Thursday, February 4, 2010

தமிழ்ப் படம்...

என்னுடைய திரைப்பட வரலா........ற்றில் முதல் முறையாக , அடுத்த நாள் ஆபீஸ் இருக்கும் போதே ( ஆபீஸ் போறாராமா ! ) , முதல் நாள் செகண்ட் ஷோ படத்துக்கு போனேன்! தமிழ்ப் படம் தான் !திருவான்மியூர் ஜெயந்தி - யில் தான் !! 20 ரூபாதான் !!!



தியேட்டர் காம்பவுண்ட் முழுவதும் பிரம்மாண்டமான பேனர்கள் ! வேற யாருக்கு , நம்ம  தயாநிதி அழகிரிக்குத்  தான். பேனரின் ஒரு மூலையில் , 'சிவா' நடிக்கும் 'தமிழ்ப் படம்' என்று போட்டிருந்தார்கள். தயாரிப்பு தரப்பு , கொஞ்சம் பெரிய இடம் என்பதால், படத்திற்கு விளம்பரம் வெகு பிரமாதம். நல்ல எதிர்பார்ப்பும் கூட ! சரி சரி படம் எப்படி இருக்கு ?!
படத்தின் ஆரம்பக் காட்சி முதலே , தமிழ் சினிமாவில் அரைக்கப் பட்ட மாவுகளை , ஞாபகப் படுத்துகிறார்கள். சில நிமிடங்களில் , நம்மை இம்ப்ரெஸ் செய்து விடுகிறார் இயக்குனர் c .s  அமுதன்.

இப்படி ஒரு படத்தில் கதா நாயகன் பாத்திரத்தில் , மிர்ச்சி சிவா நன்றாக பொருந்துகிறார்.
அறிமுக ஹீரோயீன் தமிழ்த் தெரியாமல் கூட, கொஞ்சம் நடித்திருக்கிறார் அல்லது முயற்சித்திருக்கிறார். ஒருவேளை , தமிழ் படங்களில், தமிழ் தெரியாதவர்கள் தான் ஹீரோயினாக இருக்கிறார்கள் என்பதை குத்திக் காட்டுகிறார்களோ என்னவோ ?! படத்தில், ஆங்காங்கே தலை காட்டும் அனைத்து கதா பாத்திரங்களும், தங்களுடைய வழக்கமான கேரக்டர்களிலேயே வருவது, ரசிக்கும் படியாகத்தான் இருக்கிறது.
 மற்றபடி , M .S பாஸ்கர் , மனோபாலா, வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோர் கதாபாத்திரங்கள் குறிப்பிட்டு சொல்லும்படியாக இல்லை.



கேமரா நீரவ் ஷா - வாமே ? போஸ்டர் பாத்துதான் தெரிஞ்சுக்கிட்டேன். அப்புறம், இசை அமைப்பாளர் கண்ணன் , பாடல்களில் முத்திரை பதித்திருக்கிறார் . அதிலும் , "பச்சை " என்று ஆரம்பிக்கும் அந்த அறிமுகப் பாடல் , உண்மையிலேயே பிரமாதம். நம்ம இளைய தளபதிக்கே அறிமுகப் பாடலாக வைக்கலாம் ! " ஒமாக சியா " பாடலும் , விக்கிரமன் பாணியில், ஒரே பாடலில் ஹீரோ  முன்னேறும் பாடலும் கூட நன்றாகத்தான் இருக்கிறது.


மிக வேகமாக பயணிக்கும் திரைக்கதை ( ?! )  , இரண்டாம் பாதியில் நகர மறுக்கிறது ! கொஞ்ச பேர் படம் முடிவதற்கு முன்னதாகவே கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.ஏற்கனவே பார்த்து பழக்கப் பட்ட காட்சிகள் என்பதால் , அடுத்து நடக்க இருப்பதை முன்கூட்டியே அறியும் பாக்கியம் பெற்று விடுகிறோம் ! முன்னொரு காலத்தில் , விஜய் டி.வி யில் பிரபலமாக இருந்த, "லொள்ளு சபா" வை ஞாபகப் படுத்துகிறது தமிழ்ப் படம்.

தயாரிப்பு தரப்பு பற்றி அனைவருக்கும்  தெரிந்ததால், எப்படியும் திருட்டு VCD  வராது. தமிழ்ப் படம் - நம்பிப் போகலாம் !

No comments:

Post a Comment

போற்றுவோர் போற்றுக ... தூற்றுவோர் தூற்றுக... !

தமிழில் பின்னூட்டமிட CLICKகுங்க....

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...