வழக்கமாக நான் செல்லும் பேருந்து , வழக்கம் போல தாமதமாகத்தான் வருமென்பதால், பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன். பேருந்து நிலையம் முழுக்க, ஏதோ ஒரு பதற்றம் தொற்றிக் கொண்டிருந்தது, பீக் ஹவர்களில் எப்போதுமே இப்படித்தான் !
நன்றி - புகைப்பட உதவி : www.thehindubusinessline.com
இவ்வளவு நாட்களாக, ஒரே பேருந்தில் (வழித் தடத்தில் ) சென்று வருவதால், சக பயணிகள் நன்றாகவே அறிமுகமாகியிருந்தார்கள்.ஆனால் யாருடனும் பேசிக் கொண்டதில்லை ! வழிமேல் விழிவைத்து காத்திக் கொண்டிருந்த போதுதான் அந்தப் பெரியவர் என்னருகில் வந்தார்.ஒரு 65 வயது இருக்கும். குறைவான உயரம்.மாநிறம்.ஐந்து நாள் தாடி. மெதுவாக என்னுடனான உரையாடலை ஆரம்பித்தார், என் பதிலை எதிர்பார்க்கமலேயே !
**********************************************************************************************
"நீங்க இந்த ஊருதானா தம்பி ?"
".............."
"எங்க வேல பாக்குறீங்க ?"
".............."
"எனக்கு கன்னியாகுமரி பக்கங்க !"
".............."
**********************************************************************************************
"அனாவசியமாக" யாரிடமும் பேசக் கூடாது என்பது , மாநகர வாழ்க்கை எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் போதித்து விடுகிறது போலும் ! பேருந்து நிலையத்தில் இருந்த யாரும் - யாரிடமும் பேசிக் கொள்ளவில்லை.இவர் ஏன் குறிப்பாக என்னிடம் வந்து சுய புராணம் சொல்லிக்கொண்டிருக்கிறார் ?! அவர் பேசும் தொனியில் இருந்தே, ஏதோ பண உதவி கேட்கப் போகிறார் என்பதை ஊகித்தவனாய் நின்று கொண்டிருந்தேன்.
**********************************************************************************************
"எனக்கு நாலு பசங்க தம்பி..."
".............."
"யாருமே எங்களை கவனிக்கல தம்பி ..."
".............."
"சரி, அவனுங்களை ஏன் நம்பணும்னு , கெளம்பி சென்னை வந்துட்டேன் - எதாவது வேலை செஞ்சு பொழச்சிக்கலாம்னு."
" ?!?!?!?! "
"என் பொஞ்சாதி வேற ஒடம்புக்கு முடியாம ஊர்ல கெடக்கா தம்பி..."
"ம்ம்ம்ம்...."
"ஆனா, வயசாயிடுச்சேன்னு இந்த கெழவனுக்கு யாரும் வேல தர மாட்டேங்கறாங்க தம்பி..."
"ஓ....!"
"இப்போ திரும்பி ஊருக்கே போய்டலாமுன்னு தோணுது..."
"ம்ம்ம்..."
"ஆனா கையில சுத்தமா காசு இல்ல தம்பி - பஸ்ல போனா கொறஞ்சது 500 ரூபா ஆகும். ஆனா, ECR ல நின்னு எதாவது லாரில ஏறி 100 ரூபா கொடுத்தா ஊர்ல எறக்கி விட்டுருவாங்க ! கொஞ்சம் உதவி பண்ணுங்க தம்பி - ஆண்டவன் உங்களுக்கு ரெண்டு மடங்கு படி அளப்பான் !"
நன்றி - புகைப்பட உதவி :www.shutterstock.com
**********************************************************************************************
சொல்லி முடிதவரின் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை பார்த்த நான் கொஞ்சம் அதிர்ந்துதான் போனேன்.
எவ்வளவு கஷ்டம் ?! ஒருவரிடம் உதவி கேட்பதற்கு முன்பு நாம் எவ்வளவு யோசிப்போம் ?! அதுவும் முகம் தெரியாத ஒருவரிடம் ? ஒரு மாதிரி கூச்சமாக இருக்கும் தானே ?! அதுவும் தன் பேரனைப் போல வயதுடைய ஒருவனிடம் காசுக்காக கேட்டு நிற்பது என்றால் , அவர் எவ்வளவு யோசித்திருப்பார் ? இது வரை எத்தனை பேரிடம் கேட்டிருப்பாரோ ? பரிதாபம் .
ஆனால் , நான்தான் எவ்வளவு கருணை உள்ளவன் ?! மாதம் ஆயிரக் கணக்கில் (!) சம்பாதிக்கிறோமே, ஒரு 100 ரூபாயில் என்ன ஆகிவிடப் போகிறது, இல்லையில்லை ஒரு 50 ரூபாயில் என்ன ஆகிவிடப் போகிறது ?! பாவம் பெரியவர். 50 ரூபாய் எடுத்த என்னை பரிதாபப் பார்வையுடன் பார்த்தார்.
"லாரிக் காரங்க 100 ரூபாய்க்கு கொறைஞ்சு ஏத்த மாட்டாங்க தம்பி"
ஒரு 100 ரூபாயில் என்ன ஆகிவிடப் போகிறது ?! 100 ரூபாயைக் கொடுத்து ,
"சரிங்க ஐயா.அழுவாதீங்க . பத்திரமா ஊருக்குப் போய் சேருங்க " ன்னு சொல்லி அனுப்பினேன். நான்தான் எவ்வளவு கருணை உள்ளவன் ?! அன்று முழுவதும், பெரியவர் ஊருக்குப் போய் விட்டதாகவும், பொஞ்சாதியுடன் சந்தோசமாக இருப்பதாகவும் நினைத்துக் கொண்டேன் .
**********************************************************************************************
ஒரு நாலஞ்சு நாள் இருக்கும். இது நடந்து.
என்னைப் போலோருவன் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தான். அவன் வழி மேல் விழிவைத்துக் காத்துக் கொண்டிருந்தபோதுதான் அதே பெரியவர் அவனருகில் வந்தார்.ஒரு 65 வயது இருக்கும். குறைவான உயரம்.மாநிறம்.ஐந்து நாள் தாடி. மெதுவாக அவனுடனான உரையாடலை ஆரம்பித்தார், அவன் பதிலை எதிர்பார்க்கமலேயே !
"நீங்க இந்த ஊருதானா தம்பி ?! "
"நீங்க இந்த ஊருதானா தம்பி ?! "
நன்றி - புகைப்பட உதவி : www.oxheyworld.com
மீதியை படிக்க, அவன் வலைத்தளம் எழுதுகிறானா என அறிந்து கொள்ள வேண்டும்!
ஒருவேளை அவனுக்கும் ஆண்டவன் ரெண்டு மடங்கு படி அளந்திருக்கிறானோ என்னவோ ?!
என்ன சொல்வதென்றே தெரியவில்லை!
ReplyDeleteஉண்மைதாங்க இந்த மாதிரி எனக்கும் நடந்திருக்கு . இதுனால என்னாகும்னா சரியான நேரத்துல ஒரு தருக்கு உதவி செய்வதற்கு ரொம்ப யோசிப்போம் கடைசில உதவி செய்யாம போய்டுவோம்.வருத்தத்துக்குரிய செய்தி
ReplyDeleteஉண்மைதான் மணிவண்ணன், இதனால் உண்மையாக உதவி கேட்போருக்கும் உதவி கிடைக்காமல் போய் விடுகிறது!
ReplyDeleteஇதுதான் இன்றைய உலகம்.இளகிய மனம் படைத்தவன் ஏமாளிதான்.அதற்காகக் கொடுப்பதை நிறுத்தாதீரக்ள்.சிந்தித்துச் செய்யுங்கள்.வாழ்க!
ReplyDeleteநமது இரக்க குணங்கள் சில சமயங்களில் நம்மையே ஏமாற்றுகிறது.. இதனால் உண்மையாக வந்து கேட்ப்பவர்களுக்கு உதவி செய்ய மனது மறுக்கிறது...
ReplyDeleteமக்கா நானும் உன் கூட்டத்தில join ஆகிக்கிறேன்... அப்படீன்னா நானும் பெரிய மனுஷன் தானே...
ReplyDeleteஅவர் உங்க கிட்டேயே வந்து திரும்பக் கேட்டிருந்தால் இன்னும் கொடுமையாக இருந்திருக்கும்:( அந்தக் கொடுமையை அனுபவித்தவன் நான்.
ReplyDelete@எஸ்.கே...
ReplyDelete//என்ன சொல்வதென்றே தெரியவில்லை! //
ஹ்ம்ம்...
அவர்களும் எதோ ஒரு வகையில் வாழ்ந்துதானே ஆகவேண்டும் ?! வேறென்ன சொல்ல?!
@நா.மணிவண்ணன்...
//உண்மைதாங்க இந்த மாதிரி எனக்கும் நடந்திருக்கு . இதுனால என்னாகும்னா சரியான நேரத்துல ஒரு தருக்கு உதவி செய்வதற்கு ரொம்ப யோசிப்போம் கடைசில உதவி செய்யாம போய்டுவோம்.வருத்தத்துக்குரிய செய்தி //
ஆமாங்க மணிவண்ணன். தினமும் இது போன்ற நபர்களை சந்திப்பதால், உதவி செய்ய தோன்றும் சிறு எண்ணமும் ஒழிந்து போகின்றது !
@நாஞ்சில் மனோ...
//super //
ஊக்கத்திற்கு நன்றி நண்பரே !
@சென்னை பித்தன்...
//இதுதான் இன்றைய உலகம்.இளகிய மனம் படைத்தவன் ஏமாளிதான்.அதற்காகக் கொடுப்பதை நிறுத்தாதீரக்ள்.சிந்தித்துச் செய்யுங்கள்.வாழ்க! //
ஆனால், உதவி கேட்பவர்களின் மீதான சந்தேகங்களை அதிகரிக்கின்றன இம்மாதிரியான நிகழ்வுகள் ! வருகைக்கு நன்றி சார்
@வெறும்பய...
//நமது இரக்க குணங்கள் சில சமயங்களில் நம்மையே ஏமாற்றுகிறது.. இதனால் உண்மையாக வந்து கேட்ப்பவர்களுக்கு உதவி செய்ய மனது மறுக்கிறது... //
ஆமாங்க வெறும்பய ! உதவி கேட்பவர்களில் 60 % பேர் இது மாதிரியானவர்கள்தான் என்று நினைக்கிறேன் !
//மக்கா நானும் உன் கூட்டத்தில join ஆகிக்கிறேன்... அப்படீன்னா நானும் பெரிய மனுஷன் தானே... //
அதிலென்ன சந்தேகம் ?! அது சும்மா ஒரு காமெடிக்காக நானே வெச்ச 'பன்ச்' நண்பரே ! நீங்க எப்பவுமே பெரிய மனுசன் தான் !
@Gopi Ramamoorthy...
//அவர் உங்க கிட்டேயே வந்து திரும்பக் கேட்டிருந்தால் இன்னும் கொடுமையாக இருந்திருக்கும்:( அந்தக் கொடுமையை அனுபவித்தவன் நான். //
இது போன்று பலர் இருக்கிறார்கள். சென்னையில் மட்டுமல்ல என்று நினைக்கிறேன். தி.நகரிலும் இதே போன்ற ஒரு முதியவரை இரண்டு முறைப் பார்த்திருக்கிறேன்! அவர்களை குற்றம் சொல்லி என்ன செய்வது ?! நாம் நேர்முகத் தேர்வில் , "எனக்கு அது தெரியும் , இது தெரியும்" என்று சொல்லி எப்படியாவது வேலை பெற முயற்சிப்போம் இல்லையா ?! இதுவும் அதுபோலத்தான் என நினைக்கிறேன் !
@அனைவருக்கும்...
வ - த - ந - மீ - வ
உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்....
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2010/12/blog-post_04.html
நன்றி
@அருண் பிரசாத்...
ReplyDelete//
உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்....
http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_04.html
நன்றி
//
என்னை அற்முகம் செய்ததற்கு நன்றி நண்பா...!
மற்ற "சகா"க்களையும் பார்க்கிறேன் !
வ - த - ந - மீ - வ !
Idhe anubavam enakum irupathu unaku theriyume sankar !!! naan un ooruku varumbothu idhe madhiriyana sabavam nadanthathu !! oru aal tip topa dress potukitu en mun vandhu ninran !! french beard ellam vachirundhan !! enidam vandhu " naan friendsoda inga vandhen vandha edathula friends enoda kasu ellam edhutu poitaanga!! busuku kooda kaasu illa"nu sonnan... naanum 60 rupa koduthen!! idhan piragu naan enoda friend kita sonen.. avan enaku advice panan.. yaaravathu ooruku poganum kaasu venumnu ketaangana avangaluku ticket eduthe kuduthurung kaasu kodukaatheenganu sonnan!!!
ReplyDelete@gumkattai ...
ReplyDelete//Idhe anubavam enakum irupathu unaku theriyume sankar !!! naan un ooruku varumbothu idhe madhiriyana sabavam nadanthathu !! oru aal tip topa dress potukitu en mun vandhu ninran !! french beard ellam vachirundhan !! enidam vandhu " naan friendsoda inga vandhen vandha edathula friends enoda kasu ellam edhutu poitaanga!! busuku kooda kaasu illa"nu sonnan... naanum 60 rupa koduthen!! idhan piragu naan enoda friend kita sonen.. avan enaku advice panan.. yaaravathu ooruku poganum kaasu venumnu ketaangana avangaluku ticket eduthe kuduthurung kaasu kodukaatheenganu sonnan!!!//
ஹ்ம்ம்... எல்லாரும் இது போன்றதொரு அனுபவத்தைப் பெற்றிருக்கிறார்கள் போலும் !
வ - த - ந - மீ - வ !