் கவிதையோ ..?!//
    ஏங்க அவரு ஒண்டிதான் இத கவிதைன்னு ஒத்துக்கிறாரு...
    அது உங்களுக்கு பிடிக்கலையோ ?! ஹி... ஹி..

    //( இப்படி மொக்க கமெண்ட் போடலாம்கல்ல ..?! பிடிக்கலேன்னா சொல்லிடுங்க ..!!) //
    நான் மொக்க இடுகையே போடும் பொது, நீங்க மொக்க கமன்ட் போடக் கூடாதா?!
    இதெல்லாம் ஒருத்தருக்கு ஒருத்தர் செஞ்சுக்கறதுதானுங்களே ?!
    மொக்கை கமண்ட்டுகள் வரவேற்கப் படுகின்றன !!!

    //பேன் போட்டு விடுங்க , தூற்றிட்டு போறோம் ..!! ஹி ஹி ஹி.. //
    நெக்ஸ்ட் மீட் பண்றேன்...

    @வாழ்க்கை வாழ்வதற்கே...
    வாங்க நண்பா...
    ரொம்ப நாளா கடைப் பக்கம் ஆளையே காணோமே ?
    //கவிதா கவிதா (மன்னிக்கவும் ) கவிதை கவிதை //
    ஏன் இந்தக் கொலை வெறி.. ?!

    @All...
    வ - த - ந - மீ - வ!

    ReplyDelete
  10. இது
    கவிதையா
    இல்லையா
    எடுங்க
    நாணயத்தை
    தெரிஞ்சிக்கலாம்!

    (வரிக்கு ஒரு வார்த்தை, இதுவும் கவிதையே!)

    ReplyDelete
  11. @பெயர் சொல்ல விருப்பமில்லை...
    //(வரிக்கு ஒரு வார்த்தை, இதுவும் கவிதையே!) //
    ஹ்ம்ம்.. கவிதைதான்...
    (இதெல்லாம் நாமளா ஒருத்தருக்கு ஒருத்தர் சொல்லிக்குறது தானே ? ! ஹி..ஹி...)
    வ - த - ந - மீ - வ!

    ReplyDelete

போற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... !

தமிழில் பின்னூட்டமிட CLICKகுங்க....

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...