Saturday, November 13, 2010

மாநகர் வாழ்க்கை - கவிதை (யாமாம் !)



 நன்றி - புகைப்பட உதவி  : www.thehindu.com


பரபரக்கும் காலைப் பொழுது....

மாநகர்ப் பேருந்து நிறுத்தம்..

அடிபட்டுக் கிடக்கிறான் ஒருவன் ...

நின்று செல்லும் பேருந்துகளின்

ஒவ்வொரு ஜன்னலில் இருந்தும்

எட்டிப் பார்க்கின்றது ஒரு முகம்...

தன் மகனாகவோ, அண்ணனாகவோ , 

தந்தையாகவோ , கணவனாகவோ -

இருக்கக் கூடாதென...


நின்று செல்லும் பேருந்துகளின்

ஒவ்வொரு ஜன்னலில் இருந்து

வெளிப்படும்  முகங்களைப் பார்க்கிறான்,

தன் தந்தையாகவோ, தம்பியாகவோ,

மகனாகவோ ,மனைவியாகவோ -

இருக்கக் கூடாதா என !




11 பேர் கமென்ட் போட்ருக்காங்க, நீங்க என்ன சொல்றீங்க?!:

நா.மணிவண்ணன் said...

இன்றைக்கு இருக்கும் அவசர சூழலும் நேரமின்மையும் மனிதத்தை மழுங்கடித்துவிட்டது என்பதை எடுத்துகாட்டுகிறது . நல்லா இருக்கு

தேசாந்திரி-பழமை விரும்பி said...

@நா.மணிவண்ணன்
வாங்க மணி வண்ணன்..
ஊக்கத்திற்கு நன்றி...
வ - த - ந - மீ - வ !

அருண் பிரசாத் said...

நிதர்சணம்

தேசாந்திரி-பழமை விரும்பி said...

@அருண் பிரசாத்...
வாங்க நண்பரே !
ஊக்கத்திற்கு நன்றி !

ப.செல்வக்குமார் said...

//தன் மகனாகவோ, அண்ணனாகவோ ,

தந்தையாகவோ , கணவனாகவோ -
இருக்கக் கூடாதென...//

உண்மைலேயே கவிதை நல்லா இருக்குதுங்க ..

nellai அண்ணாச்சி said...

அருமையான மனதினை நெருடும் கவிதை

தேசாந்திரி-பழமை விரும்பி said...

@ப.செல்வக்குமார் & nellai அண்ணாச்சி...
வாங்க செல்வா,அண்ணாச்சி...
ஊக்கத்திற்கு நன்றி...
(நீங்க ரெண்டு பேராவது, இதை கவிதைன்னு சொன்னீங்க !)
வ - த - ந - மீ - வ !

HVL said...

நல்லாயிருக்கு!

தேசாந்திரி-பழமை விரும்பி said...

@HVL...
//நல்லாயிருக்கு! //
வாங்க HVL...
ஊக்கத்திற்கு நன்றி...
வ - த - ந - மீ - வ !

gumkattai said...

arumaiyana kavithai bhai !!!

தேசாந்திரி-பழமை விரும்பி said...

@gumkattai...
//arumaiyana kavithai bhai !!!//
ஊக்கத்திற்கு நன்றி பரணி !
வ - த - ந - மீ - வ !

Post a Comment

போற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... !

தமிழில் பின்னூட்டமிட CLICKகுங்க....